சென்னை:அரசு நிலங்களை ஆக்கிரமித்து வீடுகளை கட்டுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்கிறது. பல்வேறு மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அளித்துள்ள பரிந்துரையை ஏற்ற தமிழக அரசு, சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பு கட்டிடத்தை இடிப்பதற்கான செலவையும், ஆக்கிரமிப்பு நபரிடமே வசூலிக்கவும் திட்டமிட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகவிருக்கிறது.பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குடியிருப்புகள் பெருகாததால், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள அரசு புறம்போக்கு இடங்கள், மேய்க்கால் புறம்போக்கு, கைவேலி புறம்போக்கு போன்ற புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து வீடுகளை கட்டி குடியிருந்து வருகின்றனர். இதில் ஏரி புறம்போக்குகளில் வசிப்பவர்களுக்கு மட்டும் குறிப்பிட்ட ஆண்டுகள் கழித்து பட்டா வழங்கப்பட்டது. மற்ற புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. இந்நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் அரசின் புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்புகள் பெருகியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அரசு நிலங்களில் பெரிய அளவில் வீடுகளை கட்டி எந்த அச்சமுமின்றி ஆக்கிரமிப்பாளர்கள் வசித்து வருகின்றனர். ஆக்கிரமிப்பில் வீடு கட்டும்போது ஏரி போன்ற நீராதாரங்களுக்கு நீர் செல்லும் வழிகளை அடைத்து விட்டனர். இதனால் நீர்நிலைகளில் மழை நீர் சேரவில்லை. மேலும் புறம்போக்கில் வசிப்பவர்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
இதையடுத்து ஆக்கிரமிப்பில் வசிப்பவர்களை அப்புறப்படுத்தவும், சம்பந்தப்பட்ட இடத்தை அரசுத்துறை பொறுப்பில் பாதுகாக்கவும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட அரசு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதே வகையில் காஞ்சிபுரம் கலெக்டர் சித்திரசேனன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் சென்னையையொட்டிய காஞ்சிபுரம் மாவட்ட எல்லையான ஈஞ்சம்பாக்கம், சோழிங்கநல்லூர் போன்ற பகுதிகளில் ஆய்வு நடத்தியபோது 160 ஏக்கர் பரப்பிலான அரசு நிலங்கள் தனியாரால் ஆக்ரமிக்கப்பட்டு வீடுகள் மற்றும் மனைகள் ஏற்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதிகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட மாவட்ட நிர்வாகத்தினர் முதல் கட்டமாக 15 ஏக்கரில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை பொக்லைன் மூலம் இடித்து தள்ளி இடத்தை மீட்டனர். இந்த இடத்தின் மதிப்பு ரூ.100 கோடி. மீதமுள்ள ஆக்கிர மிப்புகளை மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னை மற்றும் சென்னையையொட்டிய இதர மாவட்ட எல்லைகளில் ஓடும் கூவம், பக்கிங்காம், அடையாறு, கொசஸ்தலையாறு போன்ற ஆறுகளின் கரைகளிலும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விவரங்களும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளன. இதை யடுத்து நீர் நிலைகளையொட்டிய ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியிலும் மாவட்ட நிர்வாகத்தி னர் மற்றும் வருவாய்த்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் சில சிரமங்கள் ஏற்பட்ட நிலையில் இது குறித்து பல்வேறு மாவட்டங்களில் ஆட்சித்தலைவர்கள், தமிழக அரசுக்கு பரிந்துரைகளை அனுப்பினர். அந்த பரிந்துரைகளில் அரசு நிலங்களை ஆக்கிரமித்து வீடுகளை கட்டுவோர், அரசு நிலங்களை ஆக்ரமித்து நீர் ஆதாரங்களுக்கு நீர் செல்வதை தடுப்போர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம். ஆக்கிரமிப்பில் இருந்து இடிக்கப்படும் கட்டிடங்களுக்கான இடிப்பு செலவை சம்பந்தப்பட்ட நபரிடமே வசூலிக்கலாம் என்று பரிந்துரைத்தனர்.இந்த பரிந்துரைகளை பெற்ற தமிழக அரசு விரைவில் இதற்கான அறிவிப்புகளை வெளியிட உள்ளது. வருங்காலத்தில் அரசு நிலங்களை ஆக்கிரமிப்போர் மீது குண்டாஸ் பாயும் என்பது குறிப்பிடத்தக்கது.