குயின்ஸ்டவுன்: நியூசிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று குயின்ஸ்டவுன் நகரில் 3வது ஒருநாள் போட்டியில் மோதின. மழை காரணமாக 21 ஓவர்களாக ஆட்டம் நடத்தப்பட்டது. நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்தது. குப்தில் 1, மெக்குலம் 33, ராஸ் டெய்லர் 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜெசி ரைடர், கோரே ஆண்டர்சன் ஜோடி மிரட்டியது. பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு அணிக்கு திரும்பிய ஜெசி ரைடர் 46 பந்தில், 5 சிக்சர்கள், 12 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். 51 பந்தில் அவர் 104 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
விஸ்வரூபம் எடுத்த கோரே ஆண்டர்சன் 36 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார். இந்த சதத்தில் 12 சிக்சர்களும், 4 பவுண்டரிகளும் அடங்கும். பாகிஸ்தானின் அப்ரிடி 1996ல் நைரோபியில் இலங்கைக்கு எதிராக 37 பந்துகளில் சதம் விளாசியதே ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதமாக இருந்தது. அதனை தற்போது கோரே ஆண்டர்சன் முறியடித்துள்ளார்.
முடிவில் நியூசிலாந்து அணி 21 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் குவித்தது. கோர ஆண்டர்சன் 47 பந்துகளில், 14 சிக்சர்கள், 6 பவுண்டரிகளுடன் 131 ரன் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ரோன்ஜி 3 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஹோல்டர் 2, மில்லர், சுனில் நரேன் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் பேட் செய்ய துவங்கியது. -