Skip to main content

மகிழம் அல்லது வகுளம் அல்லது இலஞ்சி அல்லது மகிழம் மரத்தை பற்றி

Spanish cherry என்று அழைக்கப்படும் இந்த மரம் ஒரு சிற்றின மரம். இதில் நிறைய மருத்துவ பழங்கள் உள்ளவை. இது சங்க காலங்களில் பயன்படுத்தப்பட்டவை
. இம்மரம் தெற்கு ஆசியா, வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள வெப்பமண்டல காடுகளில் காணப்படும் ஒரு நடுத்தர அளவிலான பசுமையான மரமாகும். இந்த மரத்தை பொதுவாக ஆங்கிலத்தில் கட்டை விலைமதிப்பு மிக்கது, இதன் பழம் உண்ணத்தக்கது, மேலும் இதன் பட்டை, பூ போன்றவை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரமானது நல்ல நிழல் தருவதாகவும், வாசம் மிகுந்த மலர்களைக் கொண்டதாலும், இது தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இதன் மலர் தாய்லாந்தின் யலா மாகாணத்தின் மாகாண மலர் ஆகும்.
ஸ்பானிஷ் செர்ரி, மெட்லர், புல்லட் உட் என்று அழைக்கின்றனர். இதன் மரக்

மகிழம் பூ:
இதன் பழம் சாப்பிட உகந்தவை. இதன் பழத்தை பழங்காலத்தில் மருத்துவத்தில் பயன்படுத்தினர். இம்மரம் 16 மீட்டர் வரை வளரக்கூடியது. மார்ச் மாதத்தில் பூத்து ஜூன் மாதத்தில் பழுக்கும். இதன் இலைகள் பளபளப்பாக இருக்கும். இதன் மலர்கள் நறுமணம் கொண்டவை. மணம் மிக்க பூவை மகளிர் தலையில் அணிந்துகொள்வர். இதன் சாற்றினை ஊதுபத்தியில் மணம் சேர்க்கவும், மண-எண்ணெய் மணப்பொடி முதலானவற்றைச் செய்யப் பயன்படுத்துகின்றனர்.


இந்தோ மலேசியத் தாவரம்:
ஆனால், இடைக்கால, பிற்காலத் தமிழ் இலக்கியங்களில் மகிழம் பரவலாக இடம்பெற்றுள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலின் தலப் புராணத்தின்படி மகிழம் என்ற சொல் மங்கலம் (வளமை, புனிதம், முழுமை) என்ற பொருள்படும். மகிழத்தின் மற்றொரு தமிழ்ப்பெயர் இலஞ்சி (வகுளம் இலஞ்சி மகிழ்மரமென்ப – சேந்தன் திவாகரம்) ஆகும். இந்தச் சொல்லைத் திருவிளையாடல் புராணம் கையாண்டுள்ளது (தாதவிழ் மல்லிகை முல்லை இலஞ்சி தடங்கோங்கம்), கம்பரும் கையாண்டுள்ளார்.
இலஞ்சி என்ற தமிழ்ச்சொல் இந்தத் தாவரத்தின் தாவரவியல் பெயரான மிமுசாப்ஸ் இலஞ்சி (Mimusops elengi: Sapotacea - தாவரக் குடும்பம்) என்பதில் சிற்றினப் பெயராகச் சேர்க்கப்பட்டிருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. இந்தோ – மலேசியத் தாவரமான மகிழம், கிழக்கு மலைத்தொடரில் மிகவும் பரவலாகக் காணப்படுகிறது.


தமிழ் இலக்கியம் :
பூவின் மணம் மகிழ்வளிப்பதால், மகிழம் என்று நயமாக அழைக்கப்பட்டாலும் இந்தத் தாவரம் `வகுளம்’ என்ற தமிழ்ப்பெயரின் மரூவுச் சொல்தான். சங்க இலக்கியத்தின் குறிஞ்சிப்பாட்டு (பாடல் 70), பரிபாடல் (12:79), திணைமாலை நூற்றைம்பது (24) ஆகிய மூன்றில் மட்டும் ஒவ்வொரு இடத்தில் வகுளம் சுட்டப்பட்டுள்ளது.
பரிபாடலின் திரட்டுப்பாடல் ஒன்றில் மகிழம் என்ற சொல் வருவதால், அந்தக் காலகட்டத்திலேயே வகுளம், மகிழமாக மருவிவிட்டது எனக் கொள்ளலாம். சங்க இலக்கிய உரையாசிரியர்களும் மகிழத்தை வகுளத்தின் பொருளாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.


இலக்கியம் போற்றிய மலர்
கந்தமதானா காட்டிலும், இந்திரபிரஸ்தாவிலும் இது வளர்ந்து காணப்பட்டதாக மகாபாரதம் குறிப்பிடுகிறது. காளிதாசரின் காவியங்களிலும் மகிழம் சுட்டப்பட்டுள்ளது. மகிழம் குறிஞ்சி நிலத் தாவரம்; பால் (milky latex) கொண்ட பெரிய, பசுமையிலை மரத் தாவரமான இது குறிஞ்சி நிலத்தில் தினை விதைப்பதற்காக வெட்டப்பட்டதாகத் திணைமாலை நூற்றைம்பதில் (24:1) (நறுந்தண் தகரம் வகுளம் இவற்றை) கணிமேதையார் காட்டியுள்ளார். குறிஞ்சி மலைப்பகுதியில் இது வளர்வதைப் பரிபாடல் திரட்டு (1:7,9) சுட்டுகிறது (அணிமலர் வேங்கை மராஅம் மகிழம்… மணி நிறங் கொண்ட மாலை).
மார்ச் முதல் ஜூன்வரை பூக்கும் கோட்டு மலரான மகிழம்பூ சிறியது, அழகிய அமைப்புடையது, மங்கிய மஞ்சள் நிறம் கொண்டது, மிகுந்த மணமுடையது. இந்த மலரின் வடிவத்தைத் தேர்க்காலின் வடிவத்துக்கு ஒப்பிடுகிறார் திருத்தக்க தேவர் (கோடுதையாக் குழிசியோ டாரங் கௌக்குயிற்றிய ஓடு தேர்க்கால் மலர்ந்தன வகுளம் – சீவகசிந்தாமணி). மகரந்தச் சேர்க்கைக்குப் பின்பு இதன் மலர் காம்பிலிருந்து கழன்று, ஒரு சிறு சிலந்திப் பூச்சி கீழே விழுவதைப் போன்று வீழ்கிறது என்றும் சீவக சிந்தாமணி (2108) கூறுகிறது (மதுகலந்தூழ்ந்துச் சிலம்பி வீழ்வன போல மலர் சொரிவன வகுளம்).
ராமன் உருவை அனுமன் வாயிலாகக் கம்பர் விவரிக்கும்போது அவனுடைய கொப்பூழை இந்தப் பூவுக்கு ஒப்பிடுகிறார் (பூவொடு நிலஞ்சுழித்தெழுமணி உந்திநேர்; இனி இலஞ்சியம் போலும் வேறுவமை யாண்டாரோ).
மலரில் அதிகத் தேன் காணப்படும். இந்தப் பூ சுழன்று வீழ்ந்து செவ்வந்தியோடு சேர்ந்து காய்ந்து கிடக்கும்போதுகூட இதன் தேனுக்காக வண்டுகள் மொய்த்தன என்று திருத்தக்கதேவர் கூறுகிறார் (மலர்ந்த செவ்வந்திப்போதும் வகுளமும் முதிர்ந்து வாடி உலர்ந்து மொய்த்தனித்தேன் நக்கிக்கிடப்பன – சீவகசிந்தாமணி). ஆசாராங்கா சூத்ரம் என்ற வடமொழி நூலில் நாள்பட்ட தேன் / சாராயம் ஊற்றினால் வகுளம் பூக்கும் என்று குறிப்பிட்டிருப்பதை இங்குக் குறிப்பிட வேண்டும். சுரபாலரும் தன்னுடைய விருக்ஷாயுர்வேத நூலின் 147-வது பாடலில் இதைப் பற்றி சுட்டிக்காட்டியுள்ளார். மகிழத்தின் கனி முற்றிலும் பழுத்த நிலையில் சிவப்பு நிறங்கொண்டது.

Popular posts from this blog

பூலான் தேவி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பூலான் தேவி ( Phoolan Devi , Aug 10, 1963 - Jul 25, 2001), கொள்ளையரசி அல்லது பேண்டிட் குயின் என்று பலராலும் அழைக்கப்படும் இந்தியாவின் பிரபலக் கொள்ளைக்காரியும் பின்னாளில் அரசியல்வாதியுமாக இவர் அறியப்படுகிறார். பூலான்தேவி உத்தரபிரதேச மாநிலத்தில் ஜலான் மாவட்டத்தில் இருக்கும் ஜோர்கி கபர்வா என்ற கிராமத்தில் பிறந்தாள். மல்லாஸ் எனப்படும் மிகவும் ஒடுஇக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவள். தந்தை பெயர் தேவிதீன்; தாயார் பெயர் மூலா. ஏழையான இவர்களின் குடும்பம் படகோட்டி பிழைத்து வந்தது. பூலான்தேவிக்கு 4 சகோதரிகள். 11 வயதில் பூலான் தேவிக்கு திருமணம் நடந்தது. கணவன் பெயர் புட்டிலால். பூலான்தேவியை விட 20 வயதுக்கு மூத்தவன். ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்தவன். திருமணம் ஆன பெண், வயது வரும் வரை பெற்றோர் கண்காணிப்பில் இருப்பது வழக்கம். அதன்படியே முதலில் பூலான்தேவி தாய் வீட்டில் இருந்தாள். ஆனால் கணவனோ அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டான். அவளை பலாத்காரம் செய்தான். இப்படி பல முறை தொல்லைகளுக்கு ஆளானாள். முடிவில் பெற்றோர் வீட்டில் குடிபுகுந்தாள். இதனால் பூலான்தேவியை கைவிட்டு புட்டிலால் வே...

ஆர்க்டிக் டெர்ன் பறவை

ஆர்க்டிக் டெர்ன்  (Arctic Tern) என்பது (Sterna paradisaea)என்ற குடும்பத்தைச் சேர்ந்த கடற்பறவை ஆகும். உலகிலேயே அதிக தூரம்வலசை வரும் பறவையாகும். வட துருவ ஆர்க்டிக்கிலிருந்து ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா ஆகிய கண்டங்களின் வழியே தென்துருவ அன்டார்க்டிக்கின் பனிப்பரப்புக்கு குளிர்காலத்தில் வலசை போகின்றன. வலசை போவதன் மூலம் ஆர்டிக் டெர்ன் சுமார் 35,000 கி. மீ. தொலைவு ஒவ்வொரு ஆண்டும் பயணிக்கிறது. கிட்டத்தட்ட உலகை சுற்றி வரும் தூரம் ஆகும். சுமார் ஒரு அடி நீளமுள்ள இப்பறவையானது, தன் வாழ்நாளின் பெரும்பகுதியை, பறப்பதிலேயே செலவிடுகிறது. வலசை வரும் நேரங்களில் இவை உணவும் உண்பதில்லை. அதே சமயம் அவை ஒரே சமயத்தில் நில்லாமல் சுமார் 4,000 கி. மீ தூரம் வரை பறந்து பயணிக்கிறது. இது ஒரு முறை வலசை சென்று திரும்பி வரும் வரை சுமார் 70,900 கி.மீ பயணித்து விடுகிறது. [3] இது உலகில் அறியப்படும் நீண்ட தூரம் வலசை போகும் மற்ற விலங்கினங்களை விட அதிகமான வலசை போகும் தூரமாகும். இப்பறவை ஆர்க்டிக் வட்டமான துந்திராவில் இனப்பெருக்கம் செய்கிறது.