Skip to main content

Posts

வேதனையின் உச்சம்

முன்எப்போதும் இல்லாத அளவுக்கு மதுவுக்கு எதிரான போராட்டம் தமிழகம் முழுவதும் வலுக்கத்தொடங்கி விட்டது. வீதிக்கு வந்து போராடும் பெண்கள், சிறுவர், சிறுமியரை பார்க்கும் போது மனது வேதனையில் தவிக்கிறது. அவர்கள் மீது தடியடி நடத்தி பலப்பிரயோகத்தில் போலீசார் ஈடுபடும் போது கண்கள் குளமாகின்றன. கால்நூற்றாண்டுகளாக மது அரக்கன் பிடியில் வெந்து நொந்த பெண்களின் வேதனையின் உச்சம் தான் இந்த போராட்டம். இதை உணர எடப்பாடி அரசு மறுப்பது அதிகார பசியின் உச்சமாகத்தான் தெரிகிறது. 2016 சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின் போது மதுவுக்கு எதிரான ஒரு பிரசாரம் தமிழகம் முழுவதும் அலையடித்தது. அப்போது திமுக பூரண மதுவிலக்கு தொடர்பான கொள்கையை அறிவித்ததும், அதிர்ந்துபோன அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, தேர்தலில் வென்று மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்தால் தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவித்தார். அவர் பதவி ஏற்றதும் முதற்கட்டமாக 500 மதுக்கடைகளை மூடினார். அவர் மரணம் அடைந்த பின் ஓபிஎஸ்சை ெதாடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி பிப்ரவரி 16ல் பதவி ஏற்ற போது மேலும் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக அறிவித்தார். அப்போது ஒரு வெளி...

தமிழர்களின் நாகரிகம்

உ லகில் பல நாடுகள், ‘‘நாங்கள் பண்டைய காலத்தி லிருந்து நாகரிகம் மிக்கவர்கள். எங்கள் வரலாறு போற்றுதலுக்குரியவை’’ என்று நெஞ்சம் நிமிர்த்தி சொல்வது வழக்கம். இந்த பெருமைக்கெல்லாம் அத்தாட்சி யாக, அசைக்கமுடியாத ஆதாரமாக அவர்கள் தங்கள் நாட்டில் நடந்த அகழ்வாராய்ச்சி காரணமாக வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகளைத்தான் சொல்வார்கள். இந்தியாவை எடுத்துக்கொண்டால் இதுவரை சிந்து சமவெளி நாகரிகத் தைத்தான் பெருமையோடு கூறிக்கொண்டிருக்கிறார்கள். சிந்து சமவெளி நாகரிகம் சிறப்புக்குரியது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கமுடியாது. ஆனால், சிந்து சமவெளி நாகரிகத்துக்கு முன்பே, ‘‘முந்து சமவெளி நாகரிகமாக திகழ்ந்தது தமிழர்களின் நதிக்கரை நாகரிகம்தான்’’. தமிழகத்தில் ஆதிச்சநல்லூரில் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழ்ந்த அடையாளம் இருக்கிறது என்றால், நிச்சயமாக பாண்டிய மன்னர்கள் தலைநகரமாக கொண்ட மதுரையைச் சுற்றிலும் இன்னும் நிறைய அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை கீழடி ஆய்வுமுடிவுகள் உறுதிப்படுத்துகின்றன.  தொல்பொருள் கண்காணிப்பாளர் அமர்நாத் ராம கிருஷ்ணன் தலைமையில் கடந்த 2015–ம் ஆண்டு மார்ச் மாதம் ...

சுற்றுலா வருபவர்கள் நமது சகோதர–சகோதரிகள்

ம றைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா எப்போதுமே, சுற்றுலா என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளத்தை மேம்படுத்தும் உந்துசக்தி என்று குறிப்பிடுவார். பிரதமர் நரேந்திரமோடி, காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 2 தலைநகரங்களான காஷ்மீரையும், ஸ்ரீநகரையும் இணைக்கும் வகையில் 9.2 கிலோமீட்டர் தூரத்திற்கு, ரூ.2,500 கோடி செலவிலான நாட்டிலேயே மிகப்பெரிய சுரங்கப்பாதையை நேற்று முன்தினம் திறந்துவைத்தார். அப்போது அவர், கடந்த 40 ஆண்டுகளில் சுற்றுலா இந்தப்பகுதியில் மேம்பாடு அடைந்திருந்தால், உலகமே காஷ்மீரின் காலடியில் இருந்திருக்கும். காஷ்மீர் இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க சுற்றுலாவா?, பயங்கரவாதமா? என்பதை முடிவு செய்யவேண்டும். சுற்றுலா வளர, வளர பொருளாதாரம் வளர்ந்துகொண்டேபோகும். அந்தமாநில மக்களும் அதனால் பயனடைந்து கொண்டே இருப்பார்கள் என்று தெரிவித்திருக்கிறார். பிரதமர் இந்த கருத்துகளை தெரிவித்த அதேநாளில், சென்னை அருகிலுள்ள மாமல்லபுரத்தில் வெட்கி தலைகுனிய வைக்கும் ஒருசம்பவம் நடந்திருக்கிறது. மாமல்லபுரத்திற்கு ஜெர்மன் நாட்டிலிருந்து 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சுற்றுலா வந்திருக்கிறார்கள். அதில் 5 பேர் ...

தொல்காப்பியத்தில் விலங்குகள் - ஓர் ஆய்வு

தொல்காப்பியத்தில் விலங்குகள் - ஓர் ஆய்வு தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்ற மூன்று பகுதி உள்ளன. இதில் பொருளதிகாரத்தில் உள்ள மரபியல் பகுதியில் விளக்கப்பட்டுள்ள விலங்குகளைப்பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விலங்குகள் முதுகெலும்பற்றவை, முதுகெலும்புள்ளவை என்று இரண்டு வகைப்படும். மரபியலில் விலங்குகளின் இளமை பெயர்கள், ஆண்பாற் பெயர்கள், பெண்பாற் பெயர்களை மிக அழகாக விளக்கியுள்ளார். விலங்குகளின் இளமைப்பெயர்கள் பலவிதமான விலங்குகளின் இளமைப்பெயர்கள் பலவாகும். அது பார்ப்பு, பிள்ளை, குட்டி, பறழ், குருளை, மறி, கன்று, குழவி என்று பல இளமைப்பெயர்களை பல விலங்குகளுக்குரியது என்று கூறியுள்ளார். பார்ப்பு - பிள்ளை: பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்றிளமை (548) தவழ்பவை தாமும் அவற்றோரன்ன (549) இதில் பார்ப்பும், பிள்ளை என்ற பெயர்கள் பறவைகள், ஊர்வனவற்றின் இளமைப்பெயராகும் என்கிறார். குட்டி: மூங்கா வெருகெலி மூவரி யணிலொ டாங்கவை நான்குங் குட்டிக்குரிய (550) கீரிப்பிள்ளை, பெருகு, எலி, அணில் என்பவற்றின் இளமைக்கு குட்டியென்று கூறற்கு உரியனவாம். கோடுவாழ் குரங்குக் குட்ட...

சமூகமே சேர்ந்து உருவாக்கிய பசுமைத் தோட்டம்

1999ஆம் ஆண்டில் அமைக்கப் பட்ட ‘ஆஷ்ரம்’ போதையர் மறு வாழ்வு இல்லம் போதைப் புழக்கத் தால் பாதிக்கப்பட்டவர்களைச் சமூகத்துடன் ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்து அறக்கட்டளை வாரியத் தின் கீழ் செயல்படும் ‘ஆஷ்ரம்’ இல்லத்தில் உள்ளவர்களுக்காக பசுமைத் தோட்டத்தை அமைக்கப் போவதாக கடந்த ஆண்டு அறி விக்கப்பட்டது. அதற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. தோட்டக்கலை நிபுணர்கள், மாணவர்கள், தனியார் நிறுவனங் கள், தனிநபர்கள், அரசாங்க அமைப்பு எனக் கிட்டத்தட்ட 90 தொண்டூழியர்கள் சேர்ந்து டர்பன் ரோட்டில் இயங்கிவரும் இவ்வில் லத்தில் பசுமைத் தோட்டத்தை உருவாக்கினர். இந்தப் பசுமைத் தோட்டத்தைப் போக்குவரத்து அமைச்சரும் செம் பவாங் குழுத் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினருமான திரு கோ பூன் வான் நேற்று அதிகாரபூர்வமா கத் திறந்து வைத்தார்.  பசுமைத் தோட்டத்தைத் நேற்று திறந்து வைத்த போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் (நடுவில் அமர்ந்திருப்பவர்), கம்பத்துச் சூழலை நினைவுபடுத்தும் பறவை வகைகளைப் பார்வையிடுகிறார். அவருடன் இந்து அறக்கட்டளை வாரியத் தலைவர் திரு ஆர். ஜெயசந்திரன் (நடுவில் நிற்பவர்), ‘ஆஷ்ரம’த்தின் த...

Indian engineer killed, another injured in U.S. hate crime

''Get out of my country,” the shooter allegedly shouted before opening fire, killing Srinivas Kuchibhotla. An apparent act of racial hatred left an Indian engineer dead and another injured in Olathe city in Kansas in mid-western United States on Wednesday night. Srinivas Kuchibhotla (32) had gone to a bar with his friend Alok Madasani after the day’s work, where he was shot, allegedly by a 51-year-old Navy veteran who shouted, “get out of my country,” before the act. Kuchibhotla died later, while Mr. Madasani who was also hit, has recovered and has been discharged from the hospital.            

ஏறு தழுவுதல் (ஜல்லிக்கட்டு) வரலாறு

ஏறு தழுவுதல் (ஜல்லிக்கட்டு) -முனைவர் மு.இளங்கோவன்   ஏறுதழுவுதல், ஏறுகோள், மாடுபிடித்தல், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, பொல்லெருது பிடித்தல் என்று தமிழகத்தின் பல பகுதிகளில் பல பெயர்களில் தமிழர்களின் வீர விளையாட்டாம் ஏறுதழுவுதல் அழைக்கப்பெறுகிறது. இவ்விளையாட்டு,முல்லை நில (ஆயர்கள்) மக்களின் திருமணத்துடன் தொடர்புடையதாகப் பண்டைக்காலத்தில் இருந்தது. முல்லைநில மக்களின் வீரவிளையாட்டாக இருந்தாலும் தென் தமிழகத்தின் மதுரை மாவட்டம் சார்ந்த பகுதிகளில் இவ்விளையாட்டு இன்றும் ஆர்வமாக நிகழ்த்தப்படுகிறது. பண்பாட்டுத் திருவிழாவாகவும், மக்களின் சமயம் சார்ந்த திருவிழாவாகவும், இளைஞர்களின் வீர உணர்வை நினைவுகூரும் விழாவாகவும் நடைபெறும் ஏறுதழுவுதல் பற்றி இலக்கியங்களில் இடம்பெறும் செய்திகளை இங்கு நோக்குவோம். பழந்தமிழ் நூலான கலித்தொகையின் முல்லைக்கலியில் இடம்பெறும் பாடல்களில் ஏறுதழுவுதல் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மலைபடுகடாம் நூலிலும் (330-335), பட்டினப்பாலையிலும், சிலப்பதிகாரத்திலும் ஏறு தழுவுதல் பற்றிய பல குறிப்புகள் உள்ளன. குறிஞ்சி நில மக்களும் முல்லைநில மக்களும் தங்கள் ந...