Thursday, 6 February 2014

ரஷ்ய ஒலிம்பிக்கை சீர்குலைக்க டூத் பேஸ்ட் டியூப்களில் வெடிபொருள் கடத்த சதி அமெரிக்கா எச்சரிக்கை



வாஷிங்டன்:ரஷ்யா செல்லும் விமானங்களில் டூத் பேஸ்ட் டியூப்களில் வெடிபொருட்களை கடத்தி, குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.ரஷ்யாவின் சோச்சி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. இதை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி உள்ளனர். இதையடுத்து ரஷ்யா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து ரஷ்யா செல்லும் விமானங்களில் டூத் பேஸ்ட் டியூப்களில் வெடிபொருட்கள் கடத்தி ஒலிம்பிக் போட்டிகளை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி உள்ளதாக அமெரிக்க உள்துறை அமைச்சக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்காவில் இருந்து ரஷ்யாவுக்கு விமானங்கள் இயக்கும் ஏர்லைன்ஸ் நிறுவ னங்களுக்கு அவசர தகவல் அனுப்பி உள்ளனர். அதில், ரஷ்யா செல்லும் விமானங்களில் டூத் பேஸ்ட் டியூப்களில் சிறுசிறு வெடிபொருள் கருவிகளை கடத்தி, விமானத்திலேயே அவற்றை அசம்பிள் செய்து தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும் டூத் பேஸ்ட் டியூப்களில் வெடிபொருட்களை கடத்தி, சோச்சி நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியின் போது தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. எனவே, ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தீவிர பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளனர்.

Tuesday, 4 February 2014

பாட்டி வைத்தியம்


வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தாலே தலைவலி நீங்கிவிடும். அல்லது வெங்காயத்தை பாதியாக அறுத்து நெற்றில் தேய்த் தாலும் தலைவலி குறையும். உள்ளங்கையில் தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக அந்த இடத்தில் நெய்யை தடவினால் எரிச்சல் அடங்கிவிடும். சீழ் பிடிக்காது. புளி ஏப்பம் நிற்க சமஅளவு சீரகமும், உப்பும் சேர்த்து வாயில் போட்டு மென்று தண்ணீர் குடிக்க வேண்டும். 

அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வயிற்றுவலி போன்றவற்றைக் குறைக்க மிளகு அருமருந்து. மிளகு சாப்பிடுவதால் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கிறது. அது வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைச் சரிசெய்கிறது. ஆனால் அல்சர் உள்ளவர்கள் மிளகை அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது. 
அப்போது புளி ஏப்ப பிரச்னை தீர்ந்துவிடும். ஆப்பிள் தோல் சீவாமல் சுத்தமாக கழுவி அப்படியே சாப்பிட்ட வேண்டும். ஆப்பிள் தோலில் வைட்டமின் ஏ உள்ளது.  பசுநெய், தயிர் கலந்து சாப்பிட்டு வந்தால் நரைமுடி கருமையாக மாறும். கோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால், உடற்சோர்வு நீங்கி பலம்பெறும். தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வர ஆண்மை பெருகும், தாது விருத்தியாகும்.
சுக்கு, மிளகு, திப்பிலி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குண மாகும். பூண்டு, வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறையும். இப்பகுதிக்கு சுவாரசியமான தகவல்கள், மருத்துவ குறிப்புகளை புகைப்படத்துடன் கரும்பு சோகையை எரித்து சாம்பலாக்கி வெண்ணெயுடன் கலந்து உதட்டு வெடிப்புக்குப் போட்டால் உடனே குணமாகும். விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டால் பித்தத்தைக் குறைக்கலாம்.

Sunday, 2 February 2014

துபாயில் 'டிராம்' சேவை அறிமுகம்: நிலையங்களின் அருகில் 'ஏ.சி.' மேம்பாலங்கள்


துபாய்:செல்வ செழிப்புமிக்க வளைகுடா நாடுகளில் ஒன்றான துபாய் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கேளிக்கை பூங்காக்கள், பல்லடுக்கு வணிக வளாகங்கள், ஆகியவற்றை உருவாக்கி உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

சமீபத்தில் கோடிக்கணக்கான சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுத்த சர்வதேச வர்த்தக திருவிழாவை வெற்றிகரமாக நடத்தியுள்ள துபாய் அரசு விரைவில் துபாய் நகரின் வீதிகளில் அதிநவீன 'டிராம்' (ரெயில்களை போல் தண்டவாளத்தின் மீது சாலைகளின் குறுக்கேயும் ஓடும்) வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளது.

முதல்கட்டமாக 11 நிலையங்களின் வழியாக 10.6 கிலோ மீட்டர் தூரம் வரை டிராம் பாதைகள் அமைக்கப்பட்டு, இதற்கான சோதன ஓட்டமும் வெற்றிகரமாக நடந்துள்ளது. துபாய் மெரினா மால் நிலையத்தில் இருந்து போலீஸ் பயிற்சி கழகம் வரையிலான இந்த வழித்தடத்தில் 11 டிராம்கள் இயக்கப்பட உள்ளது.

படிப்படியாக இந்த தூரத்தை 17 நிலையங்களை கடந்து 14.6 கிலோ மீட்டராக நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், துபாய் மெரினா மால் நிலையத்தின் ஓரமாக பயணிகளின் வசதிக்காக புதிய மேம்பாலத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் முழுக்க, முழுக்க குளிர்சாதன வசதி கொண்டதாக அமைக்கப்படும்.

விரைவில் அனைத்து டிராம் நிலையங்களின் அருகிலும் குளிர்சாதன வசதி கொண்ட இத்தகைய மேம்பாலங்கள் உருவாக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

நாட்டின் முதல் மோனோ ரயில் சேவை மும்பையில் தொடங்கியது


உலகின் மிக பழமையான 83 வயது ஃப்ளமிங்கோ பறவை மரணம்


மெல்போர்ன்:ஃப்ளமிங்கோஸ் என்றழைக்கப்படும் பூநாரைகள், நாரை வகையை சேர்ந்த பறவையினமாகும். கரையோரப் பறவையாகிய இவ்வகை நாரைகள் ‘போனிகொப்டிரஸ்’ அபூர்வ இனத்தை சேர்ந்தவை.

இவ்வகை ஃப்ளமிங்கோ பறவையில் ஒன்று ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் வனவிலங்கு காப்பகத்தில் வளர்த்து, பராமரிக்கப்பட்டு வந்தது. 1933-ம் ஆண்டு அடிலெய்ட் வனவிலங்கு காப்பகத்துக்கு இந்த பறவை வந்ததாக இங்குள்ள ஆவணங்களில் பதிவாகியுள்ளது.

எனினும், இது எந்த நாட்டில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்டது? என்பது தொடர்பான தகவல்களுக்கான எந்த ஆதாரமும் காணப்படவில்லை. இரண்டு வயது குஞ்சாக இங்கு வந்த இந்த ஃப்ளமிங்கோ பறவை, ‘கிரேட்டர்’ என்ற பெயருடன் 80 ஆண்டுகளுக்கும் மேலாக பார்வையாளர்களை கவர்ந்து வந்தது.

கடந்த 2008-ம் ஆண்டு சில விஷமிகள் கிரேட்டரை அடித்து படுகாயப்படுத்திய போதிலும் வெகு வேகமாக குணமடைந்து, தனது ஒய்யார நடையழகால் அடிலெய்ட் வனவிலங்கு காப்பகத்துக்கு அழகு சேர்த்து வந்தது. சமீப காலமாக, முதுமையால் கண்பார்வை மங்கி, உடல் நலம் குன்றிய கிரேட்டர், சோர்வாக காணப்பட்டதையடுத்து வன விலங்கு காப்பக மருத்துவர் குழு சில நாட்களாக தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

எனினும், சிகிச்சை பலனளிக்காததால் அதன் உடல்நிலை மேலும் மோசமடைந்து கிரேட்டர் துடிப்பதை பார்த்து பரிதாபப்பட்ட மருத்துவர்கள், கருணை அடிப்படையில் செயற்கை முறையில் இந்த உலகத்தை விட்டு விடையளித்து கிரேட்டரை வழியனுப்பி வைத்தனர்.

முதிர்ந்த வயதான கிரேட்டரை காப்பாற்ற வேறு சிகிச்சை முறைகள் ஏதுமில்லாததால் இந்த வருத்தத்துக்குரிய முடிவை எடுக்க நேர்ந்ததாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். உலகிலேயே அதிக வயதான கிரேட்டரின் குஞ்சுகளில் ஒன்றான 'சில்லி' மட்டும் தற்போது அடிலெய்ட் வன விலங்கு காப்பகத்தை சுற்றிச் சுற்றி வருகிறது.

ஆஸ்திரேலியா நாட்டில் தற்போது எஞ்சியுள்ள ஒரே ஃப்ளமிங்கோ இனப் பறவை சில்லி மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கிரேட்டர் ஒய்யார நடை பயின்ற குட்டையின் அருகே அதன் நினைவாக சிலை ஒன்றினை அமைக்க அடிலெய்ட் வன விலங்கு காப்பக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

பெட்ரோலுக்கு விடையளிக்கும் நேரம் நெருங்கி விட்டது: 20 பைசாவில் ஒரு கிலோ மீட்டர் செல்லும் ‘கிவாமி பைக்’ அறிமுகம்

புதுடெல்லி:ஜப்பானின் பிரபல எலெக்ட்ரிக் (மின்சார சக்தி) பைக் தயாரிப்பு நிறுவனமான ‘டெர்ரா மோட்டார்ஸ்’ மின்சக்தியின் மூலம் இயங்கும் 1000 சி.சி. ஆற்றல் கொண்ட நவீனரக இருசக்கர வாகனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

‘கிவாமி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த சூப்பர் பைக், ’லித்தியம் இயான்’ பேட்டரி மூலம் இயங்கக்கூடியது. 6 மணி நேரத்துக்கு இந்த பேட்டரியை ‘ரீ-சார்ஜ்’ செய்வதன் மூலம், மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகம் வரை, தொடர்ந்து 200 கிலோ மீட்டர் தூரத்துக்கு தங்குதடை இன்றி செல்ல முடியும்.

கடந்த ஆண்டில் மட்டும் ஜப்பானில் 20 ஆயிரம் ‘கிவாமி’ பைக்குகளை விற்று சாதனை படைத்துள்ள டெர்ரா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது இந்திய சந்தையிலும் கால் பதித்துள்ளது. இந்தியாவில் 30 கோடி ரூபாயை முதலீடு செய்து விற்பனையை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், ஆண்டுக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் 'கிவாமி' பைக்குகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டோரு டோகுஷிகே தெரிவித்தார்.

'இந்த வாகனத்தின் பேட்டரியை சராசரி மொபைல் சார்ஜர் பாயின்டிலும் ரீ-சார்ஜ் செய்து கொள்ளலாம். முழுமையாக (6 மணி நேரம்) ரீ-சார்ஜ் செய்வதற்கு வெறும் 6 யூனிட் மின்சாரம் மட்டுமே செலவாகும். இந்த ஆற்றலை கொண்டு 3 ஆயிரம் முறை வரை ‘ஸ்ட்ராட்’ செய்து சுமார் 200 கிலோ மீட்டர் வரை 'நான் ஸ்டாப்' ஆக பயணிக்கலாம்’ என்றும் இந்த பைக்கின் அறிமுக விழாவில் அவர் நிருபர்களிடம் கூறினார்.

முதல் கட்டமாக நேரடியாக ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யவும், 2015-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவிலேயே தயாரிப்பை தொடங்கவும் டெர்ரா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. நேரடியாக இறக்குமதி செய்யப்படும் ‘கிவாமி’ பைக்கின் அறிமுக விலை டெல்லி சந்தை நிலவரப்படி 18 லட்சம் ரூபாய் என்றும், இந்தியாவில் உற்பத்தி தொடங்கிய பிறகு இந்த விலை வெகுவாக குறையும் எனவும் அவர் தெரிவித்தார்.

சென்னையில் வாடகை வீட்டில் குடியிருப்போர் ஒரு யூனிட்டிற்கு 6 ரூபாய் வரை செலுத்துகிறார்கள். இந்த வகையில் கணக்கிட்டாலும், 6 யூனிட் ரீ-சார்ஜுக்கு 36 ரூபாய் செலவாகும். இந்த குறைந்த செலவில் 200 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம் என்ற அறிவிப்பை வைத்து பார்க்கப் போனால், ஒரு கிலோ மீட்டருக்கான எரிபொருள் செலவு வெறும் 18 பைசா தான் என்பது மகிழ்வூட்டும் செய்திதான் என்றாலும், 18 லட்சம் ரூபாய் விலை என்பது சாமானிய மக்களுக்கு சற்று அதிர்ச்சியளிக்கும் தகவலாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

எருமை மாடுகளை தேடி அலைந்த போலீஸ் அதிகாரிகள்

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பண்ணை வீட்டில் இருந்து காணாமல் போன எருமை மாடுகளை போலீஸ் உயர் அதிகாரிகள் தேடி அலைந்து கண்டுபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ் அமைச்சரவையில் சிறுபான்மை துறை அமைச்சராக இருப்பவர் அசம்கான். சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரான இவர், அகிலேசுக்கு அடுத்த நிலையில் கருதப்படுபவர். ராம்பூர் அருகே பைசாபுரா கிராமத்தில் அசம்கானுக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. அங்கு ஏராளமான எருமை மாடுகள் கட்டி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று 7 எருமை மாடுகளை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்த தகவல் அமைச்ச ருக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் அமைச்சரிடம் இருந்து ராம்பூர் எஸ்பி சாதனா கோஸ்வாமிக்கு உத்தரவு பறந்தது.

எஸ்பி தலைமையிலான போலீஸ் படை எருமையை தேடி விரைந்தது. மேலும் சில போலீஸ் அதிகாரிகளும் நேரில் சென்று விசாரணை நடத்தினர். எருமைகளை கண்டுபிடிக்க மோப்ப நாய் படையும் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் ஊருக்கு வெளியே வயல்களுக்கு நடுவில் உள்ள ஒரு இடத்தை சுற்றி சுற்றி வந்தது. அப்பகுதியில் நடத்திய சோதனையில் கிராமத்துக்கு சற்று தள்ளி இருந்த ஒரு கட்டிடத்தில் 7 எருமைக ளையும் மர்ம நபர்கள் சங்கிலியால் கட்டியிருப்பதை எஸ்பி சாதனா கோஸ்வாமியே கண்டுபிடித்தார். உடனடியாக தன்னுடன் வந்த போலீசாரிடம் எருமைகளை அவிழ்த்து கொண்டு வரும்படி உத்தரவிட்டார். ஒரு கும்பல் திட்டமிட்டு எருமைகளை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

  பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...