Sunday, 11 October 2020

U.P ஹத்ராஸ் - கூட்டு பாலியல் வன்கொடுமை - மறக்க முடியாத வலி

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான இளம்  பெண், கடந்த Sep 14ஆம் தேதி நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அப்பெண்ணின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக மாறியது. உடனே டெல்லியில் உள்ள சாஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 15 நாட்களுக்கும் மேலாக தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இளம்பெண் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் வட இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன.

இளம்பெண்ணிற்கு நீதி வேண்டும்

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள், திரைத்துறையினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர். இறந்த பெண்ணிற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த சூழலில் உயிரிழந்த பெண்ணின் உடலுடன் அவரது குடும்பத்தார் டெல்லி மருத்துவமனையில் இருந்து நேற்று இரவு புறப்பட்டனர்.

அவர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸிற்கு குடும்பத்தார் செல்வதற்கு முன்னரே உயிரிழந்த பெண்ணின் உடலை போலீசார் கொண்டு சென்றுவிட்டனர். இதையடுத்து உடலை நேரடியாக மயானத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இளம்பெண்ணின் தந்தை ஹத்ராஸ் வந்தவுடன், அவரை அவசர அவசரமாக மயானத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அவசரம் காட்டிய போலீசார்

பின்னர் உடனடியாக அவரது மகளின் உடலை எரிக்க வேண்டும் என்று போலீசார் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுபற்றி பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு உயிரிழந்த பெண்ணின் சகோதரர் பேட்டியளிக்கையில் தெரிவித்துள்ளார். மற்றொரு உறவினர் கூறுகையில், பெண்ணின் தந்தை சுமார் 40 பேருடன் மயானத்திற்கு சென்றார். அப்போது பூல் கார்ஹி கிராமத்திற்கு அருகேவுள்ள மயானத்தில் பெண்ணின் உடலை உடனடியாக எரித்தாக வேண்டும் என்று போலீசார் வலியுறுத்தியுள்ளனர். 

வழக்கை மூடி மறைக்கும் முயற்சியா?

ஏன் இவ்வளவு அவசரம் காட்டினர் என்று தெரியவில்லை. எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு என்ன தான் வேண்டும். என்ன மாதிரியான அரசியல் இது? எங்கள் மகள் வன்புணர்விற்கு ஆளாக்கப்படவில்லை என்று ஏதேதோ கதை கூறுகின்றனர். இந்த விஷயத்தை அப்படியே மூடி மறைக்கத் தான் இப்படி செய்ததாக குற்றம்சாட்டினார். இந்நிலையில் நேற்று நள்ளிரவே இளம்பெண்ணின் உடல் எரிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி மயானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பத்திரிகையாளர்கள் யாரையும் அப்பகுதியில் அனுமதிக்க போலீசார் மறுத்துவிட்டனர். இதுபற்றி ஹத்ராஸ் காவல்துறை கண்காணிப்பாளர் விக்ராந்த் விர் கூறுகையில், அனைத்து நடவடிக்கைகளும் அப்பெண்ணின் குடும்பத்தார் விருப்பப்படியே நடந்துள்ளது என்று தெரிவித்தார்.

விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

இந்த சம்பவம் விசாரிக்க மூன்று பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். விரைவாக விசாரித்து அடுத்த 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.



Tuesday, 29 September 2020

மகிழ்ச்சியளிக்கும் தமிழக கல்வி தரம்!


 2017-ம் ஆண்டுக்கு முன்பு வரை தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையிலேயே நடந்தது.

2017-ம் ஆண்டு முதல் நாடு முழுவதுக்கும் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ‘நீட்’ தேர்வு கொண்டுவரப்பட்டது. “ ‘நீட்’ தேர்வு வினாத்தாள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படுகிறது, மாநில கல்வித் திட்டத்தில் படித்தவர்களால், இந்த தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. எனவே, ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்று தமிழ்நாடு முழுவதிலும் இருந்து கோரிக்கைகள் எழுந்து வந்தன. ‘நீட்’ தேர்வு அச்சத்தால் இதுவரை 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எனவே, இந்த ‘நீட்’ தேர்வு தமிழ்நாட்டுக்கு வேண்டவே வேண்டாம் என்று விடப்படும் கோரிக்கையை ஒருபோதும் மறுப்பதற்கு இல்லை.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு இணையான அளவு மாநில பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று எழுந்த கோரிக்கைகளை ஏற்று கல்வித்துறை 2018-2019-ம் ஆண்டு பிளஸ்-1, 2019-2020-ம் ஆண்டு பிளஸ்-2 வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களையும் மாற்றியமைத்தது. இந்த புதிய பாடத்திட்டம் எதற்கும் சளைத்ததல்ல என்பதை கடந்த 13-ந்தேதி நடத்தப்பட்ட ‘நீட்’ தேர்வு வினாத்தாள் நிரூபித்து காட்டியுள்ளது. ‘நீட்’ தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 97 சதவீத கேள்விகள் தமிழ்நாட்டில் இப்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள பிளஸ்-1, பிளஸ்-2 பாடப்புத்தகங்களில் இருந்தே கேட்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 180 கேள்விகளில், 174 கேள்விகளுக்கான பதில் பிளஸ்-1, பிளஸ்-2 பாடப்புத்தகத்திலேயே இடம்பெற்றுள்ளன.

2017-ம் ஆண்டு ‘நீட்’ தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 60 சதவீத கேள்விகள்தான், பழைய பாடப்புத்தகங்களில் இடம்பெற்றிருந்தன. ஆனால், தற்போது நடத்தப்பட்ட ‘நீட்’ தேர்வில், உயிரியல் பாடத்தில் கேட்கப்பட்ட 90 கேள்விகளில் 87 கேள்விகளுக்கான விடைகள் மாநில பாடத்திட்டத்திலேயே இருக்கிறது. அதில், 54 சதவீத கேள்விகள் பிளஸ்-1 பாடப்புத்தகத்தில் இருந்தும், 46 சதவீத கேள்விகள் பிளஸ்-2 பாடப்புத்தகத்தில் இருந்தும் கேட்கப்பட்டிருந்தன. வேதியியல், இயற்பியல் பாடங்களின் வினாக்களும் பிளஸ்-1, பிளஸ்-2 பாடப்புத்தகங்களில் இருந்து ஏறத்தாழ சரிசமமாக கேட்கப்பட்டிருந்தன.

முன்பெல்லாம் பள்ளிக்கூடங்களில் பிளஸ்-2 இறுதித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பதற்காக, பிளஸ்-1 பாடப்புத்தகங்களில் அதிக கவனம் செலுத்துவது இல்லை. பள்ளிக்கூடங்களிலும் பிளஸ்-1 வகுப்பிலேயே பிளஸ்-2 பாடத்தை நடத்த தொடங்கி விடுவார்கள். இதனால், பிளஸ்-1 பாடங்கள் குறித்த கல்வியறிவு மாணவர்களுக்கு குறைவாகவே இருந்தது. உயர் படிப்புகளுக்கு, குறிப்பாக என்ஜினீயரிங் படிப்புகளுக்கு மாணவர்கள் செல்லும்போது, தேர்வுகளில் தேர்ச்சிபெற முடியாமல் மாணவர்கள் சிரமப்பட்டனர்.

இதற்கிடையே, கடந்த 2018-ம் ஆண்டு முதல் பிளஸ்-1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு முறை கொண்டு வரப்பட்டது. இதனால், ஆசிரியர்களும் பிளஸ்-2 வகுப்புக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை பிளஸ்-1 வகுப்புக்கும் கொடுக்கத் தொடங்கினார்கள். அதற்கான பலன் தற்போதைய ‘நீட்’ தேர்வில் வெளிப்பட்டிருக்கிறது. இந்த ‘நீட்’ தேர்வில் பிளஸ்-1 பாடங்களில் இருந்தும் சரிசமமாக கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. இனி பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளை ஏற்ற இறக்கத்துடன் பார்க்கக் கூடாது என்பதை இந்த ‘நீட்’ தேர்வு உணர்த்தியுள்ளது.

இதையெல்லாம் வைத்துக்கொண்டு, நமது மாணவர்களால் தான் இனி ‘நீட்’ தேர்வு எழுதக்கூடிய அளவுக்கு அறிவு இருக்குமே, பிறகு ஏன் இந்த தேர்வை நடத்தக்கூடாது? என்று வாதம் செய்வதில் பொருள் இல்லை. ‘நீட்’ தேர்வில் கலந்துகொள்வதற்கு சமமான கற்றல் வாய்ப்பு, சமமான ஆடுகளம் வேண்டும். தேர்வை எதிர்கொள்ள தொழில்நுட்ப ஆற்றலும் வேண்டும். அதற்கெல்லாம் தனியாக பயிற்சி மையங்களில் படித்தால் தான் முடியும். அந்த அளவு வசதி, வாய்ப்புகள் தமிழகத்திலுள்ள ஏழை, எளிய மாணவர்களுக்கு கிடையாது. எனவே, சிறந்த கல்வித்தரத்துடன் கூடிய பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தவேண்டும் என்பது தமிழகத்தின் ஒட்டுமொத்த குரலாக இருக்கிறது.

Wednesday, 12 August 2020

Kerala gold smuggling case

தந்தை-மகன் மரணம்: ‘போலீஸ் மிருகத்தனம் ஒரு கொடூரமான குற்றம்’

 தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் ஆகிய இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்த விவகாரம் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டது முதல் தற்போது வரை நடந்த நிகழ்வுகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

ஏன் கைது?

கடந்த ஜூன் 19-ம் தேதி சாத்தான்குளத்தில் தங்களது கடையை கூடுதல் நேரம் திறந்திருந்த காரணத்தால் காவல்துறையினருடன் ஏற்பட்ட தகராறில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் ஆகிய இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர்.

இதையடுத்து அவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் போராட்டத்தில் இறங்கினர். சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்தது. மாநில மனித உரிமை ஆணையமும் நோட்டீஸ் அனுப்பியது.

பிரேதப் பரிசோதனை

உயிரிழந்த ஜெயராஜின் மனைவியும் உயிரிழந்த பென்னீஸின் தாயாருமான செல்வராணி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் இருவரது உடலையும் மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டுமென்றும் பிரேதப் பரிசோதனையை வீடியோவில் பதிவுசெய்ய வேண்டுமென்றும் அவர் கோரியிருந்தார்.

இந்த மனு அவசர மனுவாக நீதிபதி பி. புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, பிரேதப் பரிசோதனையை மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழு விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டார். பிரேதப் பரிசோதனையை வீடியோவில் பதிவுசெய்யவும் உத்தரவிடப்பட்டது.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் கோவில்பட்டி நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் விசாரணை நடத்தினார்.

தலைவர்கள் கண்டனம்; வணிகர்கள் கடையடைப்பு:

இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

பா.ம.க நிறுவனர் ராமதாஸ், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், சிபிஐ(எம்) தமிழக தலைவர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களும் இந்த சம்பவத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டனர்

கடைகளை அடைத்து வணிகர் சங்கங்கள் போராட்டம் நடத்தின

அரசு வேலை, நிதியுதவி வேண்டாம்; போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு பத்து லட்சம் ரூபாய் அளிப்பதாகவும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவிததார். ஆனால், அரசு அறிவித்த வேலையும் வேண்டாம், ரூ.20 லட்சம் பணமும் வேண்டாம். 'அவர்களை காவலில் வைத்து அடித்து மரணத்துக்கு காரணமாக இருந்த போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்வதுதான் வேண்டும்" என்று அவர்களது குடும்பத்தினர் கூறினர்.

குற்றம்சாட்டப்படும் போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்யும்வரை இறந்தவர்கள் உடலை வாங்கமாட்டோம் என்றும் கூறிவந்த குடும்பத்தினர் பின்னர் உடல்களை பெற்றுக்கொள்ள சம்மதித்தனர்.

காவலர்கள் மீது இரட்டை கொலை வழக்கு பதிவு செய்யப்படும் என்று நீதித்துறை மீது நம்பிக்கை வைத்து அவர்களது உடல்களை பெற்றுக்கொள்ள சம்மதிப்பதாக அவர்களது குடும்பத்தினர் கூறினர்.

இடை நீக்கம்

சாத்தான்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

காவல்நிலைய ஆய்வாளர் ஶ்ரீதர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

இந்தியளவில் முக்கியத்துவம் பெற்றது

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியளவிலும் பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் சாத்தான்குளம் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். "Justice For Jeyaraj And Fenix" என்கிற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது.

சி.பி.ஐக்கு மாற்ற விருப்பம்

இந்த வழக்கை நீதிமன்றத்தின் அனுமதி பெற்று சி.பி.ஐக்கு மாற்றவிருப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார். இந்த நிலையில், இன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் ஆஜரான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் செல்லப்பாண்டியன், இந்த வழக்கை தமிழக அரசு சி.பி.ஐக்கு மாற்ற விரும்புவதாகத் தெரிவித்தார்.

காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவுசெய்து விசாரிக்கலாம்

காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவுசெய்து விசாரிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டதுஇந்த வழக்கில் ஒரு விநாடியைக்கூட வீணாக்க விரும்பவில்லையென தெரிவித்த நீதிபதிகள், சி.பி.ஐ. இந்த வழக்கைப் பொறுப்பேற்கும்வரை, வழக்கை நெல்லை காவல்துறை விசாரிக்கலாம் எனக் கூறினர்.

டி.எஸ்.பி., கூடுதல் எஸ்.பி. மீது குற்றவியல் அவமதிப்பு வழக்கு, இடமாற்றம்

இந்த வழக்கில் விசாரணை நடத்திய நீதித்துறை நடுவரை அவமதித்ததாக தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோர் மீது தாமாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளது சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை.

அத்துடன் அவர்களை இடமாற்றம் செய்யவும் உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

இவர்கள் இருவருடன் சாத்தான்குளம் காவல் நிலைய காவலர் மகாராஜன் என்பவரும் இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு உள்ளாகியிருக்கிறார்.

சிசிடிவி வீடியோ வெளியானது: முதல் எஃப்.ஐ.ஆருடன் முரண்பாடு

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் நடத்தி வந்த மொபைல் கடைக்கு அருகில் இருந்த கடையின் சிசிடிவி வீடியோ காட்சிகள் ஊடகங்களுக்கு கிடைத்தது. அந்த வீடியோ காட்சியில் ஜெயராஜ் கடையின் வாயிலில் தனியாக நிற்பதும், யாரோ அழைத்ததும் அங்கிருந்து செல்வதுமான காட்சிகள் பதிவாகியுள்ளன.

அந்த நேரத்தில், எஃப்ஐஆரில் குறிப்பிட்டபடி அவரது மகன் பென்னிக்ஸோ, அவரது நண்பர்கள் கூட்டமோ அங்கே இல்லை. அவர்கள் தரையில் விழுந்து உருளுவது போன்ற காட்சிகளும் இல்லை.

நீதித் துறை நடுவர் அறிக்கை

காவல்துறை தாக்குதலால் உயிரிழந்ததாகக் கூறப்படும் ஜெயராஜும் பென்னிக்சும் விடியவிடிய காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக நீதித் துறை நடுவரின் அறிக்கை கூறியது. தான் விசாரணை மேற்கொண்டபோது அங்கிருந்த காவலர்கள் தன்னிடம் மோசமாக நடந்துகொண்டதாகவும் நீதித் துறை நடுவர் தெரிவித்தார்.

ஜெயராஜ் பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக கோவில்பட்டி நீதித் துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டார். இது தொடர்பான விசாரணை அறிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.

நீதித் துறை நடுவர் அறிக்கை

காவல்துறை தாக்குதலால் உயிரிழந்ததாகக் கூறப்படும் ஜெயராஜும் பென்னிக்சும் விடியவிடிய காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக நீதித் துறை நடுவரின் அறிக்கை கூறியது. தான் விசாரணை மேற்கொண்டபோது அங்கிருந்த காவலர்கள் தன்னிடம் மோசமாக நடந்துகொண்டதாகவும் நீதித் துறை நடுவர் தெரிவித்தார்.

ஜெயராஜ் பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக கோவில்பட்டி நீதித் துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டார். இது தொடர்பான விசாரணை அறிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி. விசாரணை

சி.பி.ஐ. தனது விசாரணையைத் துவங்க நாட்கள் ஆகும் என்பதால், அதற்கு முன்பாகவே குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை (சி.பி.சி.ஐ.டி.) தனது விசாரணையைத் துவங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டது.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. தனது விசாரணையைத் துவங்கியது. முதல் தகவல் அறிக்கையை மாற்றியமைக்க வாய்ப்பு உள்ளது என சாத்தான்குளத்தில் சிபிசிஐடி ஐஜி சங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

காவலர்கள் கைது

ரகு கணேஷ்

காவல்துறை உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பால கிருஷ்ணன் தலைமைக் காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதரை கோவில்பட்டி அருகே சிபிசிஐடி காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்திய நிலையில், தற்போது அவர் மீது கொலை வழக்கு மற்றும் தடயங்களை அளித்தல் ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.

தலைமைக் காவலர் ரேவதியின் இல்லத்திற்கு பாதுகாப்பு

இந்த வழக்கில் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக சாட்சியமளித்த தலைமைக் காவலர் ரேவதியின் வீட்டிற்கு தற்போது காவலர்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

காவல் நிலையத்தை ஒப்படைக்க உத்தரவு

வருவாய்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த சாத்தான்குளம் காவல்நிலையத்தை, மீண்டும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்

சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்கியதில் தந்தை, மகன் மரணமடைந்த கூறப்படும் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேரும் ஜூலை 4ஆம் தேதி மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.

காவலர் ரேவதியுடன் முதல்கட்ட விசாரணை நிறைவு

சாத்தான்குளம் கொலை வழக்கில் பிரதான சாட்சியான காவலர் ரேவதியிடம் முதல் கட்ட விசாரணை நிறைவு பெற்றுள்ளதாக சி.பி.சி.ஐ.டி. ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. அலுவலக வாயிலில் செய்தியாளர்களிடம் பேசிய ஐஜி சங்கர், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவலர்களை அடுத்த வாரம் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்குக் கோரவுள்ளதாகத் தெரிவித்தார்.

தடை செய்யப்பட்ட பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில், தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸாரால் கொல்லப்பட்டதாக கூறப்படும் வழக்கில், பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை சேர்ந்த இளைஞர்களும் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை தொடங்கியுள்ளது.

சாத்தான்குளம் வழக்கை சிபிஐ விசாரிக்க அறிவிக்கை

சாத்தான்குளத்தில் கடந்த மாத இறுதியில் காவல்துறை அதிகாரிகள் தாக்கியதில் தந்தை, மகன் மரணமடைந்ததாக கூறப்படும் வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐ மேற்கொள்வதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

வழக்குப்பதிவு செய்த சிபிஐ, மேலும் 5 போலீசார் கைது

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக இரண்டு வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது.




Monday, 22 June 2020

வெட்டி வேரின் மருத்துவ பயன்கள்

வெட்டி வேரினை எலுமிச்சை வேர் எனவும் கூறுவார்கள். நீர் கடுப்பு, தேக எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் வெட்டிவேரை சுத்தம் செய்து உலர்த்திப் பொடி செய்து கொண்டு அதனுடன் பெருஞ்சீரகம் பொடி செய்து சம அளவு எடுத்து வெந்நீரில் 200 மி.கி. குடித்து வந்தால் தீர்வு கிடைக்கும். கோடையில் உஷ்ணத்தின் தாக்கத்தை குறைக்கும். வெட்டிவேரை நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் உடல் சுடும், தாகம் தணியும். நாவறட்சி, தாகம், காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுபடுத்தும். வாந்தி பேதிக்கும் இது நல்ல மருந்தாகும். மேலும் சளி தொந்தரவு ஏற்படாமல் இந்த வேர் பாதுகாக்கும்.

வெட்டிவேர் எண்ணெய்யை கொண்டு நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் வடுக்கள் மீது தடவி வந்தால் அவை மறைந்துவிடும். இந்த எண்ணெய்யை தேய்த்து குளிக்கலாம். சீயக்காய்க்குப் பதில் வெட்டிவேரின் பவுடரை பயன்படுத்துங்கள். இதை தொடர்ந்து செய்தால் முகத்தில் எண்ணெய் வழியாது. முகம் கூடுதல் அழகுடன் காணப்படும். வெயில் காலத்தில் உண்டாகும் அதிக வியர்வை மற்றும் அரிப்பிற்கு வெட்டிவேரை நீரில் ஊறவைத்து, அரைத்து குளிக்கும் தண்ணீரில் கலந்து குளிக்கலாம். தீக்காயங்களில் வெட்டிவேரை அரைத்து பு சினால் காயங்கள் விரைவில் குணமாகும். கால் எரிச்சல், கால் வலி போன்றவற்றிற்கும் வெட்டிவேரை தேங்காய் எண்ணெயில் இட்டு காய்ச்சி, இரண்டு நாட்கள் கழித்து வடிகட்டி தொந்தரவு தரும் இடங்களில் பூசலாம்.

காய்ச்சலுக்கு பின்பு ஏற்படும் உடல் சோர்வுக்கு வெட்டி வேரை நீரில் இட்டு கொதிக்கவைத்து பருகவேண்டும். அந்த நீரை பருகுவதால் செரிமான ஆற்றல் அதிகரிக்கும். வயிற்றுப் புண்ணும் குணமாகும். முகத்தில் ஏற்படும் பருக்களை குறைக்க வெட்டி வேர் பயன்படுகிறது. சிறு சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் சிறுதளவையும், கொட்டை நீக்கிய கடுக்காய் ஒன்றையும் முதல் நாள் இரவே கொதிநீரில் ஊறவைத்து மறுநாள் அதை அரைத்து, அந்த விழுதை பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் இருந்த வடுவே தெரியாமல் அழிந்து விடும்.

ஜார்ஜ் பிலோய்ட் மரணம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று,

கரோனாவால் நிலைகுலைந்து போயிருக்கும் அமெரிக்காவை ஜார்ஜ் ஃப்ளாய்டின் படுகொலை உலுக்கியெடுத்திருக்கிறது. உலக நாடுகள் பலவும் இந்தப் படுகொலையைப் பேசுகின்றன. சட்டரீதியாக அமெரிக்காவில் நிறப் பாகுபாடு ஒழிக்கப்பட்டாலும், நடைமுறையில் அது இன்னும் தொடர்ந்துகொண்டேயிருப்பதைத்தான் ஜார்ஜ் ஃப்ளாய்டுகளின் மரணங்கள் சொல்கின்றன. ஒரு ஜனநாயக நாடாக அமெரிக்கா தலைகுனிந்து நிற்கிறது.

வடக்கு கரோலினா மாகாணத்தின் ஃபேயட்வில் நகரத்தில் 1973-ல் பிறந்த கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்டு, வளர்ந்ததெல்லாம் டெக்ஸாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரத்தில். பள்ளிப் பருவத்தில் கால்பந்து, கூடைப்பந்து அணிகளில் விளையாடியிருக்கிறார். 2014-ல் மின்னிசோட்டா மாகாணத்தின் மினியாபொலிஸ் நகரத்துக்குப் புலம்பெயர்ந்த அவர், கடந்த 5 ஆண்டுகளாக ஒரு கிளப்பில் காவலாளியாகப் பணிபுரிந்துவந்தார். கரோனா நெருக்கடியால் வேலை இழந்த சில கோடி அமெரிக்கர்களில் அவரும் ஒருவர். ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு 22 வயதிலும், 6 வயதிலும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

கடைசி நிமிடங்கள்

மே 25 அன்று மாலை மினியாபொலிஸ் நகரத்தில் உள்ள ஒரு அங்காடிக்குச் சென்று, 20 டாலர் பணத்தைக் கொடுத்து சிகரெட் வாங்கியிருக்கிறார் ஜார்ஜ் ஃப்ளாய்டு. அவர் கொடுத்த பணம் கள்ளநோட்டாக இருக்குமோ என்ற சந்தேகத்தில், அந்த அங்காடியின் ஊழியர் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கிறார். சற்று நேரத்தில் இரண்டு போலீஸ்காரர்கள் அங்கே வருகிறார்கள். அந்த இடத்துக்கருகே ஒரு ஓரத்தில் நின்றுகொண்டிருந்த காரில் தன் நண்பர்கள் இருவருடன் இருந்த ஃப்ளாய்டைக் கைதுசெய்து போலீஸ் காரில் ஏற்ற முயல்கிறார்கள். தனக்கு ‘கிளாஸ்ட்ரோஃபோபியா’ (அடைத்திருக்கும் இடங்கள் உருவாக்கும் பீதி) இருக்கிறது என்கிறார் ஃப்ளாய்டு. எனினும், போலீஸ்காரர்களுக்கு அவர் எதிர்ப்பேதும் தெரிவிக்கவில்லை. காரில் ஏற்ற முயலும்போது ஃப்ளாய்டு கீழே விழுகிறார். அப்போது அங்கே இன்னொரு போலீஸ் கார் வருகிறது. அதிலிருந்து இறங்கிய டேவிட் சாவின், ஏற்கெனவே அங்கே இருந்த போலீஸாருடன் சேர்ந்து ஃப்ளாய்டை காரில் ஏற்ற முயலும்போது ஃப்ளாய்டு மறுபடியும் கீழே விழுகிறார். இரண்டு போலீஸ்காரர்கள் ஃப்ளாய்டின் கையையும் காலையும் பிடித்திருக்க, அவரது கழுத்தின் மீது முழங்காலை வைத்து டேவிட் சாவின் அழுத்துகிறார். ‘என்னால் மூச்சு விட முடியவில்லை’ என்று தொடர்ந்து கத்துகிறார் ஃப்ளாய்டு. எட்டு நிமிடங்களுக்கும் மேலாக ஃப்ளாய்டின் கழுத்தின் மீது காலை வைத்து அழுத்திக்கொண்டிருக்கிறார் டேவிட் சாவின். ஆறு நிமிடங்களிலேயே ஃப்ளாய்டு அசைவற்றுப்போகிறார். அவரது நாடித்துடிப்பைப் பரிசோதிக்கும்படி நடைபாதையில் இருக்கும் ஒருவர் கூறவே ஒரு போலீஸ்காரர் ஃப்ளாய்டின் நாடியைப் பரிசோதிக்கிறார். துடிப்பு இல்லை.

செல்பேசியில் பலரும் படம் பிடித்து இதை சமூக ஊடகங்களில் வெளியிட, மக்களின் கோபம் தீயாகப் பரவியது. அடுத்த நாள் அந்தக் காவலர்கள் நால்வரும் விடுப்பில் அனுப்பப்பட்டதாக மினியாபொலிஸ் காவல் துறை தெரிவித்தது. அன்று மாலையே அவர்கள் நால்வரும் பணியிலிருந்து நீக்கப்பட்டார்கள் என்றாலும், நான்கு நாட்கள் கழித்துதான் டேவிட் சாவின் கைதுசெய்யப்பட்டார். இதற்குள் மினியாபொலிஸ் நகரத்திலும், தொடர்ந்து அமெரிக்கா முழுவதிலும் உள்ள ஏனைய நகரங்களிலும் போராட்டங்கள் வெடித்தன. ஃப்ளாய்டின் இறுதி வாசகங்களான ‘என்னால் மூச்சு விட முடியவில்லை’ என்பது போராட்டக்காரர்களின் தாரக மந்திரமானது. இந்தப் போராட்டங்களை முன்னெடுத்துவருவதில் ‘கறுப்பினத்தவரின் வாழ்க்கை முக்கியம்’ (Black Lives Matter) இயக்கத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்தப் போராட்டங்களில் ஏராளமான வெள்ளையின மக்களும் கலந்துகொண்டு, தங்கள் சகோதரத்துவத்தை உலகுக்கு எடுத்துக்காட்டுவது ஒரு சின்ன ஆசுவாசம்.

தொடரும் பாகுபாடு:

போராட்டம் அமைதியான முறையில் ஆரம்பித்தாலும் மக்களின் கோபம் சில இடங்களில் கலவரமாக வெடித்தது. கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதுதான் தருணம் என்று போராட்டத்துடன் தொடர்பில்லாதவர்கள் கடைகளைச் சூறையாட ஆரம்பித்தனர். அதிபர் ட்ரம்ப் ‘லூட்டிங் (சூறையாடுதல்) ஆரம்பித்தால் ஷூட்டிங்கும் (துப்பாக்கியால் சுடுதல்) ஆரம்பித்துவிடும்’ என்று ட்வீட் போட இது வழிவகுத்தது. எல்லாவற்றையும் தாண்டியும் இந்த கரோனா காலத்திலும் ஒரு எளிய மனிதர் அநீதியாகக் கொல்லப்பட்டதற்காகப் பல்லாயிரம் மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுவருவது உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

பூர்வகுடிகளான செவ்விந்தியர்களின் கல்லறை மேல்தான் நவீன அமெரிக்கா எழுப்பப்பட்டது. ஆப்பிரிக்காவிலிருந்து 18-ம் நூற்றாண்டில் அமெரிக்காவுக்கு அடிமைகளாகக் கறுப்பினத்தவர்கள் கொண்டுவரப்பட்டார்கள். அவர்களை விலங்குகளைப் போலவே அமெரிக்கர்கள் நடத்தினார்கள். அடிமைகள் பொருட்களைப் போல் ஏலம் விடப்பட்டார்கள். ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்பது அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின் தாரக மந்திரம் என்றாலும், அமெரிக்க அரசமைப்பும்கூட அடிமை முறைக்கு ஆதரவே அளித்தது. 1865-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் அடிமை முறையை ஒழிக்கும் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தார். தொடர்ந்து, கறுப்பினத்தவருக்கான வாக்குரிமையைப் பற்றி அவர் பேசிவந்ததால் தன் உயிரையும் அவர் பறிகொடுக்க வேண்டியிருந்தது. அங்கிருந்து கறுப்பினப் பின்னணி கொண்ட ஒபாமா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் காலம் வரை எவ்வளவோ மாற்றங்களை அமெரிக்கா கண்டுவிட்டாலும் இன்னும் அவர்கள் கீழே வைத்துப் பார்க்கப்படுவது தொடர்கிறது. அமெரிக்க மக்கள்தொகையில் 12% கறுப்பினத்தவர்கள்; 61% வெள்ளையினத்தவர். ஆனால், காவல் துறையால் கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கையில் வெள்ளையினத்தவரைப் போல மூன்று மடங்கு கறுப்பினத்தவர்கள் கொல்லப்படுகிறார்கள். இது ஒரு பதம்தான்.

அமெரிக்காவின் நிறவெறி தொடர்பில் பேசுகையில், இந்தியாவில் சாதிவெறி தொடர்பில் சிந்தனை செல்கிறது. அமெரிக்காவில் ஒருபுறம் நிறவெறி இன்னும் நீடித்தாலும் மறுபுறம் அதற்கு எதிராக நடக்கும் ஜனநாயகப் போராட்டங்களும், அதற்கான ஊடகங்களின் ஆதரவும், பல்லாயிரக்கணக்கான வெள்ளை இனத்தவரும் அதில் தன்னெழுச்சியாகத் திரள்வதையும் நாம் பார்க்கிறோம். ஆனால், இங்கே சாதிவெறியால் நடத்தப்படும் கொலைகளுக்கான நம்முடைய எதிர்வினை என்ன என்று ஒரு கேள்வி எழுகையில் தலைகுனிவதைத் தவிர நமக்கு வழியில்லை. ஒவ்வொரு உயிருக்குமான முக்கியத்துவமே ஒரு சமூகம் சமத்துவத்தை நோக்கி நடத்தும் பயணத்தில் முக்கியமான உந்துசக்தி. நாமும் அதைப் பெற வேண்டும்.

Wednesday, 20 May 2020

நீண்ட ஆயுளைத்தரும் ஆடாதோடை மூலிகையின் அரிய பயன்கள்!!



மனிதருக்கு வியாதிகள் அணுகாமல் காக்க, இறைவன் அல்லது இயற்கை. மனிதர் வாழும் இடங்களில் பல்வேறு அரிய பலன்கள் அளிக்கவல்ல மூலிகைகளை, படைத்தே வைத்துள்ளது. நம் அருகில் வெகு சாதாரணமாக காணக்கிடைக்கும் குப்பைமேனி, நாயுருவி, போன்ற மாபெரும் சக்திமிக்க மூலிகைகளைப்போன்றே, சாதாரணமாக எங்கும் காணப்படும் மூலிகைதான், சித்தர்களால் காயகற்ப மூலிகை எனப்போற்றப்படும் ஆடாதோடை. மனிதர்களின் உடலில், எந்த வித வியாதிகளும் அணுகாமல், நரை, திரை மற்றும் மூப்பு போன்ற உடல்பிணிகளால் பாதிப்பு அடையாமல், பன்னெடுங்காலம் ஆரோக்கியமாக வாழ வழிசெய்யும் மூலிகைகளே, காயகற்ப மூலிகைகள் ஆகும்

நீண்ட மாவிலை போல பசுமையான இலைகளைக்கொண்ட ஆடாதோடை, வெள்ளை நிறத்தில் பூக்களுடன் விளங்கும். அற்புத மூலிகை. ஆடாதோடை வளருமிடத்தில், அதிக அளவில் கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கி, ஆக்சிஜனை பெருமளவில் வெளியிட்டு, மனிதர்களின் நல்வாழ்வுக்கு துணை செய்யும் தன்மையுடையதாகையால், ஆடாதோடையை "ஆயுள் மூலிகை" என அழைப்பர்.. மனிதர்களின் நோயணுகா வாழ்வுக்கு நல்ல சுவாசமே, தீர்வாகும். நல்ல சுவாசத்திற்கு, நுரையீரலின் செயல்பாடு இன்றியமையாததாகும். நுரையீரல் என்பது மனிதனின் சுவாசம் மூலம் வரும் காற்றிலிருந்து, ஆக்சிஜனை பிரித்து உடலில் பரவவைத்து, கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றும். சீராக இயங்கும் நுரையீரலே, இரத்தத்தை சுத்திகரித்து, மனித உடல் ஆயுளை அதிகரிக்கும் தன்மை வாய்ந்தது. அத்தகைய நுரையீரலில் நெடுநாட்களாக சளி தேங்கி, நுரையீரல் பாதிப்படைவதாலேயே, ஆஸ்துமா, இருமல் உள்ளிட்ட சுவாச பாதிப்புகள் ஏற்பட்டு, உடல் நலம் கெடுகின்றன. அத்தகைய பாதிப்புகளை நீக்கி, நுரையீரலில் தேங்கியுள்ள சளியை அகற்றி, சுவாசத்திற்கு உறுதுணை புரிந்து, நீண்ட ஆயுளை அடையவைக்கும் அற்புத மூலிகை, இந்த ஆடாதோடை மூலிகை. "ஆடாத உடலும் ஆடும், பாடாத வாயும் பாடும்" எனும் சித்தர்களின் வாக்குக்கேற்ப, ஆடாதோடை மூலிகையை முறையாக, உண்டுவர, உடல் நலம் தேறி, மனதில் உற்சாகம் பிறக்கும். கிராமங்களில், வயல் ஓரங்களில் வேலியை காக்கும் செடியாக, ஆடாதோடை அவற்றின் பசுமையான இலைகளை, கசப்புத்தன்மை காரணமாக, கால்நடைகள் உண்ணாததால், அதிக அளவில் பயனாகிறது. சாலையோரங்களில் அதிக அளவில் காணப்படும், ஆடாதொடா செய்லன்சியா எனும் தாவரவியல் பெயர்கொண்ட ஆடாதோடை. இலை, செடிகளின் பட்டை, வேர் மற்றும் இதன் மலர்களும் மருத்துவ குணங்கள் நிரம்பியவை. பொதுவான மருத்துவ குணங்களாக, கோழை எனும் சளியை அகற்றும், வயிற்றில் உள்ள நுண்ணிய புழுக்களை அழிக்கும், சிறுநீரை அதிகரித்து, உடல் வழிகளை போக்கும் தன்மைகள் மிக்கது. ஆடாதோடையில் உள்ள முக்கிய சத்தான வாசிசின், நுரையீரலில் உள்ள செல்களை சரிசெய்து, நுரையீரலின் சுருங்கி விரியும் தன்மையை சீராக்குவதால், ஆஸ்துமா, இருமல் சளி போன்ற சுவாசக்கோளாறுகளை சரியாக்குகிறது. மேலும், ஆடாதொடையில் வைட்டமின் C சத்தும், வாசினால், ஆடாதோடின் மற்றும் கேலக்டோஸ் எனும் வேதிப்பொருள்களும் அதிக அளவில் உள்ளன.


மார்பு வலிகளுக்கு ஆடாதோடை முதலுதவி: உடலில் அதிக சளித்தொல்லைகள் காரணமாக, உடல் தசைகளில் வலி ஏற்படும், அந்த வலிகளைப் போக்க,ஆடாதோடை இலைகளை பொடியாக்கி, நீரில் கலந்து பருகிவர,தசை வலிகள் யாவும் விலகிவிடும். எதிர்பாராத விதமாக மார்பில் அடிபட்டு, அந்த வலியால் வேதனையடையும் நேரங்களில், ஒரு ஆடாதோடை இலையுடன் இரண்டு வெற்றிலைகளை மென்று சாப்பிட, உடனடியாக வலி குறையும், இது ஒரு அரிய முதலுதவியாகும்.

ஆடாதோடை இலை தரும் அற்புத பலன்கள் : ஆடாதோடை இலைகளை நன்கு அலசி, நீரில் காய்ச்சி,மூன்றில் ஒரு பங்காக நீர் சுடும்வரை வைத்திருந்து, பின்னர் தேனுடன் கலந்து பருகிவர, ஜுரம், சளி, இருமல், உடல்வலி மற்றும் ஆஸ்துமா பாதிப்புகளை நீக்கும். இந்த பாதிப்புகள் தீரும்வரை, தினமும் இந்த முறையில் இலைகளை நீரிலிட்டு காய்ச்சி பருகிவரலாம். ஆடாதோடை இலை,தூதுவளை இலைகளை சம அளவு எடுத்து, உலர்த்தி பொடியாக்கி, தினமும் இருவேளை தேனுடன் கலந்து உண்டுவர, சளி பிரச்னைகள் நீங்கி, நுரையீரல் பாதிப்புகள் யாவும் விலகி, இரத்தத்தை சுத்தம் செய்து, நுரையீரலை வலுவாக்கும். இதுவே, மனிதனைக்கொல்லும் கொடிய வியாதியாகக்கருதப்படும் எலும்புருக்கி வியாதிக்கு முதல் மருந்தாகும். முறையாக நாற்பத்தெட்டு நாட்கள் பருகிவர, கொடிய பாதிப்புகள் தரும் T.B என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அந்த காச வியாதி விலகிவிடும். ஆடாதோடை இலைகளுடன்,திப்பிலி,அதிமதுரம்,ஏலக்காய் மற்றும் தாளிசபத்திரி போன்ற மூலிகைகளை கலந்து பருகிவர,நாள்பட்ட இருமல்,இளைப்பு மற்றும் ஜுரம் போன்ற பாதிப்புகள் அகலும். ஆடாதோடை இலைச்சாற்றை வெறுமனே பருகினால், ஒவ்வாமை அல்லது சூட்டினால் உண்டாகும் வயிற்றுபோக்குகள் குணமாகும். ஆடாதோடை இலைச்சாற்றை தேனுடன் கலந்து பருகிவர,இரத்த கொதிப்பு, மஞ்சள் காமாலை போன்ற வியாதிகள் விலகிவிடும். ஆடாதோடை இலைச்சாற்றுடன் தேன் கலந்து அத்துடன் பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டி எனும் பனை வெல்லம் சேர்த்து, தினமும் இரண்டு அல்லது மூன்றுவேளை பருகிவர, சுவாசக் கோளாறுகளால் உண்டாகும் இரத்த வாந்தி, நுரையீரலில் சளி மிகுதியால் உண்டாகும் மூச்சுத்திணறல், வறட்டு இருமல் மற்றும் இரத்தம் கலந்து வரும் சளி போன்ற பாதிப்புகள் விரைவில் நீங்கி, உடல் நலம் சீராகும். இந்த சாற்றை பெரியவர்கள் ஒரு தேக்கரண்டியில் பாதி அளவும், சிறுவர்கள் அதில் பாதி அளவும் பருகிவந்தாலே, வியாதிகள் விலகிவிடும். ஆடாதோடை இலைகள் இரண்டு, வெற்றிலை இரண்டு ஐந்து மிளகு மற்றும் சிறு துண்டு சுக்கு இவற்றை நீரில் இட்டு காய்ச்சி, குடிநீராக அருந்திவந்தால், கடுமையான சளியால் உண்டான உடல் வலிகள் மற்றும் நெஞ்சு சளி பாதிப்புகள் விரைந்து நீங்கிவிடும். ஆடாதோடை இலைச்சாற்றை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, இருநூறு மிலி காய்ச்சிய பாலில் சேர்த்து பருகிவர, உடல் சூட்டினால் உண்டாகும் பேதி எனும் வயிற்றுப்போக்கு மற்றும் இரத்தம் கலந்த வயிற்று போக்கு குணமாகும். உடலில் ஏற்பட்ட விஷப்பாதிப்புகள் அகல, விஷம் முறிய, ஆடாதோடை இலைகள், துளசி இலைகள், குப்பைமேனி இலைகள் இவற்றை கைப்பிடி அளவு எடுத்து, ஐந்தில் ஒரு பங்கு அளவு நீராக சுண்டக்காய்ச்சி பருகவேண்டும். ஆடாதோடை இலைகளை சிவனார் வேம்பு இலைகளுடன் அரைத்து பாதி எலுமிச்சை அளவு உட்கொண்டு பின்னர் சுடுநீர் பருகிவர, உடலின் உள்ளே உள்ள கட்டிகள், தோல் நமைச்சல், சொறி மற்றும் பூச்சிகள் கடிப்பதால் உண்டான விஷங்கள் விலகிவிடும். ஆடாதோடை இலைகளுடன் வேப்பிலை, அரிவாள்மனைப்பூண்டு இலை, சிரியா நங்கை இலை ஆகியவற்றை சம அளவில் அரைத்து, தோலில் உள்ள புண்கள் மீது இட்டுவர, புண்கள் யாவும் தழும்புகள் இன்றி மறைந்துவிடும். இறுக்கமான உள்ளாடைகள் அணிவதால் இடுப்பில் ஏற்படும் புண்களின் பாதிப்புகள் நீங்கி அவற்றின் தழும்புகள் மறைய, ஆடாதோடை இலைகளுடன் குப்பைமேனி இலைகளை கலந்து அரைத்து, இடுப்புப்புண்களின் மீது தடவி வர வேண்டும். ஆடாதோடை இலைகள், காய்கள் இவற்றை கைப்பிடி அளவு எடுத்து அரைத்து, மூன்று டம்ளர் நீரில் ஒரு டம்ளர் நீராக காய்ச்சி, தினமும் இரண்டு வேளை சாப்பிட்டுவர, சரும வியாதிகளான படை, ஊறல், விக்கல், வாந்தி வயிற்றுவலி போன்ற பாதிப்புகள் குணமாகும். ஆடாதோடை இலைகளை காயவைத்து சுருட்டி, புகைத்துவர, சுவாச இரைப்பு வியாதிகள் விலகும். அல்லது ஆடாதோடை இலைபொடியை, ஊமத்தை இலையில் இட்டு சுருட்டி புகை பிடித்துவர, மூச்சுத்திணறல் பாதிப்புகள் அகலும்.

குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் சளித்தொல்லைகள் நீங்க : ஆடாதோடை இலைகளை உலர்த்தி பொடியாக்கி, தினமும் தேனில் கலந்து குழந்தைகளைப் பருகவைத்துவர, குழந்தைகளை அதிகம் பாதிக்கும் இரைப்பு, சளி இருமல் தொல்லைகளை போக்கும். ஆடாதோடை இலைகளில் உள்ள உயிர்ச்சத்தான பச்சையம் குழநதைகளின் நெஞ்சில் உள்ள சளியைக் கரைத்து, நீடித்த இருமல் தொண்டைக்கட்டு போன்ற பாதிப்புகளை சரிசெய்து, குழநதைகளின் உடல்நலனை மேம்படுத்தும். இந்த மருந்தை, ஒரு மண்டலம் எனும் அளவு அதாவது நாற்பத்தெட்டு நாட்கள் தினமும் விடாமல் குழந்தைகள் பருகிவரச் செய்தால், குழந்தைகளுக்கு எப்போதும், இருமல் சளி போன்ற சுவாச பாதிப்புகள் அணுகாது. குழந்தைகளுக்கு நெஞ்சு சளியால் ஏற்படும் இரைப்பை உடனே சரிசெய்ய, ஆடாதோடை இலைகளை மையாக அரைத்து, குழந்தைகளின் நெஞ்சில் தடவிவர, நெஞ்சு சளி உடனே கரைந்து, சுவாசம் சீராகும்.

ஆடாதோடை வேரின் மருத்துவ பலன்கள்: ஆடாதோடை வேருடன் கண்டங்கத்திரி வேர் சேர்த்து காய்ச்சிய நீரில் திப்பிலி சேர்த்து பருகிவர, வறட்டு இருமல் உள்ளிட்ட அனைத்துவகை இருமலும் ஓடிவிடும். இந்தக்கலவையை தேனில் கலந்து தினமும் தொடர்ந்து இரண்டு வேளைகள் சாப்பிட்டுவர, நரம்பு சுருட்டல், சளியினால் ஏற்படும் ஜன்னிக்காய்ச்சல் சுவாச இழுப்பு தசை வலிகள் போன்றவை குணமாகும். ஆடாதோடை வேர், ஆடாதோடை பூ இலை இவற்றை பொடியாக்கி, தினமும் பாலில் கலந்து வருகிவர, உடல் சூட்டினால் உண்டாகும் சுவாச பாதிப்புகள் மற்றும் இரைப்பு இருமல் போன்ற பாதிப்புகள் அகலும். ஆடாதோடை வேரை கைப்பிடி அளவு எடுத்து, ஐந்து டம்ளர் நீரில் இட்டு, ஒரு டம்ளர் அளவுக்கு நீர் வற்றியதும், நிறைமாத கர்ப்பிணிப்பெண்கள் இரு வேளை பருகிவர, பிரசவம் சுலபமாகி, சுகப்பிரசவமாக குழந்தையைப் பெற்றெடுப்பர்.

அனைத்துவகை காய்ச்சல் நீங்க : ஆடாதோடை இலையுடன், துளசி, கோரைக்கிழங்கு, பற்படாகம், விஷ்ணுகிராந்தி, பேய்ப்புடல், சீந்தல் மற்றும் கஞ்சாங்கோரை போன்ற மூலிகைகளை கைப்பிடி அளவு எடுத்து, ஒரு லிட்டர் நீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி, இருநூறு மிலி அளவாக வற்றியதும், அந்த வடிநீரை அரை டம்ளர் அளவு எடுத்து, பருகிவர, அனைத்துவிதமான ஜுரம் எனப்படும் காய்ச்சல்கள் அகலும்.

உடல் வலிகள் நீங்க : உடலில் உண்டாகும் கழுத்துவலி, கை கால் மூட்டு தோள்பட்டை வலி போன்றவை நீங்க, உலர்ந்த ஆடாதோடை இலைகளுடன் மஞ்சள், வசம்பு மற்றும் சுக்கு இவற்றை பொடியாக்கி, தவிட்டுடன் சேர்த்து துணியில் கட்டி, ஒரு சட்டியில் இந்த துணி முடிச்சை வைத்து சூடாக்கி, வலி உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்துவர, வலிகள் நீங்கும். அதிக சளியால் உண்டாகும் தலைவலி தலை பாரம் நீங்க, ஆடாதோடை இலையுடன் அதன் வேர்ப்பட்டை, கண்டங்கத்திரி சேர்த்து பொடித்து காய்ச்சிய நீரில் தேன் அல்லது கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பருகிவர, பாதிப்புகள் நீங்கும். ஆடாதோடை மலரை சட்டியில் இட்டு வதக்கி, கண்களின் மீது வைத்து கட்டிவர, கண்களில் உண்டாகும் வியாதிகள் யாவும் நீங்கிவிடும். இதுபோல எண்ணற்ற நற்பலன்களை மனிதனுக்கு தரும் ஆடாதோடை ஒரு அற்புத மூலிகை மட்டுமல்ல, மனித உடலுக்கு நீடித்த ஆயுள் தரும், ஒரு காயகற்ப மூலிகையுமாகும்.

மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

  பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...