எந்தவொரு நாட்டில் விவசாயி நன்றாக இருக்கிறானோ, அந்த நாட்டில் சட்டம்&ஒழுங்கு நிலை சிறப்பாக இருக்கும் என்பது கீழைநாட்டின் கிராமத்து பழமொழி. இது நூற்றுக்கு நூறு சரியானது என்பதை இப்போதைய நிலையில் உணர முடிகிறது. விவசாயப் பொருட்கள் விலை குறைவாக இருந்தால், ஏழைகள் பாதிக்கப்பட மாட்டார்கள். இதன் மூலம், அவர்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும். போராட்டங்களுக்கும், ஆர்ப்பாட்டங்களுக்கும் வேலையில்லாமல் போய்விடும். ஆனால், இப்போது நாட்டில் வித்தியாசமான சூழ்நிலை காணப்படுகிறது. ஒரு பகுதியில் விற்பனையே ஆகாமல் உற்பத்திப் பொருட்கள் அழிக்கப்படுகின்றன. மற்றொரு பகுதியில் அதற்கு கடும் தேவை ஏற்பட்டு, பல மடங்கு விலை கொடுத்து வாங்கும் பரிதாபம் உள்ளது. சென்னையில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.20. மிளகாய் ஒரு கிலோ ரூ.15, சின்ன வெங்காயம் ரூ.20 முதல் ரூ.30 வரை. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.2, மிளகாய் ரூ.8, சின்னவெங்காயம் ரூ.15. அரும்பாடுபட்டு உழைத்த விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு, உற்பத்தி விலை கூட கிடைக்கவில்லை. நஷ்டம் தொடர்ந்தால், அது அவர்களுக்கு மட்டுமே அல்ல, நாட்டுக...