Tuesday, 12 February 2013

பிலிம் சொருகினால் மாம்பழம் அழுகாது : நானோ டெக் ஆராய்ச்சி தீவிரம்

கோவை-: மாம்பழங்கள் கெடாமல் பாதுகாக்க நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சி நடந்து வருகிறது என்று வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: உற்பத்தியாகும் மாம்பழங்களில் 30 சதவீதம் அழுகி வீணாகிவிடுகின்றன. நானோ தொழில்நுட்பம் மூலம் நானோ பிலிம்களை மாங்காய்களில் புகுத்தினால், நீண்ட நாட்கள் கெடாமல் இருக்குமா என்று தீவிர ஆராய்ச்சி நடந்து வருகிறது. மாம்பழங்களில் கூன் வண்டுகள் புகுவதை தடுக்க இந்திய அணுசக்தி ஆணையம் மூலம் ஆராய்ச்சி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. 

சிறு, குறு தானியங்களின் ஊட்டச்சத்துகளை அதிகரித்து தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுவினியோக திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் வினியோகிக்க கனடா ஆராய்ச்சி நிலையம், திட்டக்குழு ஆகியவை தமிழக அரசிடம் பரிந்துரைத்துள்ளது. இத்திட்டம் தற்போது தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மானாவாரி நிலங்களில் சிறுதானிய பயிர்களில் உற்பத்தியை அதிகரிக்க வேளாண் பல்கலை, கர்நாடக பல்கலை, எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி குழுமம் ஆய்வு செய்து வருகின்றன. தானியங்களில்  உமிநீக்கும் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை விவசாயிகளிடம் வரவேற்பு பெற்றுள்ளது. விரைவில் தமிழகத்திலும் இந்த இயந்திரம் அறிமுகப்படுத்தப்படும்.

Tuesday, 29 January 2013

வடகொரியாவில் பஞ்சம், பசி, பட்டினியால் விபரீதம் : குழந்தையை கொன்று வேகவைத்து தின்ற தந்தை






ஒசாகா: வடகொரியாவில் பட்டினியால் தவித்த தந்தை, தனது மகன்களை கொன்று அவர்களது உடல்களை வேகவைத்து சாப்பிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. வடகொரியாவில் பஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும், பட்டினியால் கிடக்கும் பலர் விபரீத முடிவுகளை எடுப்பதாகவும் ஏசியா பிரஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் பிரபல சண்டே டைம்ஸ் பத்திரிகையிலும் வெளியாகியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: வடகொரியா ஏவுகணை சோதனை நடத்த அமெரிக்கா உள்பட பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், அணு ஆயுத சோதனையிலும் வடகொரியா ஈடுபடுவதாக பல நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதனால், இந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக பஞ்சம் ஏற்பட்டுள்ளதாகவும் பல இடங்களில் மக்கள் பட்டினியில் தவிப்பதாகவும் பல ஆண்டுகளாக பரபரப்பு செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்நிலையில், பட்டினியில் தவித்த ஒருவர் உணவுக்காக கல்லறையில் இருந்து பேரன் சடலத்தை தோண்டி எடுத்துள்ளார். இன்னொருவர் தனது குழந்தையை சாகடித்து வேகவைத்து சாப்பிட்டுள்ளார். இப்போது 2 குழந்தைகளை கொன்று சமைத்து சாப்பிட்ட ஒருவர் தூக்கிலிடப்பட்டுள்ளார் என்று அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த செய்திகளை வடகொரிய தலைவர்கள் இதுவரை உறுதி செய்யவும் இல்லை, மறுக்கவும் இல்லை. குறிப்பாக வடகொரியாவின் ஹவாங்கே நகரில் விவசாயிகள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இதுபோல் நர மாமிசம் உண்ணும் சம்பவங்கள் அடிக்கடி நடந்துள்ளன.

இது நாடு முழுக்க பரவும் அபாயம் உள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவில் மீடியாக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. சர்வதேச மீடியாக்கள் அவ்வளவு எளிதில் செய்திகளை சேகரித்துவிட முடியாது. அதனால், உள்ளூர் மக்களையே பிரபல மீடியாக்கள், பத்திரிகைகள் நிருபர்கள் போல பயன்படுத்தி கொள்கின்றன. போலீசில் உள்ள இன்பார்மர்கள் போல உள்ளூர் மக்களில் சிலர் அவ்வப்போது செய்திகளை அளித்து வருகின்றனர். ஹவாங்கே பகுதியில் இருந்து செய்தி அளிக்கும் ஒருவர் கூறுகையில், என் கிராமத்தில் 2 குழந்தைகளை கொன்று சாப்பிட முயன்ற தந்தையை கடந்த மே மாதம் போலீசார் சுட்டுக் கொன்றனர் என்று தெரிவித்துள்ளார்.

Sunday, 28 October 2012

கேரளாவில் அதிசயம் குட்டி போட்டது கோழி : தொப்புள் கொடியோடு பிறந்தது




காசர்கோடு: கோழிகள் முட்டைதான் போடும். கேரள மாநிலம் காசர்கோட்டில் கோழி குட்டி போட்ட அதிசய சம்பவம் நடைபெற்றுள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு அடுத்த செருவந்தூர், சீமேனி பகுதியை சேர்ந்தவர் பத்ரன். இவரது மனைவி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர். கேரள அரசு சுயஉதவி குழு உறுப்பினர்களுக்கு இலவசமாக வழங்கிய ஒரு பெட்டைக்கோழி இவர்களது வீட்டில் உள்ளது. இந்த கோழி தினமும் முட்டையிட்டு வந்தது. ஆனால் அடைகாப்பதே கிடையாது. நேற்று மாலை வீட்டு முற்றத்தில் மேய்ந்து கொண்டிருந்த அந்த கோழி ஒரு ‘கோழிக்குட்டியை’ பிரசவித்தது. இதை பத்ரனின் மனைவி வீட்டில் உள்ளவர்களை கூப்பிட்டு காட்டியுள்ளார். தொப்புள் கொடியோடு பிறந்த கோழிக்குட்டியை தாய்க்கோழி கவனிக்காது சென்று விட்டது. வீட்டில் இருந்தவர்கள் அந்த கோழிக்குட்டியை சுத்தம் செய்து வெதுவெதுப்புக்காக துணியில் வைத்து பாதுகாத்தனர். அது தற்போது நல்ல நிலையில் உள்ளது. கோழி ‘குட்டி’ போட்ட அதிசயம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்துவிட்டு செல்கின்றனர். கோழி குட்டி போட்டது பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமா, சுற்றுச்சுழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமா என்று மக்கள் பரபரப்பாக பேசிக் கொள்கின்றனர்.

Tuesday, 11 September 2012

வாழையடி வாழையாக வஞ்சம் தொடர்வதா?



பழிக்குப் பழியாக நடக்கும் கொலை சம்பவங்கள் எப்போதும் முடிவுக்கு வருவதில்லை. தொடர்கதை போல் மாறி மாறி இரு தரப்பிலும் ஆட்கள் பலியாகிக் கொண்டே இருப்பார்கள். இதனால் எத்தனையோ குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளன. இருந்தாலும் தூக்கிய அரிவாளை கீழே வைக்க மாட்டார்கள். அதிலும் தென் மாநிலங்களில் இதுபோன்ற பழிக்குப் பழி கொலைகள் அதிகமாகவே நடக்கின்றன. நெல்லையில் ஒரே நாளில் 2 கொலைகள் விழுந்துள்ளன. நெல்லை தாழையூத்து அருகேயுள்ள மேலபால மடையை சேர்ந்தவர் விஜயராஜ். கட்டிட தொழிலாளி. 10 நாட்களுக்கு முன்புதான்  திருமணம் நடந்தது. ஒரு வீட்டில் கட்டுமான பணி செய்து கொண்டிருந்தபோது 4 பைக்கில் வந்த 8 பேர் கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது. இதில் படுகாயமடைந்த அவர் இறந்தார். ஆத்திரமடைந்த உறவினர்கள் கொலையாளிகள் தரப்பை சேர்ந்த 2 வீடுகள், கடைகளை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். அப்போது  தெருவில் வந்து கொண்டிருந்த டீக்கடை உரிமையாளர் மணி என்பவரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தனர். அங்கு பதற்றம் நீடிப்பதால் ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விஜயராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் கடந்த 2009ம் ஆண்டில் பேட்டை அருகேயுள்ள சுத்தமல்லியில் பழிக்குப்பழியாக எதிர் தரப்பை சேர்ந்த மதன், ஐயப்பன்,

மற்றொரு ஐயப்பன் ஆகிய மூன்று பேரை நாட்டு வெடிகுண்டுகளை வீசியும் அரிவாளால் வெட்டியும் கொலை செய்தனர். மேலும் திண்டுக்கல்லில் பசுபதிபாண்டியன் கொலை செய்யப்பட்டதற்கு பதிலடியாக மேலபாலமடையை சேர்ந்த ராக்கெட் ராஜா ஆதரவாளரான ரவுடி ஸ்டீபனை வெட்டிக் கொன்றனர். இந்த கொலைக்கு பழிக்குப்பழியாகவே ஒரு கும்பல் விஜயராஜை வெட்டி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. ஒரு கொலையில் ஆரம¢பித்தது எத்தனையோ கொலைகளுக்குப் பிறகும் நிற்பதாக இல்லை. இது இன்னமும் தொடரும். இன்னும் பல குடும¢பங்கள் பாதிக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுகளும் பழி வாங்கும் எண்ணத்தோடு வளர்வார்கள். கொலை செய்யும் எண்ணம் அடுத்த தலைமுறைக்கும் பரவும். முடிவே இல்லாமல் வெட்டுக் குத்து என அடுத்தடுத்து நடந்தால், கோர்ட், சிறை என காலம் கழிந்தால் எப்படித்தான் இவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் வரும்? அரசியல், சமூக, மதத் தலைவர்கள் கூட்டாக சேர்ந்து நல்லெண்ணத்தை வளர்த்து மாற்றத்தை ஏற்படுத்தினால் நிலைமை மாறும். வாழையடி வாழையாக வஞ்சம் தொடர்வது யாருக்கும் லாபமில்லை.

அமைச்சர் காரை நிறுத்திய டிராபிக் போலீசுக்கு அடி, உதை : போலீஸ்காரர்கள் கைது


ஸ்ரீநகர் :காஷ்மீர் மாநிலத்தில் அமைச்சரின் காரை நிறுத்திய டிராபிக் போலீசுக்கு அடி, உதை விழுந்தது. இது தொடர்பாக அமைச்சரின் பாதுகாப்புக்கு வந்த 2 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர். காஷ்மீர் மாநிலத்தில் நீர்பாசனத் துறை அமைச்சராக இருப்பவர் தாஜ் மொய்தீன். ஸ்ரீநகரின் லால் சவுக்கில் நேற்று மதியம் காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காருக்கு பாதுகாப்பாக முன்னும் பின்னும் கார்கள் சென்றன. ஒரு சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மற்ற வாகனங்கள் சிக்னலுக்காக காத்திருக்க அமைச்சரின் கார் படை நிற்காமல் சென்றது. அங்கு பணியில் இருந்த டிராபிக் எஸ்ஐ மோகன்லால், இதை பார்த்தார். அதிரடியாக முன்னால் சென்று காரை மடக்கி நிறுத்தினார். ‘டிராபிக் விதிகள் எல்லோருக்கும் பொதுவானதுதான். ஏன் காரை நிறுத்தாமல் சென்றாய்Õ என கார் டிரைவரிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது, காரில் இருந்து விறுவிறுவென இறங்கிய அமைச்சரின் பாதுகாப்புக்கு வந்த போலீஸ்காரர்கள், மோகன்லாலை சரமாரியாக தாக்கினர். இதில் அவரது இடது கண்ணில் பலத்த அடிபட்டு ரத்தம் கொட்டியது. அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அமைச்சரின் காரை நிறுத்திய எஸ்ஐ தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அமைச்சரின் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்கள் முகமது ஷபி மற்றும் முகமது அப்பாஸ் ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கடுமை

Monday, 27 August 2012

கொலைகாரனாக்கிய குடி மயக்கம்


சரக்கு உள்ளே போய் விட்டால் மாமா, மச்சினன் தெரியாது, நண்பன் யார் எனத் தெரியாது. அந்த அளவுக்கு மயக்கத்தில் இருப்பார்கள். அந்த மயக்கத்தில் சண்டை போடுவதும், தகராறு செய்வதும் நடக்கும். ஆனால் போதையில் ஏற்பட்ட தகராறில் மீன்வெட்டும் கத்தியால் நண்பனை சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டார் ஒருவர். கொலை செய்யப்பட்டவருக்கு திருமணமாகி 3 மாதம்தான் ஆகிறது என்பது கூடுதல் பரிதாபம். சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் அருண் என்ற பென்னி. வானகரத்தில் உள்ள மார்க்கெட்டில் மீன் வாங்குவோருக்கு அதை சுத்தம் செய்து கொடுப்பார். 

அதே பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவரும் அதே வேலை செய்கிறார். இருவரும் நண்பர்கள். தினமும் மாலையில் வேலை முடிந்ததும் ஒன்றாக மது குடிக்க செல்வார்கள். வழக்கம்போல் இருவரும் டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றனர். போதை அதிகமானதும் பாரில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டிற்கு நடந்து சென்றனர். வரும் வழியில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் பார்த்திபன் இடுப்பில் வைத்திருந்த மீன்வெட்டும் கத்தியை எடுத்து அருணின் கழுத்து, முகம், வயிற்று பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார். 

நிலைகுலைந்து போன அருண், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்தும் அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். கையில் கத்தி வைத்திருந்ததால் பார்த்திபனை யாரும் நெருங்கவில்லை. பார்த்திபன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். படுகொலை செய்யப்பட்ட அருணுக்கு திருமணமாகி மூன்று மாதம் ஆகிறது. இவரது மனைவி நந்தினியின் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான பார்த்திபனை தேடி வருகிறார்கள்.
பெரும்பாலான பிரச்னைகளுக்கு மதுதான் காரணமாக இருக்கிறது. கூலித் தொழிலாளிகள் பலர் மதுவுக்கு அடிமையாகி கிடக்கின்றனர்.

வேலை முடிந்ததும் டாஸ்மாக் செல்லாமல் வீட்டுக்கு செல்வதில்லை. சம்பாதித்த பணத்தில் பெரும்பகுதியை அங்கேயே செலவழித்து விடுகிறார்கள். வீட்டு செலவுக்கு பணம் கொடுப்பதில்லை. இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்படுகிறது. குடித்து விட்டு வந்து மனைவி, குழந¢தைகளை அடிப்பது, தெரு முழுவதும் தகராறு செய்வது நடக்கிறது. இந்த தகராறு வெட்டுக் குத்தாக மாறும்போது, பலர் பலியாகி விடுகிறார்கள். அதற்கு காரணமானவர்கள் சிறைக்கு போகிறார்கள். இதனால் இவர்களின் குடும்பம் நடுத் தெருவுக்கு வந்துவிடுகிறது. குடியை மறந்தால்தான் குடும்பம் உருப்படும்.

Wednesday, 4 July 2012

ஆட்டோமொபைல் டிசைனிங் துறைக்கு மவுசு


ஆட்டோமொபைல் துறை உலகின் தவிர்க்க முடியாத துறைகளில் முதன்மை நிலையில் கொடி கட்டி பறக்கிறது. நாளுக்கு நாள் எண்ணற்ற மாற்றங்களுடன் தனக்கான பொலிவை தக்க வைத்துக்கொள்ளும் இத்துறையில் வேலைவாய்ப்புக்கு பஞ்சம் இல்லை. ஆட்டோமொபைல் டிசைனிங் தொடர்பான படிப்புகளுக்கு மாணவ, மாணவிகள் மத்தியில் மவுசு அதிகம். உலக அளவில் இதற்கான நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு லட்சங்களில் ஊதியத்துடன் வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இந்தியாவை பொறுத்த வரை சில முக்கிய கல்வி நிறுவனங்கள், பலவிதமான போக்குவரத்து  மற்றும் ஆட்டோமொபைல் வடிவமைப்பு படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன. அகமதாபாத்தில் செயல் பட்டும் வரும் தேசிய வடிவமைப்பு கல்வி நிறுவனமானது (ழிமிஞி) போக்குவரத்து  மற்றும் ஆட்டோமொபைல் வடிவமைப்பில் இரண்டரை வருட முதுநிலை படிப்பை வழங்குகிறது.  போக்குவரத்து மற்றும் ஆட்டோமோடிவ் துறையில் சிறந்த தொழில்முறை நிபுணராவதற்கு  இப்படிப்பு  உதவுகிறது.


மேலும் இப்படிப்பில் ஆட்டோமொபைல்களை வடிவமைக்க மட்டுமே பயிற்சி அளிக்கப்படுவதில்லை. மாறாக அனைத்து வகை வாகனங்களையும் வடிவமைக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்படிப்பை முடித்தால் ஆட்டோமொபைல் துறைகளில் எளிதில் பணிவாய்ப்புகளை பெறலாம். நுகர்வோர் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பு துறையிலும் சேரலாம். இப்படிப்பில் சேருவதற்கு மெக்கானிக்கல், தயாரிப்பு அல்லது ஆட்டோமொபைல் பொறியியல் துறையில்  பட்டப் படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். தேசிய வடிவமைப்பு கல்வி  நிறுவனத்தில்  இப்படிப்புக்கு கல்விக்கட்டணம் வருடத்துக்கு ரூ.1.5 லட்சம். படிப்பை முடிப்பவர்கள் ஆரம்ப நிலை ஊதியமாக வருடத்துக்கு ரூ.5 லட்சம் வரை பெறுகிறார்கள் என இக்கல்வி நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 



இது தவிர மகாராஷ்டிரா தொழில்நுட்ப கல்வி நிறு வனத்தில் இத்துறை சார்ந்த 6 மாதகால அளவு கொண்ட குறுகியகால முதுநிலை டிப்ளமோ படிப்பு வழங்கப்படுகிறது.

மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

  பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...