சமீபத்தில் நடந்துமுடிந்த மக்களவை தேர்தல் வாக்குப்
பதிவின்போது, சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் பாமக
சாதி வெறி கும்பல், ஒடுக்க பட்ட மக்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்து வீடுகளை அடித்து
நொறுக்கியது.
இந்து முன்னணியும் பாமகவும் சேர்ந்து சாதிவெறியை தீர்த்துக்கொள்ளும் களமாக தேர்தல் பிரச்சினையை திட்டமிட்டு மாற்றினர். வீடுகளை அடித்து நொறுக்கியதோடு, குழந்தைகள், முதியவர்களை அடித்துள்ளது இந்த கும்பல்
பொன்பரப்பி கிராமத்தில் சாதிவெறி வன்முறை : தமிழ்த் தேசியவாதிகள் கள்ள மௌனம்.
ஒரு காலத்தில் நக்சலைட்டுகளுடன் இருந்து பிரிந்து சென்ற, தமிழரசன் போன்றோர் தனித் தமிழ் நாடு காண்பதற்காக ஆயுதப்போராட்டம் நடத்திய பொன்பரப்பி கிராமத்தில், இந்த சாதிவெறிக் கலவரம் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவமானது, ஆளும் வர்க்கம் மக்களை பிரிப்பதற்கு, ஓட்டரசியல் எந்தளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டியுள்ளது.
தேர்தல் முடிந்த பின்னர், பாமக கட்சியை சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு வாக்களித்த மக்களின் வீடுகளை பார்த்து தாக்கியுள்ளனர். இது கட்சி அரசியலும் சாதியவாதமும் எப்படி ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
தமிழின ஒற்றுமையைக் குலைக்கும் இது போன்ற சம்பவங்களை, நாம் தமிழர் போன்ற தீவிர தமிழ்த்தேசியம் பேசும் கட்சிகள் எதுவும் கண்டுகொள்ளவில்லை. இதற்குள் தாம் மட்டுமே தமிழரின் மானம் காப்பதாக அடிக்கும் வாய்ச் சவடால்களுக்கு மட்டும் குறைச்சல் இல்லை. தனக்குள்ளே ஒரு சமூகத்தை சாதியின் பெயரால் ஒடுக்கும் ஓர் இனம் எப்படி விடுதலை பெறும்?
இங்கே வேடிக்கை என்னவெனில், தாக்குதல் நடத்திய சமூகத்தின் கட்சித் தலைவரும், தாக்கப்பட்ட சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சித் தலைவரும், முன்னர் ஒரே மேடையில் தோன்றி தமிழ்த்தேசியம் பேசியவர்கள் தான். புலம்பெயர்ந்த தமிழர்களின் நாடுகளுக்கும் சென்று, பிரபாகரன் படத்தை ஏந்தி, புலிச் சின்னம் பொறித்த சால்வை போர்த்தி, தமிழீழத்தை ஆதரித்து அனல் பறக்க பேசியவர்கள்தான். அன்று அவர்களைக் கூப்பிட்டு பேச்சுக்களை கேட்டு மகிழ்ந்த ஈழத்து புலி ஆதரவாளர் ஒருவர் கூட இந்த சாதிவெறி வன்முறையைக் கண்டிக்கவில்லை.
தமிழினம் தனக்குள் இருக்கும் பிரிவினைகளை பூசி மெழுகி விட்டு, “தமிழர் ஒற்றுமை” பற்றிப் பேசுவதும் இன்னொரு அடக்குமுறைதான்.