Skip to main content

Posts

Showing posts from January, 2014

நமக்கு நாமே செய்யும் உதவி

எந்தவொரு நாட்டில் விவசாயி நன்றாக இருக்கிறானோ, அந்த நாட்டில் சட்டம்&ஒழுங்கு நிலை சிறப்பாக இருக்கும் என்பது கீழைநாட்டின் கிராமத்து பழமொழி. இது நூற்றுக்கு நூறு சரியானது என்பதை இப்போதைய நிலையில் உணர முடிகிறது. விவசாயப் பொருட்கள் விலை குறைவாக இருந்தால், ஏழைகள் பாதிக்கப்பட மாட்டார்கள். இதன் மூலம், அவர்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும். போராட்டங்களுக்கும், ஆர்ப்பாட்டங்களுக்கும் வேலையில்லாமல் போய்விடும். ஆனால், இப்போது நாட்டில் வித்தியாசமான சூழ்நிலை காணப்படுகிறது. ஒரு பகுதியில் விற்பனையே ஆகாமல் உற்பத்திப் பொருட்கள் அழிக்கப்படுகின்றன. மற்றொரு பகுதியில் அதற்கு கடும் தேவை ஏற்பட்டு, பல மடங்கு விலை கொடுத்து வாங்கும் பரிதாபம் உள்ளது. சென்னையில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.20. மிளகாய் ஒரு கிலோ ரூ.15, சின்ன வெங்காயம் ரூ.20 முதல் ரூ.30 வரை. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.2, மிளகாய் ரூ.8, சின்னவெங்காயம் ரூ.15. அரும்பாடுபட்டு உழைத்த விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு, உற்பத்தி விலை கூட கிடைக்கவில்லை. நஷ்டம் தொடர்ந்தால், அது அவர்களுக்கு மட்டுமே அல்ல, நாட்டுக...

பசுமைப் புரட்சியின் உண்மைக் கதை

பலரும் நினைப்பதுபோலப் பசுமைப் புரட்சி என்பது இந்தியாவைக் காப்பாற்ற வந்த காயகல்பம் அல்ல; மாறாக, இந்திய வேளாண் முறைகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட நீண்ட கால யுத்தத்தின் விளைவுதான் பசுமைப் புரட்சி. இந்த விளைவு மேலும் பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி, இந்திய வேளாண்மையைக் கிட்டத்தட்ட நாசமாக்கிவிட்டது. இதிலிருந்து மீள்வது இரண்டாவது சுதந்திரப் போருக்கு ஒப்பானது – இந்தப் பார்வையையே தன் கருதுகோளாகக் (hypothesis) கொண்டிருக்கிறது சங்கீதா ஸ்ரீராம் எழுதிக் காலச்சுவடு வெளியிட்டுள்ள பசுமைப் புரட்சியின் கதை என்னும் நூல். இந்தக் கருது கோளைக் கோட்பாடாக (thesis) நிறுவுவதற்கான ஆதாரங்களையும் வாதங்களையும் செறிவாகவும் தெளிவாகவும் முன்வைக்கிறது இந்நூல். நவீன இந்தியாவின் மகத்தான நிகழ்வுகளில் ஒன்றாக வர்ணிக்கப்படும் பசுமைப் புரட்சியின் நோக்கங்களையும் பலன்களையும் இந்த நூல் கேள்விக்கு உட்படுத்து கிறது. பசுமைப் புரட்சி நடந்திருக்கா விட்டால் இந்தியாவில் வறுமையும் பஞ்சமும் கோரத் தாண்டவம் ஆடியிருக்கும் என்பது போன்ற கூற்றுகளின் பெறுமானம் என்ன என்பதை இந்நூல் ஆய்வு செய்கிறது. இந்தியாவின் மரபு சார்ந்த வேளாண்மை, அதன் ச...

இன்று தமிழர் தனித்துவம் மிக்க திருநாளாம் தைப்பொங்கல்!

சூரியனுக்கும்,  இயற்கைக்கும், ஏனைய உயிர்களுக்கும் உழைக்கும் மக்கள் நன்றி சொல்லும் விழாவாக கொண்டாடப்படும் தமிழர்களுக்கே உரித்தான தனிப்பெரும் தைப்பொங்கல் விழா இன்று உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் நாட்காட்டியின் படி  'தை' பிறந்து விட்டதையொட்டி தை 1ம் திகதி கொண்டாடப்பட்டு வரும் இவ்விழா மத பேதமின்றி தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ்,  புலம்பெயர் தமிழர்கள் வாழும் ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா மற்றும் கனடா என அனைத்து நாடுகளிலும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பொழியவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்நோன்பைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த நோன்பை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, பகலவன், உதவிய கால்நடை, போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது. உழவர் திருநாள் பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்...

வரவு செலவுக் கணக்கு------சிறுகதை

இப்ப கொஞ்சம் நாட்களாக வரவு செலவையெல்லாம் நோட்டில் எழுதிவைக்கலாம் என முடிவு செய்திருக்கிறேன். எப்படி எழுதவேண்டும் என்பதை அக்காவிடமிருந்து கற்றுக்கொண்ட படிப்பினை கொஞ்சம் இருக்கிறது. அக்காவை கடைப்பிடித்து எழுதுவதில் எதோ ஒருவகை சலனம் எனக்குள் உண்டாவதை உணரமுடிகிறது. ஐம்பது பைசா ஊறுகாய் வாங்குவதைக்கூட தவறாமல் எழுதிவிடும் பழக்கம் உடையவள். அவள், இரகசியப் பொருட்களைக்கூட விலையையும் சேர்த்து எழுதி வைக்கும் பழக்கத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அதில் வேறு கடைக்காரர் கொடுக்கும் ரசீதுகளைக்கூட மயிலிறகைப்போல நடுப்பகத்தில் வைத்திடுவாள். நல்லவேலை, கொடுக்கும் வீட்டு வாடகைக்கு வீட்டுக்காரரிடம் ரசீது கேட்டு அடம்பிடிக்கும் பழக்கம் மட்டும் அவளிடம் இல்லை. அப்படியொரு பழக்கம் இருந்திருந்தால் அடிக்கடி வீட்டை காலி செய்யவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி இருப்பாள். எனது அக்கா மாதிரி வரவு செலவுக் கணக்கை எழுதுவதாக வைத்துக் கொள்வோம். சிகரெட், தண்ணிச் செலவையும் நான் எழுதியாக வேண்டுமோ..? அப்படி எழுதி வைக்க என் ஆழ்மனது இடம் கொடுக்கவில்லை. முதலில் எதையெல்லாம் எழுத வேண்டாம் என்பதில் ஒரு தீர்க்கமான முடிவு செய்த...

கூகுள் நிறுவனம்

கூகுள்  (Google Inc.) என்பது அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்டு செயல்படும் ஓர் பன்னாட்டு நிறுவனம் ஆகும். இணையத் தேடுபொறித் தொழில்நுட்பம், மேகக் கணிமை, இணைய விளம்பரத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்நிறுவனம் செயல்படுகிறது. கூகுள் தேடுபொறி இதன் முதன்மையான சேவை. 1998ல் லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின்ஆகியோரால் துவக்கப்பட்ட இந்நிறுவனத்தின் முதல் பொதுப்பங்கு வெளியீடு 2004ல் நடைபெற்றது. முழுமையாகப் பயன்படும் வகையில் உலகின் தகவல்களை ஒருங்கிணைப்பதே கூகுளின் நோக்கமாகும். "தீமைத் தன்மை இல்லாதிருத்தல்" என்பது கூகுளின் அதிகாரப்பூர்வமற்ற நோக்காக அறியப்படுகிறது. இது அமீது பட்டேல் என்ற கூகிள் பொறியாளரின் கூற்றாகும். 2006-இல் இந்நிறுவனம் மவுண்டன் வியு, கலிபோர்னியாவிற்கு தனது தலைமையகத்தை மாற்றம் செய்து கொண்டது. உலகம் முழுதும் ஒரு மில்லியனுக்கும் மேலான தரவு மையங்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் கூகுள் ஒரு நாளில் ஒரு பில்லியனுக்கும் மேலான தேடல்களைக் கையாள்வதாகவும் இருபத்தி நான்கு பெட்டா பைட்டு அளவுள்ள தகவல்களை சேமிப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. கூக...

அகிலேஷ் அரசு அறிவிப்பு : உ.பி.யில் போலீசாருக்கு சைக்கிள்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில், குற்ற சம்பவங்களின்போது போலீசார் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று விசாரிப்பதற்காக சைக்கிள் வழங்க முடிவு செய்துள்ளனர்.உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் அகிலேஷ் தலைமையிலான அரசு, நாடாளுமன்ற தேர்தலை குறி வைத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. சிறுபான்மையின மக்களுக்கு 50 சதவீத கல்வி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என சமாஜ்வாடி கூறியது. இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியவுடன், தனியார் கல்வி நிறுவனங்களில் இது அமலுக்கு வரும் என அகிலேஷ் அரசு பல்டி அடித்தது. தற்போது குற்ற சம்பவங்களின்போது உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொள்ளும் வகையில், போலீசாருக்கு சைக்கிள் வழங்கப் போவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. முதல் கட்டமாக அலகாபாத், லக்னோ, காசியாபாத் ஆகிய நகரங்களில் சுமார் ரூ.29 கோடியில் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்த நவீன காலத்தில் குற்றவாளிகள், பைக், கார்களில் தப்பி செல்லும் நிலையில் போலீசாருக்கு சைக்கிள் அளிக்கும் திட்டம் மிகவும் கவலையளிக்கும் செயலாக...

தீவிரவாதியை தடுத்து நிறுத்தி உயிர்துறந்த பள்ளி மாணவனுக்கு பாகிஸ்தானின் உயரிய விருது போலீஸ் பரிந்துரை

பாகிஸ்தானில் உள்ள ஹங்கு மாகாணத்தில் இப்ராகிம்சாய் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முஜாகித் அலி பங்கஸ்(55). இவர் அரபு எமிரேட் நாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் அட்ஜாஜ் ஹசன் (14). அதே பகுதியில் உள்ள பள்ளியில் மேல்நிலை வகுப்பில் படித்து வருகிறான். இவர்கள் இருக்கும் ஹங்கு பகுதி அதிகமாக ஷியா பிரிவு முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியாகும். எனவே அடிக்கடி இங்கு மற்றொரு பிரிவைச் சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை தற்கொலை படை தீவிரவாதி ஒருவன் தனது உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு, அட்ஜாஜ் படிக்கும் பள்ளியை தாக்க வந்துள்ளான். அப்போது அட்ஜாஜ், அந்த தீவிரவாதியை மைதானத்தில் உள்ள கேட்டிலேயே தடுத்து நிறுத்தி பள்ளியை காப்பாற்றி உயிரிழந்தான்.இதுகுறித்து அவனது தந்தை முஜாகித் அலி பங்கஜ் கூறுகையில், ‘‘மகன் இறப்பு வருத்தம் அளித்தாலும், மாணவர்களை காப்பாற்றுவதற்காக அவன் உயிர் துறந்தான் என்பதை நினைக்கும்போது பெருமையாக உள்ளது’’ என்றார். இதேபோல் அப்பகுதி காவல்துறை அதிகாரி நசீர் கான் துரானி மாகாண முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், ‘பள்ளியை தற்கொலை படை தீவிரவாதி தாக்க வந்தப...

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 3வது ஒன்டே : 36 பந்தில் சதம் அடித்து ஆண்டர்சன் புதிய சாதனை

குயின்ஸ்டவுன்: நியூசிலாந்து  வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று குயின்ஸ்டவுன் நகரில் 3வது ஒருநாள் போட்டியில் மோதின. மழை காரணமாக 21 ஓவர்களாக ஆட்டம் நடத்தப்பட்டது. நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்தது. குப்தில் 1, மெக்குலம் 33, ராஸ் டெய்லர் 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜெசி ரைடர், கோரே ஆண்டர்சன் ஜோடி மிரட்டியது. பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு அணிக்கு திரும்பிய ஜெசி ரைடர் 46 பந்தில், 5 சிக்சர்கள், 12 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். 51 பந்தில் அவர் 104 ரன்கள் எடுத்து அவுட்டானார்.  விஸ்வரூபம் எடுத்த கோரே ஆண்டர்சன் 36 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார். இந்த சதத்தில் 12 சிக்சர்களும், 4 பவுண்டரிகளும் அடங்கும். பாகிஸ்தானின் அப்ரிடி 1996ல் நைரோபியில் இலங்கைக்கு எதிராக 37 பந்துகளில் சதம் விளாசியதே ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதமாக இருந்தது. அதனை தற்போது கோரே ஆண்டர்சன் முறியடித்துள்ளார்.  முடிவில் நியூசிலாந்து அணி 21 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் குவித்தது. கோர ஆண்டர்சன் 47 பந்துகளில், 14 சிக்சர்கள், 6 பவுண்டரிகளுடன் 131 ரன் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ரோன்ஜி 3...

கச்சா எண்ணெய்

செளதி: ஆனால், பிற விவகாரங்களில் தன்னை அமெரிக்கா ஒதுக்க ஆரம்பித்துள்ளதாகவே செளதி கருதுகிறது. அதிலும் இந்த இரு நாடுகளையும் நெருக்கமாக்கிய கச்சா எண்ணெய் தான் இப்போது இரு நாடுகளையும் தூரமாக்கி வருகிறது. செளதி மீதான தனது சார்பு நிலையைக் குறைப்பதற்காக, சமீபகாலமாகவே செளதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை அமெரிக்கா குறைத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளது. தனது நாட்டில் பெட்ரோலிய உற்பத்தியை அதிகரித்துவிட்ட அமெரிக்கா, பக்கத்தில் உள்ள வெனிசுவேலாவில் இருந்து (அங்கு ஆட்சியில் இருக்கும் கம்யூனிஸ்டுகளுடன் சண்டை போட்டுக் கொண்டே...) கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ஆரம்பித்துள்ளது. இதனால் இப்போது சீனாவுக்குத் தான் அதிகமான எண்ணெய்யை செளதி ஏற்றுமதி செய்து வருகிறது. இது தான் அமெரிக்கா-செளதி இடையிலான மோதலுக்கு மிக மிக முக்கியக் காரணம். அதே நேரத்தில் செளதி அரேபியாவிலிருந்து வெளியே வரும் கச்சா எண்ணெய்யின் அளவு குறைந்துவிடக் கூடாது என்பதும் அமெரிக்காவின் பிரார்த்தனை. காரணம், இந்த விலை சர்வதேச அளவில் நிர்ணயிக்கப்படுவதால், செளதியின் பெட்ரோலிய வரத்து குறைந்தால் உலகளவில் விலை கூடும், அமெரிக்க...

ஆர்க்டிக் டெர்ன் பறவை

ஆர்க்டிக் டெர்ன்  (Arctic Tern) என்பது (Sterna paradisaea)என்ற குடும்பத்தைச் சேர்ந்த கடற்பறவை ஆகும். உலகிலேயே அதிக தூரம்வலசை வரும் பறவையாகும். வட துருவ ஆர்க்டிக்கிலிருந்து ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா ஆகிய கண்டங்களின் வழியே தென்துருவ அன்டார்க்டிக்கின் பனிப்பரப்புக்கு குளிர்காலத்தில் வலசை போகின்றன. வலசை போவதன் மூலம் ஆர்டிக் டெர்ன் சுமார் 35,000 கி. மீ. தொலைவு ஒவ்வொரு ஆண்டும் பயணிக்கிறது. கிட்டத்தட்ட உலகை சுற்றி வரும் தூரம் ஆகும். சுமார் ஒரு அடி நீளமுள்ள இப்பறவையானது, தன் வாழ்நாளின் பெரும்பகுதியை, பறப்பதிலேயே செலவிடுகிறது. வலசை வரும் நேரங்களில் இவை உணவும் உண்பதில்லை. அதே சமயம் அவை ஒரே சமயத்தில் நில்லாமல் சுமார் 4,000 கி. மீ தூரம் வரை பறந்து பயணிக்கிறது. இது ஒரு முறை வலசை சென்று திரும்பி வரும் வரை சுமார் 70,900 கி.மீ பயணித்து விடுகிறது. [3] இது உலகில் அறியப்படும் நீண்ட தூரம் வலசை போகும் மற்ற விலங்கினங்களை விட அதிகமான வலசை போகும் தூரமாகும். இப்பறவை ஆர்க்டிக் வட்டமான துந்திராவில் இனப்பெருக்கம் செய்கிறது.

இந்த ஆண்டில் 8 புதிய மாடல்களை களமிறக்க மஹிந்திரா திட்டம்

இந்த ஆண்டு 8 புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. யுட்டிலிட்டி ரக கார் விற்பனையில் ஜாம்பவானாக இருந்தாலும், சிறிய கார் மார்க்கெட்டிலும், மிட்சைஸ் மார்க்கெட்டிலும் சரியான மாடல் இல்லாமல் மஹிந்திரா தவித்து வருகிறது. இந்த நிலையில், இந்த மார்க்கெட்டில் தங்களை வலுப்படுத்திக் கொள்ளும் விதத்தில் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைமை நிர்வாகி பிரவீன் ஷா கூறுகையில்," இந்த ஆண்டில் 7 முதல் 8 புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இந்த ஆண்டு கார் மார்க்கெட்டில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அதேவேளை, அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள் மற்றும் உதவியில்லாமல் இந்த மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. இந்த ஆண்டில் மேம்படுத்தப்பட்ட மற்றும் புதிய மாடல்கள் மூலம் மார்க்கெட்டில் எங்களது பங்களிப்பை தக்க வைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளோம்," என்றார். வெரிட்டோ, வைப் மற்றும் ஸ்கார்ப்பியோவின் மேம்படுத்தப்பட்ட மாடல்களை இந்த ஆண்டு மஹிந்திரா அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் கூறுகின்...

பனிப்பொழிவு எதிரொலி நியூயார்க்கின் 1000 விமானம் ரத்து

நியூயார்க்: அமெரிக்காவில் பனிப்பொழிவு காரணமாக சுமார் 1000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு மேலை நாடுகளிலும் டிசம்பர் மாதம் தொடங்கி கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் ஒரு சில இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் காணப்படும் பனிப் பொழிவு மற்றும் பனிக்காற்று காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இதன் காரணமாக நியூயார்க் நகரில் உள்ள 3 விமான நிலையங்களில் இருந்து செல்லும் 559 விமானங்களும், நியூயார்க் நகருக்கு வரவிருந்த 452 விமானங்களும் வெள்ளி கிழமை ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று காலையும் சீதோஷ்ண நிலையில் மாற்றம் இல்லாமல் பனி காணப்படுவதால் கென்னடி விமான நிலையத்தில் இருந்து 192 விமானங்களும், லிபர்டி விமான நிலையத்தில் இருந்து 285 விமானங்களும், லா கார்டியா நிலையத்தில் இருந்து 271 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நியூயார்க் நகர விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.விமான நிலையங்களின் ஓடு பாதையை மூடியுள்ள பனிப்படலங்களை விரைந்து அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன...

சளி, இருமலை போக்கும் பனை வெல்லம் விற்பனை ஜோர்

பண்ருட்டி : கற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் பனை மரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களுமே மக்களுக்கு பயன்படுகின்றன. பதநீர், நுங்கு, பனங்காய், கிழங்கு, மட்டை, ஓலை, பனங்கட்டை என ஒவ்வொரு பொருளுமே மக்களுக்கு பயன்படுகிறது. குறிப்பாக பதநீர் மிகுந்த சுவை மிகுந்தது. பதநீரை காய்ச்சினால் கருப்பட்டி எனப்படும் பனை வெல்லம் கிடைக்கும். நாளாக நாளாக பனைவெல்லம் கெட்டியாக, மாவு தன்மை கொண்டதாகவும் மாறும். இது மூலிகை வைத்தியங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த கருப்பட்டியை சுக்கு மற்றும் திப்பிலியுடன் பாலில் கலந்து இரவில் அருந்தினாலும், காலையில் சுடுநீர், டீ ஆகியவற்றில் கலந்து குடித்தாலும் உடலுக்கு நல்லது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். இருமல், சளி, மகப்பேறு மருந்து, நீரிழிவு ஆகியவற்றுக்கு அரு மருந்தாக உள்ளது. முக்கியமாக நீரிழிவு நோய் உள்ளவர்கள் சர்க்கரைக்கு பதிலாக பனை வெல்லத்தை பயன்படுத்தினால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும். எந்த பக்க விளைவும் இதனால் ஏற்படுவதில்லை. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பனை மரங்கள் அதிகம். அதனால் இப்பகுதிகளில் க...

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் காலமானார்

தஞ்சாவூர்: இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் (வயது 75) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். 1937 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் கல்லணை அருகே இளங்காடு கிராமத்தில் பிறந்த நம்மாழ்வார், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து பல்வேறு போராட்டங்களை தலைமையேற்று நடத்தி வந்தார். அதே போல் விவசாயத்திற்கு வேதியியல் உரங்களை பயன்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தவர். இயற்கை உரம், இயற்கையான உணவுமுறைகளுக்கு ஆதரவாக அவர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளநிலை பட்டம் பெற்ற நம்மாழ்வார், கோவில்பட்டி மண்டல பயிர் ஆய்வகத்தில் பணியில் சேர்ந்தார். அங்கு களப்பணி இல்லாமல் நடைபெறும் பணிகளுக்கு எதிராக குரல் கொடுத்து அப்பணியில் இருந்து வெளியேறினார். விவசாயிகளின் போராட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கிராமத்துக்கு நம்மாழ்வார் சென்றிருந்தார். அங்கு அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது...