போராட்டத்தால், கடந்த ஆறு மாதத்தில், நான்கு முறை மின் உற்பத்தி தேதி தள்ளிவைக்கப்பட்டது. மிக முக்கியமாகத் தேவைப்படும் பராமரிப்பு பணிகள் கூட நடக்கவில்லை. மிகக் குறைந்த அளவிலேயே ஊழியர்கள் அனுமதிக்கப்படுவதால், பெரும்பாலான தொழில்நுட்பக் கருவிகள் செயலிழந்து விட்டன.பிரச்னைமுடிவுக்கு வரும் என எதிர்பார்த்து, விஞ்ஞானிகள் மிகவும் நொந்துபோய், வேறு மாநிலங்களுக்கு பணி மாற்றம் கேட்கின்றனர். தமிழக அரசு இந்த பிரச்னையில் தலையிட்டு பிரச்னையை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.தமிழக அரசு அனுமதி அளித்த பிறகு தான், கட்டுமான நிறுவனங்களை மீண்டும் அழைக்க முடியும். பின்னர், கட்டுமானப் பணிக்கு தேவையான, 4,000 பணியாளர்களையும், வேறு மாநிலங்களுக்கு சென்று திரட்டி வர வேண்டும். அவர்களுக்கு மீண்டும் பணிப் பயிற்சி, ஒப்பந்தம், தங்குமிடம் போன்ற வசதி செய்த பிறகே, முழு வீச்சில் பணிகளைத் துவங்க முடியும். இதற்கு மட்டுமே குறைந்தது இரண்டு மாதங்களாகும்.இதுதவிர, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தொடர்பாக, ஒழுங்குமுறை ஆணையத்தில் மறு அனுமதி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பழைய அனுமதி பெற்று, ஆறு மாதமாக பணிகளைத் துவங்காததால், மீண்டும் தொழில்நுட்பக் கருவிகளை இயக்கிப் பார்த்த பிறகு, ஒழுங்குமுறை ஆணையம் மறு அனுமதி தரும். எனவே, மின் உற்பத்தி துவங்க, எட்டு மாதங்கள் முதல், ஓராண்டு வரை தாமதமாக வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்