Skip to main content

Posts

சவூதி பெண்ணுரிமை போராளிக்கு விருது வழங்கி கவுரவித்த ஒபாமா

ரியாத்:   ஒரு நாள் அரசு முறை பயணமாக நேற்று தலைநகர் ரியாத்தை வந்தடைந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, சவூதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் அல் சவூத்-தை சந்தித்து பேசினார். நேற்றிரவு இங்கு ஓய்வெடுத்த ஒபாமா, சவூதியில் குடும்பத்தை சேர்ந்த ஆண்களின் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடிவரும் பெண்ணியக்கவாதி குழுவினரை சந்தித்து பேசினார். கடந்த 2005-ம் ஆண்டிலிருந்து சவூதி பெண்களின் மேம்பாட்டுக்காக பாடுபட்டு வரும் பெண்ணுரிமை போராளியான மஹா அல்-முனீஃப்,  இந்த ஆண்டுக்கான அமெரிக்க அரசின் பெண்ணுரிமை போராளி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்த சந்திப்பின்போது அந்த விருதினை மஹாவுக்கு வழங்கிய ஒபாமா, அவரது தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்தினார்.

உலகிலேயே மிக மலிவு விலையில் கஞ்சா கிடைக்கும் முதல் நாடு இந்தியா

நியூயார்க்: சர்வதேச அளவில் போதைப் பொருட்களின் நடமாட்டம் மற்றும் அவற்றின் விலை விபரம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் உலகிலேயே மிக மலிவு விலையில் கஞ்சா கிடைக்கும் முதல் நாடு இந்தியாதான் என்பது தெரிய வந்துள்ளது. சராசரியாக 5 ரூபாய் இருந்தால் இந்தியாவுக்குள் ஒரு கிராம் கஞ்சாவை வாங்கிவிட முடியும் என்று அந்த ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. உலகில் உள்ள முக்கிய நாடுகளில் கஞ்சாவின் இன்றைய விலை விபரம்:-  (கிராம் ஒன்றுக்கான விலை, அமெரிக்க டாலர்களின் மதிப்பில்) மலிவு விலையில் கிடைக்கும் நாடுகள்:-  இந்தியா- $0.08, தென்னாப்பிரிக்கா- $0.10, கவுட்டெமலா- $0.20, கென்யா- $0.20, நைஜீரியா- $0.20, பிரேசில்- $0.30, கொலம்பியா- $1.32, டொமினிய குடியரசு- $1.33.                     அதிக விலையில் கிடைக்கும் நாடுகள்:-                                                                ...

எகிப்தில் இந்தியா நடத்தும் பிரம்மாண்ட கலாச்சார திருவிழா

எகிப்தில் தொடர்ந்து அமைதியற்ற சூழ்நிலை நிலவி வரும் நிலையில், இந்தியா மற்றும் எகிப்து நாடுகளுக்கு இடையே இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் அங்கு பாலிவுட் இசைக்குழுவினருடன் இணைந்து பிரம்மாண்ட கலாச்சார திருவிழாவை இந்தியா நடத்த உள்ளது. “நைல் நதியின் அருகில் இந்தியா” என்ற தலைப்பிலான இந்த கலாச்சார திருவிழா வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 35 க்கும் மேற்பட்ட இந்திய நடனக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. இதையொட்டி, எகிப்தின் முக்கிய நகரங்களான அலெக்சாண்ட்ரியா, ஹர்காடா மற்றும் லக்சாரில் பாலிவுட் இசைக்குழு பயணம் செய்ய உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசிய எகிப்திற்கான இந்திய தூதர் நவ்தீப் சூரி கூறும்போது, “இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதால் இருநாடுகளுக்கு இடையேயான கலாச்சார புரிதல்கள் பரிமாற்றம் செய்யப்பட்டு நல்லுறவு மேம்படுகிறது” என்றார். மத்திய கிழக்கு பகுதியில் மிகப்பெரிய நாடான எகிப்தில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பிரம்மாண்ட விழாவை இந்தியா நடத்துவது குறிப்பிடத்தக்கது.

இ-பைலிங்: தேர்தல் ஆணையத்தின் புதிய அணுகுமுறை

                                                புதுடெல்லி: இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவுடன் தங்களது பெயர், கல்வித் தகுதி, தங்களது சொத்துகள், கடன்கள் மற்றும் தங்கள் மீதுள்ள வழக்குகள் குறித்த தகவல்கள் உள்ளடக்கிய விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் இந்தமுறை தேர்தல் ஆணையம் கூடுதலாக இ-பைலிங் முறையில் தாக்கல் செய்யும்  முறையை வருகின்ற மக்களவை தேர்தலில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த முறையில் வேட்பாளர்கள் தங்களை குறித்த தகவல்கள் அடங்கிய அபிடவிட் விண்ணப்பத்தை விண்ணப்பிக்கலாம். ஆனால் இம்முறை கட்டாயமில்லை என்றும் விருப்பம் உள்ளவர்கள் மட்டுமமே இம்முறையை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த புதிய அணுகுமுறை நல்ல பலனை தந்தால்  அடுத்து வரவுள்ள தேர்தல்களில் கட்டாயமாக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

டெல்லியில் 207 அடி உயர கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி

                                           டெல்லியில் 207 அடி உயர கொடிக்கம்பத்தில் மிகப்பெரிய தேசியக் கொடியை, கொடி அறக்கட்டளை நிறுவனர் நவீன் ஜிண்டால் இன்று ஏற்றி வைத்தார். நினைவுச்சின்ன கொடிக்கம்பங்கள் அமைக்கும் முறையை கடந்த 2009ல் கொடி அறக்கட்டளை நிறுவனர் நவீன் ஜிண்டால் அறிமுகப்படுத்தினார். 2009-ம் ஆண்டு டிசம்பர் 23ல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கொள்கை முடிவுக்கு பிறகு தேசியக் கொடியை 100 அடிக்கும் மேலான கம்பத்தில் நாள் முழுவதும் பறக்க விட அனுமதி தரப்பட்டது. இதையடுத்து மிகப்பெரிய கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.               

வீரவல்லி சுந்தரம் சம்பத் - இவரைத் தெரியுமா

                                             $ இந்தியாவின் 18வது தலைமை தேர்தல் ஆணையர். 2009-ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தில் சேர்ந்தார். $ தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் பிறந்த இவர், 1973-ம் ஆண்டு ஆந்திரப்பிரதேசத்தில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக சேர்ந்தார். $ மாவட்ட ஆட்சியர், கோ-ஆப்ரரேட்டிவ் வங்கி தலைவர், மின் துறை செயலாளர், நிதித்துறை செயலாளர் என ஆந்திரத்திலும், மத்தியிலும் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். $ உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் 16வது பொதுத்தேர்தல் இவரது தலைமையில் நடக்க இருக்கிறது. $ இவர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தன்னுடைய 65-வது வயதில் ஓய்வு பெற உள்ளார். Keywords: வீரவல்லி சுந்தரம் சம்பத், இவரைத் தெரியுமா, தலைமை தேர்தல் ஆணையர்

உலகில் முதன் முறையாக செயற்கை இருதயம் பொருத்தியவர் மரணம்

                                                 பாரீஸ்: இருதய நோயினால் பாதிக்கப்படுபவர்களுக்கு மூளைச்சாவு ஏற்பட்ட வர்களிடம் இருந்து தானமாக பெறப்பட்டு இருதயம் பொருத்தப்பட்டு வருகிறது. அது போன்று இருதயம் கிடைக்க நீண்ட நாள் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் பலர் உயிரிழக்க நேரிடுகிறது. அதை தடுக்க செயற்கை இருதயம் தயாரித்து அதை பொருத்தும் பணியில் பிரேஞ்ச் பயோமெடிக்கல் நிறுவனமான கார்மேட் ஈடுபட்டுள்ளது. அந்த நிறுவனம் தயாரித்த முதல் செயற்கை இருதயம் 76 வயது இருதய நோயாளி ஒருவருக்கு கடந்த டிசம்பர் 18–ந்தேதி பொருத்தப்பட்டது. அது சிறந்த முறையில் இயங்கியது. எனவே அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில் கடந்த 2–ந்தேதி அவரது செயற்கை இருதயம் செயல்பாட்டை நிறுத்தியது. இதனால் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். இவருக்கு பொருத்தப்பட்ட செயற்கை இருதயம் 75 நாட்கள் மட்டுமே இயங்கி உள்ளது. பொதுவாக இது போன்ற இருதயங்களை குறுகிய கால...