Friday, 25 December 2020
Sunday, 29 November 2020
மறக்க முடியுமா இந்த மரடோனாவை.(Diego Maradona)..!!!
கால்பந்து விளையாட்டின் கடவுளாக போற்றப்பட்டவர், மரடோனா. ஒரு ‘மேஜிக்’ நிபுணர்போல், ரசிகர்களின் கண்களே நம்பாத அளவுக்கு, பந்துகளை லாவகமாக உதைத்து கோலாக்குவதில் வல்லவர்.
போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஒருமுறை வாழ்க்கையைப்பற்றி குறிப்பிடும்போது, ‘ஒரு மனிதனின் வாழ்க்கை முட்புதர்களையும், களைகளையும் கொண்ட நிலமாக இருந்தாலும், அங்கும் நல்ல விதை முளைத்து எல்லோருக்கும் பயன்தரத்தக்க ஒரு நல்லமரமாக வளர எப்போதும் ஒரு இடம் உண்டு’ என்று கூறினார். அதுபோல, ஏழ்மையான ஒரு பெற்றோருக்கு பிறந்து, குடிசைப் பகுதியில் இளமையில் வாழ்ந்தாலும், அர்ஜென்டினா நாட்டை உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் புகழை சேர்த்த டியகோ ஆர்மன்டோ மரடோனா, தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடிய ஒரு மாதத்துக்குள் மாரடைப்பால் உயிரிழந்தார்.Sunday, 11 October 2020
U.P ஹத்ராஸ் - கூட்டு பாலியல் வன்கொடுமை - மறக்க முடியாத வலி
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான இளம் பெண், கடந்த Sep 14ஆம் தேதி நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அப்பெண்ணின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக மாறியது. உடனே டெல்லியில் உள்ள சாஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 15 நாட்களுக்கும் மேலாக தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இளம்பெண் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் வட இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன.
இளம்பெண்ணிற்கு நீதி வேண்டும்
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள், திரைத்துறையினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர். இறந்த பெண்ணிற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த சூழலில் உயிரிழந்த பெண்ணின் உடலுடன் அவரது குடும்பத்தார் டெல்லி மருத்துவமனையில் இருந்து நேற்று இரவு புறப்பட்டனர்.
அவர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸிற்கு குடும்பத்தார் செல்வதற்கு முன்னரே உயிரிழந்த பெண்ணின் உடலை போலீசார் கொண்டு சென்றுவிட்டனர். இதையடுத்து உடலை நேரடியாக மயானத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இளம்பெண்ணின் தந்தை ஹத்ராஸ் வந்தவுடன், அவரை அவசர அவசரமாக மயானத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் உடனடியாக அவரது மகளின் உடலை எரிக்க வேண்டும் என்று போலீசார் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுபற்றி பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு உயிரிழந்த பெண்ணின் சகோதரர் பேட்டியளிக்கையில் தெரிவித்துள்ளார். மற்றொரு உறவினர் கூறுகையில், பெண்ணின் தந்தை சுமார் 40 பேருடன் மயானத்திற்கு சென்றார். அப்போது பூல் கார்ஹி கிராமத்திற்கு அருகேவுள்ள மயானத்தில் பெண்ணின் உடலை உடனடியாக எரித்தாக வேண்டும் என்று போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.
வழக்கை மூடி மறைக்கும் முயற்சியா?
ஏன் இவ்வளவு அவசரம் காட்டினர் என்று தெரியவில்லை. எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு என்ன தான் வேண்டும். என்ன மாதிரியான அரசியல் இது? எங்கள் மகள் வன்புணர்விற்கு ஆளாக்கப்படவில்லை என்று ஏதேதோ கதை கூறுகின்றனர். இந்த விஷயத்தை அப்படியே மூடி மறைக்கத் தான் இப்படி செய்ததாக குற்றம்சாட்டினார். இந்நிலையில் நேற்று நள்ளிரவே இளம்பெண்ணின் உடல் எரிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி மயானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பத்திரிகையாளர்கள் யாரையும் அப்பகுதியில் அனுமதிக்க போலீசார் மறுத்துவிட்டனர். இதுபற்றி ஹத்ராஸ் காவல்துறை கண்காணிப்பாளர் விக்ராந்த் விர் கூறுகையில், அனைத்து நடவடிக்கைகளும் அப்பெண்ணின் குடும்பத்தார் விருப்பப்படியே நடந்துள்ளது என்று தெரிவித்தார்.
விசாரணைக்கு முதல்வர் உத்தரவு
இந்த சம்பவம் விசாரிக்க மூன்று பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். விரைவாக விசாரித்து அடுத்த 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Tuesday, 29 September 2020
மகிழ்ச்சியளிக்கும் தமிழக கல்வி தரம்!
2017-ம் ஆண்டுக்கு முன்பு வரை தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையிலேயே நடந்தது.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு இணையான அளவு மாநில பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று எழுந்த கோரிக்கைகளை ஏற்று கல்வித்துறை 2018-2019-ம் ஆண்டு பிளஸ்-1, 2019-2020-ம் ஆண்டு பிளஸ்-2 வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களையும் மாற்றியமைத்தது. இந்த புதிய பாடத்திட்டம் எதற்கும் சளைத்ததல்ல என்பதை கடந்த 13-ந்தேதி நடத்தப்பட்ட ‘நீட்’ தேர்வு வினாத்தாள் நிரூபித்து காட்டியுள்ளது. ‘நீட்’ தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 97 சதவீத கேள்விகள் தமிழ்நாட்டில் இப்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள பிளஸ்-1, பிளஸ்-2 பாடப்புத்தகங்களில் இருந்தே கேட்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 180 கேள்விகளில், 174 கேள்விகளுக்கான பதில் பிளஸ்-1, பிளஸ்-2 பாடப்புத்தகத்திலேயே இடம்பெற்றுள்ளன.
2017-ம் ஆண்டு ‘நீட்’ தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 60 சதவீத கேள்விகள்தான், பழைய பாடப்புத்தகங்களில் இடம்பெற்றிருந்தன. ஆனால், தற்போது நடத்தப்பட்ட ‘நீட்’ தேர்வில், உயிரியல் பாடத்தில் கேட்கப்பட்ட 90 கேள்விகளில் 87 கேள்விகளுக்கான விடைகள் மாநில பாடத்திட்டத்திலேயே இருக்கிறது. அதில், 54 சதவீத கேள்விகள் பிளஸ்-1 பாடப்புத்தகத்தில் இருந்தும், 46 சதவீத கேள்விகள் பிளஸ்-2 பாடப்புத்தகத்தில் இருந்தும் கேட்கப்பட்டிருந்தன. வேதியியல், இயற்பியல் பாடங்களின் வினாக்களும் பிளஸ்-1, பிளஸ்-2 பாடப்புத்தகங்களில் இருந்து ஏறத்தாழ சரிசமமாக கேட்கப்பட்டிருந்தன.
முன்பெல்லாம் பள்ளிக்கூடங்களில் பிளஸ்-2 இறுதித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பதற்காக, பிளஸ்-1 பாடப்புத்தகங்களில் அதிக கவனம் செலுத்துவது இல்லை. பள்ளிக்கூடங்களிலும் பிளஸ்-1 வகுப்பிலேயே பிளஸ்-2 பாடத்தை நடத்த தொடங்கி விடுவார்கள். இதனால், பிளஸ்-1 பாடங்கள் குறித்த கல்வியறிவு மாணவர்களுக்கு குறைவாகவே இருந்தது. உயர் படிப்புகளுக்கு, குறிப்பாக என்ஜினீயரிங் படிப்புகளுக்கு மாணவர்கள் செல்லும்போது, தேர்வுகளில் தேர்ச்சிபெற முடியாமல் மாணவர்கள் சிரமப்பட்டனர்.
இதற்கிடையே, கடந்த 2018-ம் ஆண்டு முதல் பிளஸ்-1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு முறை கொண்டு வரப்பட்டது. இதனால், ஆசிரியர்களும் பிளஸ்-2 வகுப்புக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை பிளஸ்-1 வகுப்புக்கும் கொடுக்கத் தொடங்கினார்கள். அதற்கான பலன் தற்போதைய ‘நீட்’ தேர்வில் வெளிப்பட்டிருக்கிறது. இந்த ‘நீட்’ தேர்வில் பிளஸ்-1 பாடங்களில் இருந்தும் சரிசமமாக கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. இனி பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளை ஏற்ற இறக்கத்துடன் பார்க்கக் கூடாது என்பதை இந்த ‘நீட்’ தேர்வு உணர்த்தியுள்ளது.
இதையெல்லாம் வைத்துக்கொண்டு, நமது மாணவர்களால் தான் இனி ‘நீட்’ தேர்வு எழுதக்கூடிய அளவுக்கு அறிவு இருக்குமே, பிறகு ஏன் இந்த தேர்வை நடத்தக்கூடாது? என்று வாதம் செய்வதில் பொருள் இல்லை. ‘நீட்’ தேர்வில் கலந்துகொள்வதற்கு சமமான கற்றல் வாய்ப்பு, சமமான ஆடுகளம் வேண்டும். தேர்வை எதிர்கொள்ள தொழில்நுட்ப ஆற்றலும் வேண்டும். அதற்கெல்லாம் தனியாக பயிற்சி மையங்களில் படித்தால் தான் முடியும். அந்த அளவு வசதி, வாய்ப்புகள் தமிழகத்திலுள்ள ஏழை, எளிய மாணவர்களுக்கு கிடையாது. எனவே, சிறந்த கல்வித்தரத்துடன் கூடிய பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தவேண்டும் என்பது தமிழகத்தின் ஒட்டுமொத்த குரலாக இருக்கிறது.
Wednesday, 12 August 2020
தந்தை-மகன் மரணம்: ‘போலீஸ் மிருகத்தனம் ஒரு கொடூரமான குற்றம்’
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் ஆகிய இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்த விவகாரம் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டது முதல் தற்போது வரை நடந்த நிகழ்வுகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
கடந்த ஜூன் 19-ம் தேதி சாத்தான்குளத்தில் தங்களது கடையை கூடுதல் நேரம் திறந்திருந்த காரணத்தால் காவல்துறையினருடன் ஏற்பட்ட தகராறில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் ஆகிய இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர்.
இதையடுத்து அவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் போராட்டத்தில் இறங்கினர். சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்தது. மாநில மனித உரிமை ஆணையமும் நோட்டீஸ் அனுப்பியது.
பிரேதப் பரிசோதனை
உயிரிழந்த ஜெயராஜின் மனைவியும் உயிரிழந்த பென்னீஸின் தாயாருமான செல்வராணி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் இருவரது உடலையும் மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டுமென்றும் பிரேதப் பரிசோதனையை வீடியோவில் பதிவுசெய்ய வேண்டுமென்றும் அவர் கோரியிருந்தார்.
இந்த மனு அவசர மனுவாக நீதிபதி பி. புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, பிரேதப் பரிசோதனையை மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழு விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டார். பிரேதப் பரிசோதனையை வீடியோவில் பதிவுசெய்யவும் உத்தரவிடப்பட்டது.
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் கோவில்பட்டி நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் விசாரணை நடத்தினார்.
தலைவர்கள் கண்டனம்; வணிகர்கள் கடையடைப்பு:
இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
பா.ம.க நிறுவனர் ராமதாஸ், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், சிபிஐ(எம்) தமிழக தலைவர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களும் இந்த சம்பவத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டனர்
கடைகளை அடைத்து வணிகர் சங்கங்கள் போராட்டம் நடத்தின
அரசு வேலை, நிதியுதவி வேண்டாம்; போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு பத்து லட்சம் ரூபாய் அளிப்பதாகவும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவிததார். ஆனால், அரசு அறிவித்த வேலையும் வேண்டாம், ரூ.20 லட்சம் பணமும் வேண்டாம். 'அவர்களை காவலில் வைத்து அடித்து மரணத்துக்கு காரணமாக இருந்த போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்வதுதான் வேண்டும்" என்று அவர்களது குடும்பத்தினர் கூறினர்.
குற்றம்சாட்டப்படும் போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்யும்வரை இறந்தவர்கள் உடலை வாங்கமாட்டோம் என்றும் கூறிவந்த குடும்பத்தினர் பின்னர் உடல்களை பெற்றுக்கொள்ள சம்மதித்தனர்.
காவலர்கள் மீது இரட்டை கொலை வழக்கு பதிவு செய்யப்படும் என்று நீதித்துறை மீது நம்பிக்கை வைத்து அவர்களது உடல்களை பெற்றுக்கொள்ள சம்மதிப்பதாக அவர்களது குடும்பத்தினர் கூறினர்.
இடை நீக்கம்
சாத்தான்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
காவல்நிலைய ஆய்வாளர் ஶ்ரீதர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
இந்தியளவில் முக்கியத்துவம் பெற்றது
சி.பி.ஐக்கு மாற்ற விருப்பம்
இந்த வழக்கை நீதிமன்றத்தின் அனுமதி பெற்று சி.பி.ஐக்கு மாற்றவிருப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார். இந்த நிலையில், இன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் ஆஜரான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் செல்லப்பாண்டியன், இந்த வழக்கை தமிழக அரசு சி.பி.ஐக்கு மாற்ற விரும்புவதாகத் தெரிவித்தார்.
காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவுசெய்து விசாரிக்கலாம்
காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவுசெய்து விசாரிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டதுஇந்த வழக்கில் ஒரு விநாடியைக்கூட வீணாக்க விரும்பவில்லையென தெரிவித்த நீதிபதிகள், சி.பி.ஐ. இந்த வழக்கைப் பொறுப்பேற்கும்வரை, வழக்கை நெல்லை காவல்துறை விசாரிக்கலாம் எனக் கூறினர்.
டி.எஸ்.பி., கூடுதல் எஸ்.பி. மீது குற்றவியல் அவமதிப்பு வழக்கு, இடமாற்றம்
இந்த வழக்கில் விசாரணை நடத்திய நீதித்துறை நடுவரை அவமதித்ததாக தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோர் மீது தாமாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளது சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை.
அத்துடன் அவர்களை இடமாற்றம் செய்யவும் உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
இவர்கள் இருவருடன் சாத்தான்குளம் காவல் நிலைய காவலர் மகாராஜன் என்பவரும் இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு உள்ளாகியிருக்கிறார்.
சிசிடிவி வீடியோ வெளியானது: முதல் எஃப்.ஐ.ஆருடன் முரண்பாடு
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் நடத்தி வந்த மொபைல் கடைக்கு அருகில் இருந்த கடையின் சிசிடிவி வீடியோ காட்சிகள் ஊடகங்களுக்கு கிடைத்தது. அந்த வீடியோ காட்சியில் ஜெயராஜ் கடையின் வாயிலில் தனியாக நிற்பதும், யாரோ அழைத்ததும் அங்கிருந்து செல்வதுமான காட்சிகள் பதிவாகியுள்ளன.
அந்த நேரத்தில், எஃப்ஐஆரில் குறிப்பிட்டபடி அவரது மகன் பென்னிக்ஸோ, அவரது நண்பர்கள் கூட்டமோ அங்கே இல்லை. அவர்கள் தரையில் விழுந்து உருளுவது போன்ற காட்சிகளும் இல்லை.
நீதித் துறை நடுவர் அறிக்கை
காவல்துறை தாக்குதலால் உயிரிழந்ததாகக் கூறப்படும் ஜெயராஜும் பென்னிக்சும் விடியவிடிய காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக நீதித் துறை நடுவரின் அறிக்கை கூறியது. தான் விசாரணை மேற்கொண்டபோது அங்கிருந்த காவலர்கள் தன்னிடம் மோசமாக நடந்துகொண்டதாகவும் நீதித் துறை நடுவர் தெரிவித்தார்.
ஜெயராஜ் பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக கோவில்பட்டி நீதித் துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டார். இது தொடர்பான விசாரணை அறிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.
நீதித் துறை நடுவர் அறிக்கை
காவல்துறை தாக்குதலால் உயிரிழந்ததாகக் கூறப்படும் ஜெயராஜும் பென்னிக்சும் விடியவிடிய காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக நீதித் துறை நடுவரின் அறிக்கை கூறியது. தான் விசாரணை மேற்கொண்டபோது அங்கிருந்த காவலர்கள் தன்னிடம் மோசமாக நடந்துகொண்டதாகவும் நீதித் துறை நடுவர் தெரிவித்தார்.
ஜெயராஜ் பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக கோவில்பட்டி நீதித் துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டார். இது தொடர்பான விசாரணை அறிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.
சி.பி.சி.ஐ.டி. விசாரணை
சி.பி.ஐ. தனது விசாரணையைத் துவங்க நாட்கள் ஆகும் என்பதால், அதற்கு முன்பாகவே குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை (சி.பி.சி.ஐ.டி.) தனது விசாரணையைத் துவங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டது.
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. தனது விசாரணையைத் துவங்கியது. முதல் தகவல் அறிக்கையை மாற்றியமைக்க வாய்ப்பு உள்ளது என சாத்தான்குளத்தில் சிபிசிஐடி ஐஜி சங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காவலர்கள் கைது
காவல்துறை உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பால கிருஷ்ணன் தலைமைக் காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதரை கோவில்பட்டி அருகே சிபிசிஐடி காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்திய நிலையில், தற்போது அவர் மீது கொலை வழக்கு மற்றும் தடயங்களை அளித்தல் ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.
தலைமைக் காவலர் ரேவதியின் இல்லத்திற்கு பாதுகாப்பு
இந்த வழக்கில் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக சாட்சியமளித்த தலைமைக் காவலர் ரேவதியின் வீட்டிற்கு தற்போது காவலர்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
காவல் நிலையத்தை ஒப்படைக்க உத்தரவு
வருவாய்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த சாத்தான்குளம் காவல்நிலையத்தை, மீண்டும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்
சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்கியதில் தந்தை, மகன் மரணமடைந்த கூறப்படும் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேரும் ஜூலை 4ஆம் தேதி மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.
காவலர் ரேவதியுடன் முதல்கட்ட விசாரணை நிறைவு
சாத்தான்குளம் கொலை வழக்கில் பிரதான சாட்சியான காவலர் ரேவதியிடம் முதல் கட்ட விசாரணை நிறைவு பெற்றுள்ளதாக சி.பி.சி.ஐ.டி. ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. அலுவலக வாயிலில் செய்தியாளர்களிடம் பேசிய ஐஜி சங்கர், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவலர்களை அடுத்த வாரம் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்குக் கோரவுள்ளதாகத் தெரிவித்தார்.
தடை செய்யப்பட்ட பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில், தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸாரால் கொல்லப்பட்டதாக கூறப்படும் வழக்கில், பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை சேர்ந்த இளைஞர்களும் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை தொடங்கியுள்ளது.
சாத்தான்குளம் வழக்கை சிபிஐ விசாரிக்க அறிவிக்கை
சாத்தான்குளத்தில் கடந்த மாத இறுதியில் காவல்துறை அதிகாரிகள் தாக்கியதில் தந்தை, மகன் மரணமடைந்ததாக கூறப்படும் வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐ மேற்கொள்வதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
வழக்குப்பதிவு செய்த சிபிஐ, மேலும் 5 போலீசார் கைது
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக இரண்டு வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது.
Monday, 22 June 2020
வெட்டி வேரின் மருத்துவ பயன்கள்

வெட்டிவேர் எண்ணெய்யை கொண்டு நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் வடுக்கள் மீது தடவி வந்தால் அவை மறைந்துவிடும். இந்த எண்ணெய்யை தேய்த்து குளிக்கலாம். சீயக்காய்க்குப் பதில் வெட்டிவேரின் பவுடரை பயன்படுத்துங்கள். இதை தொடர்ந்து செய்தால் முகத்தில் எண்ணெய் வழியாது. முகம் கூடுதல் அழகுடன் காணப்படும். வெயில் காலத்தில் உண்டாகும் அதிக வியர்வை மற்றும் அரிப்பிற்கு வெட்டிவேரை நீரில் ஊறவைத்து, அரைத்து குளிக்கும் தண்ணீரில் கலந்து குளிக்கலாம். தீக்காயங்களில் வெட்டிவேரை அரைத்து பு சினால் காயங்கள் விரைவில் குணமாகும். கால் எரிச்சல், கால் வலி போன்றவற்றிற்கும் வெட்டிவேரை தேங்காய் எண்ணெயில் இட்டு காய்ச்சி, இரண்டு நாட்கள் கழித்து வடிகட்டி தொந்தரவு தரும் இடங்களில் பூசலாம்.
காய்ச்சலுக்கு பின்பு ஏற்படும் உடல் சோர்வுக்கு வெட்டி வேரை நீரில் இட்டு கொதிக்கவைத்து பருகவேண்டும். அந்த நீரை பருகுவதால் செரிமான ஆற்றல் அதிகரிக்கும். வயிற்றுப் புண்ணும் குணமாகும். முகத்தில் ஏற்படும் பருக்களை குறைக்க வெட்டி வேர் பயன்படுகிறது. சிறு சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் சிறுதளவையும், கொட்டை நீக்கிய கடுக்காய் ஒன்றையும் முதல் நாள் இரவே கொதிநீரில் ஊறவைத்து மறுநாள் அதை அரைத்து, அந்த விழுதை பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் இருந்த வடுவே தெரியாமல் அழிந்து விடும்.
மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?
பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...
-
Spanish cherry என்று அழைக்கப்படும் இந்த மரம் ஒரு சிற்றின மரம் . இதில் நிறைய மருத்துவ பழங்கள் உள்ளவை. இது சங்க காலங்களில் பயன்படுத்தப்பட்டவ...
-
பூலான் தேவி ( Phoolan Devi , Aug 10, 1963 - Jul 25, 2001), கொள்ளையரசி அல்லது பேண்டிட் குயின் என்று பலராலும் அழைக்கப்படும் இந்தியாவின் பி...
-
ஆர்க்டிக் டெர்ன் (Arctic Tern) என்பது (Sterna paradisaea)என்ற குடும்பத்தைச் சேர்ந்த கடற்பறவை ஆகும். உலகிலேயே அதிக தூரம்வலசை வரும் ப...





