ச மீபத்தில் நடந்துமுடிந்த மக்களவை தேர்தல் வாக்குப் பதிவின்போது, சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் பாமக சாதி வெறி கும்பல், ஒடுக்க பட்ட மக்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்து வீடுகளை அடித்து நொறுக்கியது. இந்து முன்னணியும் பாமகவும் சேர்ந்து சாதிவெறியை தீர்த்துக்கொள்ளும் களமாக தேர்தல் பிரச்சினையை திட்டமிட்டு மாற்றினர். வீடுகளை அடித்து நொறுக்கியதோடு, குழந்தைகள், முதியவர்களை அடித்துள்ளது இந்த கும்பல் பொன்பரப்பி கிராமத்தில் சாதிவெறி வன்முறை : தமிழ்த் தேசியவாதிகள் கள்ள மௌனம். ஒரு காலத்தில் நக்சலைட்டுகளுடன் இருந்து பிரிந்து சென்ற, தமிழரசன் போன்றோர் தனித் தமிழ் நாடு காண்பதற்காக ஆயுதப்போராட்டம் நடத்திய பொன்பரப்பி கிராமத்தில், இந்த சாதிவெறிக் கலவரம் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவமானது, ஆளும் வர்க்கம் மக்களை பிரிப்பதற்கு, ஓட்டரசியல் எந்தளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டியுள்ளது. தேர்தல் முடிந்த பின்னர், பாமக கட்சியை சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு வாக்கள...