Thursday, 1 February 2018
தண்ணீரில்லா முதல் நகரமாக மாறும் கேப்டவுன்...
Sunday, 28 January 2018
தமிழக அரசு பேருந்துகளின் கட்டணம் 60 % உயர்வு
எப்படிப்பார்த்தாலும் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.50 முதல் 55க்குள் தான் இருக்க வேண்டும். ஆனால் விலை இந்த அளவுக்கு உயர காரணம் வரிகள். இது லாபத்திற்காகவும், அரசு வருமானத்திற்காகவும் மக்கள் மீது சுமத்தப்பட்ட சுமை. இந்த விலையில் லிட்டருக்கு ரூ.19 மத்திய அரசு வரியாக வசூலிக்கிறது. அதே போல் தமிழகத்தை பொறுத்தவரையில் ஒரு லிட்டர் விலையில் 34 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த அரசுகள் பற்றி புரிந்திருக்கும்.
அதனால்தான் பஸ்
கட்டணம் ஒரே இரவில் 60 முதல் 100 சதவீதம் வரை தமிழகத்தில் உயர்த்தப்பட்டு
இருக்கிறது. போக்குவரத்து துறையை சீரழித்த குறைகள், ஓட்டைகள், ஊழல்கள்
உள்பட இன்னும் பல காரணிகள் இன்று வரை திருத்தப்படவில்லை. அல்லது சரிசெய்ய
விரும்பவில்லை. ஆனால் சுமை மட்டும் மக்கள் தலையில். இது எந்த வகையில்
நியாயம்?. இதே போல் 2014ல் ரூ.450க்குள் இருந்த காஸ் சிலிண்டர் விலை இன்று
ரூ.750ஐ எட்டிவிட்டது. மானியம் எவ்வளவு வருகிறது என்பது ஒவ்வொருவரின் வங்கி
கணக்கை பார்த்தாலே தெரியும். அத்தனையும் மக்களை ஏமாற்றும் வேலை.
மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய அரசுகளே இன்று சேவைக்குப்பதில், ஏழை எளிய
மக்களிடம் இருந்து பணம் பிடுங்கும் பணியை மட்டும் பிரதானமாக செய்து வருவது
நல்ல அரசுக்கு அழகல்ல. மக்களின் மேல் தாங்க முடியாத சுமையை ஏற்றுவதும்
நல்லதல்ல. இப்படிப்பட்ட நிலையை மக்கள் ஒருபோதும் அனுமதிக்கவும்
மாட்டார்கள். ஒட்டுமொத்தத்தில் விலைவாசியை உயர்த்தக்கூடிய அத்தனை
காரணிகளின் விலையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொதித்துபோய் இருக்கும்
மக்கள் ஒருநாள் நிச்சயம் பதில் சொல்வார்கள்.Saturday, 27 January 2018
மாநில மொழிகளின் சவால்!
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பள்ளிக்கூடங்களில் முதல் மரியாதை தாய்மொழிக்கும், அதற்குப் பிறகுதான் ஆங்கிலத்துக்கும் தரப்பட வேண்டும் என்றும், அதன் மூலம் மட்டுமே இந்தியாவின் கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நாம் பாதுகாக்க முடியும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறியிருப்பதை 'இந்துத்துவ' வாதக் கண்ணோட்டம் என்று புறம்தள்ளிவிடலாகாது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த செப்டம்பர் மாதம் தில்லியில் நடந்த 'இந்தி தினம்' கொண்டாட்டத்தில் ஆற்றிய உரை அவரது சொந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்திலேயே சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியது. இந்தி பேசும் மாநில மக்கள் ஏனைய மாநில மொழி பேசுபவர்களுக்குக் கூடுதல் மரியாதையும், போதிய இடமும் தருவதன் மூலம்தான் அவர்களது அன்பையும் ஆதரவையும் பெறமுடியும் என்று கருத்துத் தெரிவித்திருந்தார் குடியரசுத் தலைவர்.
'இந்தியை தேசிய மொழியாக அறிவித்திருந்தாலும்கூட அதற்கு இந்தியாவின் சில பகுதிகளில் கடுமையான எதிர்ப்பு இருக்கிறது என்பதைப் புறம்தள்ளிவிட முடியாது. அவர்கள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தவும் முடியாது. இந்தியா என்பது அனைவருக்கும் பொதுவான தேசம்' என்று குறிப்பிட்டிருந்தார் அவர்.
'இந்தியாவில், வழக்குரைஞர்கள், மருத்துவர்கள் பேசும் மொழிகளை சாமானிய மக்கள் புரிந்து கொள்வதில்லை. எல்லோருமே ஆங்கிலம் படித்தவர்கள் அல்ல. நீதிமன்றங்களில் மெல்ல மெல்ல இந்தியும் ஏனைய மாநில மொழிகளும் கையாளப்படும் சூழல் உருவாகி வருகிறது. ஆனால், இன்னும்கூட ஆங்கிலம்தான் வழக்காடு மொழியாக இருக்கிறதே தவிர, மாநில மொழிகள் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. அதனால், என்ன விவாதிக்கப்படுகிறது என்பதை வழக்குத் தொடுத்தவர் புரிந்து கொள்ள முடியாத நிலைதான் காணப்படுகிறது. அதேபோல மருத்துவர்களும் மருந்துகளை ஆங்கிலத்தில்தான் எழுதுகிறார்கள். மருந்துச் சீட்டுகள் மக்கள் படித்துத் தெரிந்து கொள்ளும் மொழியில் அமைந்தால்தான் மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையே இடைவெளி குறைந்து புரிதல் அதிகரிக்கும்' என்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்திருந்தார்.
'இந்தி தினம்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்த கருத்தும் பாராட்டுக்குரியது. இந்தி பேசும் மக்கள் இந்தியாவின் பிற மொழிகளிலுள்ள வார்த்தைகளைப் பயன்படுத்த முற்பட வேண்டும் என்றும், அதன் மூலம் ஆங்கிலக் கலப்பைத் தவிர்த்து இந்தியை வளப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார். அவரும் மாநில மொழிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசியது ஆச்சரியமாக இருந்தது.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தன்னுடைய உரைகளில் தொடர்ந்து மாநில மொழிகளுக்கு முன்னுரிமை வழங்குவது குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். ஆங்கிலத்தில் படித்தால் மட்டுமே நாடு வளர்ச்சி அடைய முடியும் என்கிற கருத்தை சீனா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், ரஷியா முதலிய நாடுகள் பொய்ப்பித்திருக்கின்றன என்று சுட்டிக்காட்டி இருக்கிறார் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு. அமெரிக்காவின் வளர்ச்சிக்குக் காரணம் அவர்கள் தங்களது தாய்மொழியான ஆங்கிலத்தில் படிப்பதுதான் என்று கூறி, தாய்மொழிக் கல்விக்கு ஆதரவு திரட்ட முற்பட்டிருக்கும் அவரது முயற்சி தொடர வேண்டும்.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறுவது போல கலாசார, பண்பாட்டு விழுமியங்களையும் இனத்தின் அடையாளங்களையும் பாதுகாப்பது தாய்மொழியாகத்தான் இருக்க முடியும். இன்னொரு தேசத்தைக் கைப்பற்றும் எந்தவொரு நாடும், தனது கலாசாரத்தை நிலைநாட்டுவதற்குத் தங்களது தாய்மொழியைக் கட்டாயப்படுத்துவதுதான் தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்படும் வழிமுறை. இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேய, பிரெஞ்சு, போர்த்துகீசிய காலனிய ஆட்சியாளர்கள் அவர்கள் கைப்பற்றிய இடங்களில் தங்களது மொழியைப் பரப்புவதில் முனைப்பாக இருந்தனர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
உலகளவில் இன்னும் 100 ஆண்டுகளில் அழிந்துவிடும் வாய்ப்புள்ள 25 மொழிகளில் தமிழ்மொழி எட்டாவது இடத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் 'யுனெஸ்கோ' நிறுவனம் பத்தாண்டுகளுக்கு முன்பே எச்சரித்திருந்தது. மொழிகள் அழிவதற்கான பல காரணங்களையும் 'யுனெஸ்கோ' பட்டியலிட்டிருந்தது.
சொந்த மக்களால் கைவிடப்படுதல், ஆதிக்க மொழிகளால் கழுத்து நெரிக்கப்படுதல், பயன்படுத்தாமல் ஒதுக்கி வைத்தல், தங்களது தாய்மொழியை மதிப்புக் குறைந்ததாக நினைத்தல் என்கிற நான்கு முக்கியமான காரணங்களால் மொழிகள் மெல்ல மெல்ல அழிவதாகக் கூறுகிறது யுனெஸ்கோ. இந்தியாவிலுள்ள தமிழ் உள்ளிட்ட பல்வேறு மாநில மொழிகள் எதிர்கொள்ளும் சவால்கள்தான் மேலே குறிப்பிட்ட நான்கு காரணங்களும்.
உலகளவில் இப்போதைக்கு 7105 மொழிகளும், அதில் இந்தியாவில் மட்டும் சுமார் 880 மொழிகளும் பயன்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் 220 மொழிகள் அழிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலைமை தொடர்ந்துவிடக் கூடாது. மாநில மொழிகளைப் பாதுகாக்க வேண்டும் என்கிற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் அறைகூவலும், குடியரசுத் துணைத் தலைவர்
வெங்கய்ய நாயுடுவின் கவலையும் மத்திய ஆட்சியாளர்களை நிமிர்ந்து உட்கார்ந்து, மாநில மொழிகளின் வளர்ச்சி குறித்து யோசிக்க வைக்க வேண்டும்!
Sunday, 21 January 2018
Tamil Nadu - India's Economic powerhouse
- watching cricket in Tamil
- Top hit Hindi movies in Tamil
- BBC in Tamil
- Discovery ,Nat Geo channels in Tamil
- Science research In Tamil
- Own Media
- Own Film Industry
- Own political Parties
- Own education infrastructure
- Own Metros to work.
- Own Wikipedia
- Own medical system (siddha)
- Google in Tamil
- FB in Tamil
- Ubuntu in Tamil
- Microsoft In Tamil
- Android In Tamil
- iOS In Tamil
- literature in Tamil
- Twitter in Tamil
- Snapdeal in Tamil
- Prime minister speaks in Tamil
- Godaddy in Tamil
- Youtube in Tamil
- Twitter in Tamil
- Own culture
- Tamil nadu is a hub to automobile
- State with most number of Business Enterprises
- Highest number of Chess Grandmasters
- Highest number of presidents.
- 22nd must visit place in the world by NYT.
- Best medical facility (even 100000+ of foreigner come here for Treatment)
- 3 Nobel Prizes out of 8
- 2 Oscar Awards out of 6
Wednesday, 13 December 2017
உடுமலை ஆணவக் கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனை: ஒருவருக்கு ஆயுள்; மூவரை விடுவித்து நீதிமன்றம் உத்தர
உடுமலை அருகிலுள்ள மடத்துக்குளம் தாலுகாவுக்கு உள்பட்ட குமரலிங்கம், சாவடி வீதியைச் சேர்ந்தவர் வேலுசாமியின் மகன் சங்கர் (22). திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்தவர் கௌசல்யா (20). பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த நிலையில், இரு வேறு ஜாதிகளைச் சார்ந்த இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கௌசல்யா வீட்டில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், 2016 மார்ச் 13-ஆம் தேதி உடுமலை பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த இத் தம்பதியை, வாகனங்களில் வந்த ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியது. படுகாயமடைந்த இருவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சங்கர் உயிரிழந்தார். சிகிச்சைக்குப் பிறகு கௌசல்யா வீடு திரும்பினார்.
இக்கொலை தொடர்பாக உடுமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தனிப் படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இவ்வழக்கில், பேருந்து நிலையம் அருகிலுள்ள கடை ஒன்றின் கண்காணிப்பு கேமரா பதிவுகள் மிகவும் உதவியாக இருந்தன.
இந்நிலையில், கௌசல்யாவின் தந்தையான திண்டுக்கல் மாவட்டம், பழனி, திருநகரைச் சேர்ந்த பி.சின்னசாமி (41), உடுமலையில் படித்து வந்த கல்லூரி மாணவரான பழனி, கரிகாரன்புதூரைச் சேர்ந்த பிரசன்னா (எ) வி.பிரசன்னகுமார் (20) ஆகியோர் நிலக்கோட்டை நீதிமன்றத்திலும், கௌசல்யாவின் தாய் சி.அன்னலட்சுமி (36) தேனி நீதிமன்றத்திலும் சரணடைந்தனர்.
இதுதவிர, கௌசல்யாவின் மாமா, திண்டுக்கல், ஆர்.எம்.காலனியைச் சேர்ந்த பி.பாண்டிதுரை (50), பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த பி.ஜெகதீசன் (32), பழனி, ராமர் கோயில் தெருவைச் சேர்ந்த எம்.மணிகண்டன் (26), திண்டுக்கல், செல்லாண்டியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பி.செல்வகுமார் (26), புதுப்பட்டி, பொன்மாந்தூரைச் சேர்ந்த பி. தமிழ் கலைவாணன் (25), வாணிவிலாஸ் இறக்கம் பகுதியைச் சேர்ந்த எம்.மதன் (எ) மைக்கேல் (26), புதுப்பட்டி, காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கே.ஸ்டீபன் தன்ராஜ் (24), பட்டிவீரன்பட்டி, இளங்கோவடிகள் தெருவைச் சேர்ந்த எம்.மணிகண்டன் (40) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது கூட்டு சதி, கொடூர ஆயுதங்களுடன் கலகம் செய்தல், கொலை, கொலை முயற்சி, வன்கொடுமைத் தடுப்பு சட்டப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
உடுமலை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கு, 2016 ஜூன் 8-ஆம் தேதிமுதல் மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, திருப்பூர் வன்கொடுமைத் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
6 பேருக்கு தூக்கு தண்டனை: வழக்கில் கைது செய்யப்பட்ட அன்னலட்சுமி, பாண்டிதுரை, பிரசன்னகுமார் ஆகிய மூவரைத் தவிர, மற்ற அனைவரையும் குற்றவாளிகள் என்று அறிவித்தார் நீதிபதி. அதையடுத்து, குற்றம் சுமத்தப்பட்ட கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், தமிழ் கலைவாணன், மைக்கேல் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். 9-ஆவது குற்றவாளியான ஸ்டீபன் தன்ராஜுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், அன்னலட்சுமி, பாண்டிதுரை, பிரசன்னகுமார் ஆகியோரை விடுதலை செய்தார். வழக்கில் மொத்தமாக ரூ. 11 லட்சத்து 95 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, அந்தப் பணத்தை கௌசல்யா, சங்கரின் தந்தை வேலுசாமி ஆகியோருக்கு நிவாரணமாக அளிக்கவும், அபராதம் செலுத்தத் தவறினால் குற்றவாளிகள் கூடுதல் சிறைத் தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார். தண்டனை வழங்கப்பட்ட அனைவருக்கும் தீர்ப்பு நகல் வழங்கப்பட்டு, கோவை மத்திய சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
நீதி கிடைத்துள்ளது
'எனது கணவர் சங்கர் சிந்திய ரத்தத்துக்கு நீதி கிடைத்துள்ளது. அந்த வகையில் இந்தத் தீர்ப்பை வரவேற்கிறேன்' என்றார் கௌசல்யா.
உடுமலை சங்கர் கொலை வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து சங்கரின் மனைவி கௌசல்யா, உடுமலையை அடுத்துள்ள குமரலிங்கம் கிராமத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
'சங்கர் சிந்திய ரத்தத்துக்கான நீதிக்கு ஒன்றரை ஆண்டுகள் காத்திருந்தேன். அந்த வகையில் இந்தத் தீர்ப்பை வரவேற்கிறேன். இந்தத் தீர்ப்பு ஜாதியக் கொலைகளுக்கு எச்சரிக்கையாக இருக்கும். அதிலும் அதிகபட்ச தண்டனையாக பெரும்பாலான குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு ஜாதி வெறியர்களுக்கும், கௌரவக் கொலை செய்பவர்களுக்கும் இனிமேல் அச்சத்தையும், மனத் தடையையும் ஏற்படுத்தும்.
வழக்கில் இருந்து அன்னலட்சுமி, பாண்டித்துரை, பிரசன்னா ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வேன்'.
Saturday, 2 December 2017
உத்தரப்பிரதேசம் இந்தியாவின் பாதுகாப்பற்ற மாநிலம்
குற்றங்களில், கடத்தல் குற்றங்கள்தான் முதலிடத்தில் உள்ளன. 2015-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கடத்தல் குற்றங்கள் 6 சதவிகிதம் அதிகரித்துள்ளன. கொள்ளைக் குற்றங்கள் 11.85 சதவிகிதம் குறைந்துள்ளன. இந்தியாவில் 2016-ம் ஆண்டு மட்டும் 30,450 பேர் கொலை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் அதிக சொத்துக் குவிப்பு குற்றங்கள் நடைபெறும் நகரமாக டெல்லி உள்ளது. ஆள் கடத்தல் குற்றங்களில் மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது. சிறப்பு வழக்குகள் சென்னையில் அதிகம் பதிவாகியுள்ளன.
உத்தரப்பிரதேசம் இந்தியாவின் பாதுகாப்பற்ற மாநிலம்:
உத்தரப்பிரதேசம்தான் இந்தியாவில் நடக்கும் குற்றங்களில் அதிக பங்கை வைத்துள்ளது. பின்வரும் குற்றங்களில் டாப் இடம் உத்தரப்பிரதேசத்துக்குத்தான்.1. இந்தியாவில் சைபர் க்ரைம் குற்றங்கள் அதிக அளவில் நடைபெறும் மாநிலம் - 2,639 வழக்குகள்
2. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் அதிகம் உள்ள மாநிலம் - 4,954 வழக்குகள்
3. குழந்தைகள் அதிக அளவில் கடத்தப்படும் மாநிலம் - 9,657 வழக்குகள்
4. பெண்கள், கணவன் மற்றும் உறவினர்களால் பாதிப்புக்குள்ளாகும் மாநிலங்களில் 3-வது இடம் - 11,156 வழக்குகள்
5. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இந்திய அளவில் 2-வது இடம் - 4,816 வழக்குகள்
6. இந்தியாவில் அதிக அளவில் பெண்கள் கடத்தப்படும் மாநிலம் - 12,994 வழக்குகள்
7. பொதுவெளியில் பெண்கள் பாதிப்புக்குள்ளாகும் மாநிலங்களில் 2-வது இடம் - 11,335 வழக்குகள் இப்படிப் பல குற்றங்களில் முதல் மூன்று இடங்களுக்குள் உத்தரப்பிரதேசம் உள்ளது. அதேபோல், இந்தியாவில் அதிக மதக்கலவரங்கள் உத்தரப்பிரதேசத்தில் நடைபெறுகின்றன. 2017-ம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம்வரை மட்டும் மதக்கலவரங்கள் சிறியதும், பெரியதுமாய் 60 சம்பவங்கள் உ.பி-ல் நடைபெற்றுள்ளன. இதில், 16 பேர் இறந்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில்தான் சில மாதங்களுக்கு முன்பு ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 63 குழந்தைகள் மருத்துவமனையில் இறந்தன. இந்தியாவில் நிறைய ஆழ்துளைக் கிணறு மரணங்கள் நடக்கும் மாநிலங்களிலும் உத்தரப்பிரதேசமே முதலிடம் வகிக்கிறது.
Lashkar-e-Taiba தலைவர் Hafiz Muhammad Saeed வீட்டுக் காவலில் இருந்து விடுவித்து பாகிஸ்தான் நீதிமன்றம்
ஹஃபீஸ் சயீது மீது எந்தவொரு பயங்கரவாதக் குற்றச்சாட்டின் அடிப்படையிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. பொது ஒழுங்குக்குப் பங்கம் விளைவிக்க முயன்றார் என்கிற வலுவில்லாத குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் அவர் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அவர்மீது குறிப்பிட்ட எந்தவிதக் குற்றச்சாட்டும் அரசால் முன்வைக்க முடியாததைக் காரணம் காட்டி, இப்போது பாகிஸ்தான் நீதிமன்ற நீதிபதிகள் அவரது நான்காண்டு வீட்டுக் காவலை விலக்கி இருக்கின்றனர்.1990-இல் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பை உருவாக்கியதைத் தொடர்ந்து, பல்வேறு பயங்கரவாதச் செயல்களுக்கான திட்டங்களைத் தீட்டி நிறைவேற்றுவதிலேயே சயீதின் கவனம் முழுவதும் இருந்தது. 1993 முதல் இந்திய ராணுவத்தின் மீதும், பொதுமக்கள் மீதும் தொடர்ந்து பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்தியவர் ஹஃபீஸ் சயீது என்று அமெரிக்க உளவுத்துறையின் கோப்புகள் தெரிவிக்கின்றன. 2001 நாடாளுமன்றத் தாக்குதலுக்கும், 2006-இல் மும்பை ரயில் நிலையத்தில் நடந்த தொடர் வெடிகுண்டுத் தாக்குதலுக்கும் லஷ்கர்-ஏ-தொய்பா காரணமாக இருந்திருக்கிறது. 2001 டிசம்பர் 13 இந்திய நாடாளுமன்றத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, டிசம்பர் 21-ஆம் தேதி பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்ட ஹஃபீஸ் சயீது மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டார். இந்தியாவின் கடுமையான கண்டனத்தைத் தொடர்ந்து மே மாதம் கைது செய்யப்பட்டு, அக்டோபர் மாதம் விடுதலை செய்யப்பட்டார். 2006 மும்பை ரயில் நிலையத் தாக்குதலைத் தொடர்ந்து ஆகஸ்ட் 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, லாகூர் உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து 28-ஆம் தேதியே விடுதலை செய்யப்பட்டு விட்டார். அதே நாள் மீண்டும் கைது செய்யப்பட்டாலும், மீண்டும் நீதிமன்ற உத்தரவின்படி அக்டோபரில் வெளியில் வந்துவிட்டார்.
இப்படி ஹஃபீஸ் சயீது பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்படுவதும், நீதிமன்றம் அவரை விடுவிக்க உத்தரவிடுவதும் தொடர்கதை. இதன் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவமும், ராணுவத்தை அனுசரித்து நடக்கும் நீதித்துறையும் இயங்குகின்றன என்பதுதான் உண்மை. ஹஃபீஸ் சயீதை நீதிமன்றம் விடுவித்திருப்பதன் பின்னணியில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் கட்டுப்பாட்டில் உள்ள அரசியல் தலைமைக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் அதிகாரப் போட்டிதான் காரணம் என்றுகூடச் சொல்லலாம்.
ஹஃபீஸ் சயீதின் மீது வலுவான ஆதாரங்களுடன் குற்றச்சாட்டைப் பதிவு செய்யவோ, அதனடிப்படையில் அவரைக் கைது செய்யவோ முடியவில்லை என்பது, நவாஸ் ஷெரீபின் கரம் வலுவிழந்திருக்கிறது என்பதன் அறிகுறி. அதேபோல, நீதிமன்றம் சயீதை விடுவித்திருப்பது பாகிஸ்தான் ராணுவத்தின் அதிகரித்து வரும் செல்வாக்கை உணர்த்துகிறது.
நவாஸ் ஷெரீபின் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்), பாகிஸ்தான் மக்கள் கட்சி இரண்டையுமே வலுவிழக்கச் செய்வது என்பதுதான் ராணுவத்தின் திட்டம். இவற்றிற்கு மாற்றாகப் பல சிறிய கட்சிகளை ராணுவம் மறைமுகமாக ஊக்குவித்து வருகிறது. கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் கட்சியும் அதில் ஒன்று. லஷ்கர்-ஏ-தொய்பாவையே ஓர் அரசியல் இயக்கமாக மாற்றும் திட்டத்துக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் ஆசி இருக்கிறது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் அடுத்த ஆண்டில் நடைபெற இருக்கும் நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவால் விடுதலை செய்யப்பட்டிருக்கும். ஹஃபீஸ் சயீது தனது தீவிரவாத முகத்துக்கு மேல் அரசியல்வாதி முகமூடி அணிந்து கொண்டாலும் வியப்படையத் தேவையில்லை.
ஹஃபீஸ் சயீது தண்டிக்கப்பட்டால், பாகிஸ்தான் ராணுவத்தின் கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படுகிறது என்று பொருள். ராணுவத்தால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்படுபவைதான் லஷ்கர்-ஏ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள். இந்த அமைப்புகளை உயிர்ப்புடன் வைத்திருப்பதன் மூலம் தனது கட்டுப்பாட்டில் பாகிஸ்தானின் ஆட்சியாளர்களை வைத்துக் கொண்டிருக்கிறது அந்த நாட்டு ராணுவம். அதனால், ஹஃபீஸ் சயீது விடுவிக்கப்பட்டது எதிர்பாராததல்ல.
ஒவ்வொரு முறை ஹஃபீஸ் சயீது விடுவிக்கப்படும்போதும், அடுத்த சில வாரங்களில் எங்கேயாவது தீவிரவாதத் தாக்குதல் நடப்பது என்பது கடந்தகால அனுபவம். ஆப்கானிஸ்தானில் இந்தியாவால் நிறைவேற்றப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களும்,
ஈரானில் இந்திய உதவியுடன் அமைக்கப்பட்டிருக்கும் சபாஹர் துறைமுகமும் தாக்குதலுக்கு ஆளாகாமல் பாதுகாப்பதில் நாம் கவனமாக இருந்தாக வேண்டும்.
ஹஃபீஸ் சயீது அரசியல் கட்சி தொடங்கி ஆட்சியையும் கைப்பற்றினால், பாகிஸ்தானில் இதுவரை அரசு ஆதரவுடன் பயங்கரவாதம் இருந்ததுபோய் வருங்காலத்தில் பயங்கரவாதிகளால் அரசு நடத்தப்படும் நிலைமை ஏற்படக்கூடும். அதுதான் கவலையாக இருக்கிறது!
2008 மும்பை தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்க உள்துறை இவரை சர்வதேச பயங்கரவாதி என்று அறிவித்தது.
மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?
பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...
-
Spanish cherry என்று அழைக்கப்படும் இந்த மரம் ஒரு சிற்றின மரம் . இதில் நிறைய மருத்துவ பழங்கள் உள்ளவை. இது சங்க காலங்களில் பயன்படுத்தப்பட்டவ...
-
பூலான் தேவி ( Phoolan Devi , Aug 10, 1963 - Jul 25, 2001), கொள்ளையரசி அல்லது பேண்டிட் குயின் என்று பலராலும் அழைக்கப்படும் இந்தியாவின் பி...
-
ஆர்க்டிக் டெர்ன் (Arctic Tern) என்பது (Sterna paradisaea)என்ற குடும்பத்தைச் சேர்ந்த கடற்பறவை ஆகும். உலகிலேயே அதிக தூரம்வலசை வரும் ப...




