Friday, 17 February 2012
சஹாரா நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணிக்கு தொடர்ந்து ஸ்பான்சர் செய்ய முடிவு
இந்திய கிரிக்கெட் அணிக்கு தொடர்ந்து ஸ்பான்ஷர்ஷிப் செய்வதற்கு சஹாரா நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. பிசிசிஐ மற்றும் சஹாரா நிறுவனத்துக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதை அடுத்து இத்தீர்மானத்தை எடுத்தாக சஹாரா நிறுவனம் கூறியுள்ளது.
இந்திய தேசிய கிரிக்கெட் அணிக்கு பிரதான ஸ்பான்ஷர்ஷிப்பாளர்களான சஹாரா நிறுவனம் ஐ.பி.எல் போட்டிகளில், புனே வாரியர்ஸ் அணியின் உரிமையாளர்களாகவும் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளின் சீசன் 5 இல், யுவராஜ் சிங் தொடர்ந்து புனே வாரியர்ஸில் விளையாட முடியாத காரணத்தினால், அவருக்கு பதில் மற்றுமொரு வெளிநாட்டு வீரரை அணியில் இடம்பெற செய்வதற்கு சஹாரா நிறுவனத்தினர் முயற்சி மேற்கொண்டு வந்தனர். மாற்றுவீரரை ஒப்பந்தம் செய்வதற்காக, யுவராஜ் சிங்கின் ஒப்பந்த தொகையை மீள் எடுத்துக்கொள்ளவும் அனுமதி கோரியிருந்தனர்.
எனினும் பிசிசிஐயுடன் இவ்விவகாரத்தில் முரண்பாடு ஏற்படவே, புனே வாரியார்ஸ் மற்றும் இந்திய தேசிய அணிக்கான ஸ்பான்ஷர்ஷிப்பிலிருந்து தாம் விலக போவதாக திடீர் அறிவிப்பு செய்திருந்தது சஹாரா நிறுவனம்.
இந்திய தேசிய அணிக்கான ஸ்பான்ஷர்ஷிப்பிலும் பல்வேறு சிக்கல்களை தாம் எதிர்கொண்டதாகவும், அண்மைக்காலமாக, போட்டி நிறுவனங்கள் பல ஸ்பான்ஷர்ஷிப் செய்ய முன்வந்துள்ளதால், தம்மை பிசிசிஐ இப்போது மதிப்பதில்லை எனவும் அந்நிறுவனம் குற்றம் சாட்டியிருந்தது.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சீனிவாசன் மற்றும் சஹாரா நிறுவன தலைவர் சுப்ரதோ ராய் இருவருக்கு இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், இதில் சுமூக முடிவு எட்டப்பட்டதால் இந்திய அணிக்கான ஸ்பான்சர்ஷிப்பை நீட்டிப்பதற்கு சஹாரா நிறுவனம் முடிவெடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் போது சஹாரா நிறுவனம் சில கடுமையான நிபந்தனைகளை விதித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இம்முடிவுகளின் படி, ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ளும் எந்தவொரு அணிக்கும் 4 வெளிநாட்டு வீரர்களுக்கு மேல் விளையாட அனுமதிக்காக பிசிசிஐ, யுவராஜ் சிங் சுகயீனம் காரணமாக புனே வாரியர்ஸிற்கு மாத்திரம் ஐந்து வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவதற்கு அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சங்கரன்கோவில் தேர்தல் களத்தில் குதிக்க பயந்த பாமக!
நெல்லை, பிப். 16-
சங்கரன்கோவில் தொகுதியில் பாமக போட்டியிடவில்லை. யாராச்சும் போட்டியிட்டால் நாங்கள் ஆதரவு தருவோம் என்று விரக்தி கலந்த குரலில் கூறியுள்ளார் பாமக தலைவர் ஜி.கே.மணி.
நெல்லை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பா.ம.க.கட்சி சார்பில் புதிய அரசியல், புதிய கொள்கைகள் பற்றி புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழகம் முழுவதும் வெளியிட்டு வருகிறோம். பொதுமக்கள் புத்தகத்தை வாங்கி படித்து கருத்துகளை அனுப்பலாம்.
தமிழகத்தில் தற்போது 8 மணி நேர மின் வெட்டு உள்ளது. இதனால் மாணவர்களின் படிப்பு மற்றும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை போக்க தமிழக அரசு உடனடியாக மத்திய தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் கேட்டு பெற வேண்டும்.
இது தற்போதைய பிரச்சினைக்கு மட்டும்தான் தீர்வாக அமையும். நிரந்தரமாக மின்தட்டுப்பாட்டை போக்க மின் திட்டங்களை உடனே நிறைவேற்ற வேண்டும். அணு உலை மின்சாரத்தினால் ஆபத்து உள்ளது. அணு கழிவுகளை 500 ஆண்டுகள் ஆனாலும் அழிக்க முடியாது. அணு மின்சாரம் தயாரிப்பதை கைவிட வேண்டும்.
கூடங்குளம் அணுமின்திட்டத்தை 1990-ம் ஆண்டிலிருந்தே பா.ம.க. எதிர்த்து வருகிறது. தமிழகத்தில் மின் வெட்டை கண்டித்து வருகிற 20-ந்தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட, வட்ட தலைநகரங்களில் பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் பா.ம.க.போட்டியிடாது. ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக யாரேனும் போட்டியிட்டால் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்போம்.
முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் மத்திய அரசு கேரளாவை எச்சரிக்க வேண்டும். தமிழகத்தின் நியாயத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். தேவிகுளம், பீர்மேடு மற்றும் இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க வேண்டும்.
சென்னையில் கொலை செய்யப்பட்ட ஆசிரியையின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்புகள் நடத்த வேண்டும் என்றார் அவர்.

கமல் ரஜினி இணைந்து கலக்கும் மருதநாயகம் !
1997-ஆம் ஆண்டு இங்கிலாந்து மகாராணியார் சிறப்பு விருந்தினராக நேரில் வந்து பூஜையில் கலந்து கொள்ள… மருதநாயகம் படத்தின் தொடக்க விழா மிகச்சிறப்பாக நடந்தது.
மருதநாயகம் தொடக்க விழாவில், மருதநாயகம் தோற்றத்தில் கமல் ராணியாரையும் மற்ற சிறப்பு விருந்தினர்களையும் வரவேற்றார். தொடக்கவிழாவுக்கு முன்பே டிரைலருக்காக 5 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார் கமல்! ஆனால் படம் ட்ரெயிலரோடு நின்றுபோனது.
காரணம், இந்தியா பொக்ரானில் போட்ட அணுகுண்டு. இதன் காரணமாக இந்தியா மீது பொருளாதாரத் தடை பாய்ந்தது. இதனால், கமல்ஹாசன் நம்பியிருந்த வெளிநாட்டு நிதியுதவி தடைபட்டதால் படம் கிடப்பில் போடப்பட்டது. 14 ஆண்டுகளுக்கு முன்பு மருதநாயகத்தின் பட்ஜெட் 50 கோடி ரூபாய். ஆனால் எந்த நிறுவனமும் கமல்ஹாசனுக்காக ரூ 50 கோடியை முதலீடு செய்ய அன்று தயாராக இல்லை. இதை அவரே பல பேட்டிகளில் கூறி வந்தார்.
சில காலத்திற்கு முன்பு மருதநாயகத்தை தயாரிக்க சன் நிறுவனத்துடன் பேச்சு நடப்பதாக கூறப்பட்டது. ஆனால் நடக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் மருதநாயகம் குறித்து கமல் பேச ஆரம்பித்துவிட்டார் கமல். இம்முறை தனது திரையுல நண்பர் ரஜினியையும் இணைத்துக் கொண்டு களம் இறங்கப் போகிறாராம். இதை கமலே மும்பை நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் உறுதிபடுத்தியிருகிறார்.
இதுபற்றி கமல் கூறியிருக்கும் கமல், "மருதநாயகத்தில் ரஜினிக்காகவே ஒரு பாத்திரம் உள்ளது. அவருக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். நாங்கள் இருவரும் 10 படங்களுக்கு மேல் இதற்கு முன் நடித்திருக்கிறோம். ஆனால் சமீபத்தில் எந்தப் படமும் சேர்ந்து நடிக்கவில்லை. இந்தப் படத்துக்கு எங்கள் இருவரையும் தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்கவும் முடியாது. ரொம்ப நாள் பூனைக்கு மணி யார் கட்றதுன்னு யோசிச்சிக்கிட்டிருந்தாங்க! அதை நானே கட்டப்போறேன்," என்று கூறியுள்ளார்.
மருதநாயகம் திரைக்கதை தற்போது கமல் மேலும் மெருகேற்றியுள்ளாராம். இம்முறை மருதநாயகன் படத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் பங்குபெற இருக்கிறார் என்கிறார்கள்.
Thursday, 16 February 2012
ஒரு வாரத்திற்குள் 5 மில்லியன் பேர் பார்த்த ஹாலிவூட் திரைப்பட ட்ரெய்லர் (வீடியோ)ஒரு வாரத்திற்குள் 5 மில்லியன் பேர் பார்த்த ஹாலிவூட் திரைப்பட ட்ரெய்லர் (வீடியோ
Iron Sky : எதிர்வரும் ஏப்ரல் 4ம் திகதி திரைக்கு வரவிருக்கும் சூப்பர் ஹாலிவூட் திரைப்படமிது. யூடியூப்பில் இதன் ட்ரெய்லர் தரவேற்றம் செய்யப்பட்டு, நான்கு நாட்களில் 5 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள்.
இத்திரைப்படம் கடந்த 11ம் திகதி, பேர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ஒரே ஒரு தடவை பிரிமியர் ஷோவாக காட்சிப்படுத்தப்பட்டது. அதை பார்த்தவர்களின் பரப்புரையால் தான் யூடியூப்பில் இவ்வளவு ஹிட்ஸ் என்கிறார்கள்.புதிய வகை திரைப்பட பாணியை சீரியஸாகவே அமல்படுத்துகிறதாம் இத்திரைப்படம். அதாவது சயன்பிக்க்ஷன் காமடி. 1945 இல் இரண்டாம் உலகமகா யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட, ஹிட்லரின் நாசி படைகள், இரகசியமாக அண்டார்ட்டிக்காவிலிருந்து, நிலவின் இருள் பகுதிக்கு ஒரு விண்வெளி ஓடத்தை அனுப்புகிறார்கள். அதில் செல்லும் விஞ்ஞானிகள், பெரிய விண்வெளி ஆயுத களஞ்சிய சாலை ஒன்றை உருவாக்கி தம்மை பூமியில் தோற்கடித்தவர்களை பழிவாங்குவதற்கு காத்திருக்கிறார்கள். 2018 இல், அவர்கள் தங்களது விண்வெளி ஆயுத படையுடன் பூமியை திட்டமிட்டபடி தாக்குகிறார்கள், பிறகு என்ன நடைபெறுகிறது என்பதே கதைக்கரு.
காமடி பாணியிலானது என்ற போதும் சீரியஸாகவே அதிகம் சிரத்தை எடுத்து கிராபிக்ஸ் காட்சிகளை துல்லியமாக வடிவமைத்துள்ளதால், இத்திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வீரபாண்டி ஆறுமுகம்-கருணாநிதிக்கு இடையிலான பூசல் நாளுக்கு நாள் அதிகரிப்பு: திமுக விரைவில் நடவடிக்கை
சென்னை, பிப். 15-
திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான வீரபாண்டி ஆறுமுகம் மீது இதுவரை இல்லாத பெரும் வருத்தத்தில் திமுக தலைவர் கருணாநிதி இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
மு.க.அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே நிலவி வரும் மோதலை மையமாக வைத்து வீரபாண்டியார் காய் நகர்த்தி வருவதாகவும், அந்த மோதலில் தான் பலனடைய பார்ப்பதாகவும் கருணாநிதி கருதுவதாகவும், விரைவில் வீரபாண்டியார் மீது நடவடிக்கை பாயலாம் என்றும் திமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுகவில் எத்தனையோ தலைவர்கள் வந்துள்ளனர், போயுள்ளனர். அவர்கள் அத்தனை பேருக்குமே கருணாநிதி மனதில் ஒவ்வொரு இடம் இருக்கும். இருப்பினும் கருணாநிதி மனதில் தனி இடம் பிடித்துள்ளவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படிப்பட்டவர்களில் வீரபாண்டியாரும் ஒருவர். சேலத்தில் கட்சியைப் பற்றி கருணாநிதி ஒருமுறைகூட கவலைப்பட்டதில்லை. காரணம், வீரபாண்டியார் மீது அவருக்கு உள்ள நம்பிக்கை.
கருணாநிதியின் நம்பிக்கையை ஒருமுறைகூட வீணடித்ததில்லை வீரபாண்டியார். சேலம் மாவட்டத்தில் கட்சியைக் கட்டுக் கோப்பாக வைத்திருக்கிறார். தொடர்ந்து வெற்றிகளைத் தேடிக் கொடுத்தார். நாளை பொதுக் கூட்டம் என்று கூறினால்கூட லட்சம் பேரை திரட்டிக் கொண்டு வரக் கூடிய திறமைசாலி வீரபாண்டியார்.
ஆனால் இன்று வீரபாண்டியார் பெயரைக் கேட்டாலே கோபமாகும் அளவுக்கு கருணாநிதி போய் விட்டாராம். காரணம், வீரபாண்டியார் தரப்பு சமீப காலமாக நடந்து வரும் போக்கு.
ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் இடையே அடுத்த வாரிசு யார் என்பதில் சமீப காலமாக பெரும் மோதல் மூண்டு வெடித்துக் கொண்டிருக்கிறது. தன்னை விட்டு விட்டு ஸ்டாலினுக்கு உயர் பதவி தரக் கூடாது என்று அழகிரி கடுமையாக முட்டுக்கட்டைப் போட்டு வருகிறார். ஸ்டாலினுக்கு ஏதாவது பதவி தரப்படலாம் என்ற பேச்சு வரும்போதெல்லாம் அழகிரி புயல் கிளம்பி அண்ணா அறிவாலயத்தை கடந்து விடுகிறது. இதனால் ஸ்டாலினை மேலே உயர்த்தும் வேலைகள் தடைபட்டுப் போகின்றன.
அழகிரி, ஸ்டாலின் மோதலில், திமுக முக்கியத் தலைவர்கள் ஆளுக்கு ஒரு கோஷ்டியாகப் பிரிந்து காணப்படுகின்றனர். இதில் இதுவரை எந்தக் கோஷ்டியிலும் சேராமல் கருணாநிதி கோஷ்டியில் மட்டுமே இருந்து வந்த வீரபாண்டியார் அழகிரி கோஷ்டிக்கு ஆதரவாக மாறியுள்ளார். அழகிரிதான் வீரபாண்டியாரை அவர் உடம்புக்கு சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது நேரில் சந்தித்துப் பேசி அவரை தன் பக்கம் ஈர்த்தார்.
அன்று முதல் அழகிரிக்கு ஆதரவாக பேசி நடந்து கொள்கிறார் வீரபாண்டியார். அழகிரி பக்கம் வீரபாண்டியார் திரும்ப முக்கியக் காரணமாக கூறப்படுவது, கடந்த திமுக ஆட்சியின்போது சேலத்தில் நடந்த மிகக் கொடூரமான 6 பேர் படுகொலையாகும். இந்தக் கொலை வழக்கில் வீரபாண்டியாரின் தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ் கைது செய்யப்பட்டார். இவர் வழக்கில் சிக்கி கைதாக ஸ்டாலின்தான் காரணம் என்பது வீரபாண்டியாரின் கருத்தாகும். இந்தக் கைதை அப்போதே கடுமையாக கண்டித்தவர் வீரபாண்டியார். மேலும், சிறைக்குப் போய் சுரேஷையும் பார்த்துப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
சுரேஷ் விவகாரத்தில் ஸ்டாலின் மீது கொண்ட கோபத்தால்தான் தற்போது அழகிரிக்கு அவர் ஆதரவாக செயல்படுவதாக கருணாநிதி குடும்பத்தினர் கருதுகிறார்களாம். மேலும் அழகிரியை தூண்டி விட்டு ஸ்டாலினுக்கு எதிராக திருப்பி வருகிறார் வீரபாண்டியார், இதனால் குடும்பத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என்றும் கருணாநிதி குடும்பத்தினர் வருத்தப்படுகிறார்களாம்.
வீரபாண்டியார் ஒரு மூத்த தலைவர். அழகிரி, ஸ்டாலின் இடையே பிரச்சினை இருந்தால் அதைத் தீர்க்கவல்லவா அவர் முயற்சித்திருக்க வேண்டும். ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து அதைச் செய்யாமல், அவரை ஒருவரைத் தூண்டி விட்டு இன்னொருவருக்கு எதிராக செயல்படுவது என்ன நியாயம் என்பது கருணாநிதி குடும்பத்தினரின் வருத்தம் என்கிறார்கள்.
மேலும் சமீபத்தில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்திலும்கூட அழகிரிக்கு ஆதரவான முறையில் வீரபாண்டியார் நடந்து கொண்டதும், இளைஞர் அணிக்கான சேலம் மாவட்ட நிர்வாகிகளை வீரபாண்டியாரின் மகனே நேரடியாக தேர்வு செய்ய திட்டமிட்டதும்கூட கருணாநிதியை கோபப்பட வைத்ததாம். இதனால்தான் சேலம் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் தேர்வைக் கண்டித்து திமுக மேலிடம் அறிக்கை விட்டது, எச்சரிக்கை விடுத்தது. ஆனால் இந்த எச்சரிக்கை தனது மனதை புண்படுத்தி விட்டதாக உடனடியாக அறிவித்தார் வீரபாண்டியார்.
இப்படி வீரபாண்டியாருக்கும், கருணாநிதிக்கும் இடையிலான சமீபத்திய பூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், விரைவில் வீரபாண்டியார் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால் வீரபாண்டியார் மீது அவ்வளவு சீக்கிரம் கை வைக்க முடியாது என்பதால் அதற்குத் தகுந்த காரணத்தை கண்டுபிடித்த பின்னர் நடவடிக்கை பாயும் என்றும் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.
ரூ.5,000 லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் 'நீதி'மோகன் கைது!
ரூ.5,000 லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் 'நீதி'மோகன் கைது!
திருச்சி, பிப். 15-
திருச்சியில் ரூ.5,000 லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்டார்.
திருச்சியைச் சேர்ந்த சரஸ்வதி என்பவர் நில விவகாரம் தொடர்பாக ரியல் எஸ்டேட் அதிபர் தன்னை ஏமாற்றிவிட்டதாக திருச்சி மாநகர கமிஷனரிடம் புகார் கொடுத்தார். இப்புகாரை விசாரிக்குமாறு திருச்சி மாநகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நீதிமோகனுக்கு திருச்சி மாநகர கமிஷனர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் சரஸ்வதியின் புகாரை விசாரித்த நீதிமோகன் ரூ.5,000 லஞ்சம் கேட்டுள்ளார். நீதிமோகனுக்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத சரஸ்வதி இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி அம்பிகாபதி தலைமையிலான அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் சரஸ்வதி நீதிமோகனுக்கு லஞ்சப் பணத்தை கொடுத்தார். அப்போது மாறுவேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் நீதிமோகனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
Subscribe to:
Posts (Atom)
மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?
பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...