Tuesday, 25 July 2023

மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

 பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் செய்தனர், வல்லுறவு செய்தனர். 77 நாள்களுக்குப் பிறகு இது தொடர்பான வீடியோ வெளியாகி நாட்டின், உலகின் மனசாட்சியை உலுக்குகிறது. மணிப்பூர் சம்பவம் பற்றி பரவலாகத் தெரிவது இதுதான். 

ஆனால், அங்கு நடந்தது இது மட்டுமே அல்ல. அன்று ஒரு நாள் அங்கு நடந்த சம்பவங்களை முழுமையாகத் தெரிந்துகொண்டால் உங்களுக்குக் குலை நடுங்கும். மூன்று மாதங்களாக நடந்துகொண்டிருக்கும் இனவாத வன்முறையைப் பற்றி முழுதாகப் புரிந்துகொண்டால், இந்தியா எதிர்கொண்டிருக்கும் ஆபத்தின் ஆழம் புரியும். 

'மூன்று மாதங்களாக அந்த சின்னஞ்சிறு மாநிலத்தில் நடக்கும் இனவாத வன்முறை அரசாங்கத்தின் சக்தியை மீறி நடக்கிறதா, அல்லது அரசாங்கத்தின் ஆசியோடு நடக்கிறதா' என்பதுதான் வலுவாக எல்லோரும் எழுப்பும் கேள்வி. இந்தக் கேள்வியைப் பிறகு ஆராய்வோம். 

மே 4ம் தேதி மணிப்பூரில் நடந்தது என்ன? அதிர வைக்கும் தகவல்கள்

அங்கே நடப்பது இனவாத வன்முறை என்றால், யாருக்கும் யாருக்கும் சண்டை? ஆதிக்கம் மிருந்த பெரும்பான்மை இனமான மெய்த்தி மக்களுக்கும் பழங்குடிகளாக, அதிகாரம் குறைந்தவர்களாக உள்ள குக்கி ஜோ இனப் பழங்குடி மக்களுக்கும் இடையிலான சண்டை இது. இந்த இரண்டு இனங்களின் பிரச்சனைகள் என்ன என்பதையும்கூட பிறகு பார்ப்போம். 

77 நாள்களுக்குப் பிறகு மக்களின் மனசாட்சியை உலுக்கிய அந்த வீடியோ சம்பவம் பற்றி முழுதாக முதலில் பார்ப்போம்.


சம்பவம் நடந்து 14 நாள்களுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட போலீஸ் முதல் தகவல் அறிக்கையின் நகல் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்குக் கிடைத்தது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள்:

மணிப்பூர் மாநிலம், காங்போக்பி மாவட்டத்தில் உள்ள பைனோம் என்ற சிற்றூரில் இந்த சம்பவம் நடந்தது. அதிகாலை 3 மணிக்கு சுமார் ஆயிரம் பேர் கொண்ட ஆயுதக் கும்பல் அந்த ஊரில் நுழைந்து வன்முறை வெறியாட்டத்தை தொடங்கியது. முதலில் பணம், அறைகலன்கள், மின்னணு சாதனங்கள், உணவு தானியங்கள், கால்நடைகள் ஆகியவற்றை வீடுகளில் இருந்து கொள்ளையடித்துக்கொண்ட அந்த கும்பல், சாவகாசமாக பிறகு வீடுகளுக்குத் தீவைத்து முற்றிலுமாக அழித்தது. 

அந்தக் கும்பலில் இருந்தவர்கள் அனைவரும் மெய்த்தி இனத்தவர். பாதிக்கப்பட்டவர்கள் குக்கி ஜோ இன மக்கள்.

(ஆயுதக் கும்பல் என்றால், கத்தி, கம்பு வைத்திருந்தார்கள் என்று நினைத்துவிட வேண்டாம்). 

வன்முறைக் கும்பலிடம் ஏகே 47, எஸ்.எல்.ஆர்., இன்சாஸ், .303 போன்ற சக்திமிக்க துப்பாக்கிகள் இருந்தன. இந்தக் கும்பலுக்கு பயந்து 5 பேர் கொண்ட ஒரு குடும்பம் பக்கத்தில் உள்ள ஒரு காட்டுக்குள் ஓடி ஒளிந்துகொண்டது. பிறகு காட்டுக்குள் சென்று அவர்களை போலீஸ் ‘மீட்டது’. 

அங்கிருந்து அவர்களை நாங்போக் செக்மாய் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லும்போது அந்த வன்முறைக் கும்பல் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றது. வழியில் போலீஸ் வசமிருந்து இந்த 5 பேர் குடும்பத்தை பலவந்தமாக இழுத்துச் சென்ற வன்முறைக் கும்பல், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 56 வயது ஆண் ஒருவரை அங்கேயே கொன்றது

அதன் பிறகு அந்தக் குடும்பத்தில் இருந்த மூன்று பெண்களை நிர்வாணமாக்கி நடக்கவிட்டனர். அவர்களில் 21 வயது பெண் கூட்டு வல்லுறவு செய்யப்பட்டார். அந்தப் பெண்ணின் 19 வயது தம்பி இதைத் தடுக்க முயன்றபோது கொல்லப்பட்டார். உள்ளூர் மக்கள் உதவியோடு மூன்று பெண்களும் தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது நிலவிய பதற்ற நிலை காரணமாக அப்போது அந்தக் குடும்பத்தின் சார்பாக யாரும் புகார் கொடுக்க முடியவில்லை. மே 4ம் தேதி நடந்த இந்த சம்பவம் பற்றி 68 கி.மீ. தொலைவில் உள்ள சாய்குல் காவல் நிலையத்தில் ஊர்த் தலைவர் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மே 18ம் தேதி ஜீரோ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. பிறகு, இது ஜூன் 21ம் தேதி நாங்போக் செக்மாய் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. 

(பெண்களுக்கு எதிரான குற்றங்கள், எங்கே நடந்தாலும், காவல் நிலைய எல்லை பற்றிக் கவலைப்படாமல் தாமதம் இல்லாமல் எந்தக் காவல் நிலையத்தில் வேண்டுமானாலும், வழக்குப் பதிவு செய்வதற்காக அறிமுகம் செய்யப்பட்டதுதான் ஜீரோ எஃப்.ஐ.ஆர்.)

‘இந்தியாவின் தலைசிறந்த காவல் நிலையம்’ செய்த வேலை

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாங்போக் செக்மாய் காவல் நிலையம் 2020-ம் ஆண்டு இந்தியாவிலேயே தலைசிறந்த காவல் நிலையம் என்று மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்காக பயன்படுத்திய நான்கு அளவுகோல்களில் முக்கியமானவை, பெண்களுக்கு எதிரான, பலவீனமானவர்களுக்கு எதிரான குற்றங்களை சிறப்பாகக் கையாள்வது. பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த 5 பேரை இந்த போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றபோதுதான் அவர்களை வன்முறைக் கும்பல் இழுத்துச் சென்று மூன்று பெண்களை நிர்வாணமாக்கியது, ஒருவரை வல்லுறவு செய்தது, இரண்டு ஆண்களைக் கொலை செய்தது. இவ்வளவும் நடந்தபோது போலீஸ் வேடிக்கை பார்த்தது என்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சியிடம் முகம் காட்டாமல் பேட்டி அளித்துள்ளார் பாதிப்புக்குள்ளான பெண்களில் ஒருவரின் கணவர். 

Monday, 4 July 2022

நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்ததால் ராஜஸ்தானில் பயங்கரம்

 ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்த தையல் காரர் ஒருவர் தலையை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



நுபுர் சர்மா விவகாரம் தொடர்பாக சமூக வலைதளத்தில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக, உதய்பூர், மால்தாஸ் தெருவில்  இந்தக் கொலை சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மால்தாஸ் தெரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கலவரங்கள் நிகழாமல் இருக்க கடைகள் அடைக்கப்பட்டு, காவல் துறையினர் தயார்ப்படுத்தப்பட்டு உஷார் நிலையில் உள்ளனர்.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து பேசிய ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அஷோக் கெலாட், இச்சம்பவம் வலி மிகுந்ததாகவும் அவமானகரமானதாகவும் உள்ளதாகவும், பகைமையைத் தூண்டும் சூழலை இச்சம்பவம் உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், உதய்பூர் பகுதி மக்களை அமைதி காக்குமாறும் அசோக் கெலாட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட தையல்காரரை இவ்வழக்கு தொடர்பாக ஏற்கெனவே காவல் துறையினர் விசாரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இச்சம்பவம் குறித்து பேசிய ராஜஸ்தான் மாநில எதிர்க்கட்சித் தலைவர் குலாப் சந்த் கட்டாரியா, தான் இச்சம்பவம் குறித்து முதலமைச்சர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் பேசியுள்ளதாகவும், இச்சம்பவம் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கொலையாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.



Sunday, 27 February 2022

why has Russia waged war against Ukraine?

  1. Ukraine has become the bone of contention between Washington and Moscow.
  2.  Russia wants the West to keep Ukraine and other former Soviet nations out of NATO, halt weapons deployments near Russian borders and roll back forces from Eastern Europe.

  3.  Ukraine wants to join the NATO which has not gone well with Russia. Russia thinks if Ukraine is allowed to join NATO, the group would move closer to Russia's borders.
  4.  If Ukraine joins NATO, it is eligible to get support from the group's members in case of external attacks.
  5.  So, Russia believes Ukraine could attempt to take back Crimea if it joins NATO. Putin too expressed his concerns in this regard recetly.
  6.  Hence, Russia demands West to stay out of Ukraine as Putin wants to restore Moscow's influence throughout the post-Soviet space.
  7.  Moreover, after the collapse of Soviet Union, Russia lost control of 14 former republics including Ukraine.
  8. Putin considers this as tragic as both countries shared a single "historic and spiritual space".
  9.  The Russian President demands guarantees from the West and Ukraine that it will not join and that Ukraine demilitarise and become a neutral state.

Friday, 28 January 2022

ஏர் இந்தியாவை வாங்கியது டாடா நிறுவனம்..(Tata Takeover Air India)

 

டாடாவிடம் இருந்த ஏர் இந்தியா 1953-ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் ஏர் இந்தியா அதே நிறுவனத்திடமே சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விலைக்கு வாங்கும் ஏலத்தில் டாடா சன்ஸ் வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஏர் இந்தியாவை விலைக்கு வாங்கும் டாடாவின் ஏல திட்டத்தை மத்திய அமைச்சர்கள் குழு ஏற்றதாகவும், உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான குழு டாடாவின் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததாகவும் தகவல் வெளியானது. டாடாவிடம் இருந்த ஏர் இந்தியா 1953-ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் ஏர் இந்தியா அதே நிறுவனத்திடமே செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏர் இந்தியாவிற்காக டாடா சான்ஸ் அதிக தொகை கொடுத்து ஏலம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த சில நாட்களில் முதலீட்டு முதலீடு குறித்து அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. டிசம்பர் மாதத்திற்குள் விமான நிறுவனங்களை அதன் புதிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜேஆர்டி டாடாதான் விமான நிறுவனங்களை நிறுவி 1932இல் இந்திய விமான சேவையை துவக்கி முதல் விமானத்தை இயக்கினார். டாட்டா ஏர்லைன்ஸ் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. 1953 ஆம் ஆண்டில், இந்திய அரசு ஏர் கார்பரேஷன்ஸ் சட்டத்தை நிறைவேற்றியது, டாடா சன்ஸ் நிறுவனத்தில் இருந்து பெரும்பான்மை பங்குகளை வாங்கியது.  

1994 ஆண்டு வரை நாட்டின் ஒரே விமான நிறுவனமாக ஏர் இந்தியா இருந்தது. அதன்பின்னர் தாராளமயமாக்கல் கொள்கையால் தனியார் விமான நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. அதுவரை, லாபத்தில்தான் இயங்கி வந்த நிறுவனம். தனியார் விமான நிறுவனங்களின் போட்டி, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைப்பு, அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்பட்ட அதிகப்படியான சலுகைகள் போன்றவற்றின் காரணமாக இழப்பை சந்தித்தது. முதல் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ் முதல், இரண்டாவமு இடத்தைப் பிடித்தன. இந்த நிலையில் நிறுவனம் ரூ.52 ஆயிரம் கோடி நஷ்டத்திலும். ரூ.55 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் கடனிலும் உள்ளதால், ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை இந்திய ஒன்றிய அரசு எடுத்துள்ளது. 

ஏர் இந்தியா விற்பனை: 

இதனைத்தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முன்வந்தது. அதன் தொடர்ச்சியாக, கடந்த 2018ம் ஆண்டு, ஏர் இந்தியா நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் வெளிநாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் 49% வரை முதலீடு செய்ய அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.  இருந்தாலும், ஏர் இந்தியாவின் கணிசமான முதலாளி நிலை மற்றும் செயல்பாட்டு கட்டுப்பாடு இந்திய தேசத்தைச் சார்ந்ததாகவே இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.  

கடந்த 2020ம் ஆண்டு, ஏர் இந்தியா நிறுவனத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் 100 சதவீதம் வரை முன்அனுமதிப் பெறாமல் முதலீடு செய்ய  அனுமதிக்கும் வகையில், தற்போதுள்ள வெளிநாட்டு முதலீடு அனுமதிக் கொள்கையில் மத்திய அமைச்சரவை திருத்தம் செய்தது.



Wednesday, 10 November 2021

சுற்றுச்சூழல் ஆய்வாளர், பத்ம ஸ்ரீ விருதால் உலகை திரும்பி பார்க்க வைத்த எளிய மூதாட்டி துளசி கவுடா

மத்திய அரசு சார்பில் 2020ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த நவம்பர் 8ஆம் தேதி நடைபெற்றது. இதில் 73 பேருக்கு விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவுரவித்தார். இவர்களில் செருப்பு கூட அணியாமல் வெறும் கால்களால் நடந்து வந்து, மிகவும் எளிய உடையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் துளசி கவுடா. விருது பெறுவதற்கு முன்பு பிரதமர் மோடிக்கு இவர் வணக்கம் சொன்ன புகைப்படம் இணையத்தில் பெரிதும் வைரலாகி வருகிறது. இதையடுத்து துளசி கவுடாவின் கரங்களை பிடித்துக் கொண்டு பிரதமர் மோடி நெகிழ்ச்சியோடு பாராட்டு தெரிவித்தார். இதேபோல் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றை பெறும் போது கூட, தனக்கே உரிய எளிமையான முறையில் வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் துளசி கவுடா. இவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டதை பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கொண்டாடி வருகின்றனர். இவர் பற்றிய தகவல்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறது. பலரும் துளசி கவுடா பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.


’காடுகளின் என்சைக்லோபீடியா’, ’மரங்களின் தெய்வம்’ என்றெல்லாம் புகழப்படுபவர் துளசி கவுடா. இவர் கர்நாடக மாநிலம் ஹோனள்ளி என்ற கிராமத்தை சேர்ந்தவர். ஏழை பழங்குடியின குடும்பத்தில் பிறந்தவர். தனது இரண்டு வயதில் தந்தையை பறிகொடுத்தவர். குடும்பத்தை காப்பாற்ற தாயாருடன் சேர்ந்து தினக்கூலி வேலைக்கு சென்று வந்தார். இதனால் முறையான கல்வி கற்க முடியவில்லை. சிறு வயதிலேயே இவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஆனால் உடல்நலக் குறைவால் கணவர் இள வயதிலேயே காலமானார்.


இவ்வாறு வாழ்க்கையில் பல்வேறு துயரங்களை அனுபவித்துள்ளார். இந்த சூழலில் இயற்கை மீது ஆர்வம் காட்டத் தொடங்கினார். மரக் கன்றுகளை நடுவதில் ஆர்வம் ஒட்டிக் கொள்ள அதையே தனது முழுநேர பணியாக செய்ய துவங்கினார். உலகின் பல்வேறு ரக மரங்களை கர்நாடக மாநிலத்தின் ஏராளமான இடங்களில் நட்டுள்ளார். தாமாக முன்வந்து வனச்சரகங்கள் உடன் இணைந்து மரங்களை நடும் பணியில் ஈடுபட்டார். இவரது அளப்பரிய பணியை பாராட்டி நிரந்தர பணியை கர்நாடக மாநில அரசு அளித்தது.




எங்கு காடுகள் அழிக்கப்பட்டாலும் தனது எதிர்ப்பு குரலை வலுவாக கொடுத்துள்ளார். மரங்கள் நடுவது மட்டுமின்றி பாரம்பரிய விதைகளையும் பாதுகாத்து வருகிறார். 30 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு ஒரு காட்டையே உருவாக்கி பராமரித்து கொண்டிருக்கிறார். 60 ஆண்டுகளாக மரங்களை, வனங்களை பராமரிக்கும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். தற்போது 72 வயதான போதிலும் சுற்றுச்சூழல் மீதான ஆர்வம் குறையாமல் செயல்பட்டு கொண்டிருக்கிறார். இவரது பணி மேலும் சிறக்கட்டும். இன்னும் பல ஆண்டுகள் உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

Monday, 24 May 2021

சுந்தர்லால் பகுகுணா(Sunderlal Bahuguna): ஒரு காந்திய வாழ்க்கை

 இந்தியாவின் முன்னோடி சுற்றுச்சூழலியர்களுள் ஒருவரும் காந்தியருமான சுந்தர்லால் பகுகுணா (94) கடந்த வெள்ளியன்று கரோனாவுக்குப் பலியானார். இந்திய சுற்றுச்சூழல் போராட்டங்களின் யுகம் ஒன்று அவருடைய மறைவோடு முடிவுக்கு வருகிறது. ராஜேந்திர சிங், வந்தனா சிவா போன்ற பல சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களுக்கும் முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருந்தவர் பகுகுணா. அவருடைய பெயரைச் சொன்னாலே பலருக்கும் நினைவுக்கு வருவது 1970-களில் உத்தராகண்டில் உருவான சிப்கோ இயக்கம்தான். உலக அளவில் இது ஒரு முன்னோடி சுற்றுச்சூழல் இயக்கமாகும்.

இன்றைய உத்தரகாண்டின் தேரி கர்வால் மாவட்டத்தின் மரோடா கிராமத்தில் ஜனவரி 9, 1927-ல் சுந்தர்லால் பகுகுணா பிறந்தார். சிறு வயதிலேயே காந்தி மீது ஈர்ப்புகொண்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். அவருடைய தேரி கர்வால் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதேவ் சுமன் பகுகுணாவின் ஆதர்சங்களுள் ஒருவர். இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் சுந்தர்லால் பகுகுணா காங்கிரஸில் இருந்தார். வினோபா பாவேவாலும் அவருடைய பூதான இயக்கத்தாலும் பகுகுணா வெகுவாக ஈர்க்கப்பட்டார்.

கிராம மக்களிடையேதான் வாழ வேண்டும் என்ற நிபந்தனையுடன் விமலாவை வாழ்க்கைத் துணையாக ஏற்றார். சிப்கோ இயக்கத்துக்கு முன்பு மது ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்புச் செயல்பாடுகளில் பகுகுணா தீவிரமாக ஈடுபட்டிருந்தார். சாராய மாஃபியாக்கள் எப்படி அந்தப் பிரதேசத்திலுள்ள பட்டியலின மக்களை மதுவுக்கு அடிமையாக்கி வைத்திருக்கின்றன என்பதையும், இதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்களே என்பதையும் கண்ட பகுகுணா அந்தப் பெண்களுக்காக ஒரு ஆசிரமம் தொடங்கினார். மதுவுக்கு எதிராக பகுகுணா 1968-ல் நடத்திய போராட்டமானது 1971-ல் மது விற்பனைக்கு உத்தர பிரதேச மாநில அரசு தடை விதிப்பதற்கு முக்கியமான காரணமானது. பிறகு, சட்டத்தின் வாசல் வழியே மது அந்த மாநிலத்துக்குள் நுழைந்தது என்பது வேறு விஷயம்.

சிப்கோ இயக்கத்தின் பின்னணி

உத்தராகண்ட் மாநிலம் இயற்கை எழில் பொங்கும் இமயமலைப் பிரதேசத்தில் அமைந்திருக்கிறது. இந்தியாவின் பெரிய நதிகளுள் ஒன்றான கங்கை உற்பத்தியாகி ஓடும் பகுதி அது. அதே நேரத்தில், நிலச் சரிவு, வெள்ளம் என்ற இயற்கைப் பேரிடங்களைத் தொடர்ந்து அனுபவித்துவரும் பிராந்தியம் அது. சுதந்திரத்துக்கு முன்பும் சரி சுதந்திரம் அடைந்த பிறகும் சரி, வளர்ச்சியின் பேரில் அங்குள்ள இயற்கை வளங்கள் வெகு வேகமாகச் சுரண்டப்பட்டன. மரங்களும் அதிக அளவில் வெட்டப்பட்டன. இந்தச் சூழலில், 1970-ல் அலக்நந்தா நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக அந்த நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தோடி சுற்றுப்புற கிராமங்களை மூழ்கடித்தது. தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டது. உயிரிழப்பு, வீடுவாசல் இழப்பு என்று அப்போது ஏற்பட்ட சேதம் அளவிடப்பட முடியாதது. மரங்கள் வெட்டப்படுவதற்கும் வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றுக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதை மக்கள் உணர்ந்துகொண்டார்கள். இந்தப் பின்னணியில்தான் சிப்கோ இயக்கத்தைப் பார்க்க வேண்டும்.

உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் காடுகளைச் சார்ந்திருக்கிறது என்ற அக்கறை சிறிதும் இன்றி அப்போதைய அரசு அந்த மக்களைக் கலந்தாலோசிக்காமல் தனியார் நிறுவனங்களுக்குக் காடுகளையும் தாரைவார்த்துக்கொண்டிருந்தது. உள்ளூர் மக்களும் மரம் வெட்டிகொண்டிருந்தார்கள் என்றாலும் அது விவசாய உபகரணங்கள் செய்வதற்காகவும் அவர்களின் அடிப்படைத் தேவைகளுக்குமாகத்தான் இருந்தது. அது மிகச் சிறிய அளவிலான கொடுக்கல்வாங்கல் முறை, காடுகளுக்கும் அங்கே வசிக்கும் மனிதர்களுக்கும் இடையில் நீண்ட காலம் நிலவிய முறை அது. மக்களின் உரிமையை மதிக்காமல் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு மரம் வெட்டும் உரிமையை வழங்கியது மாநில அரசு. அதை எதிர்த்து சமோலி மாவட்ட மக்களிடையே உருவானதுதான் சிப்கோ இயக்கம். ஆரம்பத்தில் பேச்சுவார்த்தைகள் நடத்தி, அது எதுவும் பலனளிக்காததால் சிப்கோ இயக்கத்தின் முன்னோடிகளுள் ஒருவரான சந்தி பிரசாத் பட் ஒரு யோசனை கூறினார். மரம் வெட்டும் ஆட்கள் வரும்போது எல்லோரும் மரங்களை அணைத்துக்கொண்டு நிற்பது. இந்தியில் ‘சிப்கோ’ என்ற சொல்லுக்குக் கட்டிப்பிடித்தல், அணைத்தல் என்பது பொருள். இப்படிப் பிறந்ததுதான் இந்த இயக்கம். சந்தி பிரசாத் பட், சுந்தர்லால் பகுகுணா, கௌரா தேவி போன்றோர் இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றார்கள்.

மரங்களைக் கட்டிப்பிடித்தல்

நிறுவனங்களின் கூலித் தொழிலாளர்கள் மரம் வெட்ட வரும்போது ஆண்கள், பெண்கள் எல்லோரும் மரங்களைக் கட்டிக்கொண்டு நின்றார்கள். மரவெட்டிகளால் ஏதும் செய்ய முடியவில்லை. கூடிய விரைவில் அந்தப் பிரதேசம் முழுக்க இந்த இயக்கம் பரவியது. காந்திய முறையில் ஒரு சுற்றுச்சூழல் இயக்கம் பிறந்ததை இந்தியாவே வேடிக்கை பார்த்தது. பகுகுணாவும் அவரது மனைவியும் கிராமம் கிராமமாகச் சென்றார்கள். சிப்கோ இயக்கத்தின்போது காஷ்மீர் முதல் கோஹிமா வரை 4,800 கி.மீ. பாத யாத்திரையை பகுகுணா மேற்கொண்டபோது மாணவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்று பலரும் அவருடன் சென்று, கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். சிப்கோ இயக்கம் பெருவெற்றி அடைந்தது.

சிப்கோ இயக்கத்தின் சிறப்பு என்னவென்றால் அது ஒற்றைத் தலைமையைக் கொண்டதல்ல; கூடவே பெருமளவில் பெண்களை ஈடுபடுத்திய இயக்கம் அது. மரத்தைக் கட்டிக்கொண்டு பெண்கள் நிற்கும் ஒரு புகைப்படம் அந்த இயக்கத்தின் வரலாற்றைச் சொல்லிவிடும். நெருக்கடி நிலையின்போது சிப்கோ இயக்கம் தடைபட்டது என்றாலும் 1977-லிருந்து மறுபடியும் தொடங்கியது. இந்திரா காந்தி மற்படியும் ஆட்சிக்கு வந்தபோது பகுகுணாவை வரவழைத்துச் சந்தித்தார். அதன் விளைவாக, இமயமலையில் கடல் மட்டத்திலிருந்து 1,000 மீட்டருக்கு மேல் மரங்களை வெட்டுவதற்கு 15 ஆண்டு காலத் தடையை 1981-ல் விதித்தார். இதுவரையிலான இந்தியப் பிரதமர்களிலேயே சுற்றுச்சூழல் மீது பெரும் அக்கறை கொண்டிருந்தவர் என்றால் அது இந்திரா காந்திதான். அதற்கு சாலிம் அலி, 




சுந்தர்லால் பகுகுணா போன்றோர் பங்களித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.

சிப்கோ இயக்கத்தோடு பகுகுணா ஓய்ந்துவிடவில்லை. பாகீரதி நதியின் குறுக்கே தேரி அணை கட்டப்படுவதை எதிர்த்து 1995-ல் சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். இந்த அணை உருவாக்கும் பாதிப்புகள் குறித்து ஆராயக் குழு ஒன்று அமைக்கப்படும் என்று அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் உறுதியளித்ததை அடுத்து 45-வது நாளில் உண்ணாவிரதத்தை நிறுத்திக்கொண்டார். தேவ கவுடா ஆட்சிக் காலத்திலும் அந்த அணையை எதிர்த்து உண்ணாவிரதம் மேற்கொண்டார். எனினும், அந்த அணை கட்டி முடிக்கப்பட்டு 2004-ல் நிரப்பப்பட்டது.

“எனக்குத் தெரிந்தவரை ஒட்டுமொத்த உலகத்திலேயே மரங்களுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தவர் சுந்தர்லால் பகுகுணாதான்” என்று ‘மரங்களின் மனிதர்’ ரிச்சர்ட் பார்பே ஒருமுறை குறிப்பிட்டார். ‘சுற்றுச்சூழல்தான் நீடித்த பொருளாதாரம்’ என்ற முழக்கத்தை சிப்கோ இயக்கத்தின்போது பகுகுணா உருவாக்கினார். வளர்ச்சியைக் காரணம் காட்டி காடு, மலை உள்ளிட்ட இயற்கை வளங்கள் எப்போதையும் விட அதிகமாகச் சுரண்டப்படும் தற்காலத்தில், அதனால் எப்போதையும்விட அதிகமாக நாம் பாதிப்புக்குள்ளாகிக்கொண்டிருக்கும் சூழலில் சுந்தர்லால் பகுகுணாவின் முழக்கம் இப்போதுதான் மிகவும் பொருத்தமாகத் தோன்றுகிறது.

Friday, 30 April 2021

கொரோன இரண்டாம் அலை (Corona 2nd Phase)

According to the Clinical Trials Registry India, 1,600 volunteers of more than or equal to 18 years will be enrolled in the study across 17 sites in the country. Of them, 400 participants will be part of the immunogenicity cohort. They will be randomly assigned on a 3:1 ratio to receive either Covishield or Oxford/AZ-ChAdOx1 nCoV-19. The rest of the 1,200 volunteers from the

safety cohort, also randomly assigned in a 3:1 ratio, will receive either Covishield or placebo. Covishield was made from ChAdOx1 virus, a weakened version of a common cold virus that causes infections in chimpanzees that has been genetically changed. Genetic material has been added which is used to make proteins from the SARS-CoV-2 virus called spike glycoprotein. By vaccinating, researchers hope the body will recognise and develop an immune response to the spike protein that will help stop the coronavirus from entering human cells and prevent infection.
x

Monday, 29 March 2021

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021

தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டமன்றத் தேர்தல், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின், 234 தொகுதிகளுக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய 2021 ஏப்ரல் 6 இல் நடைபெற்றது. இத்தேர்தலில் 

திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் மு. க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் 12-வது முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார்.
அஇஅதிமுக தலைவர் எடப்பாடி க. பழனிசாமி முதலமைச்சராக இருந்த 15-வது சட்டமன்றத்துக்கான பதவிக்காலம் மே 3, 2021இல் முடிவடைந்தது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். இத்தேர்தல் கேரளா, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களுடன் சேர்த்து நடத்தப்பட்டது. தமிழக சட்டமன்றத் தேர்தலுடன் சேர்த்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது.
மு. க. இசுட்டாலின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இந்திய தேசிய காங்கிரசு, கம்யூனிஸ்டுக் கட்சிகள், மற்றும் சிறிய கட்சிகளுடன் இணைந்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி (ம.மு.கூ) கூட்டமைப்பில் திமுக போட்டியிட்டது. பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பாமக, பாஜக மற்றும் சிறிய கட்சிகளுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி (தே.ச.கூ) என்ற கூட்டமைப்பில் அஇஅதிமுக போட்டியிட்டது. கோவிடு-19 வழிகாட்டி முறைகளுடன் தேர்தல் நடைபெற்றது. மாநிலத்தில் 72.81% வாக்குகள் பதிவாயின. தேர்தலுக்கு முன்னும் பின்னும் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகள், இசுட்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெரும் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று கணித்தன. 2021 மே 2 அன்று வாக்குகள் எண்ணப்பட்டன; ம.மு.கூ 159 இடங்களைக் கைப்பற்றியது, இவற்றில் திமுக 125 தொகுதிகளில் வெற்றியைப் பதிவு செய்து, தனிப் பெரும்பான்மையைப் பெற்றது. தே.ச.கூ 75 இடங்களை வென்றது, இதில் 65 இடங்களை அதிமுக வென்றது. பத்தாண்டுகால அதிமுக ஆட்சியின் பிறகு, ஆறாவது முறையாக திமுக மாநிலத்தின் ஆட்சியைப் பிடித்தது. ஸ்டாலினும் அவரது அமைச்சரவையும் மே 7, 2021 அன்று பொறுப்பேற்றது.

Sunday, 28 February 2021

20-year-old Shrishti Goswami is Uttarakhand CM for a day

 Shrishti Goswami, a 19-year-old girl, was designated as one-day Chief Minister of Uttarakhand on the occasion of National Girl Child day on Sunday.

Speaking on the development, Ms Goswami's elated parents said, "Today we feel very proud, every daughter can achieve a milestone, we just need to support them. We want to thank the government a lot for considering our daughter worthy of this."

"Never stop supporting your daughters. In today's time, daughters can achieve everything. This should be an example for everyone. If she can achieve this milestone, every other daughter is capable of doing so. We are thankful to Trivendra Singh Rawat for giving Srishti this opportunity," said Praveen Puri, Srishti Goswami's father.

Talking about the opportunity, Srishti Goswami told ANI, "I am happy that I have got the privilege of becoming the Chief Minister on National Girl Child Day. I express my heartfelt gratitude to the Chief Minister of Uttarakhand. Also, I will be going through the presentations of various departments and will present my suggestions to them. My suggestions will prioritise girl child-centric issues."

The government, in 2008 declared January 24 to be celebrated as the National Girl Child Day every year with the objective of raising the consciousness of the society towards the girl child so that she can be valued and respected.

Sunday, 24 January 2021

நாட்டின் இளம் மேயர் ஆர்யா ராஜேந்திரன்?

 திருவனந்தபுரத்தில் உள்ள சிபிஎம் மாவட்ட செயலாளர் அனவூர் நாகப்பன், ஆர்யா மேயராக பதவியேற்க இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரத்தின் மேயராக பதவியேற்க போகிறார் என்பதும், இத்தனை இள வயதில் மேயராகும் முதல் நபர் என்பதும் பலரையும் புருவம் உயர்த்தவைத்தது.


தகவல் தெரிந்ததும், உள்ளாட்சி தேர்தலில் அவர் வென்ற தொகுதியான முடவன்முகலில் அவரை வரவேற்க தெருக்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குவிந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதே தொகுதியைச் சேர்ந்தவரான நடிகர் மோகன்லால் ஆர்யாவை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
”ஆர்யாவின் பெற்றோர் நீண்ட காலமாக கட்சியில் இருக்கிறார்கள். அவரது அப்பா ஒரு எலக்ட்ரீசியன். அம்மா எல்.ஐ.சி முகவராக இருக்கிறார்” எனக் கூறுகிறார் சி.பி.எம்மைச் சேர்ந்த கட்சித் தொண்டர் ஒருவர்.

”சிறுவயதிலிருந்தே அப்பாவுடன் கைகோர்த்து கட்சி நிகழ்ச்சிகளுக்கு சென்றேன் என எல்லாரும் கூறுவார்கள். ஆனால் நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது பாலசங்கத்தில் சேர்ந்தது முதலாக கட்சி நினைவுகள் ஞாபகமிருக்கிறது” என்று கூறுகிறார் ஆர்யா.பால சங்கத்தில் துடிப்புடன் பணிபுரிந்து மாநில தலைவராகியிருக்கிறார். கல்லூரிக்குச் சென்றதும் மாணவர் அமைப்பில் சேர்ந்து பணிபுரிந்து, பின்பு மாநில உறுப்பினராகியிருக்கிறார். ”தேர்தல் பிரச்சாரத்தின்போது அமைப்பு அனுபவம் மிகவும் உதவியாக இருந்தது. மக்களிடம் கொள்கைகளை நன்றாக புரியவைக்க முடிந்தது” என்று கூறுகிறார் ஆர்யா.

செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோதும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான எந்த வித பதற்றமும் இல்லாமல், ”எனது தொகுதிக்கும், திருவனந்தபுரத்துக்கும் மிக முக்கியமாக செய்ய வேண்டிய பணியாக நினைப்பது கழிவு மேலாண்மை, கோவிட் காலத்தில் இது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. சுகாதார நிலையங்களில் இது மிக முக்கியமான அளவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெண்களை நோக்கிய திட்டங்கள் சீரிய வகையில் முன்னெடுக்கப்படும்” எனத் தடங்கலில்லாமல் பேசி முடித்திருக்கிறார்.

இளம் மேயருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகிறது கேரளம்.


Friday, 25 December 2020

Sister Abhaya murder case

 Abhaya was a member of St. Joseph's Congregation for religious sisters under the Syro-Malabar Catholic Archeparchy of Kottayam, Kerala. The local police which investigated the case initially closed it with a theory of suicide. The Crime Branch (DYSP KT Michael) which took up the investigation later tried to strengthen the suicide theory, with claims of psychological illness of the deceased. Following popular pressure and a legal battle launched by Jomon Puthenpurackal, a human-rights activist who established and led the “Sister Abhaya Case Action Council”, the High Court of Kerala transferred the investigation to the Central Bureau of Investigation (CBI) in 1993. The first team of CBI failed to find the reason of death. Upon the instruction of the court, a second-team was set up, which concluded that it was indeed a murder, but there was not enough evidence leading to the murderer(s). Court installed the third team of CBI, and they finally found two priests and a sister responsible for the murder and arrested them on 19 November 2008. On 17 July 2009, charges of murder, and destruction of evidence were filed against the three On 22 December 2020, a special CBI court in Kerala's Thiruvananthapuram delivered its verdict in the 28-year-old murder case as it held Father Thomas Kottoor and Sister Sephy guilty.They were sentenced to life imprisonment on 23 December 2020.




Sunday, 29 November 2020

மறக்க முடியுமா இந்த மரடோனாவை.(Diego Maradona)..!!!


 கால்பந்து விளையாட்டின் கடவுளாக போற்றப்பட்டவர், மரடோனா. ஒரு ‘மேஜிக்’ நிபுணர்போல், ரசிகர்களின் கண்களே நம்பாத அளவுக்கு, பந்துகளை லாவகமாக உதைத்து கோலாக்குவதில் வல்லவர்.

போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஒருமுறை வாழ்க்கையைப்பற்றி குறிப்பிடும்போது, ‘ஒரு மனிதனின் வாழ்க்கை முட்புதர்களையும், களைகளையும் கொண்ட நிலமாக இருந்தாலும், அங்கும் நல்ல விதை முளைத்து எல்லோருக்கும் பயன்தரத்தக்க ஒரு நல்லமரமாக வளர எப்போதும் ஒரு இடம் உண்டு’ என்று கூறினார். அதுபோல, ஏழ்மையான ஒரு பெற்றோருக்கு பிறந்து, குடிசைப் பகுதியில் இளமையில் வாழ்ந்தாலும், அர்ஜென்டினா நாட்டை உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் புகழை சேர்த்த டியகோ ஆர்மன்டோ மரடோனா, தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடிய ஒரு மாதத்துக்குள் மாரடைப்பால் உயிரிழந்தார்.

கால்பந்து விளையாட்டின் கடவுளாக போற்றப்பட்டவர், மரடோனா. ஒரு ‘மேஜிக்’ நிபுணர்போல், ரசிகர்களின் கண்களே நம்பாத அளவுக்கு, பந்துகளை லாவகமாக உதைத்து கோலாக்குவதில் வல்லவர். 1986-ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் மொத்தம் 5 கோல்கள் அடித்து கோப்பையை வென்று அர்ஜென்டினாவுக்கு உலக அரங்கில் புகழை கொடுத்தவர். பிரேசிலைச் சேர்ந்த பீலே விளையாடிய காலத்தில், அவரது அணியில் நிறைய சிறந்த வீரர்கள் இருந்தனர். ஆனால் மரடோனா விளையாடும்போது அந்த அணியில் குறிப்பிட்டு சொல்லும்படியான திறமைகொண்ட வீரர்கள் கிடையாது. அந்த அணியின் கேப்டனான மரடோனாதான் கால்இறுதியில் இங்கிலாந்தையும், அரைஇறுதியில் பெல்ஜியத்தையும், இறுதிப்போட்டியில் மேற்கு ஜெர்மனியையும் தோற்கடித்ததில் முக்கிய பங்காற்றினார்.

அர்ஜென்டினா அணிக்காக 91 போட்டிகளில், 34 கோல்கள் அடித்திருந்தாலும், 1986-ம்ஆண்டு உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், அவர் நீண்டதூரத்தில் இருந்து பந்தை கடத்தி கொண்டுவந்து, இங்கிலாந்தின் 5 வீரர்களை சாதுர்யமாக ஏமாற்றி அடித்த 2-வது கோல்தான் இந்த நூற்றாண்டின் சிறந்த கோலாக கருதப்பட்டது. மின்னல் வேகத்தில் அவர் அடிக்கும் கோல்கள் கையால் அடித்தாரா?, காலால் அடித்தாரா? என்பதுகூட யாருக்கும் தெரியாது. இதே ஆட்டத்தில் அவர் கையால் பந்தை கோலுக்குள் அடித்ததாக ஒரு பேச்சு வந்தபோது, ‘அது கடவுளின் கை அடித்த கோல்’ என்று கூறிவிட்டார். 2012-ம்ஆண்டு கேரளாவில் உள்ள கண்ணூருக்கும், 2017-ம்ஆண்டு கொல்கத்தாவுக்கும் வந்திருந்த நேரத்தில், ரசிகர்கள் மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்யும் வகையில், பந்தை காலால் மாறிமாறி கடத்தி அடித்து, நெஞ்சில் ஏந்தி அடித்து, தலையால் முட்டியதைத்தான் மறக்க முடியுமா!.

ஒரு விளையாட்டில், ஒருவர் எப்படி புகழின் உச்சிக்கு சென்று, ஆண்டுகள் மறைந்தாலும், ரசிகர்களின் மனதில் இருந்து மறைய முடியாது என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த மரடோனா, ஒரு வீரர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கும் எடுத்துக்காட்டாக விளங்கினார். 1994-ம்ஆண்டு உலக கோப்பை போட்டிக்காக ஆடியபோது, போதை மருந்து சாப்பிட்டார் என்று வெளியேற்றப்பட்டார். அதன்பிறகு போதை மருந்துகளுக்கு அடிமையானார். உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் சிகிச்சைகளுக்கு பிறகு மீண்டார்.

மரடோனா இந்தியா மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். இந்தியாவுக்காக அவர் சொன்ன அறிவுரையை இந்திய கால்பந்து சம்மேளனமும், மத்திய அரசாங்கமும் முக்கியமாக எடுத்துக்கொண்டால், நிச்சயம் இந்தியாவிலும் நூற்றுக்கணக்கான மரடோனாக்கள் உருவாக முடியும். கொல்கத்தாவுக்கு அவர் வந்திருந்தபோது ஒரு பேட்டியில், ‘உங்கள் கால்பந்து சம்மேளனத்திடம் சொல்லுங்கள். அவர்கள் உங்கள் நாட்டில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்துவதில் தீவிரமாக ஈடுபடவேண்டும். ஏனெனில், இந்த நாட்டில் கால்பந்து விளையாட்டு மீது தணியாத ஆர்வம் இருக்கிறது. ஜூனியர் உலக கோப்பை போட்டியில் இந்திய வீரர்கள் விளையாடியதை பார்த்தேன். சரியான கட்டமைப்பு வசதிகளையும், பயிற்சிகளையும் அளித்தால், இந்தியா மிகச்சிறந்த இடத்துக்கு முன்னேற முடியும்’ என்று கூறினார். இதையே மரடோனா கூறிய கடைசி அறிவுரையாக ஏற்று, இந்திய கால்பந்து விளையாட்டை உலக அரங்கில் மிளிரச் செய்வதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்கவேண்டும் என்பதே, மரடோனாவுக்காக கண்ணீர் சிந்தும் இந்திய ரசிகர்களின் கனவாகும்.


Sunday, 11 October 2020

U.P ஹத்ராஸ் - கூட்டு பாலியல் வன்கொடுமை - மறக்க முடியாத வலி

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான இளம்  பெண், கடந்த Sep 14ஆம் தேதி நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அப்பெண்ணின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக மாறியது. உடனே டெல்லியில் உள்ள சாஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 15 நாட்களுக்கும் மேலாக தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இளம்பெண் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் வட இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன.

இளம்பெண்ணிற்கு நீதி வேண்டும்

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள், திரைத்துறையினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர். இறந்த பெண்ணிற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த சூழலில் உயிரிழந்த பெண்ணின் உடலுடன் அவரது குடும்பத்தார் டெல்லி மருத்துவமனையில் இருந்து நேற்று இரவு புறப்பட்டனர்.

அவர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸிற்கு குடும்பத்தார் செல்வதற்கு முன்னரே உயிரிழந்த பெண்ணின் உடலை போலீசார் கொண்டு சென்றுவிட்டனர். இதையடுத்து உடலை நேரடியாக மயானத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இளம்பெண்ணின் தந்தை ஹத்ராஸ் வந்தவுடன், அவரை அவசர அவசரமாக மயானத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அவசரம் காட்டிய போலீசார்

பின்னர் உடனடியாக அவரது மகளின் உடலை எரிக்க வேண்டும் என்று போலீசார் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுபற்றி பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு உயிரிழந்த பெண்ணின் சகோதரர் பேட்டியளிக்கையில் தெரிவித்துள்ளார். மற்றொரு உறவினர் கூறுகையில், பெண்ணின் தந்தை சுமார் 40 பேருடன் மயானத்திற்கு சென்றார். அப்போது பூல் கார்ஹி கிராமத்திற்கு அருகேவுள்ள மயானத்தில் பெண்ணின் உடலை உடனடியாக எரித்தாக வேண்டும் என்று போலீசார் வலியுறுத்தியுள்ளனர். 

வழக்கை மூடி மறைக்கும் முயற்சியா?

ஏன் இவ்வளவு அவசரம் காட்டினர் என்று தெரியவில்லை. எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு என்ன தான் வேண்டும். என்ன மாதிரியான அரசியல் இது? எங்கள் மகள் வன்புணர்விற்கு ஆளாக்கப்படவில்லை என்று ஏதேதோ கதை கூறுகின்றனர். இந்த விஷயத்தை அப்படியே மூடி மறைக்கத் தான் இப்படி செய்ததாக குற்றம்சாட்டினார். இந்நிலையில் நேற்று நள்ளிரவே இளம்பெண்ணின் உடல் எரிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி மயானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பத்திரிகையாளர்கள் யாரையும் அப்பகுதியில் அனுமதிக்க போலீசார் மறுத்துவிட்டனர். இதுபற்றி ஹத்ராஸ் காவல்துறை கண்காணிப்பாளர் விக்ராந்த் விர் கூறுகையில், அனைத்து நடவடிக்கைகளும் அப்பெண்ணின் குடும்பத்தார் விருப்பப்படியே நடந்துள்ளது என்று தெரிவித்தார்.

விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

இந்த சம்பவம் விசாரிக்க மூன்று பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். விரைவாக விசாரித்து அடுத்த 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.



Tuesday, 29 September 2020

மகிழ்ச்சியளிக்கும் தமிழக கல்வி தரம்!


 2017-ம் ஆண்டுக்கு முன்பு வரை தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையிலேயே நடந்தது.

2017-ம் ஆண்டு முதல் நாடு முழுவதுக்கும் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ‘நீட்’ தேர்வு கொண்டுவரப்பட்டது. “ ‘நீட்’ தேர்வு வினாத்தாள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படுகிறது, மாநில கல்வித் திட்டத்தில் படித்தவர்களால், இந்த தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. எனவே, ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்று தமிழ்நாடு முழுவதிலும் இருந்து கோரிக்கைகள் எழுந்து வந்தன. ‘நீட்’ தேர்வு அச்சத்தால் இதுவரை 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எனவே, இந்த ‘நீட்’ தேர்வு தமிழ்நாட்டுக்கு வேண்டவே வேண்டாம் என்று விடப்படும் கோரிக்கையை ஒருபோதும் மறுப்பதற்கு இல்லை.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு இணையான அளவு மாநில பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று எழுந்த கோரிக்கைகளை ஏற்று கல்வித்துறை 2018-2019-ம் ஆண்டு பிளஸ்-1, 2019-2020-ம் ஆண்டு பிளஸ்-2 வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களையும் மாற்றியமைத்தது. இந்த புதிய பாடத்திட்டம் எதற்கும் சளைத்ததல்ல என்பதை கடந்த 13-ந்தேதி நடத்தப்பட்ட ‘நீட்’ தேர்வு வினாத்தாள் நிரூபித்து காட்டியுள்ளது. ‘நீட்’ தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 97 சதவீத கேள்விகள் தமிழ்நாட்டில் இப்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள பிளஸ்-1, பிளஸ்-2 பாடப்புத்தகங்களில் இருந்தே கேட்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 180 கேள்விகளில், 174 கேள்விகளுக்கான பதில் பிளஸ்-1, பிளஸ்-2 பாடப்புத்தகத்திலேயே இடம்பெற்றுள்ளன.

2017-ம் ஆண்டு ‘நீட்’ தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 60 சதவீத கேள்விகள்தான், பழைய பாடப்புத்தகங்களில் இடம்பெற்றிருந்தன. ஆனால், தற்போது நடத்தப்பட்ட ‘நீட்’ தேர்வில், உயிரியல் பாடத்தில் கேட்கப்பட்ட 90 கேள்விகளில் 87 கேள்விகளுக்கான விடைகள் மாநில பாடத்திட்டத்திலேயே இருக்கிறது. அதில், 54 சதவீத கேள்விகள் பிளஸ்-1 பாடப்புத்தகத்தில் இருந்தும், 46 சதவீத கேள்விகள் பிளஸ்-2 பாடப்புத்தகத்தில் இருந்தும் கேட்கப்பட்டிருந்தன. வேதியியல், இயற்பியல் பாடங்களின் வினாக்களும் பிளஸ்-1, பிளஸ்-2 பாடப்புத்தகங்களில் இருந்து ஏறத்தாழ சரிசமமாக கேட்கப்பட்டிருந்தன.

முன்பெல்லாம் பள்ளிக்கூடங்களில் பிளஸ்-2 இறுதித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பதற்காக, பிளஸ்-1 பாடப்புத்தகங்களில் அதிக கவனம் செலுத்துவது இல்லை. பள்ளிக்கூடங்களிலும் பிளஸ்-1 வகுப்பிலேயே பிளஸ்-2 பாடத்தை நடத்த தொடங்கி விடுவார்கள். இதனால், பிளஸ்-1 பாடங்கள் குறித்த கல்வியறிவு மாணவர்களுக்கு குறைவாகவே இருந்தது. உயர் படிப்புகளுக்கு, குறிப்பாக என்ஜினீயரிங் படிப்புகளுக்கு மாணவர்கள் செல்லும்போது, தேர்வுகளில் தேர்ச்சிபெற முடியாமல் மாணவர்கள் சிரமப்பட்டனர்.

இதற்கிடையே, கடந்த 2018-ம் ஆண்டு முதல் பிளஸ்-1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு முறை கொண்டு வரப்பட்டது. இதனால், ஆசிரியர்களும் பிளஸ்-2 வகுப்புக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை பிளஸ்-1 வகுப்புக்கும் கொடுக்கத் தொடங்கினார்கள். அதற்கான பலன் தற்போதைய ‘நீட்’ தேர்வில் வெளிப்பட்டிருக்கிறது. இந்த ‘நீட்’ தேர்வில் பிளஸ்-1 பாடங்களில் இருந்தும் சரிசமமாக கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. இனி பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளை ஏற்ற இறக்கத்துடன் பார்க்கக் கூடாது என்பதை இந்த ‘நீட்’ தேர்வு உணர்த்தியுள்ளது.

இதையெல்லாம் வைத்துக்கொண்டு, நமது மாணவர்களால் தான் இனி ‘நீட்’ தேர்வு எழுதக்கூடிய அளவுக்கு அறிவு இருக்குமே, பிறகு ஏன் இந்த தேர்வை நடத்தக்கூடாது? என்று வாதம் செய்வதில் பொருள் இல்லை. ‘நீட்’ தேர்வில் கலந்துகொள்வதற்கு சமமான கற்றல் வாய்ப்பு, சமமான ஆடுகளம் வேண்டும். தேர்வை எதிர்கொள்ள தொழில்நுட்ப ஆற்றலும் வேண்டும். அதற்கெல்லாம் தனியாக பயிற்சி மையங்களில் படித்தால் தான் முடியும். அந்த அளவு வசதி, வாய்ப்புகள் தமிழகத்திலுள்ள ஏழை, எளிய மாணவர்களுக்கு கிடையாது. எனவே, சிறந்த கல்வித்தரத்துடன் கூடிய பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தவேண்டும் என்பது தமிழகத்தின் ஒட்டுமொத்த குரலாக இருக்கிறது.

Wednesday, 12 August 2020

Kerala gold smuggling case

தந்தை-மகன் மரணம்: ‘போலீஸ் மிருகத்தனம் ஒரு கொடூரமான குற்றம்’

 தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் ஆகிய இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்த விவகாரம் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டது முதல் தற்போது வரை நடந்த நிகழ்வுகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

ஏன் கைது?

கடந்த ஜூன் 19-ம் தேதி சாத்தான்குளத்தில் தங்களது கடையை கூடுதல் நேரம் திறந்திருந்த காரணத்தால் காவல்துறையினருடன் ஏற்பட்ட தகராறில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் ஆகிய இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர்.

இதையடுத்து அவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் போராட்டத்தில் இறங்கினர். சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்தது. மாநில மனித உரிமை ஆணையமும் நோட்டீஸ் அனுப்பியது.

பிரேதப் பரிசோதனை

உயிரிழந்த ஜெயராஜின் மனைவியும் உயிரிழந்த பென்னீஸின் தாயாருமான செல்வராணி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் இருவரது உடலையும் மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டுமென்றும் பிரேதப் பரிசோதனையை வீடியோவில் பதிவுசெய்ய வேண்டுமென்றும் அவர் கோரியிருந்தார்.

இந்த மனு அவசர மனுவாக நீதிபதி பி. புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, பிரேதப் பரிசோதனையை மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழு விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டார். பிரேதப் பரிசோதனையை வீடியோவில் பதிவுசெய்யவும் உத்தரவிடப்பட்டது.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் கோவில்பட்டி நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் விசாரணை நடத்தினார்.

தலைவர்கள் கண்டனம்; வணிகர்கள் கடையடைப்பு:

இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

பா.ம.க நிறுவனர் ராமதாஸ், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், சிபிஐ(எம்) தமிழக தலைவர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களும் இந்த சம்பவத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டனர்

கடைகளை அடைத்து வணிகர் சங்கங்கள் போராட்டம் நடத்தின

அரசு வேலை, நிதியுதவி வேண்டாம்; போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு பத்து லட்சம் ரூபாய் அளிப்பதாகவும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவிததார். ஆனால், அரசு அறிவித்த வேலையும் வேண்டாம், ரூ.20 லட்சம் பணமும் வேண்டாம். 'அவர்களை காவலில் வைத்து அடித்து மரணத்துக்கு காரணமாக இருந்த போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்வதுதான் வேண்டும்" என்று அவர்களது குடும்பத்தினர் கூறினர்.

குற்றம்சாட்டப்படும் போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்யும்வரை இறந்தவர்கள் உடலை வாங்கமாட்டோம் என்றும் கூறிவந்த குடும்பத்தினர் பின்னர் உடல்களை பெற்றுக்கொள்ள சம்மதித்தனர்.

காவலர்கள் மீது இரட்டை கொலை வழக்கு பதிவு செய்யப்படும் என்று நீதித்துறை மீது நம்பிக்கை வைத்து அவர்களது உடல்களை பெற்றுக்கொள்ள சம்மதிப்பதாக அவர்களது குடும்பத்தினர் கூறினர்.

இடை நீக்கம்

சாத்தான்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

காவல்நிலைய ஆய்வாளர் ஶ்ரீதர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

இந்தியளவில் முக்கியத்துவம் பெற்றது

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியளவிலும் பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் சாத்தான்குளம் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். "Justice For Jeyaraj And Fenix" என்கிற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது.

சி.பி.ஐக்கு மாற்ற விருப்பம்

இந்த வழக்கை நீதிமன்றத்தின் அனுமதி பெற்று சி.பி.ஐக்கு மாற்றவிருப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார். இந்த நிலையில், இன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் ஆஜரான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் செல்லப்பாண்டியன், இந்த வழக்கை தமிழக அரசு சி.பி.ஐக்கு மாற்ற விரும்புவதாகத் தெரிவித்தார்.

காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவுசெய்து விசாரிக்கலாம்

காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவுசெய்து விசாரிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டதுஇந்த வழக்கில் ஒரு விநாடியைக்கூட வீணாக்க விரும்பவில்லையென தெரிவித்த நீதிபதிகள், சி.பி.ஐ. இந்த வழக்கைப் பொறுப்பேற்கும்வரை, வழக்கை நெல்லை காவல்துறை விசாரிக்கலாம் எனக் கூறினர்.

டி.எஸ்.பி., கூடுதல் எஸ்.பி. மீது குற்றவியல் அவமதிப்பு வழக்கு, இடமாற்றம்

இந்த வழக்கில் விசாரணை நடத்திய நீதித்துறை நடுவரை அவமதித்ததாக தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோர் மீது தாமாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளது சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை.

அத்துடன் அவர்களை இடமாற்றம் செய்யவும் உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

இவர்கள் இருவருடன் சாத்தான்குளம் காவல் நிலைய காவலர் மகாராஜன் என்பவரும் இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு உள்ளாகியிருக்கிறார்.

சிசிடிவி வீடியோ வெளியானது: முதல் எஃப்.ஐ.ஆருடன் முரண்பாடு

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் நடத்தி வந்த மொபைல் கடைக்கு அருகில் இருந்த கடையின் சிசிடிவி வீடியோ காட்சிகள் ஊடகங்களுக்கு கிடைத்தது. அந்த வீடியோ காட்சியில் ஜெயராஜ் கடையின் வாயிலில் தனியாக நிற்பதும், யாரோ அழைத்ததும் அங்கிருந்து செல்வதுமான காட்சிகள் பதிவாகியுள்ளன.

அந்த நேரத்தில், எஃப்ஐஆரில் குறிப்பிட்டபடி அவரது மகன் பென்னிக்ஸோ, அவரது நண்பர்கள் கூட்டமோ அங்கே இல்லை. அவர்கள் தரையில் விழுந்து உருளுவது போன்ற காட்சிகளும் இல்லை.

நீதித் துறை நடுவர் அறிக்கை

காவல்துறை தாக்குதலால் உயிரிழந்ததாகக் கூறப்படும் ஜெயராஜும் பென்னிக்சும் விடியவிடிய காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக நீதித் துறை நடுவரின் அறிக்கை கூறியது. தான் விசாரணை மேற்கொண்டபோது அங்கிருந்த காவலர்கள் தன்னிடம் மோசமாக நடந்துகொண்டதாகவும் நீதித் துறை நடுவர் தெரிவித்தார்.

ஜெயராஜ் பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக கோவில்பட்டி நீதித் துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டார். இது தொடர்பான விசாரணை அறிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.

நீதித் துறை நடுவர் அறிக்கை

காவல்துறை தாக்குதலால் உயிரிழந்ததாகக் கூறப்படும் ஜெயராஜும் பென்னிக்சும் விடியவிடிய காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக நீதித் துறை நடுவரின் அறிக்கை கூறியது. தான் விசாரணை மேற்கொண்டபோது அங்கிருந்த காவலர்கள் தன்னிடம் மோசமாக நடந்துகொண்டதாகவும் நீதித் துறை நடுவர் தெரிவித்தார்.

ஜெயராஜ் பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக கோவில்பட்டி நீதித் துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டார். இது தொடர்பான விசாரணை அறிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி. விசாரணை

சி.பி.ஐ. தனது விசாரணையைத் துவங்க நாட்கள் ஆகும் என்பதால், அதற்கு முன்பாகவே குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை (சி.பி.சி.ஐ.டி.) தனது விசாரணையைத் துவங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டது.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. தனது விசாரணையைத் துவங்கியது. முதல் தகவல் அறிக்கையை மாற்றியமைக்க வாய்ப்பு உள்ளது என சாத்தான்குளத்தில் சிபிசிஐடி ஐஜி சங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

காவலர்கள் கைது

ரகு கணேஷ்

காவல்துறை உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பால கிருஷ்ணன் தலைமைக் காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதரை கோவில்பட்டி அருகே சிபிசிஐடி காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்திய நிலையில், தற்போது அவர் மீது கொலை வழக்கு மற்றும் தடயங்களை அளித்தல் ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.

தலைமைக் காவலர் ரேவதியின் இல்லத்திற்கு பாதுகாப்பு

இந்த வழக்கில் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக சாட்சியமளித்த தலைமைக் காவலர் ரேவதியின் வீட்டிற்கு தற்போது காவலர்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

காவல் நிலையத்தை ஒப்படைக்க உத்தரவு

வருவாய்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த சாத்தான்குளம் காவல்நிலையத்தை, மீண்டும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்

சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்கியதில் தந்தை, மகன் மரணமடைந்த கூறப்படும் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேரும் ஜூலை 4ஆம் தேதி மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.

காவலர் ரேவதியுடன் முதல்கட்ட விசாரணை நிறைவு

சாத்தான்குளம் கொலை வழக்கில் பிரதான சாட்சியான காவலர் ரேவதியிடம் முதல் கட்ட விசாரணை நிறைவு பெற்றுள்ளதாக சி.பி.சி.ஐ.டி. ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. அலுவலக வாயிலில் செய்தியாளர்களிடம் பேசிய ஐஜி சங்கர், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவலர்களை அடுத்த வாரம் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்குக் கோரவுள்ளதாகத் தெரிவித்தார்.

தடை செய்யப்பட்ட பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில், தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸாரால் கொல்லப்பட்டதாக கூறப்படும் வழக்கில், பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை சேர்ந்த இளைஞர்களும் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை தொடங்கியுள்ளது.

சாத்தான்குளம் வழக்கை சிபிஐ விசாரிக்க அறிவிக்கை

சாத்தான்குளத்தில் கடந்த மாத இறுதியில் காவல்துறை அதிகாரிகள் தாக்கியதில் தந்தை, மகன் மரணமடைந்ததாக கூறப்படும் வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐ மேற்கொள்வதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

வழக்குப்பதிவு செய்த சிபிஐ, மேலும் 5 போலீசார் கைது

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக இரண்டு வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது.




மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

  பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...