புதுடெல்லி:இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவுடன் தங்களது பெயர், கல்வித் தகுதி, தங்களது சொத்துகள், கடன்கள் மற்றும் தங்கள் மீதுள்ள வழக்குகள் குறித்த தகவல்கள் உள்ளடக்கிய விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் இந்தமுறை தேர்தல் ஆணையம் கூடுதலாக இ-பைலிங் முறையில் தாக்கல் செய்யும் முறையை வருகின்ற மக்களவை தேர்தலில் அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த முறையில் வேட்பாளர்கள் தங்களை குறித்த தகவல்கள் அடங்கிய அபிடவிட் விண்ணப்பத்தை விண்ணப்பிக்கலாம். ஆனால் இம்முறை கட்டாயமில்லை என்றும் விருப்பம் உள்ளவர்கள் மட்டுமமே இம்முறையை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த புதிய அணுகுமுறை நல்ல பலனை தந்தால் அடுத்து வரவுள்ள தேர்தல்களில் கட்டாயமாக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.