Friday, 7 March 2014

உலகில் முதன் முறையாக செயற்கை இருதயம் பொருத்தியவர் மரணம்

                                                உலகில் முதன் முறையாக செயற்கை இருதயம் பொருத்தியவர் மரணம்


பாரீஸ்:இருதய நோயினால் பாதிக்கப்படுபவர்களுக்கு மூளைச்சாவு ஏற்பட்ட வர்களிடம் இருந்து தானமாக பெறப்பட்டு இருதயம் பொருத்தப்பட்டு வருகிறது. அது போன்று இருதயம் கிடைக்க நீண்ட நாள் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் பலர் உயிரிழக்க நேரிடுகிறது.
அதை தடுக்க செயற்கை இருதயம் தயாரித்து அதை பொருத்தும் பணியில் பிரேஞ்ச் பயோமெடிக்கல் நிறுவனமான கார்மேட் ஈடுபட்டுள்ளது.
அந்த நிறுவனம் தயாரித்த முதல் செயற்கை இருதயம் 76 வயது இருதய நோயாளி ஒருவருக்கு கடந்த டிசம்பர் 18–ந்தேதி பொருத்தப்பட்டது. அது சிறந்த முறையில் இயங்கியது.
எனவே அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில் கடந்த 2–ந்தேதி அவரது செயற்கை இருதயம் செயல்பாட்டை நிறுத்தியது. இதனால் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.
இவருக்கு பொருத்தப்பட்ட செயற்கை இருதயம் 75 நாட்கள் மட்டுமே இயங்கி உள்ளது. பொதுவாக இது போன்ற இருதயங்களை குறுகிய காலத்துக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தனர். கார்மேட் நிநுவனம் அதை நவீன மயமாக்கி நீண்ட நாட்கள் இயக்கும் வகையில் வடிவமைத்து இருந்தது.

Monday, 24 February 2014

இன்று நூற்றாண்டு காணும் பாம்பன் ரெயில் பாலம் உருவான வரலாறு

                                               இன்று நூற்றாண்டு காணும் பாம்பன் ரெயில் பாலம் உருவான வரலாறு

சென்னை:இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ராமேசுவரம் தீவு வழியாக பல நூற்றாண்டு காலமாக வர்த்தக தொடர்பு இருந்து வந்தது. தமிழ்நாட்டில்  இருந்து ஏராளமான தொழிலாளர்கள் தேயிலை தோட்ட வேலைக்காக இலங்கைக்கு சென்று வந்தனர்.

தமிழ் நாட்டில் இருந்து சிலவகை பொருட்களை கொண்டு சென்று கொழும்பு நகரில் விற்பனை செய்த தமிழக வணிகர்கள் அங்கிருந்து தேயிலை போன்ற பொருட்களை இங்கு கொண்டு வந்து வியாபாரம் செய்து வந்தனர்.  

அவர்கள் மண்டபத்தில் இருந்து படகுகள் மூலம் பாம்பன் வழியாக தனுஷ்கோடி துறைமுகம் சென்று அங்கிருந்து கப்பலில் இலங்கையின் தலைமன்னார் பகுதிக்கு சென்று வந்தனர்.

பயணிகள் வசதிக்காக மண்டபத்துக்கும், தனுஷ்கோடி துறைமுகத்துக்கும் இடையே (பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம் வழியாக) 1876-ம் ஆண்டு பாம்பன் கடல் மீது ரெயில் பாலம் அமைக்கப்பட்டது.   

இந்த பாலத்தின் வழியாக 1914-ல் பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கியது. இந்த ரெயில் பாலத்தின் அடியில் கடலில் கப்பல்கள் சென்று வருவதற்கு வசதியாக பின்னாளில் தூக்கு பாலமாக மாற்றி அமைக்கப்பட்டது.

மதுரையில் இருந்து செல்லும் ரெயில்கள் மண்டபத்தில் இருந்து கடல் பாலத்தின் மீது சென்று பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம் வழியாக தனுஷ்கோடி துறைமுகததுக்கு செல்லும்.

தனுஷ்கோடி துறைமுகம் பெரிய துறைமுகமாக விளங்கியது. மதுரையில் இருந்து வரும் ரெயில் தனுஷ்கோடி கடற்பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பலுக்குள் சென்று நேரடியாக பயணிகளை இறக்கிவிடும் வசதியும் அப்போது இருந்தது.   

இந்த கடல் ரெயில் பாலத்தின் மொத்த தூரம் 2.45 கிலோ மீட்டர் ஆகும். கடலுக்குள் அமைக்கப்பட்ட 146 தூண்கள் ரெயில் பாலத்தை தாங்கி நிற்கின்றன. இந்த தூண்கள் கட்ட 4 ஆயிரம் டன் சிமெண்ட் பயன்படுத்தப்பட்டது.  

ஆங்கிலேய என்ஜினீயர் ஷெஷ்கர் கட்டியதால் இந்த ரெயில் பாலத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. 1964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடி தீவு அழிந்தது. ரெயில் பாதையும் சேதம் அடைந்தது. ராமேசுவரம் வரை உள்ள ரெயில் பாதை சீரமைக்கும் பணி நடந்தது. 1966-ம் ஆண்டில் மீண்டும் மண்டபம்-ராமேசுவரம் இடையே ரெயில் போக்குவரத்து தொடங்கியது.   

இந்த நிலையில் ராமேசுவரம் தீவுக்கு பஸ், கார்கள் சென்று வர வசதியாக மண்டபத்துக்கும், ராமேசுவரத்துக்கும் இடையே மேம்பாலம் அமைக்கப்பட்டது.   

அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி அடிக்கல் நாட்டினார். 1986-ம் ஆண்டு முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி வாகனங்கள் செல்லும் மேம்பாலத்தை திறந்து வைத்தார். இதற்கு மறைந்த இந்திராகாந்தி பெயர் வைக்கப்பட்டது. இந்த பாலத்தின் நீளம் 2.23 கி.மீட்டர் ஆகும்.   

இந்த பாலத்தின் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து ராமேசுவரத்துக்கு நேரடி வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.   இந்த மேம்பாலம் இந்தியாவின் 2-வது மிக நீளமான கடல்பாலம் ஆகும். (முதல் பாலம் மும்பை பாந்திரா-வொர்லி இடையே உள்ளது.)   

இந்த மேம்பாலத்தையொட்டியே ரெயில் பாலம் உள்ளது. ரெயில் பாலம் பழமையானது என்பதால் கடல் அரிப்பை தடுக்க பாலத்தின் தூண்களில் 6 மாதத்துக்கு ஒருமுறை அலுமினியம் பூசப்பட்டு இந்த பாலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த பாம்பன் ரெயில் பாலத்துக்கு இன்று நூறு வயதாகின்றது. நூற்றாண்டு விழாவையொட்டி மதுரை ரெயில் நிலையத்தில் ரெயில்வே துறை சார்பில் பாம்பன் ரெயில் பாலம் நூற்றாண்டு விழா தொடர்பான கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. 

பாம்பன் பாலம் மற்றும் தனுஷ்கோடி ரெயில்பாதை உள்பட பல அரிய புகைப்படங்கள் இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. பழந்தமிழரின் வரலாற்றை பதிவு செய்யும் விதமாக கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் பாம்பன் பாலத்தை இன்னும் பல நூறாண்டுகள் வாழ்க என வாழ்த்துவதுடன், அதனை பாதுகாப்பதும் நமது கடமையாகும்.

Friday, 21 February 2014

3 ஜெட் என்ஜின்களுடன் மணிக்கு 643 கிலோ மீட்டர் வேகத்தில் பாயும் அதிநவீன லாரி

                                           3 ஜெட் என்ஜின்களுடன் மணிக்கு 643 கிலோ மீட்டர் வேகத்தில் பாயும் அதிநவீன லாரி


ஒட்டாவாகனடாவின் ஓண்டாரியோ நகரில் நவீன வாகனங்களுக்கான கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பங்கேற்ற அதிநவீன லாரி பார்வையாளர்களின் கண்களை மட்டுமின்றி கருத்தையும் கவர்ந்திழுத்தது. 

இந்த லாரியின் உரிமையாளரான நியெல் டார்னெல் என்பவர் 1957-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ‘செவெர்லெட்’ லாரியின் வடிவமைப்பை மாற்றி, அதில் அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான 3 பழைய ஜெட் விமான என்ஜின்களை பொருத்தி, ஒரு மணி நேரத்தில் 643  கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் அசுர வாகனமாக மாற்றியுள்ளார். 

இன்றைய சாலைகளில் ஓடும் கனரக லாரி என்ஜின்களின் அதிகபட்ச குதிரை இழுவைத் திறன் (ஹார்ஸ் பவர்) 400 ஹெச்.பி.க்கும் குறைவாகவே உள்ள நிலையில், நியெல் டார்னெல் உருவாக்கியுள்ள இந்த அதிநவீன லாரியின் இழுவைத் திறன் 36 ஆயிரம் ஹெச்.பி. என்று மதிடப்பிடப்பட்டுள்ளது. 

இந்த திறனுடன் ஆறரை வினாடியில் கால் மைல் தூரத்தை கடந்து ’ஷாக்வேவ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த லாரி புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த கணக்கீட்டின்படி பார்த்தால் ஒரு மணி நெரத்தில் 400 மைல் (643 கிலோ மீட்டர்) தூரத்தை இந்த லாரி சுலபமாக கடந்து விடும் என்பது தெளிவாகிறது என்று வாகன துறை பொறியாளார்கள் (ஆட்டோமொபைல் என்ஜினீயர்கள்) வியக்கின்றனர்.

Tuesday, 18 February 2014

நாமும் முன்னேறுவோம்


சீனாவின் வடபகுதியில் 2016-2020ம் ஐந்தாண்டு கால திட்டத்தில், கடலுக்கு அடியில் 123 கிமீ நீளம் கொண்ட ரயில் சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.2 லட்சம் கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள இந்த ரயில் பாதையில், முழுமையாக சரக்குகள் ஏற்றப்பட்ட ஒரு ரயில், மணிக்கு 220 கிமீ வேகத்தில் செல்ல முடியும் என்பது விசேஷம். இது மட்டுமின்றி, சீனாவில் எங்கு பார்த்தாலும் பாலங்கள், தொழிற்சாலைகள், கட்டிடங்கள் என்று விரிவாக்கப்பணிகள் நடந்து வருகின்றன. கடந்த ஆண்டில் உள்கட்டமைப்பு பணிகளுக்காக 16,800 கோடி அமெரிக்க டாலர்களை சீனா ஒதுக்கியுள்ளது. சீனாவில் இன்னும் 15 ஆண்டில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், அப்போது அங்கு உற்பத்தி குறையலாம் என்றும் வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால், எந்த தொழிலை எடுத்து கொண்டாலும் அதில் முதலிடத்தை பிடிக்கும் வகையில், அரசே தேவையான முயற்சிகளை சீனாவில் எடுத்து வருகிறது. அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 7.7 சதவீதம் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, இன்னமும் 5 சதவீதத்தை ஒட்டியே உள்ளது.

சீன பொருட்கள் இந்தியாவில் வந்து குவிவதால், இந்திய வர்த்தகர்களின் வாய்ப்புகள் பாதிக்கப்படுகிறது என்று சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. இரும்பு தாது முதல் பல்வேறு கச்சா பொருட்களை இந்தியாவில் இருந்து வாங்கிக் கொண்டு சென்று, அதை உற்பத்தி பொருட்களாக மீண்டும் மாற்றி, இந்தியாவுக்கே அனுப்பி விற்கிறது சீனா. டாடா நிறுவனத்திடம் கார் உதிரி பாகங்களை தயாரித்து, அதை பல மடங்கு லாபத்துடன், இந்தியாவிலேயே விற்கிறது ஜிஎம் கார் கம்பெனி. திருப்பூர் பனியன்கள், டிசர்ட்கள், பிராண்ட் பெயருடன் அமெரிக்காவில் இருந்து வந்தால் அதிக காசு கொடுத்து வாங்குவதும் இங்குதான்.

குறைந்த விலை, தரமான பொருட்கள் என்ற மந்திரத்தை மட்டும் வைத்து கொண்டு வியாபாரிகள் செயல்பட்டால், எல்லா கடை வீதிகளும் சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருக்களாக மாறும் என்பதில் ஐயமில்லை. அதேசமயம், உற்பத்தி பொருட்களை, விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு தேவையான வசதிகளை, சந்தை வாய்ப்புகளையும் வியாபாரிகளுக்கு ஏற்படுத்தி தரவேண்டியது அரசின் கடமை. வரி ஒன்றை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், இதையும் செய்யும்போது, தானாகவே அரசின் வருவாய் உயர்வதோடு, நாட்டின் வளர்ச்சியிலும் முன்னேற்றம் ஏற்படும்.

டாடாக்களையும், பிர்லாக்களையும் வளர்த்து விடுவதுடன், மூர்மார்க்கெட் வியாபாரிகளும் ஆலைகளை தொடங்கும் அளவுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்தால்தான் சீனாவில் இருந்து இறக்குமதியாவது நின்று, இந்தியாவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதியாவது அதிகரிக்கும்.

Monday, 17 February 2014

டூத் பேஸ்ட்-டில் உள்ள கெமிக்கல் குழந்தைகளின் மூளையை பாதிக்கும்



பாரிஸ்: டூத் பேஸ்ட் உள்பட பல்வேறு பொருட்களில் பயன்படுத்தப்படும் ரசாயன பொருட்கள், குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கின்றன என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஹார்வர்ட் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்தில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர் பிலிப்பி கிரேண்ட்ஜீன், கேன் ஸ்கூல் ஆப் மெடிசின் கல்லூரியில் பணிபுரியும் ஆய்வாளர் பிலிப் லாண்ட்ரிகன் ஆகியோர், நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களில் உள்ள ரசாயனங்கள் குறித்து ஆய்வு நடத்தினர். தங்களது ஆய்வில் தெரிய வந்த உண்மைகள் குறித்து இருவரும் கூறியதாவது:குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் ரசாயன பொருட்களின் எண்ணிக்கை கடந்த 2006ம் ஆண்டு 6 ஆக இருந்தது. இப்போது 12 ஆகியுள்ளது. டூத் பேஸ்ட்டில் உள்ள புளோரிட் உள்பட பல்வேறு ரசாயன பொருட்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கின்றன. கடந்த 2006ம் ஆண்டு எத்தனால், லெட், மெத்தில்மெர்க்குரி, பைபெனில்ஸ், ஆர்செனிக் மற்றும் டோலின் ஆகிய ரசாயன பொருட்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிப்பதாக கண்டறியப்பட்டன. இப்போது மெக்னீசியம், புளோரிட், குளோர்பைரிபோஸ், டெட்ராகுளோரோ எத்திலீன் உள்பட மேலும் 6 ரசாயன பொருட்கள் சேர்ந்துள்ளன.

இந்த ரசாயனங்கள் எல்லாம் பூச்சி கொல்லி மருந்தாகவும், டிரை கிளீனிங் போன்றவற்றும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பொருட்கள் டூத் பேஸ்ட் உள்பட பல பொருட்களில் சேர்க்கப்படுகின்றன. இதனால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. ஆட்டிசம், கவனக் குறைபாடு, கற்றலில் குறைபாடு ஆகியவற்றால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். ஆறு குழந்தைகளில் ஒரு குழந்தை இதுபோன்ற பாதிப்புக்கு ஆளாகிறது என்று தெரிய வந்துள்ளது.இந்த ரசாயன பொருட்கள் குழந்தைகளின் அறிவு திறனை சிதைத்து விடுகின்றன. அவர்களுடைய நடத்தையிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இதை தடுக்க வளர்ந்து வரும் நாடுகளில் தற்போது பயன்பாட்டில் உள்ள ரசாயன பொருட்கள் அனைத்தையும் சோதனை செய்து கட்டுப்பாடுகள் கொண்டு வரவேண்டியது அவசியம். அத்துடன், மார்க்கெட்டில் புதிய பொருட்கள் அறிமுகமாகும் போது அதில் உள்ள ரசாயனங்கள் குறித்து உடனடியாக ஆய்வு நடத்த வேண்டும்.இவ்வாறு பிலிப்பி கிரேண்ட்ஜீன், பிலிப் லாண்ட்ரிகன் ஆகியோர் கூறியுள்ளனர். - See more at: http://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=53259#sthash.Cl5mSqMf.dpuf

Saturday, 15 February 2014

இரத்தத்தை சுத்தம் செய்யும் கோவைக்காய்


கோவையைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. வேலிகள், தோட்டங்கள், காடுகளில் இந்த கொடி படர்ந்து காணப்படும். இதன் பழங்கள் இனிப்பு, புளிப்பு, கசப்பு தன்மை கொண்டது. கோவையின் நிறத்தையும், வடிவத்தையும் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை, நாமக்கோவை, கருங்கோவை என பலவகையாகப் பிரிக்கின்றனர். இதன் இலை, காய், வற்றல், தண்டு, கிழங்கு அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. 

இரத்தம் சுத்தமடைய:


காற்று, நீர், இவற்றின் மாசடைந்த தன்மையாலும் இன்றைய அவசர உணவு (பாஸ்ட்புட்)களாலும் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. இதனால் இரத்தத்தில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்படுகிறது. மேலும் பித்த அதிகரிப்பு காரணமாக இரத்தம் அசுத்தமடைகிறது. இதனால் சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. இரத்த சோகை மற்றும் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் உருவாகிறது. இவர்கள் கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் 1 ஸ்பூன் அளவு தேனில் கலந்தோ அல்லது கஷாயமாகக் காய்ச்சியோ அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமடைவதுடன் உடலும் புத்துணர்வு பெறும்.

கண் நோய் குணமாக:


கண்கள் ஐம்புலன்களில் முதன்மையானது. கண்களால்தான் புறத்தோற்றங்களை காணவும் ரசிக்கவும் முடியும். உடலில் எந்தவகையான பாதிப்பு ஏற்பட்டாலும் கண்கள் முதலில் பாதிக்கப்படும். இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத்தான் அதிக வேலை பளு. இதனால் கண் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. இதற்கு கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, கஷாயம் செய்து தினமும் காலையில் அருந்தி வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும். மேலும் கண் நரம்புகள் பலப்படும்.

தோல் கிருமிகள் நீங்க: 


தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு இவற்றைக் குணப்படுத்தவும், தோலில் ஏற்படும் அலர்ஜியைத் தடுக்கவும் கோவை இலை பயன்படுகிறது. கோவை இலை, மஞ்சள் தூள், சிறியா நங்கை, வேப்பிலை இவைகளை சம அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து சிறிது நீர் கலந்து மண்சட்டியில் விட்டு நன்றாக காய்ச்சி ஆறியபின் உடலெங்கும் பூசி ஊறவைத்து பின் குளித்து வந்தால் சொறி சிரங்கு குணமாகும்.

உடல் சூடு :
 தற்போது கோடைக் காலம் முடிந்து தென்மேற்கு பருவமழை பெய்துள்ளது. இதனால் சுற்றுப்புறத்தில் ஏற்படும் மாற்றங்களால் உடலின் தட்ப வெப்ப நிலையும் மாறுபடுகிறது. இதனால் உடலுக்கு பல பாதிப்புகள் உருவாகிறது. இதற்கு கோவையிலை கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும். கண்கள் குளிர்ச்சிபெறும் .

வியர்க்குரு
வை தடுக்க

சிலருக்கு வியர்வை வெளியேறாமல் வியர்க்குருகளாக நீர்கோர்த்துக்கொள்ளும். இவை சில சமயங்களில் வேனல் கட்டிகளாக மாறவும் வாய்ப்புள்ளது. இவர்கள் கோவை இலையை அரைத்து உடலெங்கும் பூசி குளித்து வந்தால் வியர்குரு வராமல் தடுக்கலாம்.கோவை இலையின் சாறுடன் வெண்ணெய் சேர்த்து பூசி வந்தால் சொறி, சிரங்கு, நாள்பட்ட புண் போன்றவை குணமாகும்

தாது புஷ்டியாக


இன்றைய மன அழுத்த பிரச்சனையால் சிலர் தாதுவை இழந்துவிடுகின்றனர். இதனால் இவர்கள் மண வாழ்க்கைக்கு செல்ல பயங்கொள்கின்றனர். மேலும் சிலரோ இதை மறைத்து திருமணம் செய்து பின்னாளில் மணவாழ்க்கை கசந்து விவாகரத்து கோரி நிற்கின்றனர். இப்பிரச்சனை தீர கோவையிலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து ஒரு மண்டலம் உண்டுவந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம். இவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியமாகும்.

கோவையின் பயனை உணர்ந்து அதனைப் பயன்படுத்தி வந்தால் ஆரோக்கியமான உடலைப் பெறலாம்

Wednesday, 12 February 2014

சிதம்பர ரகசியம்

சிவபெருமான் அருவம், உருவம், அருவுருவம் ஆகிய மூன்று வடிவங்களில் வீற்றிருக்கிறார். இம்மூன்று விதங்களிலும் ஒருசேர அருள்பாலிக்கும் தலம் சிதம்பரம். இங்கு லிங்கரூபமாக இருக்கும் திருமூலநாதர் அருவுருவ வடிவமாவார். நடராஜரின் திருமேனி உருவ வடிவமாகும்.

சிதம்பர ரகசியமாக இருக்கும் வெட்டவெளி சிவனின் அருவவடிவமாகும். நடராஜரின் வலப்பக்கத்தில் ஒரு சிறுவாசல் உள்ளது. அதை திரையால் மூடி இருப்பர். பூஜையின் போது அத்திரையை அகற்றி கற்பூர ஆரத்தி காட்டுவர். 

அப்போது இறைவனின் திருவுருவம் எதையும் காண முடியாது. ஆகாய ரூபமாக இறைவன் இருப்பதை இவ்வழிபாடு காட்டுகிறது. இறைவன் ஆகாயம் போல் பரந்து விரிந்தவன். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. 

இறைவனும் முதலும் முடிவும் இல்லாதவன் என்பதை இது காட்டுகிறது. தங்கத்தால் செய்யப்பட்ட வில்வமாலை ஒன்றை மட்டும் அவ்விடத்தில் காணலாம். இதையே சிதம்பர ரகசியம் என்பர்.

மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

  பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...