Skip to main content

Posts

மறக்க முடியுமா இந்த மரடோனாவை.(Diego Maradona)..!!!

  கால்பந்து விளையாட்டின் கடவுளாக போற்றப்பட்டவர், மரடோனா. ஒரு ‘மேஜிக்’ நிபுணர்போல், ரசிகர்களின் கண்களே நம்பாத அளவுக்கு, பந்துகளை லாவகமாக உதைத்து கோலாக்குவதில் வல்லவர். போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஒருமுறை வாழ்க்கையைப்பற்றி குறிப்பிடும்போது, ‘ஒரு மனிதனின் வாழ்க்கை முட்புதர்களையும், களைகளையும் கொண்ட நிலமாக இருந்தாலும், அங்கும் நல்ல விதை முளைத்து எல்லோருக்கும் பயன்தரத்தக்க ஒரு நல்லமரமாக வளர எப்போதும் ஒரு இடம் உண்டு’ என்று கூறினார். அதுபோல, ஏழ்மையான ஒரு பெற்றோருக்கு பிறந்து, குடிசைப் பகுதியில் இளமையில் வாழ்ந்தாலும், அர்ஜென்டினா நாட்டை உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் புகழை சேர்த்த டியகோ ஆர்மன்டோ மரடோனா, தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடிய ஒரு மாதத்துக்குள் மாரடைப்பால் உயிரிழந்தார். கால்பந்து விளையாட்டின் கடவுளாக போற்றப்பட்டவர், மரடோனா. ஒரு ‘மேஜிக்’ நிபுணர்போல், ரசிகர்களின் கண்களே நம்பாத அளவுக்கு, பந்துகளை லாவகமாக உதைத்து கோலாக்குவதில் வல்லவர். 1986-ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் மொத்தம் 5 கோல்கள் அடித்து கோப்பையை வென்று அர்ஜென்டினாவுக்கு உலக அரங்கில் புகழை கொடுத்தவர். பிரேசிலைச் சேர்ந்த பீலே வ...

U.P ஹத்ராஸ் - கூட்டு பாலியல் வன்கொடுமை - மறக்க முடியாத வலி

உத்தரப்பிரதேச மாநிலம்  ஹத்ராஸ்  மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான  இளம்  பெண் , கடந்த Sep 14ஆம் தேதி நான்கு பேரால்  கூட்டு பாலியல் வன்புணர்வு  செய்யப்பட்டார். இதையடுத்து அப்பெண்ணின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக மாறியது. உடனே டெல்லியில் உள்ள  சாஃப்தர்ஜங்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 15 நாட்களுக்கும் மேலாக தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இளம்பெண் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் வட இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  டெல்லி  மற்றும் உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. இளம்பெண்ணிற்கு நீதி வேண்டும் பல்வேறு  அரசியல்  கட்சி தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள், திரைத்துறையினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர். இறந்த பெண்ணிற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த சூழலில் உயிரிழந்த பெண்ணின் உடலுடன் அவரது குடும்பத்தார் டெல்லி மருத்துவமனையில் இருந்து ...

மகிழ்ச்சியளிக்கும் தமிழக கல்வி தரம்!

  2017-ம் ஆண்டுக்கு முன்பு வரை தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையிலேயே நடந்தது. 2017-ம் ஆண்டு முதல் நாடு முழுவதுக்கும் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ‘நீட்’ தேர்வு கொண்டுவரப்பட்டது. “ ‘நீட்’ தேர்வு வினாத்தாள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படுகிறது, மாநில கல்வித் திட்டத்தில் படித்தவர்களால், இந்த தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. எனவே, ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்று தமிழ்நாடு முழுவதிலும் இருந்து கோரிக்கைகள் எழுந்து வந்தன. ‘நீட்’ தேர்வு அச்சத்தால் இதுவரை 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எனவே, இந்த ‘நீட்’ தேர்வு தமிழ்நாட்டுக்கு வேண்டவே வேண்டாம் என்று விடப்படும் கோரிக்கையை ஒருபோதும் மறுப்பதற்கு இல்லை. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு இணையான அளவு மாநில பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று எழுந்த கோரிக்கைகளை ஏற்று கல்வித்துறை 2018-2019-ம் ஆண்டு பிளஸ்-1, 2019-2020-ம் ஆண்டு பிளஸ்-2 வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களையும் மாற்றியமைத்தது. இந்த புதிய பாடத்திட்டம் எதற்கும் சளைத்ததல்ல என்பதை கடந்த 13-ந்த...

தந்தை-மகன் மரணம்: ‘போலீஸ் மிருகத்தனம் ஒரு கொடூரமான குற்றம்’

  தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் ஆகிய இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்த விவகாரம் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டது முதல் தற்போது வரை நடந்த நிகழ்வுகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். ஏன் கைது? கடந்த ஜூன் 19-ம் தேதி சாத்தான்குளத்தில் தங்களது கடையை கூடுதல் நேரம் திறந்திருந்த காரணத்தால் காவல்துறையினருடன் ஏற்பட்ட தகராறில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் ஆகிய இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இதையடுத்து அவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் போராட்டத்தில் இறங்கினர். சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்தது. மாநில மனித உரிமை ஆணையமும் நோட்டீஸ் அனுப்பியது. பிரேதப் பரிசோதனை உயிரிழந்த ஜெயராஜின் மனைவியும் உயிரிழந்த பென்னீஸின் தாயாருமான செல்வராணி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் இருவரது உடலையும் மூன்...

வெட்டி வேரின் மருத்துவ பயன்கள்

வெட்டி வேரினை எலுமிச்சை வேர் எனவும் கூறுவார்கள். நீர் கடுப்பு, தேக எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் வெட்டிவேரை சுத்தம் செய்து உலர்த்திப் பொடி செய்து கொண்டு அதனுடன் பெருஞ்சீரகம் பொடி செய்து சம அளவு எடுத்து வெந்நீரில் 200 மி.கி. குடித்து வந்தால் தீர்வு கிடைக்கும். கோடையில் உஷ்ணத்தின் தாக்கத்தை குறைக்கும். வெட்டிவேரை நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் உடல் சுடும், தாகம் தணியும். நாவறட்சி, தாகம், காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுபடுத்தும். வாந்தி பேதிக்கும் இது நல்ல மருந்தாகும். மேலும் சளி தொந்தரவு ஏற்படாமல் இந்த வேர் பாதுகாக்கும். வெட்டிவேர் எண்ணெய்யை கொண்டு நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் வடுக்கள் மீது தடவி வந்தால் அவை மறைந்துவிடும். இந்த எண்ணெய்யை தேய்த்து குளிக்கலாம். சீயக்காய்க்குப் பதில் வெட்டிவேரின் பவுடரை பயன்படுத்துங்கள். இதை தொடர்ந்து செய்தால் முகத்தில் எண்ணெய் வழியாது. முகம் கூடுதல் அழகுடன் காணப்படும். வெயில் காலத்தில் உண்டாகும் அதிக வியர்வை மற்றும் அரிப்பிற்கு வெட்டிவேரை நீரில் ஊறவைத்து, அரைத்து குளிக்கும் தண்ணீரில...

ஜார்ஜ் பிலோய்ட் மரணம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று,

கரோனாவால் நிலைகுலைந்து போயிருக்கும் அமெரிக்காவை  ஜார்ஜ் ஃப்ளாய்டின் படுகொலை  உலுக்கியெடுத்திருக்கிறது. உலக நாடுகள் பலவும் இந்தப் படுகொலையைப் பேசுகின்றன. சட்டரீதியாக அமெரிக்காவில் நிறப் பாகுபாடு ஒழிக்கப்பட்டாலும், நடைமுறையில் அது இன்னும் தொடர்ந்துகொண்டேயிருப்பதைத்தான் ஜார்ஜ் ஃப்ளாய்டுகளின் மரணங்கள் சொல்கின்றன. ஒரு ஜனநாயக நாடாக அமெரிக்கா தலைகுனிந்து நிற்கிறது. வடக்கு கரோலினா மாகாணத்தின் ஃபேயட்வில் நகரத்தில் 1973-ல் பிறந்த கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்டு, வளர்ந்ததெல்லாம் டெக்ஸாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரத்தில். பள்ளிப் பருவத்தில் கால்பந்து, கூடைப்பந்து அணிகளில் விளையாடியிருக்கிறார். 2014-ல் மின்னிசோட்டா மாகாணத்தின் மினியாபொலிஸ் நகரத்துக்குப் புலம்பெயர்ந்த அவர், கடந்த 5 ஆண்டுகளாக ஒரு கிளப்பில் காவலாளியாகப் பணிபுரிந்துவந்தார். கரோனா நெருக்கடியால் வேலை இழந்த சில கோடி அமெரிக்கர்களில் அவரும் ஒருவர். ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு 22 வயதிலும், 6 வயதிலும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். கடைசி நிமிடங்கள் மே 25 அன்று மாலை மினியாபொலிஸ் நகரத்தில் உள்ள ஒரு அங்காடிக்குச் சென்று, 20 டாலர் பணத்தைக் கொடுத்...