Thursday, 16 February 2012

ஒரு வாரத்திற்குள் 5 மில்லியன் பேர் பார்த்த ஹாலிவூட் திரைப்பட ட்ரெய்லர் (வீடியோ)ஒரு வாரத்திற்குள் 5 மில்லியன் பேர் பார்த்த ஹாலிவூட் திரைப்பட ட்ரெய்லர் (வீடியோ

Iron Sky : எதிர்வரும் ஏப்ரல் 4ம் திகதி திரைக்கு வரவிருக்கும் சூப்பர் ஹாலிவூட் திரைப்படமிது. யூடியூப்பில் இதன் ட்ரெய்லர் தரவேற்றம் செய்யப்பட்டு, நான்கு நாட்களில் 5 மில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள்.

இத்திரைப்படம் கடந்த 11ம் திகதி,  பேர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ஒரே ஒரு தடவை பிரிமியர் ஷோவாக காட்சிப்படுத்தப்பட்டது. அதை பார்த்தவர்களின் பரப்புரையால் தான் யூடியூப்பில் இவ்வளவு ஹிட்ஸ் என்கிறார்கள்.
புதிய வகை திரைப்பட பாணியை சீரியஸாகவே அமல்படுத்துகிறதாம் இத்திரைப்படம். அதாவது சயன்பிக்க்ஷன் காமடி. 1945 இல் இரண்டாம் உலகமகா யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட, ஹிட்லரின் நாசி படைகள், இரகசியமாக அண்டார்ட்டிக்காவிலிருந்து, நிலவின் இருள் பகுதிக்கு ஒரு விண்வெளி ஓடத்தை அனுப்புகிறார்கள். அதில் செல்லும் விஞ்ஞானிகள், பெரிய விண்வெளி ஆயுத களஞ்சிய சாலை ஒன்றை உருவாக்கி தம்மை பூமியில் தோற்கடித்தவர்களை பழிவாங்குவதற்கு காத்திருக்கிறார்கள்.  2018 இல், அவர்கள் தங்களது விண்வெளி ஆயுத படையுடன் பூமியை திட்டமிட்டபடி தாக்குகிறார்கள், பிறகு என்ன நடைபெறுகிறது என்பதே கதைக்கரு.

காமடி பாணியிலானது என்ற போதும் சீரியஸாகவே அதிகம் சிரத்தை எடுத்து கிராபிக்ஸ் காட்சிகளை துல்லியமாக வடிவமைத்துள்ளதால், இத்திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

  பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...