Wednesday, 28 February 2018

மன்னிப்பு தமிழ்ச் சொல்லே !


Mannippu - indeed a Tamil word…
Mannuthal (adj) - to think ; to consider.
Mannal / Mannuthal -
மன்னிப்பு தமிழ்ச் சொல்லே !

 மன்னுதல் = கருதுதல், எண்ணுதல். (Consider, Think)

 (மன்னல் - தொழிற்பெயர்: Verb
 மன் - முதனிலைத் தொழிற் பெயர். மான் முதனிலை திரிந்த தொழிற்பெயர். மான் +அம் =மானம்).

மன்னல் / மன்னுதல் என்றால் தன்னிலையில் மாறாது நிற்றல் என்பது பொருள்.(Being constant in one's opinion)

மன் + இற்றல் = மன்னிற்றல்.

 இற்றல் - இல் ; இல்லாமல்; போக்குதல்.

 மன்னித்தல் = தன்னிலையில் இருந்து மாறுதல்; முடிவை மாற்றிக் கொள்ளுதல் ; தன்னிலையில் இருந்து பிறர் பொருட்டு இறங்கி வருதல். (Descending for others, changing opinions / decisions)
(மன்றாட்டம்--மன்றாட்டு/மன்னாட்டு)
Petition, request, en treaty, prayer, வேண்டுகை).

Tuesday, 27 February 2018

Bloom Energy’s fuel cell technology: a clean method of electricity generation

Way back in 1994, NASA scientist K.R. Sridhar began work on creating a technology that would sustain life on Mars. However, the Mars mission didn't take off. But Dr. Sridhar didn’t let the work go to waste.
In 2001, he began tweaking the

technology to create electricity in an easy and non-polluting manner. At the core is the Solid Oxide Fuel Cell that converts fuel into electricity through a clean electrochemical process, said Dr. Sridhar, Founder, Chairman and Chief Executive Officer of Bloom Energy. Today, his company produces clean power for over 100 of the Fortune 500 companies that belong to sectors like FMCG, IT, telecom, retailing and e-commerce.
Unlike the conventional method that involves conversion of different types of energy resulting in huge transmission loss, this method uses direct energy conversion. Fuel goes on one side, air on the other side, and without fire or combustion, through an electrochemical process they react, and electrical energy is released.
The fuel cell system can use any type of fuel, including biogas that can be produced from waste. One Bloom Energy Server provides 250 kilowatts of power round-the-clock. The size of one unit is that of a shipping container and can power a large megastore or office complex. If the requirement is 10 times of this, 10 such units are installed.
Some of the companies that are using this technology are Apple, Google, Walmart, AT&T, eBay, Staples, and Coca-Cola, as well as non-profit organisations and universities.
In India, the technology has been deployed at one installation, for which the natural gas is being supplied by GAIL, with which Bloom Energy has signed an MoU recently.
Distributed electricity
Dr. Sridhar was in Bengaluru recently, and he spoke to The Hindu about the technology and how it would benefit India. He began by drawing a parallel with the revolution brought in by computers and mobile phones.
“It started with huge mainframe computers. When distributed computing came, it first became accessible, and then with volume and scale, it became affordable. Another example is telephony. When cellphones came, only the celebrities had it at first. It wasn’t affordable. Later prices dropped with better technology. What this teaches us is that if you want accessibility, affordability and ubiquitousness, then it better be distributed and not centralized,” he said.
Dr. Sridhar said the current methodology of power generation fails in two ways: one, it is polluting and two, it is not affordable. To solve this problem, Bloom Energy solution is pegged to the principle of distributed electricity.
“We have created a disruptive platform where we produce electricity of digital quality and 24x7 reliability. We take the most benign of the fossil fuels, natural gas, and convert that in the most efficient way with zero pollutants.” He said the Bloom solution needs neither huge power grids nor water; and occupies far less land compared to alternatives like solar power.
Turning liability into assets
Dr. Sridhar said considering the mounting demand for electricity, India can shift from the existing infrastructure that is capital intensive, inflexible and requires long planning horizons to Bloom Energy Servers that are highly flexible, modular, upgradeable and rapidly deployable.
Being early days, right now it makes better sense to deploy this technology for large complexes that use huge amounts of electricity and power backups. “Our vision is, in future, we will have the cheapest way to produce power,” said Dr. Sridhar.
“In the future of 10 billion planet, there will be huge amounts of human, animal and plant waste which will be one of our biggest liabilities. Or, it can be converted into an asset, by locally converting small amounts of it, to electricity,” he said.

Thursday, 1 February 2018

தண்ணீரில்லா முதல் நகரமாக மாறும் கேப்டவுன்...

தென் ஆப்பிரிக்காவின் 2வது பெரிய நகரமான கேப்டவுனில் முழுமையாக தண்ணீர் தீர்ந்துப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 40 லட்சம் பேர் வசிக்கும் கேப்டவுனில் மூன்று ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால், பெரும்பாலான நீர் நிலையங்கள் வற்றி விட்டன. 
 

இதனால் மக்களுக்கு தேவையான் நீர் அளவிடப்பட்டு திறந்து விடப்படுகிறது. தினமும் மக்களின் தேவைக்காக தண்ணீர் திறந்துவிடப்படுவதால், தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே போகிறது.
இந்நிலையில், கேப்டவுனில் கார் சுத்தம் செய்தல் மற்றும் நீச்சல் குளங்களுக்கு தண்ணீர் பயன்படுத்துதல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது 80 லிட்டர் தண்ணீர் மக்களுக்கு வழங்கப்படுகிறது.
அடுத்த மாதம் முதல் இதன் அளவு 30 லிட்டர் குறைக்கப்பட்டு 50 லிட்டர் மட்டுமே வழங்கப்படும் என தென் ஆப்பிரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மக்களும் தங்கல் பங்கிற்கு தண்ணீரை மறு சுழற்சி செய்தும் பயன்படுத்தி வருகின்றனர்.
இதே நிலை தொடர்ந்தால் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி கேப்டவுனில் நீர் முற்றிலும் தீர்ந்துபோகும் என அறிவிக்கப்பட்டது தற்போது ஏப்ரல் 12 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, 28 January 2018

தமிழக அரசு பேருந்துகளின் கட்டணம் 60 % உயர்வு

2014 ஆகஸ்ட் மாதத்திற்கு பின் இப்போது பெட்ரோல் விலை உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.12. டீசல் 66.84. 2017 ஜூன் மாதம் பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தபின் பெட்ரோல் விலை 8 சதவீதமும், டீசல் விலை 12 சதவீதமும் உயர்ந்திருக்கிறது என்றால் மத்திய, மாநில அரசுகள் எந்த அளவுக்கு பெட்ரோலிய பொருட்கள் மீது வரியை சுமத்தி உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும். இதற்கும் 2014ல் பெட்ரோல் மற்றும் டீசலை பிரித்து எடுக்கும் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 109 டாலராக இருந்தது. அப்போதும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.75க்குள் இருந்தது. இப்போது அதே கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 70 டாலருக்குள் தான் உள்ளது.
 எப்படிப்பார்த்தாலும் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.50 முதல் 55க்குள் தான் இருக்க வேண்டும். ஆனால் விலை இந்த அளவுக்கு உயர காரணம் வரிகள். இது லாபத்திற்காகவும், அரசு வருமானத்திற்காகவும் மக்கள் மீது சுமத்தப்பட்ட சுமை. இந்த விலையில் லிட்டருக்கு ரூ.19 மத்திய அரசு வரியாக வசூலிக்கிறது. அதே போல் தமிழகத்தை பொறுத்தவரையில் ஒரு லிட்டர் விலையில் 34 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த அரசுகள் பற்றி புரிந்திருக்கும்.


அதனால்தான் பஸ் கட்டணம் ஒரே இரவில் 60 முதல் 100 சதவீதம் வரை தமிழகத்தில் உயர்த்தப்பட்டு இருக்கிறது. போக்குவரத்து துறையை சீரழித்த குறைகள், ஓட்டைகள், ஊழல்கள் உள்பட இன்னும் பல காரணிகள் இன்று வரை திருத்தப்படவில்லை. அல்லது சரிசெய்ய விரும்பவில்லை. ஆனால் சுமை மட்டும் மக்கள் தலையில். இது எந்த வகையில் நியாயம்?. இதே போல் 2014ல் ரூ.450க்குள் இருந்த காஸ் சிலிண்டர் விலை இன்று ரூ.750ஐ எட்டிவிட்டது. மானியம் எவ்வளவு வருகிறது என்பது ஒவ்வொருவரின் வங்கி கணக்கை பார்த்தாலே தெரியும். அத்தனையும் மக்களை ஏமாற்றும் வேலை. மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய அரசுகளே இன்று சேவைக்குப்பதில், ஏழை எளிய மக்களிடம் இருந்து பணம் பிடுங்கும் பணியை மட்டும் பிரதானமாக செய்து வருவது நல்ல அரசுக்கு அழகல்ல. மக்களின் மேல் தாங்க முடியாத சுமையை ஏற்றுவதும் நல்லதல்ல. இப்படிப்பட்ட நிலையை மக்கள் ஒருபோதும் அனுமதிக்கவும் மாட்டார்கள். ஒட்டுமொத்தத்தில் விலைவாசியை உயர்த்தக்கூடிய அத்தனை காரணிகளின் விலையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொதித்துபோய் இருக்கும் மக்கள் ஒருநாள் நிச்சயம் பதில் சொல்வார்கள்.


Saturday, 27 January 2018

மாநில மொழிகளின் சவால்!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பள்ளிக்கூடங்களில் முதல் மரியாதை தாய்மொழிக்கும், அதற்குப் பிறகுதான் ஆங்கிலத்துக்கும் தரப்பட வேண்டும் என்றும், அதன் மூலம் மட்டுமே இந்தியாவின் கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நாம் பாதுகாக்க முடியும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறியிருப்பதை 'இந்துத்துவ' வாதக் கண்ணோட்டம் என்று புறம்தள்ளிவிடலாகாது. 
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த செப்டம்பர் மாதம் தில்லியில் நடந்த 'இந்தி தினம்' கொண்டாட்டத்தில் ஆற்றிய உரை அவரது சொந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்திலேயே சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியது. இந்தி பேசும் மாநில மக்கள் ஏனைய மாநில மொழி பேசுபவர்களுக்குக் கூடுதல் மரியாதையும், போதிய இடமும் தருவதன் மூலம்தான் அவர்களது அன்பையும் ஆதரவையும் பெறமுடியும் என்று கருத்துத் தெரிவித்திருந்தார் குடியரசுத் தலைவர். 
'இந்தியை தேசிய மொழியாக அறிவித்திருந்தாலும்கூட அதற்கு இந்தியாவின் சில பகுதிகளில் கடுமையான எதிர்ப்பு இருக்கிறது என்பதைப் புறம்தள்ளிவிட முடியாது. அவர்கள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தவும் முடியாது. இந்தியா என்பது அனைவருக்கும் பொதுவான தேசம்' என்று குறிப்பிட்டிருந்தார் அவர்.
'இந்தியாவில், வழக்குரைஞர்கள், மருத்துவர்கள் பேசும் மொழிகளை சாமானிய மக்கள் புரிந்து கொள்வதில்லை. எல்லோருமே ஆங்கிலம் படித்தவர்கள் அல்ல. நீதிமன்றங்களில் மெல்ல மெல்ல இந்தியும் ஏனைய மாநில மொழிகளும் கையாளப்படும் சூழல் உருவாகி வருகிறது. ஆனால், இன்னும்கூட ஆங்கிலம்தான் வழக்காடு மொழியாக இருக்கிறதே தவிர, மாநில மொழிகள் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. அதனால், என்ன விவாதிக்கப்படுகிறது என்பதை வழக்குத் தொடுத்தவர் புரிந்து கொள்ள முடியாத நிலைதான் காணப்படுகிறது. அதேபோல மருத்துவர்களும் மருந்துகளை ஆங்கிலத்தில்தான் எழுதுகிறார்கள். மருந்துச் சீட்டுகள் மக்கள் படித்துத் தெரிந்து கொள்ளும் மொழியில் அமைந்தால்தான் மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையே இடைவெளி குறைந்து புரிதல் அதிகரிக்கும்' என்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்திருந்தார்.
'இந்தி தினம்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்த கருத்தும் பாராட்டுக்குரியது. இந்தி பேசும் மக்கள் இந்தியாவின் பிற மொழிகளிலுள்ள வார்த்தைகளைப் பயன்படுத்த முற்பட வேண்டும் என்றும், அதன் மூலம் ஆங்கிலக் கலப்பைத் தவிர்த்து இந்தியை வளப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார். அவரும் மாநில மொழிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசியது ஆச்சரியமாக இருந்தது.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தன்னுடைய உரைகளில் தொடர்ந்து மாநில மொழிகளுக்கு முன்னுரிமை வழங்குவது குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். ஆங்கிலத்தில் படித்தால் மட்டுமே நாடு வளர்ச்சி அடைய முடியும் என்கிற கருத்தை சீனா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், ரஷியா முதலிய நாடுகள் பொய்ப்பித்திருக்கின்றன என்று சுட்டிக்காட்டி இருக்கிறார் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு. அமெரிக்காவின் வளர்ச்சிக்குக் காரணம் அவர்கள் தங்களது தாய்மொழியான ஆங்கிலத்தில் படிப்பதுதான் என்று கூறி, தாய்மொழிக் கல்விக்கு ஆதரவு திரட்ட முற்பட்டிருக்கும் அவரது முயற்சி தொடர வேண்டும்.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறுவது போல கலாசார, பண்பாட்டு விழுமியங்களையும் இனத்தின் அடையாளங்களையும் பாதுகாப்பது தாய்மொழியாகத்தான் இருக்க முடியும். இன்னொரு தேசத்தைக் கைப்பற்றும் எந்தவொரு நாடும், தனது கலாசாரத்தை நிலைநாட்டுவதற்குத் தங்களது தாய்மொழியைக் கட்டாயப்படுத்துவதுதான் தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்படும் வழிமுறை. இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேய, பிரெஞ்சு, போர்த்துகீசிய காலனிய ஆட்சியாளர்கள் அவர்கள் கைப்பற்றிய இடங்களில் தங்களது மொழியைப் பரப்புவதில் முனைப்பாக இருந்தனர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
உலகளவில் இன்னும் 100 ஆண்டுகளில் அழிந்துவிடும் வாய்ப்புள்ள 25 மொழிகளில் தமிழ்மொழி எட்டாவது இடத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் 'யுனெஸ்கோ' நிறுவனம் பத்தாண்டுகளுக்கு முன்பே எச்சரித்திருந்தது. மொழிகள் அழிவதற்கான பல காரணங்களையும் 'யுனெஸ்கோ' பட்டியலிட்டிருந்தது.
சொந்த மக்களால் கைவிடப்படுதல், ஆதிக்க மொழிகளால் கழுத்து நெரிக்கப்படுதல், பயன்படுத்தாமல் ஒதுக்கி வைத்தல், தங்களது தாய்மொழியை மதிப்புக் குறைந்ததாக நினைத்தல் என்கிற நான்கு முக்கியமான காரணங்களால் மொழிகள் மெல்ல மெல்ல அழிவதாகக் கூறுகிறது யுனெஸ்கோ. இந்தியாவிலுள்ள தமிழ் உள்ளிட்ட பல்வேறு மாநில மொழிகள் எதிர்கொள்ளும் சவால்கள்தான் மேலே குறிப்பிட்ட நான்கு காரணங்களும்.
உலகளவில் இப்போதைக்கு 7105 மொழிகளும், அதில் இந்தியாவில் மட்டும் சுமார் 880 மொழிகளும் பயன்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் 220 மொழிகள் அழிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலைமை தொடர்ந்துவிடக் கூடாது. மாநில மொழிகளைப் பாதுகாக்க வேண்டும் என்கிற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் அறைகூவலும், குடியரசுத் துணைத் தலைவர் 
வெங்கய்ய நாயுடுவின் கவலையும் மத்திய ஆட்சியாளர்களை நிமிர்ந்து உட்கார்ந்து, மாநில மொழிகளின் வளர்ச்சி குறித்து யோசிக்க வைக்க வேண்டும்!
 

Sunday, 21 January 2018

Tamil Nadu - India's Economic powerhouse


We have everything in our mother Tongue.

  • watching cricket in Tamil
  • Top hit Hindi movies in Tamil
  • BBC in Tamil
  • Discovery ,Nat Geo channels in Tamil
  • Science research In Tamil
  • Own Media
  • Own Film Industry
  • Own political Parties
  • Own education infrastructure
  • Own Metros to work.
  • Own Wikipedia
  • Own medical system (siddha)
  • Google in Tamil
  • FB in Tamil
  • Ubuntu in Tamil
  • Microsoft In Tamil
  • Android In Tamil
  • iOS In Tamil
  • literature in Tamil
  • Twitter in Tamil
  • Snapdeal in Tamil
  • Prime minister speaks in Tamil
  • Godaddy in Tamil
  • Youtube in Tamil
  • Twitter in Tamil
  • Own culture
  • Tamil nadu is a hub to automobile
  • State with most number of Business Enterprises
  • Highest number of Chess Grandmasters
  • Highest number of presidents.
  • 22nd must visit place in the world by NYT.
  • Best medical facility (even 100000+ of foreigner come here for Treatment)
Lets see another
We have contributed our Nation as
  • 3 Nobel Prizes out of 8
  • 2 Oscar Awards out of 6
So Many 

Wednesday, 13 December 2017

உடுமலை ஆணவக் கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனை: ஒருவருக்கு ஆயுள்; மூவரை விடுவித்து நீதிமன்றம் உத்தர

உடுமலை சங்கர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அதிரடி உத்தரவிட்டது. மேலும், ஒருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை, ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும், மூவரை விடுவித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உடுமலை அருகிலுள்ள மடத்துக்குளம் தாலுகாவுக்கு உள்பட்ட குமரலிங்கம், சாவடி வீதியைச் சேர்ந்தவர் வேலுசாமியின் மகன் சங்கர் (22). திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்தவர் கௌசல்யா (20). பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த நிலையில், இரு வேறு ஜாதிகளைச் சார்ந்த இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கௌசல்யா வீட்டில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், 2016 மார்ச் 13-ஆம் தேதி உடுமலை பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த இத் தம்பதியை, வாகனங்களில் வந்த ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியது. படுகாயமடைந்த இருவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சங்கர் உயிரிழந்தார். சிகிச்சைக்குப் பிறகு கௌசல்யா வீடு திரும்பினார்.
இக்கொலை தொடர்பாக உடுமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தனிப் படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இவ்வழக்கில், பேருந்து நிலையம் அருகிலுள்ள கடை ஒன்றின் கண்காணிப்பு கேமரா பதிவுகள் மிகவும் உதவியாக இருந்தன.
இந்நிலையில், கௌசல்யாவின் தந்தையான திண்டுக்கல் மாவட்டம், பழனி, திருநகரைச் சேர்ந்த பி.சின்னசாமி (41), உடுமலையில் படித்து வந்த கல்லூரி மாணவரான பழனி, கரிகாரன்புதூரைச் சேர்ந்த பிரசன்னா (எ) வி.பிரசன்னகுமார் (20) ஆகியோர் நிலக்கோட்டை நீதிமன்றத்திலும், கௌசல்யாவின் தாய் சி.அன்னலட்சுமி (36) தேனி நீதிமன்றத்திலும் சரணடைந்தனர்.
இதுதவிர, கௌசல்யாவின் மாமா, திண்டுக்கல், ஆர்.எம்.காலனியைச் சேர்ந்த பி.பாண்டிதுரை (50), பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த பி.ஜெகதீசன் (32), பழனி, ராமர் கோயில் தெருவைச் சேர்ந்த எம்.மணிகண்டன் (26), திண்டுக்கல், செல்லாண்டியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பி.செல்வகுமார் (26), புதுப்பட்டி, பொன்மாந்தூரைச் சேர்ந்த பி. தமிழ் கலைவாணன் (25), வாணிவிலாஸ் இறக்கம் பகுதியைச் சேர்ந்த எம்.மதன் (எ) மைக்கேல் (26), புதுப்பட்டி, காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கே.ஸ்டீபன் தன்ராஜ் (24), பட்டிவீரன்பட்டி, இளங்கோவடிகள் தெருவைச் சேர்ந்த எம்.மணிகண்டன் (40) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது கூட்டு சதி, கொடூர ஆயுதங்களுடன் கலகம் செய்தல், கொலை, கொலை முயற்சி, வன்கொடுமைத் தடுப்பு சட்டப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
உடுமலை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கு, 2016 ஜூன் 8-ஆம் தேதிமுதல் மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, திருப்பூர் வன்கொடுமைத் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
6 பேருக்கு தூக்கு தண்டனை: வழக்கில் கைது செய்யப்பட்ட அன்னலட்சுமி, பாண்டிதுரை, பிரசன்னகுமார் ஆகிய மூவரைத் தவிர, மற்ற அனைவரையும் குற்றவாளிகள் என்று அறிவித்தார் நீதிபதி. அதையடுத்து, குற்றம் சுமத்தப்பட்ட கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், தமிழ் கலைவாணன், மைக்கேல் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். 9-ஆவது குற்றவாளியான ஸ்டீபன் தன்ராஜுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், அன்னலட்சுமி, பாண்டிதுரை, பிரசன்னகுமார் ஆகியோரை விடுதலை செய்தார். வழக்கில் மொத்தமாக ரூ. 11 லட்சத்து 95 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, அந்தப் பணத்தை கௌசல்யா, சங்கரின் தந்தை வேலுசாமி ஆகியோருக்கு நிவாரணமாக அளிக்கவும், அபராதம் செலுத்தத் தவறினால் குற்றவாளிகள் கூடுதல் சிறைத் தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார். தண்டனை வழங்கப்பட்ட அனைவருக்கும் தீர்ப்பு நகல் வழங்கப்பட்டு, கோவை மத்திய சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
நீதி கிடைத்துள்ளது

'எனது கணவர் சங்கர் சிந்திய ரத்தத்துக்கு நீதி கிடைத்துள்ளது. அந்த வகையில் இந்தத் தீர்ப்பை வரவேற்கிறேன்' என்றார் கௌசல்யா.
உடுமலை சங்கர் கொலை வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து சங்கரின் மனைவி கௌசல்யா, உடுமலையை அடுத்துள்ள குமரலிங்கம் கிராமத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
'சங்கர் சிந்திய ரத்தத்துக்கான நீதிக்கு ஒன்றரை ஆண்டுகள் காத்திருந்தேன். அந்த வகையில் இந்தத் தீர்ப்பை வரவேற்கிறேன். இந்தத் தீர்ப்பு ஜாதியக் கொலைகளுக்கு எச்சரிக்கையாக இருக்கும். அதிலும் அதிகபட்ச தண்டனையாக பெரும்பாலான குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு ஜாதி வெறியர்களுக்கும், கௌரவக் கொலை செய்பவர்களுக்கும் இனிமேல் அச்சத்தையும், மனத் தடையையும் ஏற்படுத்தும்.
வழக்கில் இருந்து அன்னலட்சுமி, பாண்டித்துரை, பிரசன்னா ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வேன்'.

மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

  பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...