Skip to main content

Posts

Showing posts from 2012

கேரளாவில் அதிசயம் குட்டி போட்டது கோழி : தொப்புள் கொடியோடு பிறந்தது

காசர்கோடு : கோழிகள் முட்டைதான் போடும். கேரள மாநிலம் காசர்கோட்டில் கோழி குட்டி போட்ட அதிசய சம்பவம் நடைபெற்றுள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு அடுத்த செருவந்தூர், சீமேனி பகுதியை சேர்ந்தவர் பத்ரன். இவரது மனைவி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர். கேரள அரசு சுயஉதவி குழு உறுப்பினர்களுக்கு இலவசமாக வழங்கிய ஒரு பெட்டைக்கோழி இவர்களது வீட்டில் உள்ளது. இந்த கோழி தினமும் முட்டையிட்டு வந்தது. ஆனால் அடைகாப்பதே கிடையாது. நேற்று மாலை வீட்டு முற்றத்தில் மேய்ந்து கொண்டிருந்த அந்த கோழி ஒரு ‘கோழிக்குட்டியை’ பிரசவித்தது. இதை பத்ரனின் மனைவி வீட்டில் உள்ளவர்களை கூப்பிட்டு காட்டியுள்ளார். தொப்புள் கொடியோடு பிறந்த கோழிக்குட்டியை தாய்க்கோழி கவனிக்காது சென்று விட்டது. வீட்டில் இருந்தவர்கள் அந்த கோழிக்குட்டியை சுத்தம் செய்து வெதுவெதுப்புக்காக துணியில் வைத்து பாதுகாத்தனர். அது தற்போது நல்ல நிலையில் உள்ளது. கோழி ‘குட்டி’ போட்ட அதிசயம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்துவிட்டு செல்கின்றனர். கோழி குட்டி போட்டது பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமா, சுற்றுச்சுழலில் ஏற்பட்...

வாழையடி வாழையாக வஞ்சம் தொடர்வதா?

பழிக்குப் பழியாக நடக்கும் கொலை சம்பவங்கள் எப்போதும் முடிவுக்கு வருவதில்லை. தொடர்கதை போல் மாறி மாறி இரு தரப்பிலும் ஆட்கள் பலியாகிக் கொண்டே இருப்பார்கள். இதனால் எத்தனையோ குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளன. இருந்தாலும் தூக்கிய அரிவாளை கீழே வைக்க மாட்டார்கள். அதிலும் தென் மாநிலங்களில் இதுபோன்ற பழிக்குப் பழி கொலைகள் அதிகமாகவே நடக்கின்றன. நெல்லையில் ஒரே நாளில் 2 கொலைகள் விழுந்துள்ளன. நெல்லை தாழையூத்து அருகேயுள்ள மேலபால மடையை சேர்ந்தவர் விஜயராஜ். கட்டிட தொழிலாளி. 10 நாட்களுக்கு முன்புதான்  திருமணம் நடந்தது. ஒரு வீட்டில் கட்டுமான பணி செய்து கொண்டிருந்தபோது 4 பைக்கில் வந்த 8 பேர் கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது. இதில் படுகாயமடைந்த அவர் இறந்தார். ஆத்திரமடைந்த உறவினர்கள் கொலையாளிகள் தரப்பை சேர்ந்த 2 வீடுகள், கடைகளை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். அப்போது  தெருவில் வந்து கொண்டிருந்த டீக்கடை உரிமையாளர் மணி என்பவரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தனர். அங்கு பதற்றம் நீடிப்பதால் ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விஜயராஜ் மற்றும் அவரது ...

அமைச்சர் காரை நிறுத்திய டிராபிக் போலீசுக்கு அடி, உதை : போலீஸ்காரர்கள் கைது

ஸ்ரீநகர் :காஷ்மீர் மாநிலத்தில் அமைச்சரின் காரை நிறுத்திய டிராபிக் போலீசுக்கு அடி, உதை விழுந்தது. இது தொடர்பாக அமைச்சரின் பாதுகாப்புக்கு வந்த 2 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர். காஷ்மீர் மாநிலத்தில் நீர்பாசனத் துறை அமைச்சராக இருப்பவர் தாஜ் மொய்தீன். ஸ்ரீநகரின் லால் சவுக்கில் நேற்று மதியம் காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காருக்கு பாதுகாப்பாக முன்னும் பின்னும் கார்கள் சென்றன. ஒரு சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மற்ற வாகனங்கள் சிக்னலுக்காக காத்திருக்க அமைச்சரின் கார் படை நிற்காமல் சென்றது. அங்கு பணியில் இருந்த டிராபிக் எஸ்ஐ மோகன்லால், இதை பார்த்தார். அதிரடியாக முன்னால் சென்று காரை மடக்கி நிறுத்தினார். ‘டிராபிக் விதிகள் எல்லோருக்கும் பொதுவானதுதான். ஏன் காரை நிறுத்தாமல் சென்றாய்Õ என கார் டிரைவரிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது, காரில் இருந்து விறுவிறுவென இறங்கிய அமைச்சரின் பாதுகாப்புக்கு வந்த போலீஸ்காரர்கள், மோகன்லாலை சரமாரியாக தாக்கினர். இதில் அவரது இடது கண்ணில் பலத்த அடிபட்டு ரத்தம் கொட்டியது. அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்...

கொலைகாரனாக்கிய குடி மயக்கம்

சரக்கு உள்ளே போய் விட்டால் மாமா, மச்சினன் தெரியாது, நண்பன் யார் எனத் தெரியாது. அந்த அளவுக்கு மயக்கத்தில் இருப்பார்கள். அந்த மயக்கத்தில் சண்டை போடுவதும், தகராறு செய்வதும் நடக்கும். ஆனால் போதையில் ஏற்பட்ட தகராறில் மீன்வெட்டும் கத்தியால் நண்பனை சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டார் ஒருவர். கொலை செய்யப்பட்டவருக்கு திருமணமாகி 3 மாதம்தான் ஆகிறது என்பது கூடுதல் பரிதாபம். சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் அருண் என்ற பென்னி. வானகரத்தில் உள்ள மார்க்கெட்டில் மீன் வாங்குவோருக்கு அதை சுத்தம் செய்து கொடுப்பார்.  அதே பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவரும் அதே வேலை செய்கிறார். இருவரும் நண்பர்கள். தினமும் மாலையில் வேலை முடிந்ததும் ஒன்றாக மது குடிக்க செல்வார்கள். வழக்கம்போல் இருவரும் டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றனர். போதை அதிகமானதும் பாரில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டிற்கு நடந்து சென்றனர். வரும் வழியில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் பார்த்திபன் இடுப்பில் வைத்திருந்த மீன்வெட்டும் கத்தியை எடுத்து அருணின் கழுத்து, முகம், வயிற்று பகுதியில் சர...

ஆட்டோமொபைல் டிசைனிங் துறைக்கு மவுசு

ஆட்டோமொபைல் துறை உலகின் தவிர்க்க முடியாத துறைகளில் முதன்மை நிலையில் கொடி கட்டி பறக்கிறது. நாளுக்கு நாள் எண்ணற்ற மாற்றங்களுடன் தனக்கான பொலிவை தக்க வைத்துக்கொள்ளும் இத்துறையில் வேலைவாய்ப்புக்கு பஞ்சம் இல்லை. ஆட்டோமொபைல் டிசைனிங் தொடர்பான படிப்புகளுக்கு மாணவ, மாணவிகள் மத்தியில் மவுசு அதிகம். உலக அளவில் இதற்கான நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு லட்சங்களில் ஊதியத்துடன் வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இந்தியாவை பொறுத்த வரை சில முக்கிய கல்வி நிறுவனங்கள், பலவிதமான போக்குவரத்து  மற்றும் ஆட்டோமொபைல் வடிவமைப்பு படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன. அகமதாபாத்தில் செயல் பட்டும் வரும் தேசிய வடிவமைப்பு கல்வி நிறுவனமானது (ழிமிஞி) போக்குவரத்து  மற்றும் ஆட்டோமொபைல் வடிவமைப்பில் இரண்டரை வருட முதுநிலை படிப்பை வழங்குகிறது.  போக்குவரத்து மற்றும் ஆட்டோமோடிவ் துறையில் சிறந்த தொழில்முறை நிபுணராவதற்கு  இப்படிப்பு  உதவுகிறது. மேலும் இப்படிப்பில் ஆட்டோமொபைல்களை வடிவமைக்க மட்டுமே பயிற்சி அளிக்கப்படுவதில்லை. மாறாக அனைத்து வகை வாகனங்களையும் வடிவமைக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்படிப்பை முடித்தால்...

அஞ்சல் வழியில் அக்குபஞ்சர் படிப்பு

அக்குபஞ்சர் என்பது பண்டைய காலம் தொட்டு கடைபிடிக்கப்படும் மருத்துவ முறை என்பதுடன் இதில் பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்பது சிறப்பம்சமாக கருதப்படுகிறது. நோய்களுக்கு தக்கவாறு துல்லிய முனை கொண்ட ஊசிகளை உடலில் செருகி சிகிச்சை அளிப்பதே அக்குபஞ்சர் சிகிச்சை முறை. சமீப காலமாக இயற்கை சார்ந்த மருத்துவங்களை மக்கள் விரும்ப தொடங்கியுள்ளனர். சித்தா, ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேதம், அக்குபஞ்சர் போன்ற மருத்துவ முறைகளை நாடத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே இயற்கை முறை மருத்துவத்தில் பட்டப்படிப்பு பெற்றவர்கள் கூடுதல் தகுதியாக அக்குபஞ்சர் சிகிச்சை தொடர்பான படிப்பை மேற்கொள்கின்றனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால் அக்குபஞ்சர் மருத்துவமனைகளும் மாவட்டங்கள் தோறும் அதிகரித்து வருகின்றன. வெளிநாடுகளிலும் இந்த சிகிச்சை முறைக்கு கடும் கிராக்கி உள்ளது. சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் பெரும்பாலும் அக்குபஞ்சர் மூலமாகவே தீராத நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்திரா காந்தி தேசிய திறந்த வெளி பல்கலைக் கழகம் (இக்னோ) டெல்லியிலுள்ள அக்குபஞ்சர் மற்றும் இயற்கை மருத்துவ  நிறுவனத்துடன்  இணைந்து அக்குபஞ்...

சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க டிப்ஸ்

பத்து மணிக்கு மேல் வெளியில் தலை காட்டவே மககள் பயப்படுகின்றனர். வெயில் மண்டையைப் பிளக்கிறது. அரை மணி நேரம் வெயிலில் செல்ல நேர்ந்தால் கண் எரிச்சல், தோல் வறட்சி, வியர்வை, உடல் சோர்வு, சிறுநீர் தொற்று என பல பிரச்னைகள் வாட்டுகிறது. இது போன்ற சங்கடங்களில் இருந்து காத்துக் கொள்ள ஆலோசனை சொல்கிறார் தோல் சிகிச்சை நிபுணர் டாக்டர் விக்னேஷ்வரி.  வெயில் நேரத்தில் எந்தப் பாதுகாப்பும் இன்றி வெளியில் செல்வதால் வியர்வை சங்கடத்தை ஏற்படுத்தும். தோல் வறட்சி காணப்படும். மேலும் வியர்வை அதிகரிப்பால் ஏற்கனவே தோல் பகுதியில் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு அரிப்பு அதிகரிக்கும். அக்குள் மற்றும் முதுகுப் பகுதியில் இந்த அரிப்பு காணப்படும். உடல் சூட்டின் காரணமாக வெயில் கொப்புளம் மற்றும் வியர்குரு போன்ற தொல்லைகள் உண்டாகும்.  உடல் இயல்பான தட்பவெப்ப நிலைகளில் தோல் வியர்வை மூலம் இயற்கையாகவே வெப்ப மாறுபாடுகளை சரி செய்து விடும். நீண்ட நேரம் அதிக வெப்பநிலையில் இருக்கும் போது உடல் வெப்பக் கட்டுப்பாட்டு செயலிழக்கிறது. இதுவே பல்வேறு பிரச்னைகளுக்கும் காரணம் ஆகும். கடும் வெப்பத்தின் காரணமாக வலியுடன் கூடிய வெப்பத் தசையிழ...

குடும்பம் நடத்த நினைத்தால் ரூ.16 லட்சம் சம்பாதிக்க வேண்டும் : இங்கிலாந்து அரசு

லண்டன்: இந்தியா உள்பட வெளிநாட்டினரை திருமணம் செய்யும் இங்கிலாந்துக்காரர்கள் ஆண்டுக்கு ரூ.16 லட்சம் சம்பாதிக்க வேண்டும். அப்போதுதான் மனைவி அல்லது கணவனை இங்கிலாந்துக்கு அழைத்து வர அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அடுத்த மாதம் 9ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இங்கிலாந்துக்காரர்கள் பலர் இந்தியா உள்பட பல வெளிநாட்டினரை திருமணம் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. அவர்கள் தங்கள் மனைவி அல்லது கணவனை இங்கிலாந்துக்கு அழைத்து வந்து குடியுரிமை பெறுகின்றனர். ஆனால், இங்கிலாந்து குடியுரிமை பெறுவதற்காக பெண்களை கடத்துவதும், போலி திருமணங்களும், குடும்ப விசா பெறுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  மேலும், இங்கிலாந்துக்கு வரும் வெளிநாட்டினருக்கு ஆங்கில மொழியும் தெரியவில்லை. இதனால் சமுதாயத்தில் மற்றவர்களுடன் சகஜமாக பழக முடிவதில்லை. மேலும், சரியான வருமானம் இல்லாமல் இங்கிலாந்துக்கு வந்து பலர் கஷ்டப்படுகின்றனர். அவர்கள் நாட்டுக்கு பாரமாக இருக்கின்றனர். இதுபோன்ற பல பிரச்னைகளை சமாளிக்க குடியுரிமை வழங்கும் நடைமுறையை இங்கிலாந்து அரசு கடுமையாக்கி உள்ளது.  அதன்படி, ஐரோப...

மு.க.அழகிரி குடும்பத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

    மதுரை,பிப்.23 - தயா என்ஜினீயரிங் கல்லூரி விவகாரத்தில் மு.க.அழகிரி குடும்பத்திற்கு நோட்டீஸ் அனுப்ப கலெக்டர் சகாயம் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் தயா என்ஜினீயரிங் கல்லூரி கட்டப்பட்டுள்ளது. இது மத்திய மந்திரி மு.க.அழகிரிக்கு சொந்தமானது. இந்த கல்லூரி கட்டிடம் விவசாய கால்வாய் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டு இருப்பதாக விவசாய சங்க தலைவர் ராமலிங்கம் மதுரை மாவட்ட கலெக்டர் சகாயத்திடம் புகார் செய்தார். அந்த புகார் மனு தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு விசாரிக்க வேண்டுமென்று அழகிரி குடும்பத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்பேரில் அழகிரி சார்பில் ஜானகி ராமுலு கலெக்டர் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது அவர் சில ஆவணங்களை கேட்டிருந்தார். இந்த நிலையில் தயா என்ஜினீயரிங் கல்லூரி கட்டிடம் தொடர்பான் நேற்று கலெக்டர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது விவசாய சங்க தலைவர் ராமலிங்கம் கலெக்டர் முன்பு ஆஜராகி சில விளக்கங்களை அளித்தார்.      ஆனால் இந்த விசாரணையின் போது மத்திய மந்திரி மு.க.அழகிரி குடு...

என்கவுண்டரை எதிர்ப்போம்! :ஏன்..?

பொதுமக்களுக்கு தொடர்ந்து கொள்ளைகள் நடக்கிறதே? என்பது கவலை. அதனால் கொள்ளையர்கள் கொல்லப்பட்டார்கள் எனும் போது, திருப்திப்பட்டுக் கொள்கின்றார்கள். ஆனால் கொல்லப்பட்டது உண்மையான கொள்ளையர்கள்தானா? என்ற சந்தேகமும், கொல்லப்பட்டது சரிதானா என்கின்ற கேள்வியும் சற்று ஆற அமர யோசிக்கும் போது எழும். அப்போது அது பற்றி விசாரிக்க முடியாது. ஏனெனில் கொல்லப்பட்டவர்கள் உயிர்தெழுந்து பேசப் போவதில்லை. இது சரிதானா..? எனக் கேட்கிறது  'என்கவுண்டரை எதிர்ப்போம்!' இக் கட்டுரை. கட்டுரையாளர் யுவகிருஷ்ணாவுக்கான நன்றிகளுடன் இங்கு அதை மீள்பதிவு செய்கின்றோம்.  -  தமிழ்நாட்டின் நடுத்தர வர்க்கத்து மொக்கைகளுக்கு மீண்டும் ஒரு தீபாவளி. இந்திய மனோபாவம் முற்றிலுமாக போர்வெறி இதிகாசமான மகாபாரதத்தை பின்னணியாக கொண்டது. எனவேதான் கொலைகளை கொண்டாடுகிறார்கள். ‘இவனுங்களை எல்லாம் நடுரோட்டுலே வெச்சு சுட்டுக் கொல்லணும் சார்’, ‘கோர்ட்டுக்குல்லாம் கூட்டிக்கிட்டு போவக்கூடாது. லாக்கப்புலேயே மேட்டரை முடிச்சிடணும்’ என்று பஸ்ஸிலும், ட்ரெய்னிலும் பொழுதுபோக்குக்கு பேசுபவர்களுக்கு எவனையோ போட்டுத் தள்ளணும் என்கிற அனாவசிய ...

BE(aero natics)., -ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங்

விமானங்களை வடிவமைப்பதிலும் பராமரிப்பதிலும் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்த பொறியாளர்களின் பங்கு முக்கியமானது. செயற்கைக்கோள், ஏவுகணை, ராக்கெட்...என இப்பாடப்பிரிவின் எல்லைகள் விரிவடைந்து வருவதால் இத்துறை ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது. அரசு மற்றும் தனியார் விமான நிறுவனங்கள், விமான வடிவமைப்பு நிறுவனங்கள், விண்வெளி ஆய்வுத் துறை, பாதுகாப்புத் துறை போன்ற பல்வேறு துறைகளில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டு. தகவல் தொழில்நுட்பத் துறையிலும் வேலை கிடைக்கும். நான்கு ஆண்டுப் படிப்பு இது. இதே துறையில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்க வாய்ப்புகள் உள்ளன. List of collages: அதியமான் பொறியியல் கல்லூரி பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப நிறுவனம் சி.அப்துல் ஹக்கீம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி தனலட்சுமி ஸ்ரீநிவாசன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி டேனிஷ் அகமது பொறியியல் கல்லூரி பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரி எக்ஸெல் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி ஜி.கே.எம்.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி குளோபல் இன்ஸ்டி...

தமிழ் புதிய பாடல்(new song relese)

Kadhal Paadhai (2012) Kadhal Paadhai (2012) Crime Mix 1 Valentine Special (14 Remixed Tamil Songs) Kathalar Ulagil Kathalargaluku Mattum – Vol 06 (17 Tamil Remixed Songs) Love Mixz 2012 (12 Remixed Tamil Songs) Tamil Pop Songs (5 Tamil Pop Songs) Kadhal Paadhai (2012) Posted: 21 Feb 2012 01:33 PM PST Direction: Vyasan Production: K.Venkatesh Music: S.S.Kumaran Lyricist: Murugan Manthiram Download Tamil Mp3 Songs: Kadhal Paadhai (2012) Ennavo Nenjiley – TamilWire.com.mp3 (6.5 MB) Ennavo Nenjiniley (Repeat) – TamilWire.com.mp3 (6.5 MB) Neethan Neethan – TamilWire.com.mp3 (5.0 MB) Oh Manasula (Sad) – TamilWire.com.mp3 [...] Crime Mix 1 Valentine Special (14 Remixed Tamil Songs) Posted: 21 Feb 2012 01:29 PM PST Crime Mix 1 Valentine Special (14 Remixed Tamil Songs) Download Tamil Mp3 Songs: Crime Mix 1 Valentine Special 00. Intro – TamilWire.com.mp3 (14.3 MB) 01. Deejay Clickz – Penne Penne – Malla Kuruvi(love Mood Mixx) – TamilWire.com.mp3 (10.0 MB) 0...

கொள்ளையர்கள் கொலை : கமிஷனர் விளக்கம்

சென்னை : துப்பாக்கில் சூட்டில் உயிரிழந்த 5 பேரும் வெளிமாநிலத்தவர்கள் என்று காவல் துறை ஆணையர் திரிபாதி தெரிவித்துள்ளார். ரகசிய தகவலின் பேரில் வேளச்சேரியில் நள்ளிரவில் கொள்ளையர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். வீட்டுக்குள் பதுங்கியிருந்த கொள்ளையரை வெளியே வருமாறு போலீசார் எச்சரித்தனர். ஜன்னல் வழியே போலீசாரை நோக்கி கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பொதுமக்களை தாக்கப்போவதாகவும் கொள்ளையர்கள் மிரட்டியுள்ளனர். கொள்ளையர்கள் தாக்குதலில் 2 பேருக்கு குண்டடிப்பட்டதால் போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர். 1 மணி நேரம் நீடித்த இந்த என்கவுண்டரில் 5 பேரும் வீழ்த்தப்பட்டதாக கமிஷனர் தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் அணுமின் பணிகள் பாதிப்பு:இதுகுறித்து, இந்திய அணுமின் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

போராட்டத்தால், கடந்த ஆறு மாதத்தில், நான்கு முறை மின் உற்பத்தி தேதி தள்ளிவைக்கப்பட்டது. மிக முக்கியமாகத் தேவைப்படும் பராமரிப்பு பணிகள் கூட நடக்கவில்லை. மிகக் குறைந்த அளவிலேயே ஊழியர்கள் அனுமதிக்கப்படுவதால், பெரும்பாலான தொழில்நுட்பக் கருவிகள் செயலிழந்து விட்டன.பிரச்னைமுடிவுக்கு வரும் என எதிர்பார்த்து, விஞ்ஞானிகள் மிகவும் நொந்துபோய், வேறு மாநிலங்களுக்கு பணி மாற்றம் கேட்கின்றனர். தமிழக அரசு இந்த பிரச்னையில் தலையிட்டு பிரச்னையை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.தமிழக அரசு அனுமதி அளித்த பிறகு தான், கட்டுமான நிறுவனங்களை மீண்டும் அழைக்க முடியும். பின்னர், கட்டுமானப் பணிக்கு தேவையான, 4,000 பணியாளர்களையும், வேறு மாநிலங்களுக்கு சென்று திரட்டி வர வேண்டும். அவர்களுக்கு மீண்டும் பணிப் பயிற்சி, ஒப்பந்தம், தங்குமிடம் போன்ற வசதி செய்த பிறகே, முழு வீச்சில் பணிகளைத் துவங்க முடியும். இதற்கு மட்டுமே குறைந்தது இரண்டு மாதங்களாகும்.இதுதவிர, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தொடர்பாக, ஒழுங்குமுறை ஆணையத்தில் மறு அனுமதி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பழைய அனுமதி பெற்று, ஆறு மாதமாக பணிகளைத் துவங்காததால், மீ...

பேஸ்புக்கின் பழைய வடிவமைப்பை பெறுவது எப்படி? - 5 வழிமுறைகள் 1

பேஸ்புக் அதனது வடிவமைப்பில் அடிக்கடி மாற்றங்களை ஏற்படுத்துவது பலருக்கும் எரிச்சலைத் தரும். இவற்றில் அண்மையில் டைம்லைன் எனும் பெரும் மாற்றத்தை செய்த பேஸ்புக் நிறுவனம் ஒருமுறை அதற்கு மாறிவிட்டால் மீண்டும் பழைய வடிவமைப்பை செய்ய முடியாது என எச்சரித்தது. அதற்கேற்ப பலருக்கும் டைம்லைன் வசதியிலிருந்து மீள முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் இவற்றிலிருந்து முற்றுமுழுதாக மீள முடியாவிட்டாலும் பயர்பாக்ஸ் மற்றும் குரோம் உலாவி அட் ஒன்கள் மூலம் ஓரளவு பேஸ்புக்கின் பழைய வடிவத்தைப் பெற்றுக்கொள்ளலா ம். அவற்றில் சில இங்கே. 1. பேஸ்புக் கிளாசிக் (Hide the News Ticker and Restore Your News Feed ) சாட் விண்டோவிற்கு மேல் தெரியும் நியூஸ் பீட்ஸ்களை மறைத்துவிடவும் பேஸ்புக்கில் மேல்பக்க வலது மூலையில் தெரியும் நியூஸ் பீட்ஸ்களை மறைத்துவிடவும் உதவுகின்றது இந்த குரோம் அட் ஒன். தரவிறக்கம் & நிறுவுதல் https://chrome.google.com/webstore/detail/ffdodpcdalagnkbkojidmmcehlnhniad