Sunday, 5 January 2014

பனிப்பொழிவு எதிரொலி நியூயார்க்கின் 1000 விமானம் ரத்து




நியூயார்க்: அமெரிக்காவில் பனிப்பொழிவு காரணமாக சுமார் 1000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு மேலை நாடுகளிலும் டிசம்பர் மாதம் தொடங்கி கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் ஒரு சில இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் காணப்படும் பனிப் பொழிவு மற்றும் பனிக்காற்று காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இதன் காரணமாக நியூயார்க் நகரில் உள்ள 3 விமான நிலையங்களில் இருந்து செல்லும் 559 விமானங்களும், நியூயார்க் நகருக்கு வரவிருந்த 452 விமானங்களும் வெள்ளி கிழமை ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று காலையும் சீதோஷ்ண நிலையில் மாற்றம் இல்லாமல் பனி காணப்படுவதால் கென்னடி விமான நிலையத்தில் இருந்து 192 விமானங்களும், லிபர்டி விமான நிலையத்தில் இருந்து 285 விமானங்களும், லா கார்டியா நிலையத்தில் இருந்து 271 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நியூயார்க் நகர விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.விமான நிலையங்களின் ஓடு பாதையை மூடியுள்ள பனிப்படலங்களை விரைந்து அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.

சளி, இருமலை போக்கும் பனை வெல்லம் விற்பனை ஜோர்

பண்ருட்டி: கற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் பனை மரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களுமே மக்களுக்கு பயன்படுகின்றன. பதநீர், நுங்கு, பனங்காய், கிழங்கு, மட்டை, ஓலை, பனங்கட்டை என ஒவ்வொரு பொருளுமே மக்களுக்கு பயன்படுகிறது. குறிப்பாக பதநீர் மிகுந்த சுவை மிகுந்தது. பதநீரை காய்ச்சினால் கருப்பட்டி எனப்படும் பனை வெல்லம் கிடைக்கும். நாளாக நாளாக பனைவெல்லம் கெட்டியாக, மாவு தன்மை கொண்டதாகவும் மாறும். இது மூலிகை வைத்தியங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்த கருப்பட்டியை சுக்கு மற்றும் திப்பிலியுடன் பாலில் கலந்து இரவில் அருந்தினாலும், காலையில் சுடுநீர், டீ ஆகியவற்றில் கலந்து குடித்தாலும் உடலுக்கு நல்லது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். இருமல், சளி, மகப்பேறு மருந்து, நீரிழிவு ஆகியவற்றுக்கு அரு மருந்தாக உள்ளது. முக்கியமாக நீரிழிவு நோய் உள்ளவர்கள் சர்க்கரைக்கு பதிலாக பனை வெல்லத்தை பயன்படுத்தினால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும். எந்த பக்க விளைவும் இதனால் ஏற்படுவதில்லை.

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பனை மரங்கள் அதிகம். அதனால் இப்பகுதிகளில் கருப்பட்டி தொழிலும் சிறப்பாக நடந்தது. தற்போது பனைத்தொழில் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. பனை மரம் ஏறும் ஆட்கள் கிடைப்பதில்லை. அதிக பணம் கொடுத்து ஆட்களை அழைத்து வந்து பதநீர் இறக்க வேண்டி உள்ளது.

 பனை வெல்லம் தற்பொழுது மயிலாடுதுறை, சிதம்பரம், சீர்காழி, வடலூர் ஆகிய பகுதிகளில் மினி லாரி மூலம் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது பண்ருட்டி பகுதியில் மினி வேனில் கொண்டு வந்து ஒரு கிலோ ரூ.100க்கு விற்கின்றனர்.

Wednesday, 1 January 2014

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் காலமானார்



தஞ்சாவூர்: இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் (வயது 75) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். 1937 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் கல்லணை அருகே இளங்காடு கிராமத்தில் பிறந்த நம்மாழ்வார், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து பல்வேறு போராட்டங்களை தலைமையேற்று நடத்தி வந்தார். அதே போல் விவசாயத்திற்கு வேதியியல் உரங்களை பயன்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தவர். இயற்கை உரம், இயற்கையான உணவுமுறைகளுக்கு ஆதரவாக அவர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளநிலை பட்டம் பெற்ற நம்மாழ்வார், கோவில்பட்டி மண்டல பயிர் ஆய்வகத்தில் பணியில் சேர்ந்தார். அங்கு களப்பணி இல்லாமல் நடைபெறும் பணிகளுக்கு எதிராக குரல் கொடுத்து அப்பணியில் இருந்து வெளியேறினார். விவசாயிகளின் போராட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கிராமத்துக்கு நம்மாழ்வார் சென்றிருந்தார். அங்கு அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது...

Wednesday, 18 December 2013

லோக்பால் வந்தால் பிரதமர், சிபிஐக்கு சிக்கல்..!




டெல்லி: ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க லோக்பால் மசோதா, பெரும்பாலான கட்சிகள் முன்வைத்த திருத்தங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.
அன்னா ஹசாரே போன்ற சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து லோக்பால் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முன்வந்தது. ஆனால் அந்த மசோதா வலுவானதாக இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டது.
தற்போது வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி ஹசாரே சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்த நிலையில் மத்திய அரசும் முந்தைய லோக்பால் மசோதாவில் திருத்தங்களை மேற்கொண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. வரலாற்று சிறப்புமிக்க மசோதா நேற்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.

Friday, 8 November 2013

6 மாத குடும்பப் பஞ்சாயத்தை அரை மணி நேரத்தில் தீர்த்த நித்தியானந்தா

\\\\


Click Hereதந்தி டிவியில் சனிக்கிழமை இரவில் சுவாமி நித்தியானந்தா, நித்ய தர்மம் என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். கோர்ட், கேஸ் என்று நித்தியானந்தாவுக்கே ஆயிரம் பிரச்சனைகள் இருக்கின்றன.. ஆனால் அதையெல்லாம் தாண்டி, இப்போது. பிற குடும்பங்களிடையே ஏற்படும் பிரச்சனைகளை கேட்டு ‘தீர்வு' வழங்கி வருகின்றார். கணவன் மனைவி பிரச்சினை, பிள்ளைகளை ஒதுக்கும் பெற்றோர்கள் என பல பிரச்சினைகளை கேட்டு தீர்வு சொல்கிறார்.Click Here

Thursday, 7 November 2013

உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் மீண்டும் கலவரம்

உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் மீண்டும் கலவரம்


முசாஃபர்நகர்: உத்தரபிரதேச மாநிலம் முசாஃபர் நகர் அருகே ஷாபூர் நகரில் இர்பான் என்ற வணிகர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்துள்ளது. 
அண்மையில் முசாஃபர் நகரில் ஏற்பட்ட கலவரத்தில் 49 பேர் பலியாகினர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக முகாம்களுக்குச் சென்றனர். இந்நிலையில் முசாஃபர் நகர் அருகே ஷாபூர் நகரில் இர்பான் என்ற வர்த்தகர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் ஷாபூர் நகரில் வன்முறையில் ஈடுபட்டனர். அங்குள்ள வீடு, கடைகள், வாகனங்களுக்கு அவர்கள் தீ வைத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வன்முறை தொடர்பாக சிலரை கைது செய்தனர். மேலும் வன்முறை நீடிக்காமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். வன்முறையை தடுக்க முசாஃபர்நகர் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள். Topics: muzaffarnagar, tension, வர்த்தகர், சுட்டுக் கொலை, பதற்றம் 

Wednesday, 6 November 2013

ராஞ்சி சிறைச்சாலையில் மாதம் 420 சம்பளத்தில் லாலுவுக்கு தோட்ட வேலை



tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper


ராஞ்சி:கால்நடை தீவன ஊழல் வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவுக்கு ராஞ்சி சிறையில் மாதம் ரூ. 420 சம்பளத்தில் தோட்ட வேலை வழங்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு லாலு பிரசாத் முதல்வராக இருந்த கால கட்டத்தில் கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதாக அரசு கருவூலங்களில் போலி பில்கள் கொடுக்கப்பட்டு ரூ. 900 கோடி மோசடி செய்யப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ மொத்தம் 52 வழக்குகள் பதிவு செய்தது. இதில் லாலு பிரசாத் மீது மட்டும் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் ஒரு வழக்கில் ராஞ்சி சிபிஐ கோர்ட் கடந்த மாதம் தீர்ப்பளித்தது. லாலு பிரசாத் உள்பட 45 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. லாலு பிரசாத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்கள் சிபிஐ கோர்ட்டிலும் பின்னர்  ராஞ்சி ஐகோர்ட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையில் லாலு சிறையில் ராஜ வாழ்க்கை வாழ்வதாக குற்றம் சாட்டப்பட்டது. தினந்தோறும் அவரை நூற்றுக்

கணக்கானவர்கள் சந்தித்து வந்தனர். சிறை விதிகளை மீறி இதற்கு அனுமதி வழங்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. லாலுவை பார்க்க கூட்டம் கூட்டமாக தொண்டர்கள் வருவதை தொடர்ந்து சிறைக்கு வெளியே பல பெட்டி கடைகள் முளைத்தன. லாலுவுக்காக சிறை விதிகள் மீறப்படுவதை எதிர்த்து பொது நல வழக்கு தொடரப்பட்டது. இது நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில் லாலுவுக்கு சிறையில் தோட்ட வேலை அளிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக நாள் ஒன்றுக்கு அவருக்கு ரூ.14 சம்பளமாக வழங்கப்படுவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். ராஞ்சி சிறை சுமார் 52 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பரந்த புல்வெளிகள், பூந்தோட்டம் மற்றும் காய்கறி தோட்டம் சிறைக்குள் இருக்கிறது. இந்த தோட்டங்களை பராமரிக்கும் பணி லாலுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை அவர் மிகவும் மகிழ்ச்சியாக செய்வதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன. வாரத்தில் ஒருநாள் அவருக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. 

லாலு பிரசாத் கடந்த 2004 முதல் 2009 வரையிலான கால  கட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூல், அகமதாபாத் ஐஐஎம் போன்ற பிரபலமான கல்லூரிகளில் எம்பிஏ மாணவர்களுக்கு பாடம் எடுத்துள்ளார். சிறைக்கைதிகளுக்கு வகுப்புகள் நடத்துவது போன்ற எளிமையான பணி கொடுக்காமல் கஷ்டமான தோட்ட வேலையை லாலுவுக்கு கொடுத்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து சிறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், லாலுவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜார்கண்ட் போலீஸ் எச்சரித்தது. ராஞ்சி சிறையில் 30 சதவீத கைதிகள் கொடூர குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள். 10 சதவீதம் பேர் மாவோயிஸ்ட்கள். பாதுகாப்பு காரணங்களுக்காகவே கைதிகளுக்கு பாடம் நடத்தும் பணி கொடுக்கப்படவில்லை என்றார்.

மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

  பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...