Sunday, 28 October 2018

மண்டைக்காடு கலவரம் வரலாறு

மண்டைக்காடு கலவரம் என்பது 1982 ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்துக்களுக்கும் கிறித்தவர்களுக்கும் இடையே மண்டைக்காடு என்னும் இடத்தை மையமாகக் கொண்டு நடந்த கலவரங்களைக் குறிக்கும். இந்தக் கலவரத்தைப் பற்றி விசாரிக்க நீதியரசர் வேணுகோபால் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

மண்டைக்காடு

மண்டைக்காடு கன்னியாகுமரி மாவட்டத்தில் அரபிக்கடல் பகுதியில் அமைந்துள்ள சிற்றூர். இங்கு கிறித்தவர்களும் இந்துக்களும் அருகருகே வாழ்ந்து வருகிறார்கள். மண்டைக்காட்டில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் மாசி கொடை விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். இக்கோயிலின் அருகில் புனித கண்ணாம்பாள் ஆலயம் மற்றும் அதன் குருசடி அமைந்துள்ளது.

கலவரத்திற்கான சூழல்

1980 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மாடதட்டுவிளை என்னும் இடத்தில் இரண்டு இளைஞர்களுக்கு இடையே சிறு சண்டை மூண்டது. இதன் காரணமாக அங்கு வைக்கப்பட்டிருந்த சிலுவை காணாமல் போணதால் ஒரு கொந்தளிப்பான சூழ்நிலை உருவானது. 1982 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், உலக செப வாரம் ஒரு வார காலத்திற்கு அனைத்து கிறித்தவர்களாலும் ஒற்றுமையுடன் கொண்டாடப்பட்டது. அதன் இறுதி நாளன்று கிறித்தவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலுக்கு திங்கள் நகர் வழியாக ஒர் ஊர்வலம் நடத்தினார்கள். அந்த ஊர்வலத்தை வரவேற்கும் விதமாக கிறித்தவ வணிகர் ஒருவர் ஒளிரும் சிலுவை ஒன்றைத் திங்கள் நகரின் மையப்பகுதியில் உள்ள போக்குவரத்து காவலர் நிழற்குடை அமைந்திருக்கும் திடலில் அமைக்கப்பட்டது. அந்த ஊர்வலம் முடிந்த பிறகு அச்சிலுவை அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்து விவசாயி ஒருவர் அவ்விடத்தில் விநாயகர் சதுர்த்திக்காக விநாயகர் சிலையை அமைத்தார் வழிபாடு நடத்த ஆரம்பித்தார். ஐந்து நாட்கள் கழித்து மகா சிவராத்திரி அன்று காவல்துறையினர் கிறித்தவர்களின் எதிர்ப்பின் காரணமாக சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி விநாயகர் சிலையை அகற்றினர். இந்துக்களின் முக்கிய திருவிழாவன்று இச்சிலை அகற்றப்பட்டதால் இந்துக்கள் இடையே கொந்தளிப்பு எற்பட்டது. இந்துக்கள் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். இதனால் இந்து மக்களிடையே ஒற்றுமையும் எழுச்சியும் ஏற்பட்டது. இந்து கிறித்தவ கலவரம் பக்கத்து ஊர்களிலும் பரவியது. கிறித்தவர்கள் குமரிக் கடலில் இருக்கும் விவேகானந்தர் பாறையில் புனித சவேரியார் தியானம் செய்தார் என்று அதன் உரிமையை நிலைநாட்ட முயன்றனர். ஆவணங்களின் படி அப்பாறை கன்னியாகுமரி கோவிலுக்குச் சொந்தமானது. இரு முறை விவேகானந்தர் நூற்றாண்டு கலவெட்டுகளை அகற்றிவிட்டு சிலுவைகளை அதன் மேல் நட்டனர். இந்துக்கள் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிலுவைகளை அகற்றினர். இதனால் கிறித்தவர்கள் விவேகானந்தர் பாறைக்குச் செல்லும் போக்குவரத்தை தடை செய்தனர். இப்படி கிறித்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே வெறுப்புணர்வு வளர்ந்து கொண்டே இருந்தது. இதன் உச்ச கட்டமாக, 1982 பெப்ரவரி 13,14 அன்று நாகர்கோவிலில் இந்துக்கள் ஒன்றினைந்து நடத்திய இந்துக்கள் எழுச்சி மாநாடு கிறித்தவர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

கலவரம்

1982 ம் ஆண்டு மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா வழக்கம் போல் தொடங்கியது. விழாவின் முதல் நாள் கிறித்தவர்கள் இந்து பெண்களைhf கேலி செய்கிறார்கள் என்ற வதந்தி பரவியது. ஏற்கனவே வழிபாட்டுக்கு ஒலிகுழல் கட்டுவது தொடர்பாக சர்ச்சை நிலவி வந்தது. இதன் காரணமாக மார்ச் 1, 1982 அன்று மக்கள் மண்டைக்காடு ஆலயத்தின் முன் கூடினர். இதில் ஏற்பட்ட கலவரத்தில் காவலர்கள் 46 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஆறு பேர் இறந்தனர். கலவரம் கல்லுக்கூட்டம், ஈத்தாமொழி, ராசாக்கமங்கலம், பிள்ளைத்தோப்பு, நாகர்கோவில் முதலிய இடங்களுக்கும் பரவியது. இரண்டு வாரங்கள் கழித்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். கோவளத்தில் நடந்த கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்தக் கலவரத்தில் தேவாலயங்கள், கோயில்கள், மருத்துவமனைகள், மற்றும் பொது சொத்துக்கள் அதிகமாக சேதம் அடைந்தன. இக்கலவரத்தால் கடற்கரையிலுள்ள மீனவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். மீன்பிடி வலைகள் அழிக்கப்பட்டன. அவர்கள் பயன்படுத்திய குடிநீர் கிணறுகளில் டீசல் முதலான நஞ்சு கலக்கப்பட்டது. அவர்களுக்கான உணவுப் பொருட்கள் செல்லும் வழிகள் அடைக்கப்பட்டன.

பொன். ராதாகிருஷ்ணன்

1982-ல் நடந்த மண்டைக்காடு கலவரம் கன்னியாகுமரி மாவட்டத்தையே உலுக்கியது. இந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு சமைக்க வீடு வீடாகச் சென்று அரிசி, பருப்பு, காய்கறிகளைச் சேகரித்தார் ராதாகிருஷ்ணன். செல்வந்தர் குடும்பத்து இளைஞன் தெருவில் இறங்கி அரிசி, பருப்பு சேகரிப்பதைக் கண்டு வியந்த ஆயிரக்கணக்கானோர் அவருடன் இணைந்தனர். இந்தச் சம்பவம் ராதாகிருஷ்ணனின் வாழ்க்கையை மட்டுமல்ல, கன்னியாகுமரி மாவட்ட அரசியலையும் மாற்றியமைத்தது.

Did you know Suo Motu ?

"Suo Motu" is a the term given to the action taken by an authority on its own will. The Judiciary usually takes action once a case or cause is brought before it by a party. For example I file a case against a hospital that they did not admit a case of accident due to which the patient died.
But if suppose the court comes to know about a news report where a hospital is exposed for its illegitimate practice of not admitting emergency patients then the court may take action on its own and call for the management of the hospital to answers as to why they are doing so.
The court usually takes suo motu action in case of gross negligence on part of public authorities and government. Or in case where it thinks that it is necessary to do so.

Suo motu, meaning "on its own motion," is a Latin legal term, approximately equivalent to the term sua sponte. For example, it is used where a government agency specially courts acts on its own cognizance, as in "the Commission took suo motu control over the matter."
  It is a special power of High Courts and the Supreme court of India to initiate a hearing by itself without anybody filing any appeal or writ petition or PIL. When court feels that a matter requires serious and immediate legal intervention, it acts Suo Motu.
      You can hear case titled as "Court on its own motion vs State (Delhi administration)". 
One fine example: Suo Moto contempt proceedings were initiated against Arundhati Roy as she published an article entitled "The Greater Common Good" in Outlook Magazine and the comments made by her were, prima facie, a misrepresentation of the proceedings of the court.

டி.டி.வி.தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது செல்லுமா?, செல்லாதா? என்ற வழக்கின் தீர்ப்பு : செல்லும்

அ.தி.மு.க., எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இயங்கி வருகிறது. டி.டி.வி.தினகரன் தலைமையில் ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ இயங்கி வருகிறது. டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக 18 எம்.எல்.ஏ.க்கள் இருந்தார்கள். இவர்கள் அனைவருமே இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். கடந்த ஆண்டு ஆகஸ்டு 22–ந்தேதி ஜக்கையன் உள்பட 19 எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்தித்து எடப்பாடி பழனிசாமியை முதல்–அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். முதல்–அமைச்சருக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுத்தது பற்றி சபாநாயகர் விளக்கம் கேட்டார். ஜக்கையன் மட்டும் திரும்ப வந்து விளக்கம் கொடுத்து விட்டார். மீதி 18 பேரும் விளக்கம் தராததால் பதவி நீக்கம் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார். 

இந்த நீக்கத்தை எதிர்த்து 18 பேரும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அப்போது தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்கம் செல்லும் என்றும், நீதிபதி சுந்தர் தகுதி நீக்கம் செல்லாது என்றும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த 3–வது நீதிபதி சத்தியநாராயணன், 18 எம்.எல்.ஏ.க்களை நீக்கம் செய்தது செல்லும் என்று நேற்று தீர்ப்பு அளித்தார். ஆக, இன்றைய நிலையில் இந்த 18 பேரும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை இழந்துள்ளனர். அவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. 

தற்போதைய சூழ்நிலையில், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. இப்போதுள்ள கணக்குப்படி, சட்டசபையில் மெஜாரிட்டிக்கு 108 உறுப்பினர்கள் தேவை. ஆனால் அ.தி.மு.க.விடம் 110 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். இதுதவிர, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் இன்னும் எந்தவிதமான முடிவும் எடுக்கவில்லை. இவர்களும், டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோரும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவு தெரிவித்தால் எண்ணிக்கை 116 ஆக உயரும். இப்போது, ஒன்று 18 பேரும் சுப்ரீம்கோர்ட்டில் அப்பீலுக்கு செல்ல வேண்டும். இல்லையென்றால், அப்பீலுக்கு செல்லாமல் தேர்தல் கமி‌ஷன் 18 தொகுதிகளிலும் தேர்தல் நடத்த வழிவிட வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவம் இந்த 18 தொகுதிகளிலும் இல்லாமல் ஒரு ஆண்டுக்கு மேலாகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் பல அடிப்படை பணிகளிலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தகுதிநீக்கம் செய்த 18 பேரும் என்ன முடிவு எடுத்தாலும் அதன் தொடர் நடவடிக்கை விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும். அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீலுக்கு சென்றால் உடனடியாக இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு இறுதி தீர்ப்பு வெளியிடப்பட வேண்டும். இல்லையென்றால், தேர்தல் கமி‌ஷன் இன்னும் தாமதிக்காமல் இந்த 18 தொகுதிகளோடு, ஏற்கனவே காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றத்தையும் சேர்த்து விரைவில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். இரு கட்சிகளுக்கும் இடையேயுள்ள அரசியல் போரினால் இந்த 18 தொகுதிகளிலும் உள்ள மக்கள் பாதிப்பு அடையக்கூடாது. அதுதான் முக்கியம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்

Saturday, 29 September 2018

Rs 5,000 CR bank fraud: Nitin Sandesara, family may have fled to Nigeria

Highlights
  • Vadodara-based Sterling Biotech, its directors Nitin, Chetan and Dipti Sandesara booked by ED and CBI for Rs 5,000 CR bank fraud
  • It is alleged that the Sandesaras set up more than 300 shell and benami companies in India and abroad
  • Family suspected to be in Nigeria, a country that does not have extradition treaty with India
 A month after reports suggested that Nitin Sandesara, owner of Gujarat-based Sterling Biotech + and wanted by the CBI and the ED in a Rs 5,000 crore bank fraud, was detained in Dubai + , it has now emerged that he is not in the UAE and could have fled to Nigeria.



According to top sources in the two agencies, Sandesara and other family members including brother Chetan Sandesara and sister-in-law Diptiben Sandesara were believed to be hiding in Nigeria. India doesn’t not have an extradition treaty or a Mutual Legal Assistance Treaty with Nigeria and bringing them back from the African country would be difficult, sources said.

An officer, who didn’t wish to be named, said, “There were reports that Nitin Sandesara was detained by UAE authorities in Dubai in the second week of August. It was incorrect information. He was never detained in Dubai. He and other family members probably left for Nigeria much before that.”

However, the investigation agencies are planning to send a request to UAE authorities asking them to “provisionally arrest” the Sandesaras if they are seen there. Efforts are also on get Interpol red corner notices issued against the Sandesaras. It is not known if the Sandesaras travelled to Nigeria on Indian passports or some other country’s document.


The CBI and the ED have booked Vadodara-based Sterling Biotech + , its directors Nitin, Chetan and Dipti Sandesara, Rajbhushan Omprakash Dixit, Vilas Joshi, chartered accountant Hemant Hathi, former Andhra Bank director Anup Garg and unidentified persons for cheating banks of Rs 5,000 crore.

Sunday, 19 August 2018

காவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப்போகுது பாரு

- இப்படி பேசும் ஆட்கள் வெறும் முட்டாள்கள் மட்டும் அல்ல அதையும் தாண்டி ஒட்டுமொத்த உயிரினங்களுக்குமே எதிரான ஆட்கள்தான்.

ஆற்று நீர் கடலில் கலப்பது 'வேஸ்ட்' என சிலர் எந்த அடிப்படையில் பேசுறாங்க? மனித சக்தியால் உருவாக்கப்படும் ஒரு பொருளையோ திரவத்தையோ வீணாக்கினால்தான் அது வேஸ்ட். ஆனால் மனித சக்திக்கு தொடர்பில்லாத, இயற்கையால் உருவாக்கப்பட்ட ஆற்று நீரை, அது காலம் காலமாக பயணித்து, கடலில் கலந்ததை தடுத்து மனித தேவைக்கு பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அந்த நீர் முழுவதுமே மனித தேவைக்கானது என சொல்லி அது கடலில் கலப்பது வீண் என சொல்லும் அறியாமைதான் அடுத்த தலைமுறையை அழிக்கப்போகும் விஷ விதை.

இந்தியா என்ற ஒரு நாடு, தமிழ்நாடு என்றவொரு மாநிலம், காவிரியில் கட்டப்பட்டிருக்கும் அணைக்கட்டுகள் என எல்லாமே இந்த ஒரு நூறாண்டுகளுக்குள்தான் இருக்கும்.

ஆனால் காவிரி என்ற ஆறு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வயதை உடையது. குடகு மலையில் பிறந்து கர்நாடக மேட்டுநிலப்பகுதியை தாண்டி, மேட்டூருக்கு கீழே சமவெளிப்பகுதியில் பரந்து விரிந்து வண்டல் மண் டெல்டாவில் ஓடி பூம்புகார் வழியே காலங்காலமாக கடலில் கலந்துவந்தது.

மனித தேவைகளுக்காக காவிரியில் பல அணைகள் கட்டி காவிரி நீர் கடலுக்கு போகும் அளவு தடுக்கப்பட்டது. அதாவது கடல் குடித்துவந்த நீரை மனிதன் தட்டிப்பறித்துக்கொண்டான்.

இயற்கை சுழற்சியை மனிதன் தடுத்தான். ஆறானது கடலில் கலக்கும். நன்னீர் கடலில் கலக்கும்போது கடல் நீரில் உள்ள உப்பின் அளவு மாறுபடாமல் இருக்கும். அது நடக்காதபோது கடல்நீரின் உப்பு அளவு அதிகரிக்கும், கடல்வாழ் தாவரங்கள், மீன்வளங்கள் பாதிக்கப்படும். இயற்கையான சுழற்சி தடைபடுவதால் பருவமழை பெய்யும் காலமும் அளவும் மாறிமாறி வரும். சமயத்தில் மழைப்பொழிவே இருக்காது.

ஒவ்வொரு கடலுக்கும் சில பிரத்யேகமான கடல்வாழ் உயிரினங்கள் உண்டு. தமிழக கடற்பகுதியில் காணப்படும் சில மீன் இனங்கள் அரேபிய வளைகுடாவில் காணப்படாது. அதற்கு காரணம் அந்தந்த கடலில் இருக்கும் உப்பின் அடர்த்தி. கடல் நீர் உப்பின் அடர்த்தியை சீராக வைத்திருக்க உதவுவது அதில் கலக்கும் ஆற்று நீர்.

அதைவிட முக்கியமாக கடற்கரையோட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தில் உப்புநீர் ஊடுருவும்.

சந்தேகம் இருப்பவர்கள் சீனா மஞ்சாளாற்றின் குறுக்கே கட்டிய பிரமாண்டமான அணையையும் அந்த அணையினால் பெருமளவு தண்ணீர் கடலுக்கு போகாததால் மஞ்சாளாற்று கழிமுக பகுதிகளில் கடல்நீர் ஊடுருவி தற்போது புல்பூண்டுக்கூட முளைக்காத பாலைவனமாக மாறிப்போன நிகழ்வையும் தேடிப்படியுங்கள்.

நல்ல நிலங்கள் பாலைவனமாக மாறியதால் அதை சரிசெய்ய சீனா தற்போது கடுமையாக போராடி வருகிறது. தற்போது அணையில் பாதியளவு மட்டுமே தண்ணீரை வைத்துக்கொண்டு மீதியை கடலுக்கே விட்டுவிடுகிறது.

இதே போல நம் முந்தைய தலைமுறையில் நடந்த நிகழ்விலிருந்தும் நாம் பாடம் கற்கவில்லை. ரஷ்யாவின் ஏரல் கடல் என சொல்லப்பட்ட பிரம்மாண்டமான ஏரி மறைந்துபோன கதை தெரியுமா?

'ஏரல் கடல்' நான்கு பக்கமும் நிலத்தால் சூழப்பட்ட இந்த பிரம்மாண்டமான ஏரி ஒரு காலத்தில் (1950க்கு முன்பு) உலகில் உள்ள 4 மிகப்பெரிய ஏரிகள் ஒன்று. இன்று?

முந்தைய வல்லரசான சோவியத் ரஷ்யா இந்த ஏரிக்கு சென்றடையும் ஆறுகளான அமு தர்யா மற்றும் சிர் தர்யா எனும் ஆறுகளை நீர்ப்பாசனத்திற்காக திசை திருப்பியது. இப்போது இந்த ஏரிப்பகுதி மனித வாழ்விடத்திற்கே மிக சிரமான பகுதியாக மாறியிருக்கிறது.

ஏரல் கடலுக்கு ஏற்பட்ட நிலைமை காவிரி பாயும் கடற்கரையோர மாவட்டங்களுக்கு ஏற்பட இதேபோன்று யோசித்தாலே போதும் 'காவிரி நீர் வீணாக கடலில் கலக்கிறது'என.

காவிரி நீர் என்பது கர்நாடக தமிழக மக்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. அது ஒட்டுமொத்த இயற்கைக்குமானது. நாமும் இயற்கையின் ஒரு அங்கம். நாம் மட்டுமே அதை சொந்தமாக்கிக்கொள்ளும்போது இயற்கையின் தொடர் சங்கிலியை நாம் உடைக்கிறோம். இயற்கை சங்கிலியில் ஒரு கன்னி விடுபடும்போது ஒட்டுமொத்த சங்கிலி அமைப்புமே சிதைந்துவிடும் என நமக்கு புரிவதில்லை.

மனித தேவை, மனிதனின் சுயநலம் இது இரண்டு மட்டும் காலம் காலமாக இயற்கையின் கட்டமைப்புகளை சிதைத்து வந்திருக்கிறது. இதனால் கடைசியாக பாதிக்கப்படபோவது நாம்தான்.

நேரம் இருப்பவர்கள் 'ஈஸ்டர் தீவு' பற்றியும் அங்கிருக்கும் 'ராப்பா நூயி' சிலைகளை பற்றியும் படியுங்கள். மனிதனின் வெட்டி கௌரவத்தால் அங்கிருந்த மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட கடைசியில் ஒரு மரம்கூட இல்லாத அந்த தீவில் படகு செய்து மீன்பிடித்து உயிர்வாழவோ, படகு செய்து தீவை விட்டு தப்பியோடவோ ஒரு மரம் இல்லாததால் ஒட்டுமொத்த மனித இனமே அந்த தீவில் அழிந்துபோனது. ஈஸ்டர் தீவிற்கு மரம் என்றால் நமக்கு ஆறுகள்.

காவிரி டெல்டாவின் நில அமைப்பு பற்றி தெரியாதவர்கள்தான் நிறைய உளறுகிறார்கள். கர்நாடகாவில் 3 அணைகள் இருக்கிறதே நம்மிடம் மேட்டூர் அணை மட்டும்தான் இருக்கிறதே என்ற புரிதல் இல்லாத உளறல்தான் அது.

முதலில் ஒரு அணையை கட்ட எந்த மாதிரியான நில அமைப்பு இருக்க வேண்டும் என யோசித்தாலே இதற்கான பதில் கிடைத்திருக்கும்.

பொதுவாக அணைகள் மேட்டுப்பாங்கான நிலத்தில் மலைக்குன்றுகளுக்கு இடையில்தான் கட்டப்படும். கர்நாடகாவிலிருக்கும் 3 அணைகளும் நம் மேட்டூர் (மேட்டூர் - பெயரிலேயே அர்த்தம் இருக்கே?) அணையும் அப்படி கட்டப்பட்டதுதான்.

மேட்டூருக்கு கீழே அதுபோன்ற அணைகள் கட்டக்கூடிய நில அமைப்பு கிடையாது. திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகப்பட்டிணம் போன்றவை சமவெளிப்பகுதிகள். சமவெளியில் அணைகளை கட்டமுடியாது. ஏரி, குளங்களைதான் அமைக்க முடியும். அதனால்தான் நம் முன்னோர்கள் நிறைய ஏரி, குளங்களை காவிரி டெல்டா பகுதியில் வெட்டினார்கள்.

சிலர் வந்து காவிரி டெல்டாவில் கல்லணை கட்டப்படவில்லையா என கேட்கலாம். கேட்பவர்கள் நிச்சயம் கல்லணையை முன்பின் பார்த்திருக்காதவர்களாகத்தான் இருப்பார்கள். கல்லணை என்பது டி.எம்.சி கணக்கில் தண்ணீரை தேக்கி வைத்து தேவைப்படும்போது பயன்படுத்தும் அணை கிடையாது. காவிரியில் வரும் நீரை தடுத்து உள்ளாறு(கொள்ளிடம்), காவிரி , வெண்ணாறு, புது ஆறு என 4 ஆகப் பிரித்து அனுப்பும் பிரம்மாண்டமான மதகுதான் கல்லணை.

அக்காலத்தில் காவிரியில் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்திலிருந்து பயிர்களை பாதுகாக்க கட்டப்பட்டதுதான் கல்லணை. காவிரியில் வெள்ளம் வரும்போது அது கொள்ளிடத்தில் திருப்பிவிடப்படும். கொள்ளிடம் வெள்ள நீர் எவ்வளவு போனாலும் தாங்கும். அந்த வெள்ளநீரை பயன்படுத்திக்கொள்ள வெட்டப்பட்டதுதான் கடலூர் மாவட்டத்திலிருக்கும் வீராணம் ஏரி.

காவிரியில் கர்நாடகா கட்டியிருக்கும் 3 அணைகளின் மொத்த கொள்ளளவு 112 டி.எம்.சி. தமிழ்நாட்டிலிருக்கும் மேட்டூர் அணையின் கொள்ளளவு மட்டுமே 93 டி.எம்.சி.

நமக்கு மேட்டூர் அணை மட்டுமே போதும். ஏனென்றால் மேட்டூர் அணை முழுமையாக நிரம்புவதற்கான தண்ணீரே நமக்கு கிடைப்பதில்லை. மேட்டூர் அணை கட்டப்பட்ட காலத்திலிருந்து (1934) தற்போதுவரை வெறும் 33 முறை மட்டுமே அணையின் முழு கொள்ளளவான 120 அடிவரை நீர் நிரம்பியிருக்கிறது.

நாம் செய்யவேண்டியது இருக்கக்கூடிய நீர்நிலைகளை பாதுகாத்து ஏரி, குளங்களில் தண்ணீரை தேக்கி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டியது மட்டும்தான். மழைநீர்தான் நமக்கான நீர், ஆற்றுநீர் நமக்கும் கடலுக்குமான நீர்.

இனி யாராவது ஆற்றுநீர் வீணாகப்போய் கடலில் கலக்கிறதே என சொன்னால் அவர்களின் அறியாமையை நினைத்து பரிதாபப்படுங்கள்....

Saturday, 28 July 2018

பூலான் தேவி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பூலான் தேவி (Phoolan Devi, Aug 10, 1963 - Jul 25, 2001), கொள்ளையரசி அல்லது பேண்டிட் குயின் என்று பலராலும் அழைக்கப்படும் இந்தியாவின் பிரபலக் கொள்ளைக்காரியும் பின்னாளில் அரசியல்வாதியுமாக இவர் அறியப்படுகிறார்.

பூலான்தேவி உத்தரபிரதேச மாநிலத்தில் ஜலான் மாவட்டத்தில் இருக்கும் ஜோர்கி கபர்வா என்ற கிராமத்தில் பிறந்தாள். மல்லாஸ் எனப்படும் மிகவும் ஒடுஇக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவள். தந்தை பெயர் தேவிதீன்; தாயார் பெயர் மூலா. ஏழையான இவர்களின் குடும்பம் படகோட்டி பிழைத்து வந்தது. பூலான்தேவிக்கு 4 சகோதரிகள். 11 வயதில் பூலான் தேவிக்கு திருமணம் நடந்தது. கணவன் பெயர் புட்டிலால். பூலான்தேவியை விட 20 வயதுக்கு மூத்தவன். ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்தவன்.
திருமணம் ஆன பெண், வயது வரும் வரை பெற்றோர் கண்காணிப்பில் இருப்பது வழக்கம். அதன்படியே முதலில் பூலான்தேவி தாய் வீட்டில் இருந்தாள். ஆனால் கணவனோ அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டான். அவளை பலாத்காரம் செய்தான். இப்படி பல முறை தொல்லைகளுக்கு ஆளானாள். முடிவில் பெற்றோர் வீட்டில் குடிபுகுந்தாள். இதனால் பூலான்தேவியை கைவிட்டு புட்டிலால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டான். சிறிது காலம் பெற்றோர் வீட்டில் மகிழ்ச்சியாக இருந்த பூலான்தேவிக்கு அங்கும் நிம்மதி பறிபோனது.

பிறப்பும் இளமையும்

பூலான்தேவி உத்தரபிரதேச மாநிலத்தில் ஜலான் மாவட்டத்தில் இருக்கும் ஜோர்கி கபர்வா என்ற கிராமத்தில் பிறந்தாள். மல்லாஸ் எனப்படும் மிகவும் ஒடுஇக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவள். தந்தை பெயர் தேவிதீன்; தாயார் பெயர் மூலா. ஏழையான இவர்களின் குடும்பம் படகோட்டி பிழைத்து வந்தது. பூலான்தேவிக்கு 4 சகோதரிகள். 11 வயதில் பூலான் தேவிக்கு திருமணம் நடந்தது. கணவன் பெயர் புட்டிலால். பூலான்தேவியை விட 20 வயதுக்கு மூத்தவன். ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்தவன்.
திருமணம் ஆன பெண், வயது வரும் வரை பெற்றோர் கண்காணிப்பில் இருப்பது வழக்கம். அதன்படியே முதலில் பூலான்தேவி தாய் வீட்டில் இருந்தாள். ஆனால் கணவனோ அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டான். அவளை பலாத்காரம் செய்தான். இப்படி பல முறை தொல்லைகளுக்கு ஆளானாள். முடிவில் பெற்றோர் வீட்டில் குடிபுகுந்தாள். இதனால் பூலான்தேவியை கைவிட்டு புட்டிலால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டான். சிறிது காலம் பெற்றோர் வீட்டில் மகிழ்ச்சியாக இருந்த பூலான்தேவிக்கு அங்கும் நிம்மதி பறிபோனது.

சம்பல் கொள்ளைக்காரி

இவர் உத்தரப்பிரதேசத்தின் தாழ்த்தப்பட்ட மல்லா இனப்பிரிவைச்சார்ந்தவர். அவ்வூரில் உயர்சாதிப்பிரிவினர்க்கும் தாழ்த்தப்பட்ட சாதிப்பிரிவினர்க்கும் நிகழ்ந்த இனவெறியர்களின் இன வேற்றுமை காராணமாகவும், அவர்களின் இழி செயல்களினாலும் கொள்ளைக்காரியாக மாறினார்.
பூலான்தேவியின் உறவினரான (மாமா) மையாதீன் என்பவன் பல வழிகளிலும் தொல்லை கொடுத்து வந்தான். ஒருநாள் அந்த கிராமத்தின் பணக்கார வகுப்பினர் பூலான் தேவியின் கற்பை அவளது பெற்றோர்கள் எதிரிலேயே சூறையாடினார்கள். வாழ்க்கையில் வெறுப்படைந்த பூலான் தேவி தனது சகோதரிகளுடன் ஊரைவிட்டே ஓடினாள்.
அவளுடைய பெற்றோரை காவலர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனாலும் மாமன், பழி தீர்க்கும் படலத்தை கைவிடவில்லை. கொள்ளைக்காரர்களுடன் பூலான்தேவிக்கு தொடர்பு இருப்பதாக கிராம மக்களை தூண்டிவிட்டு புகார் செய்தான். இதனால் காவல் பிடியில் பூலான்தேவி சிக்கினாள். சட்டம், நீதியை பாதுகாக்க வேண்டியகாவல் துறையினர் பூலான்தேவியிடம் நெறிமுறை தவறி நடந்தனர். கற்புக்கு மீண்டும் களங்கம் விளைவித்தனர். இப்படி பூலான்தேவியின் இளம் வயதில் இருந்த வறுமை, பசி, பட்டினி, பலாத்காரம், காவல் அடக்கு முறை போன்றவை மீண்டும் மீண்டும் தலைதூக்கின. எனவே இவற்றையெல்லாம் எதிர்த்து போராடவேண்டும் என்ற துணிச்சலை உள்ளத்தில் சவாலாக ஏற்றாள்.

பாலியல் கொடுமை

பூலான்தேவி மீதான வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. 15 வயதில் கொடூர தாக்குதல்களுக்கு அவள் ஆளாகி இருப்பதை உணர்ந்த நீதிபதி கருணை காட்டி அவளை விடுவிக்க உத்தரவிட்டார். ஓராண்டுக்குப் பின் திடீரென்று ஒருநாள் பாபு குஜார்சிங் என்ற கொள்ளைக்காரன் பூலான்தேவியை கடத்திச்சென்றான். அந்த கொள்ளைக் கும்பலில் இருந்தபோதுதான் பூலான்தேவி குதிரை ஏற்றம் மற்றும் துப்பாக்கியால் குறி தவறாமல் சுடும் பயிற்சியை பெற்றாள்.

சம்பல் கொள்ளைக் காரி

அந்த கொள்ளை கும்பலில் இருந்த விக்ரம்மல்லா என்பவன் அவளுக்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தான். அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. கொள்ளை கும்பல் தலைவன் பாபு குஜர்சிங் கொல்லப்பட்டான். விக்ரம் கொள்ளைக்கூட்டத்துக்கு தலைவனாகி பூலான்தேவியை திருமணம் செய்தான். இந்த சந்தர்ப்பத்தில் பூலான்தேவி தன்னுடைய முதல் கணவன் புட்டிலாலை சந்தித்து பிரம்பால் அவனை அடித்து தனது ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டாள். இவரை ஒரு கிராமமே வரிசையில் நின்று பாலியல் கொடுமைப்படுத்தியது. துப்பாக்கிசுடுவதில் கொள்ளைக் கூட்டத்தாரிடம் பயிற்சிப் பெற்ற இவர் கொள்ளைக்காரியாக மிகுந்த ஆரவாரத்துடன இந்தியாவில் சம்பல் பள்ளத்தாக்கில் கொள்ளைக்கூட்டத் தலைவியாக வலம் வந்தவர். இதனால் சம்பல் கொள்ளைக்காரி என்று அழைக்கப்பட்டார். விக்ரம்மல்லா உதவியோடு தனக்கு தீங்கு செய்தவர்களை ஒருவர் பின் ஒருவராக தீர்த்து கட்டினாள். ஆனாலும் அவளுடைய ஆத்திரம் தணியவில்லை.
இந்த நிலையில் 1980_ம் ஆண்டு ஆகஸ்டு 13_ந்தேதி கொள்ளை கோஷ்டிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் விக்ரம் மல்லா கொல்லப்பட்டான். இதனால் பூலான்தேவி மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டாள். தாகூர் வகுப்பைச் சேர்ந்த சிலர் பூலான்தேவியை சிறை பிடித்து சென்றனர். அவளது கற்பை சூறையாடினார்கள். பிறகு கிராமவாசிகள் உதவியுடன் காட்டுக்குள் தப்பித்துச் சென்றாள், பூலான்தேவி.
விக்ரம் மல்லாவை கொன்றவர்களை பழிக்குப்பழி வாங்க துடித்த பூலான்தேவி, மான்சிங் என்ற கொள்ளைக்காரனுடன் இணைந்து ஒரு புதிய கொள்ளைக் கூட்டத்தை உருவாக்கினாள். 1981_ம் ஆண்டு பிப்ரவரி 14_ந்தேதி வடக்கு டெல்லி அருகேயுள்ள பிக்மாய் என்ற கிராமத்துக்கு தனது கொள்ளை கோஷ்டியுடன் சென்றாள். விக்ரம் மல்லாவை கொன்றவர்களுக்கு அந்த கிராமவாசிகள் தஞ்சம் அளித்தனர் என்று குற்றம் சாட்டினாள். அந்த கிராம மக்கள் "எங்களுக்கு எதுவுமே தெரியாது" என்று எவ்வளவோ கெஞ்சியும் பூலான்தேவி அந்த கிராமவாசிகளை வரிசையில் நிற்க வைத்தாள். குருவியை சுடுவதுபோல் சுட்டாள். அதில் 22 பேர் துடிதுடித்து செத்தார்கள். 8 பேர் கை_கால்களை இழந்தார்கள்.
இந்த கொலை சம்பவம் இந்தியா முழுவதையும் உலுக்கியது. பூலான்தேவியை பற்றிய செய்தி நாடு முழுவதும் பரவியது. அது மட்டுமல்ல உத்தரபிரதேச அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. உத்தரபிரதேச முதல் மந்திரியாக இருந்த வி.பி.சிங் 1982_ல் பதவியை ராஜினாமா செய்தார். உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய இரு மாநில போலீஸ் படைகளும் உஷார் படுத்தப்பட்டன. காடுகளில் புகுந்து பூலான்தேவியை வேட்டையாடினார்கள். ஆனாலும் அவள் சிக்கவில்லை.
பூலான்தேவியை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வந்தால் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. போலீஸ் கண்ணில் படாமல் திரிந்த பூலான்தேவி அப்போதும் தனது எதிரிகளை தீர்த்துக்கட்டியபடியே இருந்தாள். நேபாளத்துக்கு அவள் தப்பி ஓடிவிட்டதாக பேசப்பட்டது. ஆனாலும் கொஞ்ச நாளிலேயே அவள் உ.பி.க்குள் திரும்பினாள்.1982_ம் ஆண்டு டிசம்பரில் ஜலான் மாவட்டத்தை சேர்ந்த 3 மிராசுதாரர்களை கடத்திச்சென்றாள். இதுவே அவள் கடைசியாக அரங்கேற்றிய தாக்குதலாகும்.

கைதும் விடுதலையும்

பல கொலை, கொள்ளைகளில் ஈடுபட்ட பூலான்தேவி, 1983_ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12_ந்தேதி மத்தியபிரதேசத்தில் அப்போதைய முதல்_மந்திரி அர்ஜூன்சிங் முன்னிலையில் சரண் அடைந்தாள். முதலில் குவாலியர் ஜெயிலில் பூலான்தேவி அடைக்கப்பட்டாள். பின்னர் புற்று நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக டெல்லி திகார் ஜெயிலுக்கு மாற்றப்பட்டாள். 11 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயில் தண்டனை அனுபவித்ததும் வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டு வந்ததால் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று பூலான்தேவி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்து இருந்தாள். இதற்கிடையில் உத்தரபிரதேசத்தில் பதவி ஏற்ற முலாயம்சிங் யாதவ் தலைமையிலான கூட்டணி அரசு, பூலான்தேவிக்கு எதிரான வழக்குகளைத் திரும்பப் பெற்றது. மத்தியபிரதேச மாநிலத்திலும் அவள் சம்பந்தப்பட்ட வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை. இந்த சூழ்நிலையில் பூலான் தேவியை பிணையத்தில் விடுதலை செய்து உச்ச நீதிமன்ற கோர்ட்டு நீதிபதிகள் 18_2_1994 அன்று உத்தரவிட்டனர். விடுதலையாகும் பூலான் தேவிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டு இருந்தனர்.

மக்களவை உறுப்பினர்

கொள்ளைக்காரியாக இருந்து மனம் திருந்தி சரண் அடைந்த பூலான்தேவி, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, 2 முறை "எம்.பி" ஆனார். 1991_ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அந்த சமயத்தில் பூலான்தேவி சிறையில் இருந்தார். என்றாலும் சிறையில் இருந்தபடியே டெல்லி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார்.
நடிகர் ராஜேஷ் கன்னாவை (காங்.) எதிர்த்து நின்றார். ஆனால் பூலான் தேவிக்கு வெற்றிக்கனி கிட்டவில்லை. தோல்வி அடைந்தார். இருப்பினும் அரசியல் மீது அவருக்கு ஒரு கண் இருந்தது. 1994_ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறையில் இருந்து விடுதலை ஆனார். 1994_ம் ஆண்டு ஜுலை மாதம் 5_ந்தேதி உமத்சிங் என்பவரை பூலான்தேவி திருமணம் செய்து இல்லற வாழ்வில் நுழைந்தார்.
சமூக சேவையில் அவருக்கு அதிக ஆர்வம் உண்டாகியது. இதனால் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக ஒரு சேவை அமைப்பை தொடங்கினார். பின்னர் முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார். 1996_ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் உள்ள மிர்சா பூர் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தார். பழைய வழக்குகள் பூலான் தேவிக்கு தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தன. கோர்ட்டு படிக்கட்டுகளில் ஏறி இறங்க வேண்டியது இருந்தது. இதற்காக பாராளுமன்றம் முன்பு தர்ணா நடத்தினார். பிறகு 1999_ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் அதே மிர்சாபூர் தொகுதியில் 2_வது முறையாக நின்று அபார வெற்றி பெற்றார்.
பூலான்தேவி 2,90,849 ஓட்டுகளும், அவரை எதிர்த்த பா.ஜனதா வேட்பாளருக்கு 84,476 ஓட்டுகளும் கிடைத்தன. அதாவது, பூலான்தேவி சுமார் 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்தார். "நான் பூலான்தேவி" என்ற தலைப்பில் தனது வாழ்க்கை வரலாறு பற்றிய சுய சரிதையை பூலான்தேவி எழுதினார்.
"பாண்டிட் குயின்" சினிமா படம் வெளிவந்தபிறகு சர்வதேச அளவில் பேசப்பட்டார்.

படுகொலை

2001 சூலை 25 இல், பூலான் தேவி புதுதில்லியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து மகிழுந்தில் ஏறிப் புறப்படும் போது முகமூடி அணிந்த மூவரால் சுடப்பட்டு இறந்தார். அவரது தலையில் மூன்று தடவைகளும், உடம்பில் இரண்டு தடவைகளும் சுடப்பட்டன. சுட்டவர்கள் மாருதி வாகனத்தில் ஏறித் தப்பிச் சென்றனர். உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டாலும், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுத் தேடப்பட்டு வந்த சேர் சிங் ராணா என்பவர் பின்னர் காவல் துறையினரிடம் சரணடைந்தார். பெக்மாய் படுகொலைகளில் பூலான் தேவி உயர் வகுப்பைச் சேர்ந்த நபர்களைக் கொலை செய்தமைக்காக பழி வாங்கவே தாம் கொலை செய்ததாக ராணா கூறினார். இது தொடர்பான வழக்கில் ராணா குற்றவாளியாகக் காணப்பட்டதை அடுத்து அவருக்கு 2014
ஆகத்து 14 இல் நீதிமன்றம் ஆயுள்தண்டனையும், அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது.


பூலான் தேவி 

உ.பி.மாநிலத்தைச் சேர்ந்த பயங்கர கொள்ளைக்காரி பூலான் தேவி. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பூலான் தேவி, உ.பி. மாநில உயர்ஜாதிக்காரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர். மல்லா வகுப்பைச் சேர்ந்த பூலான் தேவிக்கு, உயர் ஜாதிக்காரர்களான தாகூர் இனத்தவர்கள் மீது மிகக் கடும் கோபம் இருந்தது. சிறு வயது முதல் உயர் ஜாதிக்காரர்களால் வேட்டையாடப்பட்டதால் பூலான் தேவிக்கு அந்த வெறி வந்தது. கொள்ளைக்காரியாக அவர் இருந்தபோது, 1981ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி உ.பி.மாநிலம் பெஹமாய் கிராமத்திற்கு அவரும், அவரது கும்பலும் சென்றனர். அங்கிருந்த தாக்கூர் இனத்து ஆண்களை வரிசையாக நிற்க வைத்து சரமாரியாக சுட்டனர். இதில் 22 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் அப்போது நாட்டையே உலுக்கியது. பயங்கர கொள்ளைக்காரியாக அப்போதுதான் பூலான் தேவியை நாடு உணர்ந்தது. இந்த சம்பவத்தால், அப்போது உ.பி. முதல்வராக இருந்த வி.பி.சிங், இச்சம்பவத்தைத் தொடர்ந்து பதவி விலகினார். பெஹமாய் கிராமத்தில் வைத்துதான் பூலான்தேவியை தாக்கூர் இனத்தைச் சேர்ந்த பயங்கர கொள்ளைக்காரனான ஸ்ரீராம் தாக்கூர் என்பவன் (இவனது கும்பலில்தான் பூலான் தேவி முன்பு இருந்தார்) கொடூரமாக பலமுறை கற்பழித்தான். அவன் மட்டுமல்லாமல் அவனது கும்பலில் இருந்தவர்களும் பூலான் தேவியை பல நாட்கள் வைத்துக் கற்பழித்தனர். இதற்குப் பழிவாங்கவே 22 பேரை சுட்டுக் கொலை செய்தார் பூலான் தேவி. பின்னர் பூலான் தேவி போலீஸில் சரணடைந்தார். சிறைத் தண்டனையை அனுபவித்தார். அரசியலிலும் புகுந்தார். சமாஜ்வாடிக் கட்சி சார்பில் எம்.பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த சமயத்தில்தான் 2001ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி டெல்லியில் வைத்து பூலான்தேவி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலைதொடர்பாக ஷெர் சிங் ரானா, தீரஜ் ரானா, ராஜ்பீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு கடந்த 9 வருடங்களாக நடந்து வருகிறது. இந்த வழக்கில் 170வது சாட்சியாக உள்ள விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் சுரேஷ் கெளசிக் டெல்லி கோர்ட்டில் சாட்சியம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், பெஹமாய் சம்பவத்திற்குப் பழிவாங்கும் வகையிலேயே பூலான் தேவியை தான் சுட்டுக் கொன்றதாக ஷெர் சிங் ரானா, வாக்குமூலம் அளித்துள்ளான். பூலான் தேவியைக் கொல்வதன் மூலம் தனது சமூகத்தில் தனக்கு ஹீரோ அந்தஸ்து கிடைக்கும், தாக்கூர் இனத்தவர்களின் தலைவனாகி விடலாம் என்பது அவனது திட்டம் என்று கூறியுள்ளார்.

Wednesday, 27 June 2018

Eight-lane Salem-Chennai green corridor: The land acquisition conundrum


How green was my valley: Revenue officials survey land for acquisition along the proposed Salem-Chennai green corridor at Manjavadikanavai village in Salem district.


Opposition to the eight-lane Salem-Chennai green corridor has seen the State government come down hard on protesters. While the administration, after rolling out a compensatory package, claims that only a section of landowners is actually protesting and that it is ready to address all grievances, tensions on the ground continue to mount by the day.

The tension in the air is palpable when one steps into any of the villages in Salem district, where a survey for acquiring land for the Salem-Chennai green corridor is on.
Black flags flutter in the air, symbolising the resistance to the acquisition. Angry farmers are adamant that they will not allow decades of toil to come to nought.
The defiance, coming soon after Thoothukudi erupted over the Sterlite Copper plant, is another thorn in Chief Minister Edappadi Palaniswami’s side, especially since Salem is his home district, and at stake are two Central government-funded projects — the green corridor and the expansion of Salem airport. Land acquisition for both projects has run into stiff resistance.
The Union Ministry for Road Transport and Highways has sanctioned the eight-lane expressway at a cost of ₹10,000 crore. The Kamalapuram airport, on the outskirts of Salem, is to be expanded by acquiring 570 acres of land.
The 277.3-km eight-lane expressway, which will begin inAriyanur in Salem and end in Vandalur, near Chennai, will pass through the districts of Salem (36.3 km), Dharmapuri (56 km), Krishnagiri (two km), Tiruvannamalai (123.9 km) and Kancheepuram (59.1 km). When the expressway is opened to traffic, the travel time between Salem and Chennai will be reduced to three hours. It takes six hours now, through three existing circuitous routes.
What started as a minor protest by farmers has turned into a full-blown movement, with the arrest of farmers, activists and political cadre. Initially limited to landowners, the protest is now seeing the involvement of political leaders, as well. The Dravida Munnetra Kazhagam and the Communist Party of India have announced protests. Human rights activists are planning a fact-finding mission on alleged police excesses against landowners and protesters.
While farmers argue that the 37-km stretch from Ariyanur to Manjuwadi Pass on the Dharmapuri district border — a lush belt of coconut and arecanut farms, paddy and horticulture fields — will be adversely impacted once the project gets under way, the State government’s view is that a small group of farmers is being instigated by social activists and Opposition parties.

Dharmapuri wary

In picturesque Irulapatty village in Dharmapuri district, Chandra Kumar, an organic farmer and Siddha practitioner, stands to lose three acres, his Siddha shed, as well as his house. The proposed highway will cut through the middle of his land, leaving 1,000 areca trees on one side and a well on the other. Once the access-controlled highway is built, Chandra Kumar wonders how he will bring water to his farm from the other side. Farmers have already been told that no two-wheelers, carts or livestock will be allowed on the highway. Even before explaining the salient features of the project and announcing the compensation package for acquired land, the Salem district administration published the notification announcing its intention to take over about 1,400 survey numbers along the given stretch, which included private, patta, government poromboke and forest lands.
A large number of people complain that the police are camping at the villages. The official machinery seems to have adopted a zero-tolerance approach towards those critical of the eight-lane project, a few villagers say, accusing the police of threatening people who question the need for the project.
K. Balakrishnan, State secretary of the Communist Party of India (Marxist), said it was an “emergency-like” situation at the villages along the project route. Cases have been registered against those who organised meetings of farmers to coordinate the struggle and those who led the protests against the survey. Some people have been arrested.
M.K. Selvaraj, district secretary of the Tamil Nadu Vivasayigal Sangam, affiliated to the CPI, said the deployment of the police was meant to intimidate people. “This is undemocratic and will prove counter-productive,” he said, and demanded that the government give it up.
The government’s response has been in the form of an assertion by the Chief Minister that the expressway will bring development to the State.
Prominent among those arrested for speaking against the project are actor Mansoor Ali Khan, environmental activist Piyush Manush and student activist M. Valarmathi. The police have also registered a case against Seeman, founder of the Naam Tamizhar Katchi.
S. Balaramam, deputy president, Tamil Nadu Vivasayigal Sangam, Tiruvannamalai district, said, “It is not as though the farmers will lose only their agricultural lands. These will be acquired along with their homes. A number of villages will be wiped out, and access to many others will be cut off.”
Mr. Balaraman and district president of the association T.K. Venkatesan were picked up by the police on June 20 for organising a meeting of farmers. All of Wednesday, Chandra Kumar and his family members stood guard over his four-acre plot. When the surveyors came on Thursday, an alert Mr. Kumar drove them away. When they returned two hours later, he and a few neighbouring farmers poured kerosene over themselves and threatened self-immolation.

‘All is well’

Meanwhile, the administration in Salem claimed that a majority of the people were ready to cooperate. Salem Collector Rohini R. Bhajibhakare said on Friday, “Only a minuscule percentage of farmers is opposing the project that has otherwise elicited overwhelming support.” The government machinery is prepared to redress all grievances of aggrieved farmers, she said, and added that about 90% of patta holders extended full cooperation for the land survey. Only 10% had approached the higher authorities for enhanced compensation, she claimed.
Batting for the project, Ms. Bhajibhakare said it would go a long way in accelerating economic and industrial growth in the entire western belt of the State. She appealed to the people to extend cooperation for implementing the project, and said it would bring more benefits to all sections of society. The Collector said the enhanced infrastructure would attract more investments to the region and also improve employment opportunities. “Only a few houses and other structures will be affected by the project. However, the owners will be getting very good compensation,” she said.
Kancheepuram Collector P. Ponnaiah said, “We did receive petitions objecting to the land acquisition, but such petitions ended up being requests for fair and reasonable compensation.”
There is widespread apprehension that the expressway is meant to benefit a few corporate mining majors who want to tap the iron ore reserves in Salem (Kanjamalai) and Tiruvannamalai (Kalvarayan hills) districts. The argument that seeks to lend credence to this apprehension is that at some places between Ayodhiyapattinam and Achankuttapatti, the proposed road runs parallel to the existing highway, which is only about 50 m away. Trade and industry, however, welcomed the project. K. Mariappan, president of the Indian Chamber of Commerce and Industry, Salem chapter, said the district was all set to get a defence hub and the expressway would be of help.

Intent to acquire

The process of acquiring land for the proposed 277.3-km-long Chennai-Salem highway is under way, with the issue of a notification under Section 3A of the National Highways Act, 1956. This means the government has made its intention clear.
But while the consultant had submitted the draft feasibility report to the National Highways Authority of India (NHAI), the details of the project were still being worked out and a detailed project report had to be prepared next, said NHAI officials. “The Ministry of Environment and Forests has approved our terms of reference. We have to submit a compliance report. We will be holding public consultations explaining the project to the public,” Pawan Kumar, Regional Officer, NHAI, said.
After several revisions, the land requirement for the project has been brought down to 1,900 ha from 2700 ha. “Also, a ministry guideline allowed us to reduce the width of the road from 110 m to 70 m since we would have less than 40,000 passenger car units of traffic. In forest areas, which run to a length of total 10 km, the width is further reduced to 50 m,” Mr. Kumar said.
“If we are to expand the popular route via Ulundurpet, around 40,000 structures would have to be removed. The greenfield project does minimal harm to structures. In fact, in Salem district, a two-km long tunnel is being constructed to avoid the Jarugumalai forest and urban settlements,” he pointed out.

Forest land clearance

A total of 50 ha of forest land is required for the project. As the corridor will run through reserved forests in at least three districts, the project has to be cleared under the Forest Conservation Act. At present, only survey and data collection is being allowed. “Every inch of diversion of forest land has to be approved,” said a senior officer.
In Salem district, the project will require about 3.5 acres of land in two reserved forests. In Tiruvannamalai, it will pass through five reserved forests and the initial estimate is that it may need over five acres of forest land. In both districts, there are no major wild animals; minor carnivores like wild dogs, jackals and foxes are abundant, said officials. The Principal Chief Conservator of Forests has stipulated that there should not be any cutting of trees during the survey, sources said.

 


மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

  பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...