Wednesday, 1 May 2019

இலங்கை குண்டுவெடிப்பு

இலங்கையில் ந‌ட‌ந்த‌ குண்டுவெடிப்பு , ஒரு ச‌க்தி வாய்ந்த‌ குழுவின‌ரின் ந‌ன்கு திட்ட‌மிட‌ப்ப‌ட்ட‌ தாக்குத‌லாக‌த் தெரிகிற‌து. யார் இதைச் செய்திருப்பார்கள் என்பதை இதன் விளைவுகளில் இருந்தே அறியலாம்.

ல‌ங்கையில் இன்று (21.04.2019) ப‌ல‌ க‌த்தோலிக்க‌ தேவால‌ய‌ங்க‌ளிலும், ஐந்து ந‌ட்சத்திர‌ ஹொட்டேல்க‌ளிலும் ந‌ட‌ந்த‌ தொட‌ர் குண்டுவெடிப்புக‌ளில் 290 பேர் கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். ஆயிர‌க்க‌ண‌க்கில் காய‌ம‌டைந்தோர் ம‌ருத்துவ‌ம‌னைக‌ளில் அனும‌திக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். ஏராள‌மானோர் இன‌, ம‌த‌ பேத‌ம் க‌ட‌ந்து குருதிக் கொடை வ‌ழ‌ங்க‌ முன்வ‌ந்துள்ள‌ன‌ர்.
இல‌ங்கை ம‌க்க‌ள் அனைவ‌ரையும் ஒன்று திர‌ட்டியுள்ள‌ இந்த‌ த‌ருண‌த்தில், வ‌த‌ந்திக‌ளை கிள‌ப்பி பிரிவினையை தூண்டும் தீய‌ ச‌க்திக‌ள் குறித்தும் எச்ச‌ரிக்கையாக‌ இருக்க‌ வேண்டும். அர‌ச‌ கைக்கூலிக‌ளான‌ இந்த‌ தீய‌ச‌க்திக‌ள் இல‌ங்கையில் ஒரு பாஸிச‌ ச‌ர்வாதிகார‌ ஆட்சியைக் கொண்டு வ‌ருவ‌தை நோக்க‌மாக‌க் கொண்டுள்ள‌ன‌.
இந்த‌ நிமிட‌ம் வ‌ரையில் எந்த‌ இய‌க்க‌மும் தாக்குத‌லுக்கு உரிமை கோர‌வில்லை. அதே நேர‌ம் அர‌சும் யாரையும் குற்ற‌ம் சாட்ட‌வில்லை. ஆனால், அங்கு ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை வைத்துப் பார்க்கும் பொழுது, இது ஒரு ச‌க்தி வாய்ந்த‌ குழுவின‌ரின் ந‌ன்கு திட்ட‌மிட‌ப்ப‌ட்ட‌ தாக்குத‌லாக‌த் தெரிகிற‌து.
தாக்குத‌ல் ந‌ட‌த்திய‌வ‌ர்க‌ள், இத‌னால் ஏற்ப‌ட‌க் கூடிய‌ பின் விளைவுக‌ளை ஆராய்ந்து, த‌ம‌து இல‌க்குக‌ளைத் தெரிவு செய்துள்ள‌ன‌ர்.
1) குண்டுவெடிப்பில் ப‌லியான‌வ‌ர்க‌ள் பெரும்பாலும் க‌த்தோலிக்க‌ கிறிஸ்த‌வ‌ர்கள். த‌மிழ‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்லாது சிங்க‌ள‌வ‌ர்க‌ளும் இதில் அட‌ங்குவார்க‌ள். ஈஸ்ட‌ர் நாள் விசேட‌ பூஜை என்ப‌தால் பெருந்தொகையின‌ர் ப‌லியாகியுள்ள‌ன‌ர்.
2) கொழும்பு, ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு என்று ஒரே நேர‌த்தில் ப‌ல‌ இட‌ங்க‌ளில் குண்டுக‌ள் வெடித்துள்ள‌ன‌. ச‌ரியான‌ திட்ட‌மிட‌ல், ஆட்ப‌ல‌ம், ஆயுத‌ ப‌ல‌ம், நிதி போன்ற‌ வ‌ள‌ங்க‌ள் இல்லாம‌ல் இது சாத்திய‌மில்லை.
3) மேற்க‌த்திய‌ ப‌ண‌க்கார‌ சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ள் வ‌ந்து த‌ங்கும் ஐந்து ந‌ட்ச‌த்திர‌ ஹொட்டேல்க‌ளில் குண்டுக‌ள் வெடித்து ப‌ல‌ வெளிநாட்ட‌வ‌ரும் கொல்ல‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர். அத‌னால் ச‌ர்வ‌தேச‌ ச‌மூக‌த்தின், குறிப்பாக‌ மேற்க‌த்திய‌ நாட்ட‌வ‌ரின் க‌வ‌ன‌த்தை இல‌ங்கையின் ப‌க்க‌ம் ஈர்த்துள்ள‌து.
இந்த‌ குண்டுவெடிப்புக‌ளின் நேர‌டி விளைவுக‌ளைப் பார்த்தால், இத‌னால் ஆதாய‌ம‌டைவோர் யார் என அறிய‌லாம்.
♦ சிறில‌ங்கா குண்டுவெடிப்பின் எதிரொலியாக‌ நாளை ஆம்ஸ்ட‌ர்டாம் ந‌க‌ரில் தீவிர‌ வ‌ல‌துசாரிக‌ளின் ஆர்ப்பாட்ட‌ம் ஒன்று அறிவிக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. நெத‌ர்லாந்தில் உள்ள‌ அனைத்து தேவால‌ய‌ங்க‌ளுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வ‌ழ‌ங்க‌ வேண்டுமென‌ கோரிக்கை விடுக்கின்ற‌ன‌ர். இந்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்தி இஸ்லாமிய‌ வெறுப்புப் பிர‌ச்சார‌ங்க‌ள் ந‌ட‌த்த‌ப்ப‌டுகின்ற‌ன‌. பிற‌ ஐரோப்பிய‌ நாடுக‌ளிலும் இதே பாணியிலான‌ போக்குக‌ள் தென்ப‌டுகின்ற‌ன‌.
♦ இல‌ங்கையில் போர் முடிந்து, க‌ட‌ந்த‌ ப‌த்தாண்டுக‌ளாக‌ ஒரு துப்பாக்கிச் சூடு கூட‌ ந‌ட‌க்காம‌ல் அமைதியாக‌ இருந்த‌ கால‌த்தில் மீண்டும் இந்த‌ப் ப‌டுகொலைக‌ள் ந‌ட‌ந்துள்ள‌ன‌. அண்மைக் கால‌த்தில் அர‌சு கொண்டு வ‌ந்த‌ புதிய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ எதிர்ப்பு ச‌ட்ட‌த்திற்கு க‌டும் எதிர்ப்பு கிள‌ம்பி இருந்த‌து. இனிமேல் அதை ந‌டைமுறைப்ப‌டுத்த எந்த‌த் த‌டையும் இல்லை.
♦ இல‌ங்கையில் மீண்டும் ஒரு போர்ச் சூழ‌ல் தோன்றினால், அது இந்தியாவையும் பாதிக்கும். டொமினோ க‌ட்டைக‌ள் விழுவ‌து மாதிரி தெற்காசிய‌ நாடுக‌ள் நீண்ட‌ நெடும் போர்க‌ளுக்குள் த‌ள்ள‌ப் ப‌ட‌லாம். ம‌த்திய‌ கிழ‌க்கிலும் அமைதியாக‌ இருந்த‌ நாடுக‌ளில் திடீர் போர்க‌ள் உருவான‌ வ‌ர‌லாற்றை நாம் ஏற்கென‌வே க‌ண்டுள்ளோம்.


கோமதி மாரிமுத்து - தடைகளை கடந்த தங்கமங்கை


ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து. அவரை பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை பார்ப்போம்...
சாதனை படைக்க தடைகள் பல வந்தாலும் அவற்றையெல்லாம் தகர்த்து, தனது விடா முயற்சியால் இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்தவர் தான் திருச்சியை சேர்ந்த கோமதி மாரிமுத்து. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த கோமதியின் வெற்றிக்கு அடித்தளமிட்டவர் அவரது தந்தை மாரிமுத்து. சிறுவயதில் இருந்தே விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்ட தனது செல்ல மகளின் கனவை நிறைவேற்றுவதில் மாரிமுத்துவின் தந்தை பாசம், சமீபத்தில் வெளியாகிய கனா திரைபடத்தில் சத்யராஜ் நடித்த தந்தையின் பாசத்தை மிஞ்சியது.
பேருந்து வசதியில்லாத குக் கிராமத்தில் பிறந்த தனது மகள் ஒருநாள் உலகளவில் சாதிப்பாள் என்ற கனவோடு, தினமும் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருச்சிக்கு விளையாட்டு பயிற்சிக்காக மாரிமுத்து அழைத்து செல்வார். அதேப்போல், கோமதியும் தனது தந்தைக்கு சளைத்தவர் இல்லை. 5-ஆம் வகுப்பில் இருந்தே விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வாங்கி குவித்துள்ளார்.
கல்லூரி படிப்பிற்கு பிறகு வேலைக்கு சென்றாலும் கோமதிக்கு விளையாட்டின் மீதான காதல் குறைந்தபாடில்லை. வேலையை பார்த்துக் கொண்டே ஒருபுறம் விளையாட்டிலும் ஆர்வம் செலுத்தி வந்த கோமதிக்கு, தடகளத்தில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற கனவு மேலும் அவரை தூங்கவிடாமல் செய்தது.
அதன் பலனாய் தனது கனவை நனவாக்கி தற்போது தங்க மங்கையாக மாறியுள்ளார் கோமதி. கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வரும் 3-வது ஆசிய தடக்கள போட்டியில் பங்கேற்ற கோமதி மாரிமுத்து, மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 2 நிமிடம் 70 விநாடிகளில் இலக்கை அடைந்து தங்கம் வென்றுள்ளார். இதன் மூலம் 2019-ஆம் ஆண்டிற்கான ஆசிய தடகள போட்டியில் முதலில் தங்கம் வென்ற வீராங்கனை என்ற சாதனையை கோமதி படைத்தார்.
ஏழ்மையான குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்த ஒரு பெண் தனது விடா முயற்சியால் இந்தியாவிற்கே பெருமை தேடி தந்துள்ளார் என்றால் தங்கமங்கை தானே!!


சென்னையில் சுத்தமான காற்று விற்பனை...!

சென்னையில் சுத்தமான காற்று விற்பனைக்கு வந்துள்ளது என்ற தகவல்  அனைவரையும் அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் ஆழ்த்தி உள்ளது
மரங்கள் வெட்டப்பட்டு நவீன உலகிற்கு மாற நினைக்கும் நமக்கு, இயற்கை என்றால் என்ன என்பதற்கு கூட அர்த்தம் தெரியாமல் போய் விடும் போல்  இருக்கு... தற்போது மாறி வரும் இந்த உலகை பார்க்கும் போது...
இந்தியாவை பொறுத்தவரையில் அதிக மாசுக்காற்று  உள்ள இடம் என்றால் டெல்லி என யோசிக்காமல் சொல்வார்கள்..
அந்த அளவிற்கு அங்கு காற்று மா
சு பட்டிருக்குமோ என்ற கேள்வி எழும்.. அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், வாகனங்களில் இருந்து வெளிவரும் கரும்புகை முக்கிய காரணமாக கூறப்பட்டது.
இதனால் மக்களுக்கு பல உடல் நலக்கோளாறு ஏற்படுகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க ..எப்படியாவது இயற்கை வளங்களை பேணி காக்க வேண்டும் விவசாயத்தை மேம்படுத்திட வேண்டும்..விவசாயம் அழியக் கூடாது என தினம் தினம் போராடி வரும் இந்த தமிழகத்தில் தான், தற்போது  தூய்மையான காற்று விலைக்கு வந்துள்ளது
எதற்கெடுத்தாலும் மரம் வெட்டி, இருக்கும் நிலங்கள எல்லாம் பிளாட்  போட்டு விற்பது முதல், சாலைகள் அமைக்க அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் விவசாயம் நிலம் வரை....அனைத்தையும் வைத்து பார்த்தால் இயற்கையான முறையில்  இனி வாழ்வதற்கு முடியுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டுள்ளது என்றே கூறலாம்...
சென்னையில் இன்று...
தமிழகத்தின் தலைமை இடமான சென்னையில் தற்போது சுத்தமான காற்று விலைக்கு வந்து உள்ளது. இது தனியார் நிறுவனம் (பிளிப்கார்டிலும் கிடைக்கிறது)
விலை எவ்வளவு தெரியுமா ..?
6 லிட்டர் ஆக்ஸிஜன் விலை : ரூ. 635
பொதுவாக தெரு தெருவாக சிம் கார்டு தான் நிழற்குடை போட்டு விற்பனை செய்து வந்தனர். இனி சுத்தமான காற்று வாங்க கூட தெரு தெருவா அலைய வேண்டிய நிலை உருவாகும் என்பதில் எந்த விதமாற்றமும் இருக்காது  என்ற நிலையை இப்போதே உணர வைத்து உள்ளது இந்த விவகாரம்.

Wednesday, 20 March 2019

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை

பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகார் அளித்ததையடுத்து, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது காவலில் உள்ளனர். தவிர, புகார் கொடுத்த பெண்ணின் அண்ணனைத் தாக்கியதாக வேறு நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.  இந்த கும்பலால் பொள்ளாச்சி பகுதியில் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வரும் நிலையில், ‘ஒரு பெண்ணைத் தவிர வேறு யாரும் புகார் தரவில்லை’ என்கிறது போலீஸ். ஆனால், ‘புகார் தந்த பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீஸ் பகிரங்கப்படுத்தி விட்டது. அதனால்தான், மற்ற பெண்கள் புகார் தர முன்வரவில்லை. புகார் கொடுக்க நினைக்கும் பெண்களை மறைமுகமாக மிரட்டவே போலீஸ் இப்படிச் செய்துள்ளது’ என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி அல்லது சைபர் க்ரைம் போலீஸார் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற எதிர்க் கட்சியினரின் கோரிக்கையும் கண்டுகொள்ளப்படவில்லை. ‘இந்த வழக்கின் விசாரணையை பெண் போலீஸ் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்ற ஜனநாயக மாதர் சங்கத்தினரின் கோரிக்கையும் கண்டுகொள்ளப்படவில்லை. கைதான நால்வரையும் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கவும் இல்லை. இந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கி வரும் நிலையில் ஐ.ஜி பெரியய்யா, கோவை எஸ்.பி பாண்டியராஜன் என போலீஸ் உயரதிகாரிகள் பொள்ளாச்சிப் பக்கம் எட்டிப்பார்க்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.

Thursday, 28 February 2019

2019 புல்வாமா தாக்குதல்

2019 புல்வாமா தாக்குதல் என்பது இந்தியாவின், சம்மு காசுமீர், புல்வாமா மாவட்ட அவந்திபோரா பகுதியில் ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், மத்திய சேமக் காவல் படையினர் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது 2019 பிப்ரவரி 14 ஆம் நாள் நடந்த தற்கொலைத் தாக்குதல் ஆகும். இத்தாக்குதலில் 40 பாதுகாப்புப் படையினரும், தற்கொலை தீவிரவாதி ஒருவரும் உயிரிழந்தனர். இத்தாக்குதலுக்கு ஜெய்சு-இ-முகமது என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்றது.

2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியப் பாதுகாப்புப் படையின் மீது பாக்கிஸ்தான் ஆதரவு ஆயுதக்குழுக்களின் தற்கொலைத் தாக்குதல்கள் அதிகரித்தன. 2015 சூலை மாதத்தில் துப்பாக்கி ஏந்திய மூவர் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் பேருந்து மற்றும் காவல் நிலையத்தைத் தாக்கினர். 2016 சனவரியில் துப்பாக்கியுடன் பதான்கோட் வான் படை நிலையத்தில் தாக்குதல் நடந்தது. 2016 பிப்ரவரி மற்றும் ஜீன் காலகட்டத்தில் எட்டு இராணுவத்தினர் பொம்பொரி தாக்குதலில் உயிரிழந்தனர். 2016 செப்டம்பரில் இந்திய இராணுவப் பட்டாளத் தலைமையகத்தில் நிகழ்ந்த யூரி தாக்குதலில் 19 படையினர் உயிரிழந்தனர். 2017 டிசம்பர் 31 இல் லெத்திபோரா கமொண்டோ பயிற்சி நிலையத்தில் நடந்த தாக்குதலில் ஐந்து பாதுகாப்பு அதிகாரிகள் உயிரிழந்தனர்.
2019 பிப்ரவரி 14 ஆம் நாள் 78 பேருந்துகளில் மொத்தம் 2,547 மத்திய சேமக் காவல் படையினர் (சி.ஆர்.பி.எப்) ஸ்ரீநகரிலிருந்து ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலைவழியாக ஜம்மு காஷ்மீர் சென்று கொண்டிருந்தனர். ஜம்முவிலிருந்து கிளம்பிச் செல்லும் வழியில் இந்திய நேரப்படி 15:15 மணியளவில் லெத்திபோரா மற்றும் அவந்திபோரா பகுதிகளுக்கருகே மகேந்திரா ஸ்கார்பியோ வகை சிற்றுந்தொன்று படையினரின் பேருந்து ஒன்றில் மோதி வெடித்தது. இந்தச் சிற்றுந்தில் சுமார் 350 கிலோ எடைகொண்ட வெடிபொருட்கள் இருந்ததாகவும், அதனை அதில் அகமது தார் என்பவர் ஓட்டிவந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தன. இந்தத் தாக்குதலில் 76 ஆவது பட்டலியனைச் சேர்ந்த நாற்பதிற்கும் மேற்பட்ட காவல்படையினர் இறந்ததாகச் செய்திகள் தெரிவித்தன. இத்தாக்குதலை ஏற்படுத்திய அதில் அகமது தார் என்பவர் ககபோரா பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவராவார். இத்தாக்குதலுக்குப் பாக்கிஸ்தானிய ஆயுதக்குழுவான ஜெய்ஸ்-இ-முகமது பொறுப்பேற்று, அதில் அகமத்தின் காணொளியையும் வெளியிட்டது. அந்தக் காணொளியில் “ஒரு வருடத்திற்கு முன்பு, நான் ஜெய்ஷில் இணைந்தேன். நீண்ட காத்திருப்பிற்கு பின்பு இந்த தாக்குதலை நடத்தியுள்ளேன். இந்த வீடியோவை நீங்கள் காணும் போது, நான் சொர்க்கத்தில் மகிழ்ச்சியுடன் இருப்பேன்” என்று கூறியுள்ளார். 1989 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பாதுகாப்புப் படையினர் மீது நிகழ்ந்த கொடூரமான தாக்குதலாக பிபிசி செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. 
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பன்னிரண்டு வீரர்களும், ராஜஸ்தானைச் சேர்ந்த ஐந்து வீரர்களும், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த நான்கு வீரர்களும், தமிழ் நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், ஒடிசா மற்றும் பீகார் மாநிலங்களைச் சேர்ந்த தலா இரண்டு வீரர்களும், அஸ்ஸாம், கேரளா, கருநாடகா, மத்தியப் பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் மாநிலங்களைச் சேர்ந்த தலா ஒரு வீரர்களும் இத்தாக்குதலில் இறந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டனர். அதில் தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியைச் சேர்ந்த கணபதி என்பவரது மகன் க. சுப்பிரமணியன்(28) மற்றும் அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சின்னையன் என்பவரது மகன் சி. சிவசந்திரன் என்பவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களாவார்கள்.

Tuesday, 1 January 2019

மகிழம் அல்லது வகுளம் அல்லது இலஞ்சி அல்லது மகிழம் மரத்தை பற்றி

Spanish cherry என்று அழைக்கப்படும் இந்த மரம் ஒரு சிற்றின மரம். இதில் நிறைய மருத்துவ பழங்கள் உள்ளவை. இது சங்க காலங்களில் பயன்படுத்தப்பட்டவை
. இம்மரம் தெற்கு ஆசியா, வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள வெப்பமண்டல காடுகளில் காணப்படும் ஒரு நடுத்தர அளவிலான பசுமையான மரமாகும். இந்த மரத்தை பொதுவாக ஆங்கிலத்தில் கட்டை விலைமதிப்பு மிக்கது, இதன் பழம் உண்ணத்தக்கது, மேலும் இதன் பட்டை, பூ போன்றவை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரமானது நல்ல நிழல் தருவதாகவும், வாசம் மிகுந்த மலர்களைக் கொண்டதாலும், இது தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இதன் மலர் தாய்லாந்தின் யலா மாகாணத்தின் மாகாண மலர் ஆகும்.
ஸ்பானிஷ் செர்ரி, மெட்லர், புல்லட் உட் என்று அழைக்கின்றனர். இதன் மரக்

மகிழம் பூ:
இதன் பழம் சாப்பிட உகந்தவை. இதன் பழத்தை பழங்காலத்தில் மருத்துவத்தில் பயன்படுத்தினர். இம்மரம் 16 மீட்டர் வரை வளரக்கூடியது. மார்ச் மாதத்தில் பூத்து ஜூன் மாதத்தில் பழுக்கும். இதன் இலைகள் பளபளப்பாக இருக்கும். இதன் மலர்கள் நறுமணம் கொண்டவை. மணம் மிக்க பூவை மகளிர் தலையில் அணிந்துகொள்வர். இதன் சாற்றினை ஊதுபத்தியில் மணம் சேர்க்கவும், மண-எண்ணெய் மணப்பொடி முதலானவற்றைச் செய்யப் பயன்படுத்துகின்றனர்.


இந்தோ மலேசியத் தாவரம்:
ஆனால், இடைக்கால, பிற்காலத் தமிழ் இலக்கியங்களில் மகிழம் பரவலாக இடம்பெற்றுள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலின் தலப் புராணத்தின்படி மகிழம் என்ற சொல் மங்கலம் (வளமை, புனிதம், முழுமை) என்ற பொருள்படும். மகிழத்தின் மற்றொரு தமிழ்ப்பெயர் இலஞ்சி (வகுளம் இலஞ்சி மகிழ்மரமென்ப – சேந்தன் திவாகரம்) ஆகும். இந்தச் சொல்லைத் திருவிளையாடல் புராணம் கையாண்டுள்ளது (தாதவிழ் மல்லிகை முல்லை இலஞ்சி தடங்கோங்கம்), கம்பரும் கையாண்டுள்ளார்.
இலஞ்சி என்ற தமிழ்ச்சொல் இந்தத் தாவரத்தின் தாவரவியல் பெயரான மிமுசாப்ஸ் இலஞ்சி (Mimusops elengi: Sapotacea - தாவரக் குடும்பம்) என்பதில் சிற்றினப் பெயராகச் சேர்க்கப்பட்டிருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. இந்தோ – மலேசியத் தாவரமான மகிழம், கிழக்கு மலைத்தொடரில் மிகவும் பரவலாகக் காணப்படுகிறது.


தமிழ் இலக்கியம் :
பூவின் மணம் மகிழ்வளிப்பதால், மகிழம் என்று நயமாக அழைக்கப்பட்டாலும் இந்தத் தாவரம் `வகுளம்’ என்ற தமிழ்ப்பெயரின் மரூவுச் சொல்தான். சங்க இலக்கியத்தின் குறிஞ்சிப்பாட்டு (பாடல் 70), பரிபாடல் (12:79), திணைமாலை நூற்றைம்பது (24) ஆகிய மூன்றில் மட்டும் ஒவ்வொரு இடத்தில் வகுளம் சுட்டப்பட்டுள்ளது.
பரிபாடலின் திரட்டுப்பாடல் ஒன்றில் மகிழம் என்ற சொல் வருவதால், அந்தக் காலகட்டத்திலேயே வகுளம், மகிழமாக மருவிவிட்டது எனக் கொள்ளலாம். சங்க இலக்கிய உரையாசிரியர்களும் மகிழத்தை வகுளத்தின் பொருளாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.


இலக்கியம் போற்றிய மலர்
கந்தமதானா காட்டிலும், இந்திரபிரஸ்தாவிலும் இது வளர்ந்து காணப்பட்டதாக மகாபாரதம் குறிப்பிடுகிறது. காளிதாசரின் காவியங்களிலும் மகிழம் சுட்டப்பட்டுள்ளது. மகிழம் குறிஞ்சி நிலத் தாவரம்; பால் (milky latex) கொண்ட பெரிய, பசுமையிலை மரத் தாவரமான இது குறிஞ்சி நிலத்தில் தினை விதைப்பதற்காக வெட்டப்பட்டதாகத் திணைமாலை நூற்றைம்பதில் (24:1) (நறுந்தண் தகரம் வகுளம் இவற்றை) கணிமேதையார் காட்டியுள்ளார். குறிஞ்சி மலைப்பகுதியில் இது வளர்வதைப் பரிபாடல் திரட்டு (1:7,9) சுட்டுகிறது (அணிமலர் வேங்கை மராஅம் மகிழம்… மணி நிறங் கொண்ட மாலை).
மார்ச் முதல் ஜூன்வரை பூக்கும் கோட்டு மலரான மகிழம்பூ சிறியது, அழகிய அமைப்புடையது, மங்கிய மஞ்சள் நிறம் கொண்டது, மிகுந்த மணமுடையது. இந்த மலரின் வடிவத்தைத் தேர்க்காலின் வடிவத்துக்கு ஒப்பிடுகிறார் திருத்தக்க தேவர் (கோடுதையாக் குழிசியோ டாரங் கௌக்குயிற்றிய ஓடு தேர்க்கால் மலர்ந்தன வகுளம் – சீவகசிந்தாமணி). மகரந்தச் சேர்க்கைக்குப் பின்பு இதன் மலர் காம்பிலிருந்து கழன்று, ஒரு சிறு சிலந்திப் பூச்சி கீழே விழுவதைப் போன்று வீழ்கிறது என்றும் சீவக சிந்தாமணி (2108) கூறுகிறது (மதுகலந்தூழ்ந்துச் சிலம்பி வீழ்வன போல மலர் சொரிவன வகுளம்).
ராமன் உருவை அனுமன் வாயிலாகக் கம்பர் விவரிக்கும்போது அவனுடைய கொப்பூழை இந்தப் பூவுக்கு ஒப்பிடுகிறார் (பூவொடு நிலஞ்சுழித்தெழுமணி உந்திநேர்; இனி இலஞ்சியம் போலும் வேறுவமை யாண்டாரோ).
மலரில் அதிகத் தேன் காணப்படும். இந்தப் பூ சுழன்று வீழ்ந்து செவ்வந்தியோடு சேர்ந்து காய்ந்து கிடக்கும்போதுகூட இதன் தேனுக்காக வண்டுகள் மொய்த்தன என்று திருத்தக்கதேவர் கூறுகிறார் (மலர்ந்த செவ்வந்திப்போதும் வகுளமும் முதிர்ந்து வாடி உலர்ந்து மொய்த்தனித்தேன் நக்கிக்கிடப்பன – சீவகசிந்தாமணி). ஆசாராங்கா சூத்ரம் என்ற வடமொழி நூலில் நாள்பட்ட தேன் / சாராயம் ஊற்றினால் வகுளம் பூக்கும் என்று குறிப்பிட்டிருப்பதை இங்குக் குறிப்பிட வேண்டும். சுரபாலரும் தன்னுடைய விருக்ஷாயுர்வேத நூலின் 147-வது பாடலில் இதைப் பற்றி சுட்டிக்காட்டியுள்ளார். மகிழத்தின் கனி முற்றிலும் பழுத்த நிலையில் சிவப்பு நிறங்கொண்டது.

கீழவெண்மணி படுகொலைகள். தமிழகத்தை உலுக்கிய 'கொடுரசம்பவம்'

மிழத்தில் கூலி உயர்வு கேட்டு போராடிய தொழிலாளர்கள், உயிருடன் தீயில் கொளுத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள்
தற்போதைய நாகை மாவட்டத்தில் அமைந்துள்ளது கீழவெண்மணி. ( தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான பழைய தஞ்சை மாவட்டத்தில் முன்னர் இருந்தது.)  தமிழகத்தின் 30% விளைநிலங்களை தன்னகத்தே கொண்டு அமோக விளைச்சல் தரும் பூமி. இப்பூமியில் எங்கு சுற்றினும் பச்சை பசேலேன பசுமை போர்த்திய நெற்பயிர்கள். சில்லென்று வீசும் காற்று, தென்னந்தோப்பு, கரும்புத் தோட்டம் என மனம் வருடிச் செல்லும் இயற்கை சூழல். இங்கு பலதரப்பட்ட நிலமில்லா மக்களும், கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.
இவர்கள் நல்ல வாழ்க்கை முறையை அடைய முயற்சி செய்தும் அதை நிலக்கிழார்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. 1960களில் தஞ்சையில் பண்ணையார்கள், நிலச்சுவான்தார்கள் ஆதிக்கம் வேருன்றி மரமாக வளரத் தொடங்கியிருந்த காலம். பண்ணையார்களிடம்தான் அதிக நிலமும் பணமும் இருந்தது. பண்ணையார்களிடம் வேலை செய்து தங்கள் வாழ்கையை நகர்த்திச் சென்ற கூலித் தொழிலாளர்களை பண்ணையார்கள் தங்கள் அடிமைகளாகவே கருதினர். குறைந்த கூலிக்கு அதிக வேலை வாங்கினார்கள். ஐயா, ஆண்டை என்றுதான் அழைக்க வேண்டும். குறைந்த கூலி, அதுவும் அணாவாக கிடையாது (ஒரு படி நெல்லும் கேப்பை கூழும்தான்) சம்பளம்.

பண்னையார்கள் தொழிலாளர்களிடம் இரக்கமில்லாமல் வேலை வாங்கினர். வயலில் நடவு நடும் பெண்,  ஒருமாதம் முன் பிறந்த தன் பச்சைக் குழந்தையை அங்குள்ள மரத்தில்,  சேலையை கட்டி கிடத்திவிட்டு வேலைசெய்வார். அந்த குழந்தை பசியில் அழுதால் கூட வேலையை முடிக்காமல் பால் கொடுக்கச் செல்லக் கூடாது. மீறினால் வேலை கிடையாது அன்று. சில நேரங்களில் பால் கொடுக்கும் தாயின் மார்பில் எட்டி உதைவிட்டுவிட்டு செல்வர். அங்குள்ள பெண்களை தவறாக அணுகிய சம்பவங்களும் நடந்ததுண்டு.


இந்த நிலையில்தான் 1960களில் இந்திய - சீனப் போரால் பஞ்சம் தலைவிரித்தாடியது. இது கீழவெண்மணி கிராமத்தையும் விட்டுவிடவில்லை. பஞ்சத்தால் குறைந்த கூலியுடன் பிழைப்பை நடத்த முடியாது என்பதால் கூலி உயர்வு கேட்டனர் தொழிலாளர்கள். ஆனாலும் பயனில்லை. இவர்களுக்காக விவசாய தொழிலாளர் சங்கத்தை ஆரம்பிக்கின்றனர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மணியம்மை மற்றும் சீனிவாசராவ். இதில் இணைந்து தங்களுக்கு கூலி உயர்வு கேட்டனர் தொழிலாளர்கள். இவர்களுக்கு போட்டியாக நெல் உற்பத்தியாளர் சங்கம் என்ற சங்கத்தை ஆரம்பிக்கின்றனர் நிலக்கிழார்கள்.
தொழிலாளர்கள் கூடுதலாக கேட்கும் அரை படி நெல்லை தருவதற்கு மனமில்லை. உழைப்புக்கு ஏற்ற கூலி கொடுக்காமல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றது. ஆனாலும் நேற்று வரை நமக்கு கீழ் கைகட்டி வாய்பொத்தி வேலை பார்த்தவர்கள்,  நமக்கு எதிரே அமர்ந்து நம்மிடமே பேச்சுவார்த்தை நடத்துவதா என்ற பெருங்கோபம் சம்பந்தப்பட்ட பண்ணையார்களிடம் கனன்று வந்தது. 'எங்களுக்கு எதிராக சங்கம் ஆரம்பிக்கிறீங்களா..?' என்று கீழவெண்மணியை சேர்ந்த முத்துகுமார், கணபதி இருவரை கட்டிவைத்து அடித்தனர். இதை எதிர்த்து தொழிலாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதனால் கீழவெண்மணியில் கலவரம் மூண்டது.

1968 டிசம்பர் 25 அன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்க,  கீழவெண்மணி மக்களுக்கோ அன்று  இருண்ட நாளாக அமைந்தது.

'தனக்கு அடிமையாக இருந்தவர்கள் தன்னை எதிர்ப்பதா?' என்று ஆத்திரம் கொண்ட பண்ணையார் கோபாலகிருஷ்ணன் என்பவர், தனது அடியாட்களுடன் பெட்ரோல் கேன்கள், நாட்டுத் துப்பாக்கி சகிதம் வந்திறங்கினார். அவர்களுக்கு போலீசாரும் துணை நின்றனர். அவர்கள் முன்னிலையில் அந்த கொடிய சம்பவத்தை அரங்கேற்றினர். காட்டில் மிருகம் வேட்டையாடப்படுவது போல் கண்ணுக்கு கிடைப்பவர்கள் எல்லாம் சுடப்பட்டனர்.

எதிர்த்தால் கட்டி வைத்து அடித்து உதைதான். ஆபாச வார்த்தை அர்ச்சனைகளால் பெண்கள் கூனிக் குறுகிவிடுவர். எதிர்த்தால் பிழைப்பு கெட்டுவிடும். ஒரு பண்ணையாரிடம் முறைத்துக்கொண்டு மற்றொருவரிடம் செல்ல முடியாதபடி பண்ணையார்கள் தங்களுக்குள் நல்ல பிணைப்பை உருவாக்கி வைத்திருந்தனர். சாணிப்பால், சவுக்கடி இவையெல்லாம் சர்வசாதாரணமான தண்டனைகள் அங்கே.
இப்படி சுடப்பட்டவர்கள் கிட்டத்தட்ட 10 பேருக்கு மேல் இருப்பார்கள். இதனைக்கண்டு பயந்து நாலா மூலைக்கும் சிதறி ஓடி, வாய்க்கால் வரப்புகளில் ஒடி ஒளிந்துகொண்டனர் தொழிலாளர்கள். அனைத்து குடிசைகளும் எரிக்கப்பட்டன. நிராயுதபாணியாக நிற்கும் அப்பாவி பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் உயிரைக் காத்துக்கொள்ள தெரு மூலையில் உள்ள ராமையா என்பவரின் சிறிய கூரைவீட்டில் ஓடி ஒளிந்தனர். வெறிபிடித்து அலைந்தவர்கள் அந்த வீட்டை கண்டுபிடித்து வீட்டை வெளியே தாழிட்டு பெட்ரோலை ஊற்றி எரிக்கின்றனர்.

பூட்டிய வீட்டுக்குள் பெரும் அலறல் சத்தம் எழுந்தது. 'ஐயோ, அம்மா ஆ...ஆ....எரியுதே!' என்ற சத்தம் மட்டும் திரும்ப திரும்ப கேட்கிறது. தான் பிழைக்காவிட்டாலும் தன் குழந்தையாவது பிழைக்கட்டும் என்று ஒரு பெண் தன் குழந்தையை தூக்கி எறிகிறார். கொடூரர்கள் குழந்தை என்றும் பாராமல் வெட்டி வீழ்த்தி தீயில் எரித்தனர். வெளிய வர முயற்சித்தவர்களை மறுபடியும் உள்ளே தள்ளினர்.

வெளியில் நின்று அழுத மூன்று பிஞ்சுக் குழந்தைகளையும் தீயின் உள்ளே தள்ளினர். தீயின் கோர நாக்குகளுக்கு சற்று நேரத்தில் 20 பெண்கள், 19 குழந்தைகள், 6 ஆண்கள்  என 44 உயிர்கள் தீக்கிரையானது. ஒரு பெண் தனது மகளையும் சேர்த்து கெட்டியாக அணைத்துக் கொண்டு கருகியிருந்தார்.

மறுநாள் தினசரிகளில் கிழவெண்மனி படுகொலை சம்பவம்தான் தலைப்புச்செய்தி. நாடு முழுவதும் அதிர்வலைகள் உருவானது. தலைவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டனர். சீன வானொலிகளில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்டன இச்செய்தி. இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. முதல் வழக்கில் தொழிலாளர்கள் 120 பேரின் மீதும் இரண்டாவது வழக்கில் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதற்கு சரியான தண்டனை கிடைத்ததா...? இரண்டாவது வழக்கில் கோபாலகிருஷ்ணனுக்கும் அவருடைய  ஆதரவாளர்கள் 7 பேருக்கும் 10 வருடம் சிறைத் தண்டனை

மேற்முறையீட்டுக்காக வழக்குகள் உயர்நீதிமன்றம் சென்றன. முதல்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தொழிலாளர்களுக்கு ஜாமீன் மறுத்த நீதிமன்றம், கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரோடு சேர்ந்து தண்டனை பெற்ற 7 மிராசுதார்களுக்கும் ஜாமீன் வழங்கியது. அப்பாவி தொழிலாளர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.

இது மட்டும்தானா...? இல்லை, இன்னும் இருக்கிறது. இறுதித் தீர்ப்பில் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதற்கு உயர் நீதிமன்றம் சொன்ன காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது தொழிலாளர்களுக்கு.

“இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவருமே நிலக்கிழார்களாக இருப்பது வியப்பாக உள்ளது. அவர்கள் அனைவரும்  பணக்காரர்கள். கவுரவமிக்க சமூக பொறுப்புள்ள அவர்கள் இந்த குற்றத்தை செய்திருக்க மாட்டார்கள் என நம்புகிறோம்” -இதுதான் தீர்ப்பு. ஒருவர் விடுதலையாவதற்கான தகுதி அவர் பணக்காரர். இந்த ஒரே காரணத்தை வைத்துக்கொண்டு அப்பாவி தொழிலாளர்களை, அவர்களின் குழந்தைகளை எரித்துக் கொண்றவர்களுக்கு தீர்ப்பு விடுதலை. இதுதான் அன்றைக்கு தொழிலாளர்களின் நிலை.

இந்த கொடூரத்தில் தப்பிப் பிழைத்தவர்களை பங்கேற்க வைத்து ஆவணப் பட இயக்குனர் பாரதி கிருஷ்ண குமார், 'ராமையாவின் குடிசை' என்ற ஆவனப்படத்தை இயக்கியுள்ளார்.
இது பல்வேறு அதிர்வலைகளை உருவாக்கியது. இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் நினைவாக கீழ வெண்மணியில் நினைவுத் தூண் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.




மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

  பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...