ஹைதராபாத்:கார்களில் பயணம் செய்வோர் தங்களை சூரியக் கதிர்களின் தாக்கத்திலிருந்து
பாதுகாத்துக் கொள்ள கார் கண்ணாடிகளில் ஓட்டும் கறுப்புத் திரையை பாதுகாப்பு
காரணங்களுக்காக கடந்த 2012ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தடை செய்தது.
குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில் வெய்யிலின் கடுமையிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் விதமாக ஒரு புதிய நானோ தொழில்நுட்பத்தை ஜப்பான் அறிமுகம் செய்துள்ளது. 'ஸ்டே கூல்'என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொழில்நுட்பம் இன்று ஹைதராபாத்தில் விற்பனையைத் தொடங்க உள்ளது.
நிறமற்ற திரவமான இதனை காரின் உட்புறத்திலிருந்து கண்ணாடிகளில் ஸ்ப்ரே செய்யும்போது அதிலுள்ள நானோ துகள்கள் கண்ணாடிகளில் இரண்டு மைக்ரான் அளவிற்கு படலமாகப் படிந்து காரின் உட்புறம் வெப்பம் தாக்காமல் பாதுகாக்கும்.
காரினுடைய ஏர்-கண்டிஷனரின் சக்தியையும் இந்தத் தொழில்நுட்பம் 30 சதவிகிதம் மிச்சப்படுத்தும். இதற்காகும் செலவு சதுர மீட்டருக்கு ரூ. 8000 என்பதால் இது அனைவருக்கும் கட்டுப்படியாகக் கூடிய ஒரு விலையாகவே இருக்கும் என்று உலகளவில் இதற்கான காப்புரிமையைப் பெற்றுள்ள பியுமின் குளோபல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ஆஷ் ராய் தெரிவித்தார்.
இந்தியாவில் நடைபெற உள்ள 2014-ம் ஆண்டின் ஆட்டோ மொபைல் எக்ஸ்போ கண்காட்சியிலும் இந்த ஸ்டே கூல் தொழில்நுட்பம் இடம்பெறும் என்று அவர் கூறினார். இந்தத் தொழில்நுட்பம் ஆற்றல் சேமிப்பு தொழில்நுட்பமாக ஜப்பானிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மகேந்திரா பர்ஸ்ட் சாய்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அங்கீகரிக்கப்பட்ட கார் சர்வீஸ் சென்டர்கள் மூலம் இந்நிறுவனம் தங்களின் வர்த்தக சேவையைத் தொடங்க உள்ளது.