Wednesday, 12 June 2013

கொலையை தூண்டும் பேராசை எண்ணம்




தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை அடுத்து, நகைக்கு ஆசைப்பட்டு செயின் பறிக்கும் சம்பவங்களும், கொலைகளும் அதிகம் நடந்து வருகின்றன. இதுபோன்ற சம்பவங்களில் பெரும்பாலும் திருடர்களும் கொள்ளையர்களும்தான் ஈடுபட்டு வந்தனர். தற்போது, உறவினர்களும் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். மதுரை அருகே நகைக்காக மாமியாரை கழுத்தை கயிறால் இறுக்கி கொலை செய்திருக்கிறார் மருமகள். அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை அருகே உள்ள திருநகரை சேர்ந்தவர் குமராண்டி. இவரது மனைவி முத்துப்பிள்ளை. 65 வயது மூதாட்டி. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குமராண்டியை விட்டு பிரிந்த முத்துப்பிள்ளை, விளாச்சேரியில் தனியாக வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்தார். தனது நகைகளை விளாச்சேரியிலுள்ள வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைத்திருந்தார். லாக்கர் சாவியை தனது கழுத்தில் அணிந்திருக்கும் செயின்களுடன் சேர்த்து தொங்க விட்டிருப்பார். இவர், தனது  வீட்டில் கயிறால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். நகைக்காக இவரை மர்மநபர்கள் கொலை செய்ததாக சந்தேகம் ஏற்பட்டது. இதற்கிடையே, முத்துப்பிள்ளையின் தங்கை தாழைபேச்சி, மருமகள் ராஜேஸ்வரி மீது சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் புகார் கொடுத்தார். திருநகர் போலீசார் முத்துப்பிள்ளை உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனை அனுப்பினர். மருமகள் ராஜேஸ்வரியிடம் நடத்திய விசாரணையில், நகைகளுக்கு ஆசைப்பட்டு எனது மாமியார் முத்துப்பிள்ளையை கொல்ல திட்டம் தீட்டினேன். அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தேன். அதை குடித்து மயங்கிய அவரின் கழுத்தை கயிறால் இறுக்கி கொன்றேன் என ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து போலீசார் ராஜேஸ்வரியை கைது செய்தனர்.

செலவு அதிகமாக இருக்கிறது, ஆனால் போதுமான வருமானம் இல்லாத நிலை. இதுதான் அடுத்தவரின் பொருளுக்கு ஆசைப்பட வைக்கிறது. யாருக்கு தெரியப் போகிறது என்ற தைரியத்தில் தப்பான வழிகளில் ஈடுபடுகின்றனர். திருட்டில் ஆரம்பிக்கும் இந்த தீய பழக்கம், கொலை செய்யவும் துணிச்சலை கொடுத்து விடுகிறது. அப்போது உறவினராச்சே என்றுகூட பார்ப்பதில்லை. ஆசை கண்ணை மறைத்து விடுகிறது. அந்த ஆசையே அவர்களை பாவத்தில் தள்ளி விடுகிறது. சிக்கிக் கொள்ளும்போது, தீராத பழியுடன் சிறைக்குப் போக நேரிடுகிறது. ஆசையை வென்றால் ஆபத்தில்லை.         TAMILMURASU.ORG

அரசு நிலங்களை ஆக்கிரமித்தால் ‘குண்டாஸ்’ ச.சட்டநாதன்

சென்னை:அரசு நிலங்களை ஆக்கிரமித்து வீடுகளை கட்டுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்கிறது.  பல்வேறு மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அளித்துள்ள பரிந்துரையை ஏற்ற தமிழக அரசு, சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பு கட்டிடத்தை இடிப்பதற்கான செலவையும், ஆக்கிரமிப்பு நபரிடமே வசூலிக்கவும் திட்டமிட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகவிருக்கிறது.பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குடியிருப்புகள் பெருகாததால், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள அரசு புறம்போக்கு இடங்கள், மேய்க்கால் புறம்போக்கு, கைவேலி புறம்போக்கு போன்ற புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து வீடுகளை கட்டி குடியிருந்து வருகின்றனர். இதில் ஏரி புறம்போக்குகளில் வசிப்பவர்களுக்கு மட்டும் குறிப்பிட்ட ஆண்டுகள் கழித்து பட்டா வழங்கப்பட்டது. மற்ற புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. இந்நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் அரசின் புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்புகள் பெருகியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

அரசு நிலங்களில் பெரிய அளவில் வீடுகளை கட்டி எந்த அச்சமுமின்றி ஆக்கிரமிப்பாளர்கள் வசித்து வருகின்றனர். ஆக்கிரமிப்பில் வீடு கட்டும்போது ஏரி போன்ற நீராதாரங்களுக்கு நீர் செல்லும் வழிகளை அடைத்து விட்டனர். இதனால் நீர்நிலைகளில் மழை நீர் சேரவில்லை. மேலும் புறம்போக்கில் வசிப்பவர்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. 

இதையடுத்து ஆக்கிரமிப்பில் வசிப்பவர்களை அப்புறப்படுத்தவும், சம்பந்தப்பட்ட இடத்தை அரசுத்துறை பொறுப்பில் பாதுகாக்கவும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட அரசு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதே வகையில் காஞ்சிபுரம் கலெக்டர் சித்திரசேனன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் சென்னையையொட்டிய காஞ்சிபுரம் மாவட்ட எல்லையான ஈஞ்சம்பாக்கம், சோழிங்கநல்லூர் போன்ற பகுதிகளில் ஆய்வு நடத்தியபோது 160 ஏக்கர் பரப்பிலான அரசு நிலங்கள் தனியாரால் ஆக்ரமிக்கப்பட்டு வீடுகள் மற்றும் மனைகள் ஏற்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதிகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட மாவட்ட நிர்வாகத்தினர் முதல் கட்டமாக 15 ஏக்கரில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை பொக்லைன் மூலம் இடித்து தள்ளி இடத்தை மீட்டனர். இந்த இடத்தின் மதிப்பு ரூ.100 கோடி. மீதமுள்ள ஆக்கிர மிப்புகளை மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. 

இந்நிலையில் சென்னை மற்றும் சென்னையையொட்டிய இதர மாவட்ட எல்லைகளில் ஓடும் கூவம், பக்கிங்காம், அடையாறு, கொசஸ்தலையாறு போன்ற ஆறுகளின் கரைகளிலும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விவரங்களும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளன. இதை யடுத்து நீர் நிலைகளையொட்டிய ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியிலும் மாவட்ட நிர்வாகத்தி னர் மற்றும் வருவாய்த்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் சில சிரமங்கள் ஏற்பட்ட நிலையில் இது குறித்து பல்வேறு மாவட்டங்களில் ஆட்சித்தலைவர்கள், தமிழக அரசுக்கு பரிந்துரைகளை அனுப்பினர். அந்த பரிந்துரைகளில் அரசு நிலங்களை ஆக்கிரமித்து வீடுகளை கட்டுவோர், அரசு நிலங்களை ஆக்ரமித்து நீர் ஆதாரங்களுக்கு நீர் செல்வதை தடுப்போர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம். ஆக்கிரமிப்பில் இருந்து இடிக்கப்படும் கட்டிடங்களுக்கான இடிப்பு செலவை சம்பந்தப்பட்ட நபரிடமே வசூலிக்கலாம் என்று பரிந்துரைத்தனர்.இந்த பரிந்துரைகளை பெற்ற தமிழக அரசு விரைவில் இதற்கான அறிவிப்புகளை வெளியிட உள்ளது. வருங்காலத்தில் அரசு நிலங்களை ஆக்கிரமிப்போர் மீது குண்டாஸ் பாயும் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

  பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...