Friday, 8 November 2013
6 மாத குடும்பப் பஞ்சாயத்தை அரை மணி நேரத்தில் தீர்த்த நித்தியானந்தா
Thursday, 7 November 2013
உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் மீண்டும் கலவரம்
முசாஃபர்நகர்: உத்தரபிரதேச மாநிலம் முசாஃபர் நகர் அருகே ஷாபூர் நகரில் இர்பான் என்ற வணிகர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்துள்ளது.
அண்மையில் முசாஃபர் நகரில் ஏற்பட்ட கலவரத்தில் 49 பேர் பலியாகினர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக முகாம்களுக்குச் சென்றனர். இந்நிலையில் முசாஃபர் நகர் அருகே ஷாபூர் நகரில் இர்பான் என்ற வர்த்தகர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் ஷாபூர் நகரில் வன்முறையில் ஈடுபட்டனர். அங்குள்ள வீடு, கடைகள், வாகனங்களுக்கு அவர்கள் தீ வைத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வன்முறை தொடர்பாக சிலரை கைது செய்தனர். மேலும் வன்முறை நீடிக்காமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். வன்முறையை தடுக்க முசாஃபர்நகர் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள். Topics: muzaffarnagar, tension, வர்த்தகர், சுட்டுக் கொலை, பதற்றம்
Wednesday, 6 November 2013
ராஞ்சி சிறைச்சாலையில் மாதம் 420 சம்பளத்தில் லாலுவுக்கு தோட்ட வேலை
ராஞ்சி:கால்நடை தீவன ஊழல் வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவுக்கு ராஞ்சி சிறையில் மாதம் ரூ. 420 சம்பளத்தில் தோட்ட வேலை வழங்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு லாலு பிரசாத் முதல்வராக இருந்த கால கட்டத்தில் கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதாக அரசு கருவூலங்களில் போலி பில்கள் கொடுக்கப்பட்டு ரூ. 900 கோடி மோசடி செய்யப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ மொத்தம் 52 வழக்குகள் பதிவு செய்தது. இதில் லாலு பிரசாத் மீது மட்டும் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் ஒரு வழக்கில் ராஞ்சி சிபிஐ கோர்ட் கடந்த மாதம் தீர்ப்பளித்தது. லாலு பிரசாத் உள்பட 45 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. லாலு பிரசாத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்கள் சிபிஐ கோர்ட்டிலும் பின்னர் ராஞ்சி ஐகோர்ட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையில் லாலு சிறையில் ராஜ வாழ்க்கை வாழ்வதாக குற்றம் சாட்டப்பட்டது. தினந்தோறும் அவரை நூற்றுக்
கணக்கானவர்கள் சந்தித்து வந்தனர். சிறை விதிகளை மீறி இதற்கு அனுமதி வழங்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. லாலுவை பார்க்க கூட்டம் கூட்டமாக தொண்டர்கள் வருவதை தொடர்ந்து சிறைக்கு வெளியே பல பெட்டி கடைகள் முளைத்தன. லாலுவுக்காக சிறை விதிகள் மீறப்படுவதை எதிர்த்து பொது நல வழக்கு தொடரப்பட்டது. இது நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில் லாலுவுக்கு சிறையில் தோட்ட வேலை அளிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக நாள் ஒன்றுக்கு அவருக்கு ரூ.14 சம்பளமாக வழங்கப்படுவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். ராஞ்சி சிறை சுமார் 52 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பரந்த புல்வெளிகள், பூந்தோட்டம் மற்றும் காய்கறி தோட்டம் சிறைக்குள் இருக்கிறது. இந்த தோட்டங்களை பராமரிக்கும் பணி லாலுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை அவர் மிகவும் மகிழ்ச்சியாக செய்வதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன. வாரத்தில் ஒருநாள் அவருக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
லாலு பிரசாத் கடந்த 2004 முதல் 2009 வரையிலான கால கட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூல், அகமதாபாத் ஐஐஎம் போன்ற பிரபலமான கல்லூரிகளில் எம்பிஏ மாணவர்களுக்கு பாடம் எடுத்துள்ளார். சிறைக்கைதிகளுக்கு வகுப்புகள் நடத்துவது போன்ற எளிமையான பணி கொடுக்காமல் கஷ்டமான தோட்ட வேலையை லாலுவுக்கு கொடுத்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து சிறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், லாலுவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜார்கண்ட் போலீஸ் எச்சரித்தது. ராஞ்சி சிறையில் 30 சதவீத கைதிகள் கொடூர குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள். 10 சதவீதம் பேர் மாவோயிஸ்ட்கள். பாதுகாப்பு காரணங்களுக்காகவே கைதிகளுக்கு பாடம் நடத்தும் பணி கொடுக்கப்படவில்லை என்றார்.

Subscribe to:
Posts (Atom)
மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?
பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...
-
Spanish cherry என்று அழைக்கப்படும் இந்த மரம் ஒரு சிற்றின மரம் . இதில் நிறைய மருத்துவ பழங்கள் உள்ளவை. இது சங்க காலங்களில் பயன்படுத்தப்பட்டவ...
-
பூலான் தேவி ( Phoolan Devi , Aug 10, 1963 - Jul 25, 2001), கொள்ளையரசி அல்லது பேண்டிட் குயின் என்று பலராலும் அழைக்கப்படும் இந்தியாவின் பி...
-
ஆர்க்டிக் டெர்ன் (Arctic Tern) என்பது (Sterna paradisaea)என்ற குடும்பத்தைச் சேர்ந்த கடற்பறவை ஆகும். உலகிலேயே அதிக தூரம்வலசை வரும் ப...