Friday, 7 February 2014

நைஜீரியாவில் மனித இறைச்சி விற்பனை


நைஜீரியா:நைஜீரியாவில் அனம்பிரா மாகாணத்தில் ஒஸ்–ஒக்வுடு பகுதி உள்ளது. இங்குள்ள ஓட்டலில் மனித இறைச்சி விற்பனை செய்வதாக ஒனித்ஷா போலீசுக்கு தகவல் கிடைத்தது.
உடனே, அந்த ஓட்டலில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு பிளாஸ்டிக் பையில் 2 மனித தலைகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் 2 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களும் இருந்தன. இது குறித்து ஓட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது, மனிதர்களை கொன்று இறைச்சி சமைத்து விற்பனை செய்வதை ஒப்புக்கொண்டனர். எனவே, ஓட்டல் உரிமையாளர், 6 பெண் ஊழியர்கள், 4 ஆண் ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர்.

மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

  பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...