தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டமன்றத் தேர்தல், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின், 234 தொகுதிகளுக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய 2021 ஏப்ரல் 6 இல் நடைபெற்றது. இத்தேர்தலில்
திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் மு. க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் 12-வது முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார்.
அஇஅதிமுக தலைவர் எடப்பாடி க. பழனிசாமி முதலமைச்சராக இருந்த 15-வது சட்டமன்றத்துக்கான பதவிக்காலம் மே 3, 2021இல் முடிவடைந்தது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். இத்தேர்தல் கேரளா, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களுடன் சேர்த்து நடத்தப்பட்டது. தமிழக சட்டமன்றத் தேர்தலுடன் சேர்த்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது.
மு. க. இசுட்டாலின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இந்திய தேசிய காங்கிரசு, கம்யூனிஸ்டுக் கட்சிகள், மற்றும் சிறிய கட்சிகளுடன் இணைந்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி (ம.மு.கூ) கூட்டமைப்பில் திமுக போட்டியிட்டது. பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பாமக, பாஜக மற்றும் சிறிய கட்சிகளுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி (தே.ச.கூ) என்ற கூட்டமைப்பில் அஇஅதிமுக போட்டியிட்டது. கோவிடு-19 வழிகாட்டி முறைகளுடன் தேர்தல் நடைபெற்றது. மாநிலத்தில் 72.81% வாக்குகள் பதிவாயின. தேர்தலுக்கு முன்னும் பின்னும் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகள், இசுட்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெரும் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று கணித்தன. 2021 மே 2 அன்று வாக்குகள் எண்ணப்பட்டன; ம.மு.கூ 159 இடங்களைக் கைப்பற்றியது, இவற்றில் திமுக 125 தொகுதிகளில் வெற்றியைப் பதிவு செய்து, தனிப் பெரும்பான்மையைப் பெற்றது. தே.ச.கூ 75 இடங்களை வென்றது, இதில் 65 இடங்களை அதிமுக வென்றது. பத்தாண்டுகால அதிமுக ஆட்சியின் பிறகு, ஆறாவது முறையாக திமுக மாநிலத்தின் ஆட்சியைப் பிடித்தது. ஸ்டாலினும் அவரது அமைச்சரவையும் மே 7, 2021 அன்று பொறுப்பேற்றது.
Monday, 29 March 2021
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021
Subscribe to:
Posts (Atom)
மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?
பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...
-
Spanish cherry என்று அழைக்கப்படும் இந்த மரம் ஒரு சிற்றின மரம் . இதில் நிறைய மருத்துவ பழங்கள் உள்ளவை. இது சங்க காலங்களில் பயன்படுத்தப்பட்டவ...
-
பூலான் தேவி ( Phoolan Devi , Aug 10, 1963 - Jul 25, 2001), கொள்ளையரசி அல்லது பேண்டிட் குயின் என்று பலராலும் அழைக்கப்படும் இந்தியாவின் பி...
-
ஆர்க்டிக் டெர்ன் (Arctic Tern) என்பது (Sterna paradisaea)என்ற குடும்பத்தைச் சேர்ந்த கடற்பறவை ஆகும். உலகிலேயே அதிக தூரம்வலசை வரும் ப...
