Friday, 17 February 2012

சங்கரன்கோவில் தேர்தல் களத்தில் குதிக்க பயந்த பாமக!


நெல்லை, பிப். 16-
சங்கரன்கோவில் தொகுதியில் பாமக போட்டியிடவில்லை. யாராச்சும் போட்டியிட்டால் நாங்கள் ஆதரவு தருவோம் என்று விரக்தி கலந்த குரலில் கூறியுள்ளார் பாமக தலைவர் ஜி.கே.மணி.
நெல்லை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பா.ம.க.கட்சி சார்பில் புதிய அரசியல், புதிய கொள்கைகள் பற்றி புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழகம் முழுவதும் வெளியிட்டு வருகிறோம். பொதுமக்கள் புத்தகத்தை வாங்கி படித்து கருத்துகளை அனுப்பலாம்.
தமிழகத்தில் தற்போது 8 மணி நேர மின் வெட்டு உள்ளது. இதனால் மாணவர்களின் படிப்பு மற்றும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை போக்க தமிழக அரசு உடனடியாக மத்திய தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் கேட்டு பெற வேண்டும்.
இது தற்போதைய பிரச்சினைக்கு மட்டும்தான் தீர்வாக அமையும். நிரந்தரமாக மின்தட்டுப்பாட்டை போக்க மின் திட்டங்களை உடனே நிறைவேற்ற வேண்டும். அணு உலை மின்சாரத்தினால் ஆபத்து உள்ளது. அணு கழிவுகளை 500 ஆண்டுகள் ஆனாலும் அழிக்க முடியாது. அணு மின்சாரம் தயாரிப்பதை கைவிட வேண்டும்.
கூடங்குளம் அணுமின்திட்டத்தை 1990-ம் ஆண்டிலிருந்தே பா.ம.க. எதிர்த்து வருகிறது. தமிழகத்தில் மின் வெட்டை கண்டித்து வருகிற 20-ந்தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட, வட்ட தலைநகரங்களில் பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் பா.ம.க.போட்டியிடாது. ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக யாரேனும் போட்டியிட்டால் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்போம்.
முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் மத்திய அரசு கேரளாவை எச்சரிக்க வேண்டும். தமிழகத்தின் நியாயத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். தேவிகுளம், பீர்மேடு மற்றும் இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க வேண்டும்.
சென்னையில் கொலை செய்யப்பட்ட ஆசிரியையின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்புகள் நடத்த வேண்டும் என்றார் அவர்.

மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

  பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...