Skip to main content

Posts

கொலைகாரனாக்கிய குடி மயக்கம்

சரக்கு உள்ளே போய் விட்டால் மாமா, மச்சினன் தெரியாது, நண்பன் யார் எனத் தெரியாது. அந்த அளவுக்கு மயக்கத்தில் இருப்பார்கள். அந்த மயக்கத்தில் சண்டை போடுவதும், தகராறு செய்வதும் நடக்கும். ஆனால் போதையில் ஏற்பட்ட தகராறில் மீன்வெட்டும் கத்தியால் நண்பனை சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டார் ஒருவர். கொலை செய்யப்பட்டவருக்கு திருமணமாகி 3 மாதம்தான் ஆகிறது என்பது கூடுதல் பரிதாபம். சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் அருண் என்ற பென்னி. வானகரத்தில் உள்ள மார்க்கெட்டில் மீன் வாங்குவோருக்கு அதை சுத்தம் செய்து கொடுப்பார்.  அதே பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவரும் அதே வேலை செய்கிறார். இருவரும் நண்பர்கள். தினமும் மாலையில் வேலை முடிந்ததும் ஒன்றாக மது குடிக்க செல்வார்கள். வழக்கம்போல் இருவரும் டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றனர். போதை அதிகமானதும் பாரில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டிற்கு நடந்து சென்றனர். வரும் வழியில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் பார்த்திபன் இடுப்பில் வைத்திருந்த மீன்வெட்டும் கத்தியை எடுத்து அருணின் கழுத்து, முகம், வயிற்று பகுதியில் சர...

ஆட்டோமொபைல் டிசைனிங் துறைக்கு மவுசு

ஆட்டோமொபைல் துறை உலகின் தவிர்க்க முடியாத துறைகளில் முதன்மை நிலையில் கொடி கட்டி பறக்கிறது. நாளுக்கு நாள் எண்ணற்ற மாற்றங்களுடன் தனக்கான பொலிவை தக்க வைத்துக்கொள்ளும் இத்துறையில் வேலைவாய்ப்புக்கு பஞ்சம் இல்லை. ஆட்டோமொபைல் டிசைனிங் தொடர்பான படிப்புகளுக்கு மாணவ, மாணவிகள் மத்தியில் மவுசு அதிகம். உலக அளவில் இதற்கான நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு லட்சங்களில் ஊதியத்துடன் வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இந்தியாவை பொறுத்த வரை சில முக்கிய கல்வி நிறுவனங்கள், பலவிதமான போக்குவரத்து  மற்றும் ஆட்டோமொபைல் வடிவமைப்பு படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன. அகமதாபாத்தில் செயல் பட்டும் வரும் தேசிய வடிவமைப்பு கல்வி நிறுவனமானது (ழிமிஞி) போக்குவரத்து  மற்றும் ஆட்டோமொபைல் வடிவமைப்பில் இரண்டரை வருட முதுநிலை படிப்பை வழங்குகிறது.  போக்குவரத்து மற்றும் ஆட்டோமோடிவ் துறையில் சிறந்த தொழில்முறை நிபுணராவதற்கு  இப்படிப்பு  உதவுகிறது. மேலும் இப்படிப்பில் ஆட்டோமொபைல்களை வடிவமைக்க மட்டுமே பயிற்சி அளிக்கப்படுவதில்லை. மாறாக அனைத்து வகை வாகனங்களையும் வடிவமைக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்படிப்பை முடித்தால்...

அஞ்சல் வழியில் அக்குபஞ்சர் படிப்பு

அக்குபஞ்சர் என்பது பண்டைய காலம் தொட்டு கடைபிடிக்கப்படும் மருத்துவ முறை என்பதுடன் இதில் பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்பது சிறப்பம்சமாக கருதப்படுகிறது. நோய்களுக்கு தக்கவாறு துல்லிய முனை கொண்ட ஊசிகளை உடலில் செருகி சிகிச்சை அளிப்பதே அக்குபஞ்சர் சிகிச்சை முறை. சமீப காலமாக இயற்கை சார்ந்த மருத்துவங்களை மக்கள் விரும்ப தொடங்கியுள்ளனர். சித்தா, ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேதம், அக்குபஞ்சர் போன்ற மருத்துவ முறைகளை நாடத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே இயற்கை முறை மருத்துவத்தில் பட்டப்படிப்பு பெற்றவர்கள் கூடுதல் தகுதியாக அக்குபஞ்சர் சிகிச்சை தொடர்பான படிப்பை மேற்கொள்கின்றனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால் அக்குபஞ்சர் மருத்துவமனைகளும் மாவட்டங்கள் தோறும் அதிகரித்து வருகின்றன. வெளிநாடுகளிலும் இந்த சிகிச்சை முறைக்கு கடும் கிராக்கி உள்ளது. சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் பெரும்பாலும் அக்குபஞ்சர் மூலமாகவே தீராத நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்திரா காந்தி தேசிய திறந்த வெளி பல்கலைக் கழகம் (இக்னோ) டெல்லியிலுள்ள அக்குபஞ்சர் மற்றும் இயற்கை மருத்துவ  நிறுவனத்துடன்  இணைந்து அக்குபஞ்...

சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க டிப்ஸ்

பத்து மணிக்கு மேல் வெளியில் தலை காட்டவே மககள் பயப்படுகின்றனர். வெயில் மண்டையைப் பிளக்கிறது. அரை மணி நேரம் வெயிலில் செல்ல நேர்ந்தால் கண் எரிச்சல், தோல் வறட்சி, வியர்வை, உடல் சோர்வு, சிறுநீர் தொற்று என பல பிரச்னைகள் வாட்டுகிறது. இது போன்ற சங்கடங்களில் இருந்து காத்துக் கொள்ள ஆலோசனை சொல்கிறார் தோல் சிகிச்சை நிபுணர் டாக்டர் விக்னேஷ்வரி.  வெயில் நேரத்தில் எந்தப் பாதுகாப்பும் இன்றி வெளியில் செல்வதால் வியர்வை சங்கடத்தை ஏற்படுத்தும். தோல் வறட்சி காணப்படும். மேலும் வியர்வை அதிகரிப்பால் ஏற்கனவே தோல் பகுதியில் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு அரிப்பு அதிகரிக்கும். அக்குள் மற்றும் முதுகுப் பகுதியில் இந்த அரிப்பு காணப்படும். உடல் சூட்டின் காரணமாக வெயில் கொப்புளம் மற்றும் வியர்குரு போன்ற தொல்லைகள் உண்டாகும்.  உடல் இயல்பான தட்பவெப்ப நிலைகளில் தோல் வியர்வை மூலம் இயற்கையாகவே வெப்ப மாறுபாடுகளை சரி செய்து விடும். நீண்ட நேரம் அதிக வெப்பநிலையில் இருக்கும் போது உடல் வெப்பக் கட்டுப்பாட்டு செயலிழக்கிறது. இதுவே பல்வேறு பிரச்னைகளுக்கும் காரணம் ஆகும். கடும் வெப்பத்தின் காரணமாக வலியுடன் கூடிய வெப்பத் தசையிழ...

குடும்பம் நடத்த நினைத்தால் ரூ.16 லட்சம் சம்பாதிக்க வேண்டும் : இங்கிலாந்து அரசு

லண்டன்: இந்தியா உள்பட வெளிநாட்டினரை திருமணம் செய்யும் இங்கிலாந்துக்காரர்கள் ஆண்டுக்கு ரூ.16 லட்சம் சம்பாதிக்க வேண்டும். அப்போதுதான் மனைவி அல்லது கணவனை இங்கிலாந்துக்கு அழைத்து வர அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அடுத்த மாதம் 9ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இங்கிலாந்துக்காரர்கள் பலர் இந்தியா உள்பட பல வெளிநாட்டினரை திருமணம் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. அவர்கள் தங்கள் மனைவி அல்லது கணவனை இங்கிலாந்துக்கு அழைத்து வந்து குடியுரிமை பெறுகின்றனர். ஆனால், இங்கிலாந்து குடியுரிமை பெறுவதற்காக பெண்களை கடத்துவதும், போலி திருமணங்களும், குடும்ப விசா பெறுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  மேலும், இங்கிலாந்துக்கு வரும் வெளிநாட்டினருக்கு ஆங்கில மொழியும் தெரியவில்லை. இதனால் சமுதாயத்தில் மற்றவர்களுடன் சகஜமாக பழக முடிவதில்லை. மேலும், சரியான வருமானம் இல்லாமல் இங்கிலாந்துக்கு வந்து பலர் கஷ்டப்படுகின்றனர். அவர்கள் நாட்டுக்கு பாரமாக இருக்கின்றனர். இதுபோன்ற பல பிரச்னைகளை சமாளிக்க குடியுரிமை வழங்கும் நடைமுறையை இங்கிலாந்து அரசு கடுமையாக்கி உள்ளது.  அதன்படி, ஐரோப...

மு.க.அழகிரி குடும்பத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

    மதுரை,பிப்.23 - தயா என்ஜினீயரிங் கல்லூரி விவகாரத்தில் மு.க.அழகிரி குடும்பத்திற்கு நோட்டீஸ் அனுப்ப கலெக்டர் சகாயம் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் தயா என்ஜினீயரிங் கல்லூரி கட்டப்பட்டுள்ளது. இது மத்திய மந்திரி மு.க.அழகிரிக்கு சொந்தமானது. இந்த கல்லூரி கட்டிடம் விவசாய கால்வாய் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டு இருப்பதாக விவசாய சங்க தலைவர் ராமலிங்கம் மதுரை மாவட்ட கலெக்டர் சகாயத்திடம் புகார் செய்தார். அந்த புகார் மனு தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு விசாரிக்க வேண்டுமென்று அழகிரி குடும்பத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்பேரில் அழகிரி சார்பில் ஜானகி ராமுலு கலெக்டர் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது அவர் சில ஆவணங்களை கேட்டிருந்தார். இந்த நிலையில் தயா என்ஜினீயரிங் கல்லூரி கட்டிடம் தொடர்பான் நேற்று கலெக்டர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது விவசாய சங்க தலைவர் ராமலிங்கம் கலெக்டர் முன்பு ஆஜராகி சில விளக்கங்களை அளித்தார்.      ஆனால் இந்த விசாரணையின் போது மத்திய மந்திரி மு.க.அழகிரி குடு...

என்கவுண்டரை எதிர்ப்போம்! :ஏன்..?

பொதுமக்களுக்கு தொடர்ந்து கொள்ளைகள் நடக்கிறதே? என்பது கவலை. அதனால் கொள்ளையர்கள் கொல்லப்பட்டார்கள் எனும் போது, திருப்திப்பட்டுக் கொள்கின்றார்கள். ஆனால் கொல்லப்பட்டது உண்மையான கொள்ளையர்கள்தானா? என்ற சந்தேகமும், கொல்லப்பட்டது சரிதானா என்கின்ற கேள்வியும் சற்று ஆற அமர யோசிக்கும் போது எழும். அப்போது அது பற்றி விசாரிக்க முடியாது. ஏனெனில் கொல்லப்பட்டவர்கள் உயிர்தெழுந்து பேசப் போவதில்லை. இது சரிதானா..? எனக் கேட்கிறது  'என்கவுண்டரை எதிர்ப்போம்!' இக் கட்டுரை. கட்டுரையாளர் யுவகிருஷ்ணாவுக்கான நன்றிகளுடன் இங்கு அதை மீள்பதிவு செய்கின்றோம்.  -  தமிழ்நாட்டின் நடுத்தர வர்க்கத்து மொக்கைகளுக்கு மீண்டும் ஒரு தீபாவளி. இந்திய மனோபாவம் முற்றிலுமாக போர்வெறி இதிகாசமான மகாபாரதத்தை பின்னணியாக கொண்டது. எனவேதான் கொலைகளை கொண்டாடுகிறார்கள். ‘இவனுங்களை எல்லாம் நடுரோட்டுலே வெச்சு சுட்டுக் கொல்லணும் சார்’, ‘கோர்ட்டுக்குல்லாம் கூட்டிக்கிட்டு போவக்கூடாது. லாக்கப்புலேயே மேட்டரை முடிச்சிடணும்’ என்று பஸ்ஸிலும், ட்ரெய்னிலும் பொழுதுபோக்குக்கு பேசுபவர்களுக்கு எவனையோ போட்டுத் தள்ளணும் என்கிற அனாவசிய ...