Skip to main content

Posts

தண்ணீர் இல்லை வீட்டில் இருந்தே வேலை செய்யுங்கள்" ஐடி நிறுவனம் ஊழியருக்கு அறிவுறுத்தல்

சென்னையிலுள்ள ஐடி நிறுவனங்கள் தண்ணீர் இல்லாததால் அதன் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும் படி அறிவுறுத்தியுள்ளனர்.  சென்னையில் கடந்த இரு மாதங்கள் தண்ணீர் பஞ்சம் அதிகமாக காணப்படுகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இல்லாததும் பருவமழை பொய்த்து போனதாலும் சென்னையில் தண்ணீர் தட்டுபாடு அதிகரித்துள்ளது. மேலும் நிலத்தடி நீரும் குறைந்து போனதால் பொது மக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையின் ஒ.எம்.ஆர் ஐடி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளது. சென்னையின் பழைய மகாபலிபுரம் சாலையில் சுமார் 600 ஐடி நிறுவனங்கள் அமைந்திருக்கின்றன. இந்த நிறுவனங்களில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால் இந்த நிறுவனங்கள் தண்ணீர் தேவையை சமாளிக்க பல முயற்சிகளை எடுத்துவருகிறது. இதனால் ஒஎம்ஆர் பகுதிக்கு தினசரி 3 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இவை பெரும்பாலும் மெட்ரோ லாரிகள் மூலம் தான் நிரப்படுகிறது. இவற்றில் 60 சதவீதம் தண்ணீரை ஐடி நிறுவனங்கள் தான் பயன்படுத்துகின்றன. சிப்காட் பகுதியில் உள்ள 46 ஐடி நிறுவனங்களுக்கு ம...

பொன்பரப்பி வன்கொடுமை

ச மீபத்தில் நடந்துமுடிந்த மக்களவை தேர்தல் வாக்குப் பதிவின்போது, சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் பாமக சாதி வெறி கும்பல்,  ஒடுக்க பட்ட மக்கள்  குடியிருப்புகளுக்குள் புகுந்து வீடுகளை அடித்து நொறுக்கியது. இந்து முன்னணியும் பாமகவும் சேர்ந்து சாதிவெறியை தீர்த்துக்கொள்ளும் களமாக தேர்தல் பிரச்சினையை திட்டமிட்டு மாற்றினர். வீடுகளை அடித்து நொறுக்கியதோடு, குழந்தைகள், முதியவர்களை அடித்துள்ளது இந்த கும்பல் பொன்ப‌ர‌ப்பி கிராம‌த்தில் சாதிவெறி வ‌ன்முறை : த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் க‌ள்ள‌ மௌன‌ம். ஒரு கால‌த்தில் ந‌க்ச‌லைட்டுகளுட‌ன் இருந்து பிரிந்து சென்ற, தமிழரசன் போன்றோர் த‌னித் த‌மிழ் நாடு காண்ப‌த‌ற்காக‌ ஆயுத‌ப்போராட்ட‌ம் ந‌ட‌த்திய‌ பொன்ப‌ர‌ப்பி கிராம‌த்தில், இந்த‌ சாதிவெறிக் கல‌வ‌ர‌ம் ந‌ட‌ந்துள்ள‌மை குறிப்பிட‌த்த‌க்க‌து. இந்த‌ ச‌ம்ப‌வ‌மான‌து, ஆளும் வ‌ர்க்க‌ம் ம‌க்க‌ளை பிரிப்ப‌த‌ற்கு, ஓட்ட‌ர‌சிய‌ல் எந்த‌ள‌வு ப‌ய‌னுள்ள‌தாக‌ இருக்கிற‌து என்ப‌தை எடுத்துக் காட்டியுள்ள‌து. தேர்த‌ல் முடிந்த‌ பின்ன‌ர், பாம‌க‌ க‌ட்சியை சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட‌ ஒரு க‌ட்சிக்கு வாக்க‌ள...

இலங்கை குண்டுவெடிப்பு

இலங்கையில் ந‌ட‌ந்த‌ குண்டுவெடிப்பு , ஒரு ச‌க்தி வாய்ந்த‌ குழுவின‌ரின் ந‌ன்கு திட்ட‌மிட‌ப்ப‌ட்ட‌ தாக்குத‌லாக‌த் தெரிகிற‌து. யார் இதைச் செய்திருப்பார்கள் என்பதை இதன் விளைவுகளில் இருந்தே அறியலாம். இ ல‌ங்கையில் இன்று (21.04.2019) ப‌ல‌ க‌த்தோலிக்க‌ தேவால‌ய‌ங்க‌ளிலும், ஐந்து ந‌ட்சத்திர‌ ஹொட்டேல்க‌ளிலும் ந‌ட‌ந்த‌ தொட‌ர் குண்டுவெடிப்புக‌ளில் 290 பேர் கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். ஆயிர‌க்க‌ண‌க்கில் காய‌ம‌டைந்தோர் ம‌ருத்துவ‌ம‌னைக‌ளில் அனும‌திக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். ஏராள‌மானோர் இன‌, ம‌த‌ பேத‌ம் க‌ட‌ந்து குருதிக் கொடை வ‌ழ‌ங்க‌ முன்வ‌ந்துள்ள‌ன‌ர். இல‌ங்கை ம‌க்க‌ள் அனைவ‌ரையும் ஒன்று திர‌ட்டியுள்ள‌ இந்த‌ த‌ருண‌த்தில், வ‌த‌ந்திக‌ளை கிள‌ப்பி பிரிவினையை தூண்டும் தீய‌ ச‌க்திக‌ள் குறித்தும் எச்ச‌ரிக்கையாக‌ இருக்க‌ வேண்டும். அர‌ச‌ கைக்கூலிக‌ளான‌ இந்த‌ தீய‌ச‌க்திக‌ள் இல‌ங்கையில் ஒரு பாஸிச‌ ச‌ர்வாதிகார‌ ஆட்சியைக் கொண்டு வ‌ருவ‌தை நோக்க‌மாக‌க் கொண்டுள்ள‌ன‌. இந்த‌ நிமிட‌ம் வ‌ரையில் எந்த‌ இய‌க்க‌மும் தாக்குத‌லுக்கு உரிமை கோர‌வில்லை. அதே நேர‌ம் அர‌சும் யாரையும் குற்ற‌ம் சாட்ட‌வில்லை. ஆனால், அங்கு ந‌ட‌ந...

கோமதி மாரிமுத்து - தடைகளை கடந்த தங்கமங்கை

ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து. அவரை பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை பார்ப்போம்... சாதனை படைக்க தடைகள் பல வந்தாலும் அவற்றையெல்லாம் தகர்த்து, தனது விடா முயற்சியால் இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்தவர் தான் திருச்சியை சேர்ந்த கோமதி மாரிமுத்து. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த கோமதியின் வெற்றிக்கு அடித்தளமிட்டவர் அவரது தந்தை மாரிமுத்து. சிறுவயதில் இருந்தே விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்ட தனது செல்ல மகளின் கனவை நிறைவேற்றுவதில் மாரிமுத்துவின் தந்தை பாசம், சமீபத்தில் வெளியாகிய கனா திரைபடத்தில் சத்யராஜ் நடித்த தந்தையின் பாசத்தை மிஞ்சியது. பேருந்து வசதியில்லாத குக் கிராமத்தில் பிறந்த தனது மகள் ஒருநாள் உலகளவில் சாதிப்பாள் என்ற கனவோடு, தினமும் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருச்சிக்கு விளையாட்டு பயிற்சிக்காக மாரிமுத்து அழைத்து செல்வார். அதேப்போல், கோமதியும் தனது தந்தைக்கு சளைத்தவர் இல்லை. 5-ஆம் வகுப்பில் இருந்தே விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வாங்கி குவித்துள்ளார். கல்லூரி படிப்ப...

சென்னையில் சுத்தமான காற்று விற்பனை...!

சென்னையில் சுத்தமான காற்று விற்பனைக்கு வந்துள்ளது என்ற தகவல்  அனைவரையும் அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் ஆழ்த்தி உள்ளது மரங்கள் வெட்டப்பட்டு நவீன உலகிற்கு மாற நினைக்கும் நமக்கு, இயற்கை என்றால் என்ன என்பதற்கு கூட அர்த்தம் தெரியாமல் போய் விடும் போல்  இருக்கு... தற்போது மாறி வரும் இந்த உலகை பார்க்கும் போது... இந்தியாவை பொறுத்தவரையில் அதிக மாசுக்காற்று  உள்ள இடம் என்றால் டெல்லி என யோசிக்காமல் சொல்வார்கள்.. அந்த அளவிற்கு அங்கு காற்று மா சு பட்டிருக்குமோ என்ற கேள்வி எழும்.. அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், வாகனங்களில் இருந்து வெளிவரும் கரும்புகை முக்கிய காரணமாக கூறப்பட்டது. இதனால் மக்களுக்கு பல உடல் நலக்கோளாறு ஏற்படுகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க ..எப்படியாவது இயற்கை வளங்களை பேணி காக்க வேண்டும் விவசாயத்தை மேம்படுத்திட வேண்டும்..விவசாயம் அழியக் கூடாது என தினம் தினம் போராடி வரும் இந்த தமிழகத்தில் தான், தற்போது  தூய்மையான காற்று விலைக்கு வந்துள்ளது எதற்கெடுத்தாலும் மரம் வெட்டி, இருக்கும் நிலங்கள எல்லாம் பிளாட்  போட்டு விற்பது முத...

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை

பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகார் அளித்ததையடுத்து, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது காவலில் உள்ளனர். தவிர, புகார் கொடுத்த பெண்ணின் அண்ணனைத் தாக்கியதாக வேறு நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.  இந்த கும்பலால் பொள்ளாச்சி பகுதியில் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வரும் நிலையில், ‘ஒரு பெண்ணைத் தவிர வேறு யாரும் புகார் தரவில்லை’ என்கிறது போலீஸ். ஆனால், ‘புகார் தந்த பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீஸ் பகிரங்கப்படுத்தி விட்டது. அதனால்தான், மற்ற பெண்கள் புகார் தர முன்வரவில்லை. புகார் கொடுக்க நினைக்கும் பெண்களை மறைமுகமாக மிரட்டவே போலீஸ் இப்படிச் செய்துள்ளது’ என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி அல்லது சைபர் க்ரைம் போலீஸார் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற எதிர்க் கட்சியினரின் கோரிக்கையும் கண்டுகொள்ளப்படவில்லை. ‘இந்த வழக்கின் விசாரணையை பெண் போலீஸ் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்ற ஜனநாயக மாதர் சங்கத்தினரின் கோரிக்கையும் கண்டுகொள்ளப்படவில்லை. கைதான நால்வரையும் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கவும் இல்லை....

2019 புல்வாமா தாக்குதல்

2019 புல்வாமா தாக்குதல் என்பது இந்தியாவின், சம்மு காசுமீர், புல்வாமா மாவட்ட அவந்திபோரா பகுதியில் ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், மத்திய சேமக் காவல் படையினர் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது 2019 பிப்ரவரி 14 ஆம் நாள் நடந்த தற்கொலைத் தாக்குதல் ஆகும். இத்தாக்குதலில் 40 பாதுகாப்புப் படையினரும், தற்கொலை தீவிரவாதி ஒருவரும் உயிரிழந்தனர். இத்தாக்குதலுக்கு ஜெய்சு-இ-முகமது என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்றது. 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியப் பாதுகாப்புப் படையின் மீது பாக்கிஸ்தான் ஆதரவு ஆயுதக்குழுக்களின் தற்கொலைத் தாக்குதல்கள் அதிகரித்தன. 2015 சூலை மாதத்தில் துப்பாக்கி ஏந்திய மூவர் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் பேருந்து மற்றும் காவல் நிலையத்தைத் தாக்கினர். 2016 சனவரியில் துப்பாக்கியுடன் பதான்கோட் வான் படை நிலையத்தில் தாக்குதல் நடந்தது. 2016 பிப்ரவரி மற்றும் ஜீன் காலகட்டத்தில் எட்டு இராணுவத்தினர் பொம்பொரி தாக்குதலில் உயிரிழந்தனர். 2016 செப்டம்பரில் இந்திய இராணுவப் பட்டாளத் தலைமையகத்தில் நிகழ்ந்த யூரி தாக்குதலில் 19 படையினர் உயிரிழந்தனர். 2017 டிசம்பர் 31 இல் லெத்திபோரா கமொண்டோ பயிற்ச...