Tuesday, 25 July 2023

மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

 பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் செய்தனர், வல்லுறவு செய்தனர். 77 நாள்களுக்குப் பிறகு இது தொடர்பான வீடியோ வெளியாகி நாட்டின், உலகின் மனசாட்சியை உலுக்குகிறது. மணிப்பூர் சம்பவம் பற்றி பரவலாகத் தெரிவது இதுதான். 

ஆனால், அங்கு நடந்தது இது மட்டுமே அல்ல. அன்று ஒரு நாள் அங்கு நடந்த சம்பவங்களை முழுமையாகத் தெரிந்துகொண்டால் உங்களுக்குக் குலை நடுங்கும். மூன்று மாதங்களாக நடந்துகொண்டிருக்கும் இனவாத வன்முறையைப் பற்றி முழுதாகப் புரிந்துகொண்டால், இந்தியா எதிர்கொண்டிருக்கும் ஆபத்தின் ஆழம் புரியும். 

'மூன்று மாதங்களாக அந்த சின்னஞ்சிறு மாநிலத்தில் நடக்கும் இனவாத வன்முறை அரசாங்கத்தின் சக்தியை மீறி நடக்கிறதா, அல்லது அரசாங்கத்தின் ஆசியோடு நடக்கிறதா' என்பதுதான் வலுவாக எல்லோரும் எழுப்பும் கேள்வி. இந்தக் கேள்வியைப் பிறகு ஆராய்வோம். 

மே 4ம் தேதி மணிப்பூரில் நடந்தது என்ன? அதிர வைக்கும் தகவல்கள்

அங்கே நடப்பது இனவாத வன்முறை என்றால், யாருக்கும் யாருக்கும் சண்டை? ஆதிக்கம் மிருந்த பெரும்பான்மை இனமான மெய்த்தி மக்களுக்கும் பழங்குடிகளாக, அதிகாரம் குறைந்தவர்களாக உள்ள குக்கி ஜோ இனப் பழங்குடி மக்களுக்கும் இடையிலான சண்டை இது. இந்த இரண்டு இனங்களின் பிரச்சனைகள் என்ன என்பதையும்கூட பிறகு பார்ப்போம். 

77 நாள்களுக்குப் பிறகு மக்களின் மனசாட்சியை உலுக்கிய அந்த வீடியோ சம்பவம் பற்றி முழுதாக முதலில் பார்ப்போம்.


சம்பவம் நடந்து 14 நாள்களுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட போலீஸ் முதல் தகவல் அறிக்கையின் நகல் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்குக் கிடைத்தது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள்:

மணிப்பூர் மாநிலம், காங்போக்பி மாவட்டத்தில் உள்ள பைனோம் என்ற சிற்றூரில் இந்த சம்பவம் நடந்தது. அதிகாலை 3 மணிக்கு சுமார் ஆயிரம் பேர் கொண்ட ஆயுதக் கும்பல் அந்த ஊரில் நுழைந்து வன்முறை வெறியாட்டத்தை தொடங்கியது. முதலில் பணம், அறைகலன்கள், மின்னணு சாதனங்கள், உணவு தானியங்கள், கால்நடைகள் ஆகியவற்றை வீடுகளில் இருந்து கொள்ளையடித்துக்கொண்ட அந்த கும்பல், சாவகாசமாக பிறகு வீடுகளுக்குத் தீவைத்து முற்றிலுமாக அழித்தது. 

அந்தக் கும்பலில் இருந்தவர்கள் அனைவரும் மெய்த்தி இனத்தவர். பாதிக்கப்பட்டவர்கள் குக்கி ஜோ இன மக்கள்.

(ஆயுதக் கும்பல் என்றால், கத்தி, கம்பு வைத்திருந்தார்கள் என்று நினைத்துவிட வேண்டாம்). 

வன்முறைக் கும்பலிடம் ஏகே 47, எஸ்.எல்.ஆர்., இன்சாஸ், .303 போன்ற சக்திமிக்க துப்பாக்கிகள் இருந்தன. இந்தக் கும்பலுக்கு பயந்து 5 பேர் கொண்ட ஒரு குடும்பம் பக்கத்தில் உள்ள ஒரு காட்டுக்குள் ஓடி ஒளிந்துகொண்டது. பிறகு காட்டுக்குள் சென்று அவர்களை போலீஸ் ‘மீட்டது’. 

அங்கிருந்து அவர்களை நாங்போக் செக்மாய் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லும்போது அந்த வன்முறைக் கும்பல் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றது. வழியில் போலீஸ் வசமிருந்து இந்த 5 பேர் குடும்பத்தை பலவந்தமாக இழுத்துச் சென்ற வன்முறைக் கும்பல், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 56 வயது ஆண் ஒருவரை அங்கேயே கொன்றது

அதன் பிறகு அந்தக் குடும்பத்தில் இருந்த மூன்று பெண்களை நிர்வாணமாக்கி நடக்கவிட்டனர். அவர்களில் 21 வயது பெண் கூட்டு வல்லுறவு செய்யப்பட்டார். அந்தப் பெண்ணின் 19 வயது தம்பி இதைத் தடுக்க முயன்றபோது கொல்லப்பட்டார். உள்ளூர் மக்கள் உதவியோடு மூன்று பெண்களும் தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது நிலவிய பதற்ற நிலை காரணமாக அப்போது அந்தக் குடும்பத்தின் சார்பாக யாரும் புகார் கொடுக்க முடியவில்லை. மே 4ம் தேதி நடந்த இந்த சம்பவம் பற்றி 68 கி.மீ. தொலைவில் உள்ள சாய்குல் காவல் நிலையத்தில் ஊர்த் தலைவர் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மே 18ம் தேதி ஜீரோ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. பிறகு, இது ஜூன் 21ம் தேதி நாங்போக் செக்மாய் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. 

(பெண்களுக்கு எதிரான குற்றங்கள், எங்கே நடந்தாலும், காவல் நிலைய எல்லை பற்றிக் கவலைப்படாமல் தாமதம் இல்லாமல் எந்தக் காவல் நிலையத்தில் வேண்டுமானாலும், வழக்குப் பதிவு செய்வதற்காக அறிமுகம் செய்யப்பட்டதுதான் ஜீரோ எஃப்.ஐ.ஆர்.)

‘இந்தியாவின் தலைசிறந்த காவல் நிலையம்’ செய்த வேலை

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாங்போக் செக்மாய் காவல் நிலையம் 2020-ம் ஆண்டு இந்தியாவிலேயே தலைசிறந்த காவல் நிலையம் என்று மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்காக பயன்படுத்திய நான்கு அளவுகோல்களில் முக்கியமானவை, பெண்களுக்கு எதிரான, பலவீனமானவர்களுக்கு எதிரான குற்றங்களை சிறப்பாகக் கையாள்வது. பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த 5 பேரை இந்த போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றபோதுதான் அவர்களை வன்முறைக் கும்பல் இழுத்துச் சென்று மூன்று பெண்களை நிர்வாணமாக்கியது, ஒருவரை வல்லுறவு செய்தது, இரண்டு ஆண்களைக் கொலை செய்தது. இவ்வளவும் நடந்தபோது போலீஸ் வேடிக்கை பார்த்தது என்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சியிடம் முகம் காட்டாமல் பேட்டி அளித்துள்ளார் பாதிப்புக்குள்ளான பெண்களில் ஒருவரின் கணவர். 

Monday, 4 July 2022

நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்ததால் ராஜஸ்தானில் பயங்கரம்

 ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்த தையல் காரர் ஒருவர் தலையை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



நுபுர் சர்மா விவகாரம் தொடர்பாக சமூக வலைதளத்தில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக, உதய்பூர், மால்தாஸ் தெருவில்  இந்தக் கொலை சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மால்தாஸ் தெரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கலவரங்கள் நிகழாமல் இருக்க கடைகள் அடைக்கப்பட்டு, காவல் துறையினர் தயார்ப்படுத்தப்பட்டு உஷார் நிலையில் உள்ளனர்.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து பேசிய ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அஷோக் கெலாட், இச்சம்பவம் வலி மிகுந்ததாகவும் அவமானகரமானதாகவும் உள்ளதாகவும், பகைமையைத் தூண்டும் சூழலை இச்சம்பவம் உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், உதய்பூர் பகுதி மக்களை அமைதி காக்குமாறும் அசோக் கெலாட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட தையல்காரரை இவ்வழக்கு தொடர்பாக ஏற்கெனவே காவல் துறையினர் விசாரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இச்சம்பவம் குறித்து பேசிய ராஜஸ்தான் மாநில எதிர்க்கட்சித் தலைவர் குலாப் சந்த் கட்டாரியா, தான் இச்சம்பவம் குறித்து முதலமைச்சர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் பேசியுள்ளதாகவும், இச்சம்பவம் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கொலையாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.



Sunday, 27 February 2022

why has Russia waged war against Ukraine?

  1. Ukraine has become the bone of contention between Washington and Moscow.
  2.  Russia wants the West to keep Ukraine and other former Soviet nations out of NATO, halt weapons deployments near Russian borders and roll back forces from Eastern Europe.

  3.  Ukraine wants to join the NATO which has not gone well with Russia. Russia thinks if Ukraine is allowed to join NATO, the group would move closer to Russia's borders.
  4.  If Ukraine joins NATO, it is eligible to get support from the group's members in case of external attacks.
  5.  So, Russia believes Ukraine could attempt to take back Crimea if it joins NATO. Putin too expressed his concerns in this regard recetly.
  6.  Hence, Russia demands West to stay out of Ukraine as Putin wants to restore Moscow's influence throughout the post-Soviet space.
  7.  Moreover, after the collapse of Soviet Union, Russia lost control of 14 former republics including Ukraine.
  8. Putin considers this as tragic as both countries shared a single "historic and spiritual space".
  9.  The Russian President demands guarantees from the West and Ukraine that it will not join and that Ukraine demilitarise and become a neutral state.

Friday, 28 January 2022

ஏர் இந்தியாவை வாங்கியது டாடா நிறுவனம்..(Tata Takeover Air India)

 

டாடாவிடம் இருந்த ஏர் இந்தியா 1953-ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் ஏர் இந்தியா அதே நிறுவனத்திடமே சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விலைக்கு வாங்கும் ஏலத்தில் டாடா சன்ஸ் வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஏர் இந்தியாவை விலைக்கு வாங்கும் டாடாவின் ஏல திட்டத்தை மத்திய அமைச்சர்கள் குழு ஏற்றதாகவும், உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான குழு டாடாவின் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததாகவும் தகவல் வெளியானது. டாடாவிடம் இருந்த ஏர் இந்தியா 1953-ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் ஏர் இந்தியா அதே நிறுவனத்திடமே செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏர் இந்தியாவிற்காக டாடா சான்ஸ் அதிக தொகை கொடுத்து ஏலம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த சில நாட்களில் முதலீட்டு முதலீடு குறித்து அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. டிசம்பர் மாதத்திற்குள் விமான நிறுவனங்களை அதன் புதிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜேஆர்டி டாடாதான் விமான நிறுவனங்களை நிறுவி 1932இல் இந்திய விமான சேவையை துவக்கி முதல் விமானத்தை இயக்கினார். டாட்டா ஏர்லைன்ஸ் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. 1953 ஆம் ஆண்டில், இந்திய அரசு ஏர் கார்பரேஷன்ஸ் சட்டத்தை நிறைவேற்றியது, டாடா சன்ஸ் நிறுவனத்தில் இருந்து பெரும்பான்மை பங்குகளை வாங்கியது.  

1994 ஆண்டு வரை நாட்டின் ஒரே விமான நிறுவனமாக ஏர் இந்தியா இருந்தது. அதன்பின்னர் தாராளமயமாக்கல் கொள்கையால் தனியார் விமான நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. அதுவரை, லாபத்தில்தான் இயங்கி வந்த நிறுவனம். தனியார் விமான நிறுவனங்களின் போட்டி, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைப்பு, அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்பட்ட அதிகப்படியான சலுகைகள் போன்றவற்றின் காரணமாக இழப்பை சந்தித்தது. முதல் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ் முதல், இரண்டாவமு இடத்தைப் பிடித்தன. இந்த நிலையில் நிறுவனம் ரூ.52 ஆயிரம் கோடி நஷ்டத்திலும். ரூ.55 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் கடனிலும் உள்ளதால், ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை இந்திய ஒன்றிய அரசு எடுத்துள்ளது. 

ஏர் இந்தியா விற்பனை: 

இதனைத்தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முன்வந்தது. அதன் தொடர்ச்சியாக, கடந்த 2018ம் ஆண்டு, ஏர் இந்தியா நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் வெளிநாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் 49% வரை முதலீடு செய்ய அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.  இருந்தாலும், ஏர் இந்தியாவின் கணிசமான முதலாளி நிலை மற்றும் செயல்பாட்டு கட்டுப்பாடு இந்திய தேசத்தைச் சார்ந்ததாகவே இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.  

கடந்த 2020ம் ஆண்டு, ஏர் இந்தியா நிறுவனத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் 100 சதவீதம் வரை முன்அனுமதிப் பெறாமல் முதலீடு செய்ய  அனுமதிக்கும் வகையில், தற்போதுள்ள வெளிநாட்டு முதலீடு அனுமதிக் கொள்கையில் மத்திய அமைச்சரவை திருத்தம் செய்தது.



Wednesday, 10 November 2021

சுற்றுச்சூழல் ஆய்வாளர், பத்ம ஸ்ரீ விருதால் உலகை திரும்பி பார்க்க வைத்த எளிய மூதாட்டி துளசி கவுடா

மத்திய அரசு சார்பில் 2020ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த நவம்பர் 8ஆம் தேதி நடைபெற்றது. இதில் 73 பேருக்கு விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவுரவித்தார். இவர்களில் செருப்பு கூட அணியாமல் வெறும் கால்களால் நடந்து வந்து, மிகவும் எளிய உடையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் துளசி கவுடா. விருது பெறுவதற்கு முன்பு பிரதமர் மோடிக்கு இவர் வணக்கம் சொன்ன புகைப்படம் இணையத்தில் பெரிதும் வைரலாகி வருகிறது. இதையடுத்து துளசி கவுடாவின் கரங்களை பிடித்துக் கொண்டு பிரதமர் மோடி நெகிழ்ச்சியோடு பாராட்டு தெரிவித்தார். இதேபோல் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றை பெறும் போது கூட, தனக்கே உரிய எளிமையான முறையில் வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் துளசி கவுடா. இவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டதை பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கொண்டாடி வருகின்றனர். இவர் பற்றிய தகவல்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறது. பலரும் துளசி கவுடா பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.


’காடுகளின் என்சைக்லோபீடியா’, ’மரங்களின் தெய்வம்’ என்றெல்லாம் புகழப்படுபவர் துளசி கவுடா. இவர் கர்நாடக மாநிலம் ஹோனள்ளி என்ற கிராமத்தை சேர்ந்தவர். ஏழை பழங்குடியின குடும்பத்தில் பிறந்தவர். தனது இரண்டு வயதில் தந்தையை பறிகொடுத்தவர். குடும்பத்தை காப்பாற்ற தாயாருடன் சேர்ந்து தினக்கூலி வேலைக்கு சென்று வந்தார். இதனால் முறையான கல்வி கற்க முடியவில்லை. சிறு வயதிலேயே இவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஆனால் உடல்நலக் குறைவால் கணவர் இள வயதிலேயே காலமானார்.


இவ்வாறு வாழ்க்கையில் பல்வேறு துயரங்களை அனுபவித்துள்ளார். இந்த சூழலில் இயற்கை மீது ஆர்வம் காட்டத் தொடங்கினார். மரக் கன்றுகளை நடுவதில் ஆர்வம் ஒட்டிக் கொள்ள அதையே தனது முழுநேர பணியாக செய்ய துவங்கினார். உலகின் பல்வேறு ரக மரங்களை கர்நாடக மாநிலத்தின் ஏராளமான இடங்களில் நட்டுள்ளார். தாமாக முன்வந்து வனச்சரகங்கள் உடன் இணைந்து மரங்களை நடும் பணியில் ஈடுபட்டார். இவரது அளப்பரிய பணியை பாராட்டி நிரந்தர பணியை கர்நாடக மாநில அரசு அளித்தது.




எங்கு காடுகள் அழிக்கப்பட்டாலும் தனது எதிர்ப்பு குரலை வலுவாக கொடுத்துள்ளார். மரங்கள் நடுவது மட்டுமின்றி பாரம்பரிய விதைகளையும் பாதுகாத்து வருகிறார். 30 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு ஒரு காட்டையே உருவாக்கி பராமரித்து கொண்டிருக்கிறார். 60 ஆண்டுகளாக மரங்களை, வனங்களை பராமரிக்கும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். தற்போது 72 வயதான போதிலும் சுற்றுச்சூழல் மீதான ஆர்வம் குறையாமல் செயல்பட்டு கொண்டிருக்கிறார். இவரது பணி மேலும் சிறக்கட்டும். இன்னும் பல ஆண்டுகள் உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

Monday, 24 May 2021

சுந்தர்லால் பகுகுணா(Sunderlal Bahuguna): ஒரு காந்திய வாழ்க்கை

 இந்தியாவின் முன்னோடி சுற்றுச்சூழலியர்களுள் ஒருவரும் காந்தியருமான சுந்தர்லால் பகுகுணா (94) கடந்த வெள்ளியன்று கரோனாவுக்குப் பலியானார். இந்திய சுற்றுச்சூழல் போராட்டங்களின் யுகம் ஒன்று அவருடைய மறைவோடு முடிவுக்கு வருகிறது. ராஜேந்திர சிங், வந்தனா சிவா போன்ற பல சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களுக்கும் முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருந்தவர் பகுகுணா. அவருடைய பெயரைச் சொன்னாலே பலருக்கும் நினைவுக்கு வருவது 1970-களில் உத்தராகண்டில் உருவான சிப்கோ இயக்கம்தான். உலக அளவில் இது ஒரு முன்னோடி சுற்றுச்சூழல் இயக்கமாகும்.

இன்றைய உத்தரகாண்டின் தேரி கர்வால் மாவட்டத்தின் மரோடா கிராமத்தில் ஜனவரி 9, 1927-ல் சுந்தர்லால் பகுகுணா பிறந்தார். சிறு வயதிலேயே காந்தி மீது ஈர்ப்புகொண்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். அவருடைய தேரி கர்வால் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதேவ் சுமன் பகுகுணாவின் ஆதர்சங்களுள் ஒருவர். இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் சுந்தர்லால் பகுகுணா காங்கிரஸில் இருந்தார். வினோபா பாவேவாலும் அவருடைய பூதான இயக்கத்தாலும் பகுகுணா வெகுவாக ஈர்க்கப்பட்டார்.

கிராம மக்களிடையேதான் வாழ வேண்டும் என்ற நிபந்தனையுடன் விமலாவை வாழ்க்கைத் துணையாக ஏற்றார். சிப்கோ இயக்கத்துக்கு முன்பு மது ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்புச் செயல்பாடுகளில் பகுகுணா தீவிரமாக ஈடுபட்டிருந்தார். சாராய மாஃபியாக்கள் எப்படி அந்தப் பிரதேசத்திலுள்ள பட்டியலின மக்களை மதுவுக்கு அடிமையாக்கி வைத்திருக்கின்றன என்பதையும், இதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்களே என்பதையும் கண்ட பகுகுணா அந்தப் பெண்களுக்காக ஒரு ஆசிரமம் தொடங்கினார். மதுவுக்கு எதிராக பகுகுணா 1968-ல் நடத்திய போராட்டமானது 1971-ல் மது விற்பனைக்கு உத்தர பிரதேச மாநில அரசு தடை விதிப்பதற்கு முக்கியமான காரணமானது. பிறகு, சட்டத்தின் வாசல் வழியே மது அந்த மாநிலத்துக்குள் நுழைந்தது என்பது வேறு விஷயம்.

சிப்கோ இயக்கத்தின் பின்னணி

உத்தராகண்ட் மாநிலம் இயற்கை எழில் பொங்கும் இமயமலைப் பிரதேசத்தில் அமைந்திருக்கிறது. இந்தியாவின் பெரிய நதிகளுள் ஒன்றான கங்கை உற்பத்தியாகி ஓடும் பகுதி அது. அதே நேரத்தில், நிலச் சரிவு, வெள்ளம் என்ற இயற்கைப் பேரிடங்களைத் தொடர்ந்து அனுபவித்துவரும் பிராந்தியம் அது. சுதந்திரத்துக்கு முன்பும் சரி சுதந்திரம் அடைந்த பிறகும் சரி, வளர்ச்சியின் பேரில் அங்குள்ள இயற்கை வளங்கள் வெகு வேகமாகச் சுரண்டப்பட்டன. மரங்களும் அதிக அளவில் வெட்டப்பட்டன. இந்தச் சூழலில், 1970-ல் அலக்நந்தா நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக அந்த நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தோடி சுற்றுப்புற கிராமங்களை மூழ்கடித்தது. தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டது. உயிரிழப்பு, வீடுவாசல் இழப்பு என்று அப்போது ஏற்பட்ட சேதம் அளவிடப்பட முடியாதது. மரங்கள் வெட்டப்படுவதற்கும் வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றுக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதை மக்கள் உணர்ந்துகொண்டார்கள். இந்தப் பின்னணியில்தான் சிப்கோ இயக்கத்தைப் பார்க்க வேண்டும்.

உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் காடுகளைச் சார்ந்திருக்கிறது என்ற அக்கறை சிறிதும் இன்றி அப்போதைய அரசு அந்த மக்களைக் கலந்தாலோசிக்காமல் தனியார் நிறுவனங்களுக்குக் காடுகளையும் தாரைவார்த்துக்கொண்டிருந்தது. உள்ளூர் மக்களும் மரம் வெட்டிகொண்டிருந்தார்கள் என்றாலும் அது விவசாய உபகரணங்கள் செய்வதற்காகவும் அவர்களின் அடிப்படைத் தேவைகளுக்குமாகத்தான் இருந்தது. அது மிகச் சிறிய அளவிலான கொடுக்கல்வாங்கல் முறை, காடுகளுக்கும் அங்கே வசிக்கும் மனிதர்களுக்கும் இடையில் நீண்ட காலம் நிலவிய முறை அது. மக்களின் உரிமையை மதிக்காமல் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு மரம் வெட்டும் உரிமையை வழங்கியது மாநில அரசு. அதை எதிர்த்து சமோலி மாவட்ட மக்களிடையே உருவானதுதான் சிப்கோ இயக்கம். ஆரம்பத்தில் பேச்சுவார்த்தைகள் நடத்தி, அது எதுவும் பலனளிக்காததால் சிப்கோ இயக்கத்தின் முன்னோடிகளுள் ஒருவரான சந்தி பிரசாத் பட் ஒரு யோசனை கூறினார். மரம் வெட்டும் ஆட்கள் வரும்போது எல்லோரும் மரங்களை அணைத்துக்கொண்டு நிற்பது. இந்தியில் ‘சிப்கோ’ என்ற சொல்லுக்குக் கட்டிப்பிடித்தல், அணைத்தல் என்பது பொருள். இப்படிப் பிறந்ததுதான் இந்த இயக்கம். சந்தி பிரசாத் பட், சுந்தர்லால் பகுகுணா, கௌரா தேவி போன்றோர் இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றார்கள்.

மரங்களைக் கட்டிப்பிடித்தல்

நிறுவனங்களின் கூலித் தொழிலாளர்கள் மரம் வெட்ட வரும்போது ஆண்கள், பெண்கள் எல்லோரும் மரங்களைக் கட்டிக்கொண்டு நின்றார்கள். மரவெட்டிகளால் ஏதும் செய்ய முடியவில்லை. கூடிய விரைவில் அந்தப் பிரதேசம் முழுக்க இந்த இயக்கம் பரவியது. காந்திய முறையில் ஒரு சுற்றுச்சூழல் இயக்கம் பிறந்ததை இந்தியாவே வேடிக்கை பார்த்தது. பகுகுணாவும் அவரது மனைவியும் கிராமம் கிராமமாகச் சென்றார்கள். சிப்கோ இயக்கத்தின்போது காஷ்மீர் முதல் கோஹிமா வரை 4,800 கி.மீ. பாத யாத்திரையை பகுகுணா மேற்கொண்டபோது மாணவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்று பலரும் அவருடன் சென்று, கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். சிப்கோ இயக்கம் பெருவெற்றி அடைந்தது.

சிப்கோ இயக்கத்தின் சிறப்பு என்னவென்றால் அது ஒற்றைத் தலைமையைக் கொண்டதல்ல; கூடவே பெருமளவில் பெண்களை ஈடுபடுத்திய இயக்கம் அது. மரத்தைக் கட்டிக்கொண்டு பெண்கள் நிற்கும் ஒரு புகைப்படம் அந்த இயக்கத்தின் வரலாற்றைச் சொல்லிவிடும். நெருக்கடி நிலையின்போது சிப்கோ இயக்கம் தடைபட்டது என்றாலும் 1977-லிருந்து மறுபடியும் தொடங்கியது. இந்திரா காந்தி மற்படியும் ஆட்சிக்கு வந்தபோது பகுகுணாவை வரவழைத்துச் சந்தித்தார். அதன் விளைவாக, இமயமலையில் கடல் மட்டத்திலிருந்து 1,000 மீட்டருக்கு மேல் மரங்களை வெட்டுவதற்கு 15 ஆண்டு காலத் தடையை 1981-ல் விதித்தார். இதுவரையிலான இந்தியப் பிரதமர்களிலேயே சுற்றுச்சூழல் மீது பெரும் அக்கறை கொண்டிருந்தவர் என்றால் அது இந்திரா காந்திதான். அதற்கு சாலிம் அலி, 




சுந்தர்லால் பகுகுணா போன்றோர் பங்களித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.

சிப்கோ இயக்கத்தோடு பகுகுணா ஓய்ந்துவிடவில்லை. பாகீரதி நதியின் குறுக்கே தேரி அணை கட்டப்படுவதை எதிர்த்து 1995-ல் சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். இந்த அணை உருவாக்கும் பாதிப்புகள் குறித்து ஆராயக் குழு ஒன்று அமைக்கப்படும் என்று அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் உறுதியளித்ததை அடுத்து 45-வது நாளில் உண்ணாவிரதத்தை நிறுத்திக்கொண்டார். தேவ கவுடா ஆட்சிக் காலத்திலும் அந்த அணையை எதிர்த்து உண்ணாவிரதம் மேற்கொண்டார். எனினும், அந்த அணை கட்டி முடிக்கப்பட்டு 2004-ல் நிரப்பப்பட்டது.

“எனக்குத் தெரிந்தவரை ஒட்டுமொத்த உலகத்திலேயே மரங்களுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தவர் சுந்தர்லால் பகுகுணாதான்” என்று ‘மரங்களின் மனிதர்’ ரிச்சர்ட் பார்பே ஒருமுறை குறிப்பிட்டார். ‘சுற்றுச்சூழல்தான் நீடித்த பொருளாதாரம்’ என்ற முழக்கத்தை சிப்கோ இயக்கத்தின்போது பகுகுணா உருவாக்கினார். வளர்ச்சியைக் காரணம் காட்டி காடு, மலை உள்ளிட்ட இயற்கை வளங்கள் எப்போதையும் விட அதிகமாகச் சுரண்டப்படும் தற்காலத்தில், அதனால் எப்போதையும்விட அதிகமாக நாம் பாதிப்புக்குள்ளாகிக்கொண்டிருக்கும் சூழலில் சுந்தர்லால் பகுகுணாவின் முழக்கம் இப்போதுதான் மிகவும் பொருத்தமாகத் தோன்றுகிறது.

Friday, 30 April 2021

கொரோன இரண்டாம் அலை (Corona 2nd Phase)

According to the Clinical Trials Registry India, 1,600 volunteers of more than or equal to 18 years will be enrolled in the study across 17 sites in the country. Of them, 400 participants will be part of the immunogenicity cohort. They will be randomly assigned on a 3:1 ratio to receive either Covishield or Oxford/AZ-ChAdOx1 nCoV-19. The rest of the 1,200 volunteers from the

safety cohort, also randomly assigned in a 3:1 ratio, will receive either Covishield or placebo. Covishield was made from ChAdOx1 virus, a weakened version of a common cold virus that causes infections in chimpanzees that has been genetically changed. Genetic material has been added which is used to make proteins from the SARS-CoV-2 virus called spike glycoprotein. By vaccinating, researchers hope the body will recognise and develop an immune response to the spike protein that will help stop the coronavirus from entering human cells and prevent infection.
x

மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

  பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...