Monday, 14 April 2014

டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடல் பனிப்பாறையில் மோதல்

டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடல் பனிப்பாறையில் மோதிய நாள்: ஏப்ரல் 14, 1912
 
ஆர்எம்எஸ் டைட்டானிக் என்பது ஒரு ஆடம்பர பயணிகள் கப்பல் ஆகும். இது வடஅயர்லாந்தில் பெல்பாஸ்ட் நகரில் உருவானது. 1912 இல் முதன் முதலாகச் சேவைக்கு விடப்பட்டபோது இதுவே உலகின் மிகப்பெரிய பயணிகள் நீராவிக் கப்பலாகும். டைட்டானிக் தனது முதற் பயணத்தை இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து நியூயோர்க் நகரை நோக்கி புதன்கிழமை, ஏப்ரல் 10, 1912 இல் கப்டன் எட்வர்ட் சுமித் தலைமையில் தொடங்கியது.

புறப்படும் போது டைட்டானிக்கின் உந்திகளின் தாக்கம் அருகிலிருந்த நியூயோர்க் என்ற கப்பலை நகர்த்தி டைட்டானிக்குக்கு மிக அருகில் செல்ல வைத்தது. இதனால் அது ஒரு மணி நேரம் தாமதித்தே புறப்பட்டது. ஆங்கிலக் கால்வாயைத் தாண்டியதும் பிரான்சில் சேர்பூர்க்கில் நிறுத்தப்பட்டு கூடுதல் பயணிகள் ஏற்றப்பட்டனர். மீண்டும் அடுத்த நாள் அயர்லாந்து, குயீன்ஸ் டவுன் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டு நியூயார்க்கை நோக்கி 2,240 பயணிகளுடன் செல்லத் தொடங்கியது. டைட்டானிக் மூன்று வகுப்புக்களைக் கொண்டிருந்தது. மூன்றாவது கீழ் வகுப்பில் பொதுவாக அமெரிக்காவில் குடியேறுவதற்காக சென்றவர்களே அதிகமாக இருந்தனர். முதல் வகுப்பில் பல புகழ்பெற்ற கோடீஸ்வரர்கள் சென்றனர்.

ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 14 இல் கடலில் வெப்பநிலை குறைந்து கிட்டத்தட்ட உறைநிலையை அடைந்தது. கடல் மிகவும் அமைதியாக இருந்தது. 1:45 மணிக்கு அமெரிக்கா என்ற கப்பலில் இருந்து டைட்டானிக்குக்கு வழியில் பனிப்பாறைகள் உள்ளதாக செய்தி அனுப்பப்பட்டது. ஆனாலும் இச்செய்தி டைட்டானிக்கை அடையவில்லை.

இரவு 11:40 மணிக்கு பெரும் பனிப்பாறை ஒன்றுடன் டைட்டானிக் மோதியது. கப்பலை மோதாமல் திருப்பும் முயற்சி நிறைவேறவில்லை. கப்பல் முற்றாக நிறுத்தப்பட்டது. கப்பலில் மொத்தம் 20 உயிர் காப்பு படகுகள் இருந்தன. முதலாவது படகு காலை 12:40 க்கு இறக்கப்பட்டது. முதலாம் இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கு படகுகளில் ஏறுவது சுலபமாக இருந்தது. ஆனால் மூன்றாம் வகுப்புப் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

கப்பலில் இருந்து ஆபத்து சமிக்கைகள் பல திசைகளிலும் அனுப்பப்பட்டன. அண்மையில் இருந்த சில கப்பல்கள் செய்திகள் அனுப்பின. ஆனாலும் அவை எதுவும் டைட்டானிக்குக்கு அருகில் வருவதற்கு நேரம் போதவில்லை. சரியாக அதிகாலை 2:20 மணிக்கு கப்பல் முற்றாக மூழ்கியது. மொத்தம் இருந்த 2,223 பேரில், 706 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர். 1,517 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் கடலில் குளிர் தாங்காமையினால் உயிரிழந்தனர்.

டைட்டானிக் கடலில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 1503 பேர் கொல்லப்பட்ட நிகழ்வு அமைதிக் காலத்தில் நடந்த மிகப்பெரும் கடல் அழிவாகக் கருதப்பட்டது. டைட்டானிக் கப்பல் அக்காலத்தில் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு கட்டப்பட்டதாகவும் அது மூழ்கவே முடியாததெனவும் கருதப்பட்டது. இப்படியான ஒரு கப்பல் மூழ்கியது உலகெங்கும் பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணியது.

கப்பலின் சேதமடைந்த பகுதிகளை செப்டம்பர் 1, 1985 இல் ரொபேர்ட் பலார்ட் தலைமையிலான ஆய்வாளர் குழு ஒன்று கண்டு பிடித்தது. டைடானிக் கப்பல் இப்போது கடல் மட்டத்திலிருந்து 12,000 அடி ஆழத்தில் இருக்கின்றது. 

Sunday, 30 March 2014

சவூதி பெண்ணுரிமை போராளிக்கு விருது வழங்கி கவுரவித்த ஒபாமா

சவூதி பெண்ணுரிமை போராளிக்கு விருது வழங்கி கவுரவித்த ஒபாமா



ரியாத்: ஒரு நாள் அரசு முறை பயணமாக நேற்று தலைநகர் ரியாத்தை வந்தடைந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, சவூதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் அல் சவூத்-தை சந்தித்து பேசினார்.

நேற்றிரவு இங்கு ஓய்வெடுத்த ஒபாமா, சவூதியில் குடும்பத்தை சேர்ந்த ஆண்களின் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடிவரும் பெண்ணியக்கவாதி குழுவினரை சந்தித்து பேசினார்.

கடந்த 2005-ம் ஆண்டிலிருந்து சவூதி பெண்களின் மேம்பாட்டுக்காக பாடுபட்டு வரும் பெண்ணுரிமை போராளியான மஹா அல்-முனீஃப்,  இந்த ஆண்டுக்கான அமெரிக்க அரசின் பெண்ணுரிமை போராளி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

இந்த சந்திப்பின்போது அந்த விருதினை மஹாவுக்கு வழங்கிய ஒபாமா, அவரது தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்தினார்.

உலகிலேயே மிக மலிவு விலையில் கஞ்சா கிடைக்கும் முதல் நாடு இந்தியா

உலகிலேயே மிக மலிவு விலையில் கஞ்சா கிடைக்கும் முதல் நாடு இந்தியா

  1. நியூயார்க்:சர்வதேச அளவில் போதைப் பொருட்களின் நடமாட்டம் மற்றும் அவற்றின் விலை விபரம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் உலகிலேயே மிக மலிவு விலையில் கஞ்சா கிடைக்கும் முதல் நாடு இந்தியாதான் என்பது தெரிய வந்துள்ளது.

  2. சராசரியாக 5 ரூபாய் இருந்தால் இந்தியாவுக்குள் ஒரு கிராம் கஞ்சாவை வாங்கிவிட முடியும் என்று அந்த ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

  3. உலகில் உள்ள முக்கிய நாடுகளில் கஞ்சாவின் இன்றைய விலை விபரம்:- 
  4. (கிராம் ஒன்றுக்கான விலை, அமெரிக்க டாலர்களின் மதிப்பில்)

  5. மலிவு விலையில் கிடைக்கும் நாடுகள்:- 

  6. இந்தியா- $0.08, தென்னாப்பிரிக்கா- $0.10, கவுட்டெமலா- $0.20, கென்யா- $0.20, நைஜீரியா- $0.20, பிரேசில்- $0.30, கொலம்பியா- $1.32, டொமினிய குடியரசு- $1.33.
  7.                    
  8. அதிக விலையில் கிடைக்கும் நாடுகள்:- 
  9.                                                                          
  10. ஐக்கிய அரபகம்- $110, புருனே- $73.80, ஜப்பான்- $68.40, சிப்ரஸ்- $39.70, எஸ்டோனியா- $25.15, பின்லாந்து- $23.20, ஆஸ்திரேலியா- $22.90, சிங்கப்பூர்- $22.10.

  11. (இன்றைய நிலவரப்படி, ஒரு டாலர் என்பது சற்றேறக்குறைய 60 ரூபாய்க்கு சமம்)

  12. இதேபோல், கொக்கைன், ஹெராயின், போதை ஊசி மற்றும் போதை மாத்திரை வகைகள், ஒயின், பீர், குளிர் பானங்கள், சிகரெட் மற்றும் துரித உணவு வகைகள் எந்தெந்த நாட்டில் விலை மலிவாகவும், விலை மிகுதியாகவும் கிடைக்கின்றன என்றும் பட்டியலிடப்பட்டுள்ளது.


எகிப்தில் இந்தியா நடத்தும் பிரம்மாண்ட கலாச்சார திருவிழா

எகிப்தில் இந்தியா நடத்தும் பிரம்மாண்ட கலாச்சார திருவிழா


எகிப்தில் தொடர்ந்து அமைதியற்ற சூழ்நிலை நிலவி வரும் நிலையில், இந்தியா மற்றும் எகிப்து நாடுகளுக்கு இடையே இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் அங்கு பாலிவுட் இசைக்குழுவினருடன் இணைந்து பிரம்மாண்ட கலாச்சார திருவிழாவை இந்தியா நடத்த உள்ளது.

“நைல் நதியின் அருகில் இந்தியா” என்ற தலைப்பிலான இந்த கலாச்சார திருவிழா வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 35 க்கும் மேற்பட்ட இந்திய நடனக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.

இதையொட்டி, எகிப்தின் முக்கிய நகரங்களான அலெக்சாண்ட்ரியா, ஹர்காடா மற்றும் லக்சாரில் பாலிவுட் இசைக்குழு பயணம் செய்ய உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசிய எகிப்திற்கான இந்திய தூதர் நவ்தீப் சூரி கூறும்போது, “இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதால் இருநாடுகளுக்கு இடையேயான கலாச்சார புரிதல்கள் பரிமாற்றம் செய்யப்பட்டு நல்லுறவு மேம்படுகிறது” என்றார்.

மத்திய கிழக்கு பகுதியில் மிகப்பெரிய நாடான எகிப்தில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பிரம்மாண்ட விழாவை இந்தியா நடத்துவது குறிப்பிடத்தக்கது.


Saturday, 8 March 2014

இ-பைலிங்: தேர்தல் ஆணையத்தின் புதிய அணுகுமுறை

                                               இ-பைலிங்: தேர்தல் ஆணையத்தின் புதிய அணுகுமுறை
புதுடெல்லி:இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவுடன் தங்களது பெயர், கல்வித் தகுதி, தங்களது சொத்துகள், கடன்கள் மற்றும் தங்கள் மீதுள்ள வழக்குகள் குறித்த தகவல்கள் உள்ளடக்கிய விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் இந்தமுறை தேர்தல் ஆணையம் கூடுதலாக இ-பைலிங் முறையில் தாக்கல் செய்யும்  முறையை வருகின்ற மக்களவை தேர்தலில் அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த முறையில் வேட்பாளர்கள் தங்களை குறித்த தகவல்கள் அடங்கிய அபிடவிட் விண்ணப்பத்தை விண்ணப்பிக்கலாம். ஆனால் இம்முறை கட்டாயமில்லை என்றும் விருப்பம் உள்ளவர்கள் மட்டுமமே இம்முறையை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த புதிய அணுகுமுறை நல்ல பலனை தந்தால்  அடுத்து வரவுள்ள தேர்தல்களில் கட்டாயமாக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

டெல்லியில் 207 அடி உயர கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி

                                          டெல்லியில் 207 அடி உயர கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி
டெல்லியில் 207 அடி உயர கொடிக்கம்பத்தில் மிகப்பெரிய தேசியக் கொடியை, கொடி அறக்கட்டளை நிறுவனர் நவீன் ஜிண்டால் இன்று ஏற்றி வைத்தார்.

நினைவுச்சின்ன கொடிக்கம்பங்கள் அமைக்கும் முறையை கடந்த 2009ல் கொடி அறக்கட்டளை நிறுவனர் நவீன் ஜிண்டால் அறிமுகப்படுத்தினார். 2009-ம் ஆண்டு டிசம்பர் 23ல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கொள்கை முடிவுக்கு பிறகு தேசியக் கொடியை 100 அடிக்கும் மேலான கம்பத்தில் நாள் முழுவதும் பறக்க விட அனுமதி தரப்பட்டது. இதையடுத்து மிகப்பெரிய கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.              

Friday, 7 March 2014

வீரவல்லி சுந்தரம் சம்பத் - இவரைத் தெரியுமா

                                            
$ இந்தியாவின் 18வது தலைமை தேர்தல் ஆணையர். 2009-ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தில் சேர்ந்தார்.
$ தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் பிறந்த இவர், 1973-ம் ஆண்டு ஆந்திரப்பிரதேசத்தில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக சேர்ந்தார்.
$ மாவட்ட ஆட்சியர், கோ-ஆப்ரரேட்டிவ் வங்கி தலைவர், மின் துறை செயலாளர், நிதித்துறை செயலாளர் என ஆந்திரத்திலும், மத்தியிலும் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.
$ உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் 16வது பொதுத்தேர்தல் இவரது தலைமையில் நடக்க இருக்கிறது.
$ இவர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தன்னுடைய 65-வது வயதில் ஓய்வு பெற உள்ளார்.
Keywords: வீரவல்லி சுந்தரம் சம்பத், இவரைத் தெரியுமா, தலைமை தேர்தல் ஆணையர்

மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

  பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...