2019 புல்வாமா தாக்குதல் என்பது இந்தியாவின், சம்மு காசுமீர், புல்வாமா மாவட்ட அவந்திபோரா பகுதியில் ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், மத்திய சேமக் காவல் படையினர் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது 2019 பிப்ரவரி 14 ஆம் நாள் நடந்த தற்கொலைத் தாக்குதல் ஆகும். இத்தாக்குதலில் 40 பாதுகாப்புப் படையினரும், தற்கொலை தீவிரவாதி ஒருவரும் உயிரிழந்தனர். இத்தாக்குதலுக்கு ஜெய்சு-இ-முகமது என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்றது.
2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியப் பாதுகாப்புப் படையின் மீது பாக்கிஸ்தான் ஆதரவு ஆயுதக்குழுக்களின் தற்கொலைத் தாக்குதல்கள் அதிகரித்தன. 2015 சூலை மாதத்தில் துப்பாக்கி ஏந்திய மூவர் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் பேருந்து மற்றும் காவல் நிலையத்தைத் தாக்கினர். 2016 சனவரியில் துப்பாக்கியுடன் பதான்கோட் வான் படை நிலையத்தில் தாக்குதல் நடந்தது. 2016 பிப்ரவரி மற்றும் ஜீன் காலகட்டத்தில் எட்டு இராணுவத்தினர் பொம்பொரி தாக்குதலில் உயிரிழந்தனர். 2016 செப்டம்பரில் இந்திய இராணுவப் பட்டாளத் தலைமையகத்தில் நிகழ்ந்த யூரி தாக்குதலில் 19 படையினர் உயிரிழந்தனர். 2017 டிசம்பர் 31 இல் லெத்திபோரா கமொண்டோ பயிற்சி நிலையத்தில் நடந்த தாக்குதலில் ஐந்து பாதுகாப்பு அதிகாரிகள் உயிரிழந்தனர்.
2019 பிப்ரவரி 14 ஆம் நாள் 78 பேருந்துகளில் மொத்தம் 2,547 மத்திய சேமக் காவல் படையினர் (சி.ஆர்.பி.எப்) ஸ்ரீநகரிலிருந்து ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலைவழியாக ஜம்மு காஷ்மீர் சென்று கொண்டிருந்தனர். ஜம்முவிலிருந்து கிளம்பிச் செல்லும் வழியில் இந்திய நேரப்படி 15:15 மணியளவில் லெத்திபோரா மற்றும் அவந்திபோரா பகுதிகளுக்கருகே மகேந்திரா ஸ்கார்பியோ வகை சிற்றுந்தொன்று படையினரின் பேருந்து ஒன்றில் மோதி வெடித்தது. இந்தச் சிற்றுந்தில் சுமார் 350 கிலோ எடைகொண்ட வெடிபொருட்கள் இருந்ததாகவும், அதனை அதில் அகமது தார் என்பவர் ஓட்டிவந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தன. இந்தத் தாக்குதலில் 76 ஆவது பட்டலியனைச் சேர்ந்த நாற்பதிற்கும் மேற்பட்ட காவல்படையினர் இறந்ததாகச் செய்திகள் தெரிவித்தன. இத்தாக்குதலை ஏற்படுத்திய அதில் அகமது தார் என்பவர் ககபோரா பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவராவார். இத்தாக்குதலுக்குப் பாக்கிஸ்தானிய ஆயுதக்குழுவான ஜெய்ஸ்-இ-முகமது பொறுப்பேற்று, அதில் அகமத்தின் காணொளியையும் வெளியிட்டது. அந்தக் காணொளியில் “ஒரு வருடத்திற்கு முன்பு, நான் ஜெய்ஷில் இணைந்தேன். நீண்ட காத்திருப்பிற்கு பின்பு இந்த தாக்குதலை நடத்தியுள்ளேன். இந்த வீடியோவை நீங்கள் காணும் போது, நான் சொர்க்கத்தில் மகிழ்ச்சியுடன் இருப்பேன்” என்று கூறியுள்ளார். 1989 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பாதுகாப்புப் படையினர் மீது நிகழ்ந்த கொடூரமான தாக்குதலாக பிபிசி செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பன்னிரண்டு வீரர்களும், ராஜஸ்தானைச் சேர்ந்த ஐந்து வீரர்களும், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த நான்கு வீரர்களும், தமிழ் நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், ஒடிசா மற்றும் பீகார் மாநிலங்களைச் சேர்ந்த தலா இரண்டு வீரர்களும், அஸ்ஸாம், கேரளா, கருநாடகா, மத்தியப் பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் மாநிலங்களைச் சேர்ந்த தலா ஒரு வீரர்களும் இத்தாக்குதலில் இறந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டனர். அதில் தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியைச் சேர்ந்த கணபதி என்பவரது மகன் க. சுப்பிரமணியன்(28) மற்றும் அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சின்னையன் என்பவரது மகன் சி. சிவசந்திரன் என்பவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களாவார்கள்.