மனிதருக்கு வியாதிகள் அணுகாமல் காக்க, இறைவன் அல்லது இயற்கை. மனிதர் வாழும் இடங்களில் பல்வேறு அரிய பலன்கள் அளிக்கவல்ல மூலிகைகளை, படைத்தே வைத்துள்ளது. நம் அருகில் வெகு சாதாரணமாக காணக்கிடைக்கும் குப்பைமேனி, நாயுருவி, போன்ற மாபெரும் சக்திமிக்க மூலிகைகளைப்போன்றே, சாதாரணமாக எங்கும் காணப்படும் மூலிகைதான், சித்தர்களால் காயகற்ப மூலிகை எனப்போற்றப்படும் ஆடாதோடை. மனிதர்களின் உடலில், எந்த வித வியாதிகளும் அணுகாமல், நரை, திரை மற்றும் மூப்பு போன்ற உடல்பிணிகளால் பாதிப்பு அடையாமல், பன்னெடுங்காலம் ஆரோக்கியமாக வாழ வழிசெய்யும் மூலிகைகளே, காயகற்ப மூலிகைகள் ஆகும் நீண்ட மாவிலை போல பசுமையான இலைகளைக்கொண்ட ஆடாதோடை, வெள்ளை நிறத்தில் பூக்களுடன் விளங்கும். அற்புத மூலிகை. ஆடாதோடை வளருமிடத்தில், அதிக அளவில் கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கி, ஆக்சிஜனை பெருமளவில் வெளியிட்டு, மனிதர்களின் நல்வாழ்வுக்கு துணை செய்யும் தன்மையுடையதாகையால், ஆடாதோடையை "ஆயுள் மூலிகை" என அழைப்பர்.. மனிதர்களின் நோயணுகா வாழ்வுக்கு நல்ல சுவாசமே, தீர்வாகும். நல்ல சுவாசத்திற்கு, நுரையீரலின் செயல்பாடு இன்றியமையாததாகும். நுரையீரல் என்பது மனிதன...