ஒட்டாவா: கனடாவின் ஓண்டாரியோ நகரில் நவீன வாகனங்களுக்கான கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பங்கேற்ற அதிநவீன லாரி பார்வையாளர்களின் கண்களை மட்டுமின்றி கருத்தையும் கவர்ந்திழுத்தது.
இந்த லாரியின் உரிமையாளரான நியெல் டார்னெல் என்பவர் 1957-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ‘செவெர்லெட்’ லாரியின் வடிவமைப்பை மாற்றி, அதில் அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான 3 பழைய ஜெட் விமான என்ஜின்களை பொருத்தி, ஒரு மணி நேரத்தில் 643 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் அசுர வாகனமாக மாற்றியுள்ளார்.
இன்றைய சாலைகளில் ஓடும் கனரக லாரி என்ஜின்களின் அதிகபட்ச குதிரை இழுவைத் திறன் (ஹார்ஸ் பவர்) 400 ஹெச்.பி.க்கும் குறைவாகவே உள்ள நிலையில், நியெல் டார்னெல் உருவாக்கியுள்ள இந்த அதிநவீன லாரியின் இழுவைத் திறன் 36 ஆயிரம் ஹெச்.பி. என்று மதிடப்பிடப்பட்டுள்ளது.
இந்த திறனுடன் ஆறரை வினாடியில் கால் மைல் தூரத்தை கடந்து ’ஷாக்வேவ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த லாரி புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த கணக்கீட்டின்படி பார்த்தால் ஒரு மணி நெரத்தில் 400 மைல் (643 கிலோ மீட்டர்) தூரத்தை இந்த லாரி சுலபமாக கடந்து விடும் என்பது தெளிவாகிறது என்று வாகன துறை பொறியாளார்கள் (ஆட்டோமொபைல் என்ஜினீயர்கள்) வியக்கின்றனர்.