Thursday, 9 January 2020

ஆஸ்திரேலியாவில் 10,000 ஒட்டகங்கள் தண்ணீரைத் தேடுவதால் சுட்டுக் கொல்லப்படும் அபாயம் உள்ளது

The number of wild camels in Australia has increased in recent years.
கேன்பெரா: கடுமையான காட்டுத் தீ மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய அரசு பத்தாயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெப்பம் சுட்டெரித்து வருகிறது. இதனால் அங்கு கடுமையான வறட்சியும் ஏற்பட்டுள்ளது. வெப்பத்தால் ஆஸ்திரேலிய வனப் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. மாதக்கணக்காக அவற்றை கட்டுப்படுத்த தீயணைப்புப் படையினரும் மீட்பு படையினரும் போராடி வருகின்றனர்.
தீக்கிரையாகும் விலங்குகள் ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தீயை அணைக்கும் பணியில் உள்ளூர் மக்களும் ஈடுபட்டுள்ளனர். இந்த காட்டுத் தீயில் இதுவரை 48 கோடிக்கும் அதிகமான வன விலங்குகள் கருகி உயிரிழந்துள்ளன.
20க்கும் மேற்பட்ட மனிதர்கள் உயிரிழந்துள்ளனர். பல லட்சம் ஏக்கர் பரப்பளவு உள்ள வனப்பகுதி எரிந்து நாசமாகியிருக்கிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி நெஞ்சை பதை பதைக்க வைத்தது.
இந்நிலையில் ஏபிஒய் பகுதியில் உள்ள ஒட்டங்கள் உள்ளிட்ட விலங்குகள் அதிகளவு நீரை குடித்து வருகின்றன. இதனால் அப்பகுதியில் உள்ள மக்களின் தேவைக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனையை சமாளிக்க அப்பகுதியில் உள்ள பத்தாயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல அப்பகுதி நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது




Tuesday, 31 December 2019

3 தலைநகரங்கள் சாத்தியமா?

ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் அபரிமிதமாக வெற்றியை பெற்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில், தென்னாப்பிரிக்கா குடியரசு நாட்டைப்போல 3 தலைநகரங்கள் இருக்கும் என்று அறிவித்துள்ளது, நாடு முழுவதும் இது சாத்தியமாகுமா?, நடைமுறையில் நிறைவேற்றக்கூடியதா?, இதன் பலன் என்ன? என்பதுபோன்ற பலத்த சிந்தனை அலைகளை உருவாக்கிவிட்டது. ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பகுதி பிரிக்கப்படவேண்டும் என்று பல ஆண்டுகளாக பெரிய போராட்டங்கள் நடந்து வந்தன. இதைத்தொடர்ந்து, 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ந்தேதி ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பகுதியை பிரித்து தனி மாநிலமாக உருவாக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது. மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேறி, நாட்டில் 29-வது மாநிலமாக தெலுங்கானா உருவெடுத்தது. இதன்கீழ் மொத்தம் உள்ள 23 மாவட்டங்களில், ஆந்திராவுக்கு 13 மாவட்டங்களும், தெலுங்கானாவுக்கு 10 மாவட்டங்களும் என பிரிக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு இரு மாநிலங்களுக்கும் ஐதராபாத் தலைநகராக இருக்கும் என்றும், அதற்குள் ஆந்திரா ஒரு தனி தலைநகரத்தை கட்டி உருவாக்கிவிடவேண்டும் என்றும் அந்த சட்டத்தில் வகை செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், அமராவதியில் ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் கோடி செலவில் புதிய தலைநகரை உருவாக்க, இதற்கு முன்பு இருந்த ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பெரும் முயற்சி எடுத்து வந்தார். 53 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் புதிய தலைநகரம் உருவாக்கப்படவேண்டும் என்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.





தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெற்றவுடன், அமராவதியை தலைநகராக்க தொடர்ந்து கட்டமைப்பு முயற்சிகள் மேற்கொள்வாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்போது ஜெகன்மோகன் ரெட்டி ஒரு தலைநகரம் என்ன?, 3 தலைநகரங்கள் அமைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்துள்ளார். தென்னாப்பிரிக்கா குடியரசு நாட்டில் 3 தலைநகரங்கள் இருக்கின்றன. அதுபோல, ஆந்திராவிலும் மாநிலத்தின் வளர்ச்சியை பரவலாக்க 3 தலைநகரங்கள் அமைக்கப்படும். நல்ல உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட விசாகப்பட்டினம் நகரம் நிர்வாக தலைநகரமாக அதிக முதலீடுகள் இல்லாமல் அமைக்கப்படமுடியும். அமராவதி சட்டமன்ற தலைநகராகவும், கர்னூல் நீதிமன்ற தலைநகரமாகவும் அமைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்தார். இதற்காக ஒய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜி.நாகேஸ்வரராவ் தலைமையில், பொதுமக்களிடம் இருந்து கருத்துகளை பெற கடந்த மாதமே ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தனது அறிக்கையை தாக்கல் செய்துவிட்டது. அதிலும் ஏறத்தாழ இந்த 3 தலைநகர முடிவுக்கு ஆதரவாகவே பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுபோல, மற்றொரு நிபுணர் குழுவும் இந்த கருத்துரு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும் என்று அறிவித்துள்ளார்.

3 தலைநகரங்கள் என்றால், முதல்-மந்திரி எங்கு தங்கி இருப்பார். நிர்வாக தலைநகரத்திலா?, சட்டமன்ற தலைநகரத்திலா? என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. கர்னூலை பொறுத்தமட்டில், 1953-ம் ஆண்டு முதல் 56-ம் ஆண்டுவரை கர்னூல்தான் முதல் தலைநகரமாக இருந்தது. தெலுங்கானா, ஆந்திரா, ராயலசீமா பகுதிகளை ஒருங்கிணைத்தபிறகு, 1956-ல் ஐதராபாத் தலைநகரமானது. இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் தலைநகரமாக மும்பையும், துணைத்தலைநகரமாக நாக்பூரும் செயல்படும் முன்னுதாரணம் இருக்கிறது. மாநிலத்தின் வளர்ச்சி பரவலாக்கப்படவேண்டும் என்ற நோக்கில் ஜெகன்மோகன் ரெட்டி எடுத்துள்ள முயற்சி வெற்றி பெற்றால், பல மாநிலங்கள் இதை பின்பற்றுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்., திருச்சியை தமிழ்நாட்டின் தலைநகரமாக்க வேண்டும் என்று அறிவித்து, அது பலத்த சர்ச்சைக்குள்ளாகி பின்பு அந்த எண்ணம் கைவிடப்பட்ட வரலாறு தமிழ்நாட்டில் இருக்கிறது. எனவே, இது சாத்தியமா?, சாத்தியமில்லையா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

Saturday, 30 November 2019

அவாரம் பூ

ஒரே ஒரு அவாரம் பூ போதும், உடலில் உள்ள மொத்த நோய்களும் குளோஸ்!! மருத்துவ ரகசியத்தை தெரிந்து கொள்வோம்!!
எவ்வளவு வறட்சி வந்தாலும் ஆவாரை செடி தன்னிச்சையாக செழுப்பாக வளரக்கூடியது. ஆவரையின் பூ,காய்,பட்டை,வேர்,இலை ஆகிய ஐந்து உறுப்புகளும் சேர்ந்து ஆவரைப் பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகிறது.
எண்ணற்ற பருத்துவ குணங்களை கொண்ட ஆவாரம் பூ- வின் மருத்துவகுணங்கள் தெரிந்தால் நீங்கள் தான் பாக்கியசாலி. வறண்ட தரிசு நிலங்களிலும், வயல் வரப்புகளிலும் வளர்ந்து பொன் மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்கும் அழகை பார்க்கும்போது கவிதை எழுதத்தெரியாத நபர்களுக்கே கவிதை வந்து கொட்டும்.
பொதுவாக ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு நோய்களை குணப்படுத்தும் என கூறுவார்கள். ஆனால் இந்த ஆவாரைப்பஞ்சாங்கத்தை தினம் ஒரு டீ ஸ்பூன் அளவு எடுத்து சாப்பிட்டுவந்தால் சர்க்கரை நோய், உடல் சோர்வு, அடங்காத தாகம், தூக்கம் இன்மை உடல் இளைத்தல் இவை அனைத்திற்கும் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
குழந்தையின்மை பிரச்னை உள்ள பெ‌ண்க‌ள் கருப்பட்டியுடன் ஆவாரம் பூவை சேர்த்து உ‌ண்டு வ‌ந்தா‌ல், பெ‌ண்களு‌க்கு மல‌ட்டு‌த் த‌ன்மை ‌நீ‌ங்கு‌ம். ‌விரை‌வி‌ல் க‌ர்‌ப்ப‌ம் உண்டாகும் வாய்ப்பு ஏற்படும்.
உடல்சூடு, தோல் வறட்சி நீங்கி பலம் பெற ஆவாரை பூச்சூரணத்தை பாலில் கலந்து குடித்துவர வேண்டும். மாதவிடாயின்போது ஏற்படும் அதிக இரத்தப் போக்குக் கட்டுப்பட 20 கிராம் ஆவாரைப் பட்டையைப் பொடி செய்து அதை தண்ணீரில் போட்டு காலை, மாலை வேளைகளில் குடித்துவர வேண்டும்.
தோல் அரிப்பு ஏற்பட்டால் ஆவாரம் பூவினை அரைத்து வெந்நீர் கலந்து அதை உடம்பில் தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்துக் குளித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
சிலருக்கு உடலில் கற்றாழை நாற்றம் வீசும். அவர்கள் ஆவரம் பூவை உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வீசும் கற்றாழை நாற்றம் நீங்கும்.
ஆவாரம் பூ, கொழுந்து, ஆவாரம் பட்டை, வேர் இவற்றை சம அளவு எடுத்து அரைது இந்தப் பொடியுடன் பசு நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உள் மூலம் குணமாகும்.

Thursday, 31 October 2019

ஆழ்துளை கிணறு அமைக்க கடைபிடிக்க வேண்டிய விதிகள்; அனுமதியின்றி அமைத்தால் தண்டனை என்ன?

மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை சுஜித் தவறி விழுந்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணறுகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.


மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை சுஜித் தவறி விழுந்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணறுகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு ஆழ்துளை கிணறுகளை தோண்டுவதிலும் விதிமுறைகளை வகுத்துள்ளது. அதனை மீண்டும் கட்டாயமாக அமல்படுத்த வேண்டும். அதனால், ஆழ்துளை அமைப்பது அதை மூடுவது பற்றி விதிமுறைகளை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
1. ஆழ்துளைக் கிணறு தோண்டுவதற்கு முன்னதாக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று ரசீது பெறுவது அவசியம்.
அனுமதி பெற்ற பிறகு,
2. முறையான பாதுகாப்பு விதிகளை பின்பற்றியே கிணறு தோண்ட வேண்டும்.
3.தோண்டும்போது உணவு, ஓய்வு ஆகியவற்றுக்கு இடைவெளி விடும்பட்சத்தில், ஆழ்துளை குழியை தற்காலிகமாக மூடி வைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
4.பணி நடக்கும் பகுதியைச் சுற்றில் முள்வேலி கம்பி அல்லது தடுப்பு அமைத்தல் கட்டாயம்
5.தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் ஆழ்துளை கிணறை முறையாக மூட வேண்டும்
6.நிலம் பழைய நிலைக்கு திரும்பும் வகையில் சீர்படுத்த வேண்டும் என்ற விதி சட்டத்தில் உள்ளது.
7.ஆழ்துளை அமைக்கப்பட்ட பகுதியை உறுதியான இரும்பு தகடு கொண்டு மூடவேண்டும். மூடியை கொண்டு மூடும்பட்சத்தில் நட்டு, போல்ட் ஆகியவை கொண்டு இறுக்கமாக மூடியை கட்ட வேண்டும்.
8.ஆழ்துளை கிணறு தோண்டும் பணி முடிந்த பிறகும் மாவட்ட நிர்வாகத்துக்குத் தகவல் அளிக்க வேண்டும்.
9.உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஆழ்துளை கிணற்றில் விழுந்து யாராவது உயிரிழந்தால், அந்த கிணறு அமைந்துள்ள இடத்தின் உரிமையாளரும், அதனை தோண்டிய நபருமே பொறுப்பேற்க வேண்டும்.
10.பதிவு செய்யாமல், அனுமதி இன்றி ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தால், 1920 தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தின் 316 A பிரிவின்படி, அபராதத்துடன் கூடிய 3 முதல் 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வழிவகை உள்ளது.

Saturday, 28 September 2019

கீழடி அகழ்வாராய்ச்சி

சிந்து,கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு பின்,இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள்,தமிழகத்தில் தோன்றவில்லை என்ற கருத்துக்கு மாறாய்,சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன.வைகை நதியின் தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வரலாற்ற சிறப்புமிக்க கீழடி கிராமம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது.தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும்.இங்கு 40க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன.சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்கள் அனைத்துமே இங்கே கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளா்களும்,சங்கத்தமிழ் ஆா்வலா்களும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனா்.

சிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக்காஞ்சி போன்ற இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்மணிகள் மட்டுமே 600 கிடைத்துள்ளன.முத்துமணிகள்,பெண்களின் கொண்டை ஊசிகள், பெண்கள் விளையாடிய சில்லு,தாயக்கட்டை,சதுரங்க காய்கள்,சிறுகுழந்தைகள் விளையாடிய சுடுமண் பொம்மைகள் ஆகிய சங்க காலம் குறிப்பிடும் பல தொல்பொருட்களும் இங்கு அதிகளவில் கிடைத்திருக்கின்றன.

அதேபோல, இங்கு கிடைத்துள்ள நூல் நூற்கும் தக்ளி, அக்கால மக்கள் நூல் நூற்று ஆடை நெய்து அணிந்து வாழ்ந்திருப்பதை உறுதி செய்கிறது.பட்டிணப்பாலையில் குறிப்பிடப்படும் சுடுமண் உறைகேணிகளும் இங்கு கிடைத்திருக்கின்றன. சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகளின் அருகே இக்கேணிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.அதிகளவில் செங்கல் வீடுகளும் வீடுகளின் மேற்கூரையில் ஓடுகள் வேயப்பட்டிருந்ததையும் இங்கு கிடைத்துள்ள சான்றுகளின் மூலம் உணர முடிகிறது.

குடிநீா் தேவைக்காகவும், வீட்டின் பிற பயன்பாடுகளுக்காகவும் உறைகிணறு தோண்டும் முறை சங்க காலம் முதல் அண்மைக் காலம் வரை இருந்துவருகிறது.சங்க இலக்கியமான பத்துப்பாட்டில் பட்டிணப்பாலை என்ற நூலில் பூம்புகார் நகரத்தின் ஒருபகுதியில் உறைகிணறுகள் இருந்தது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டிணப்பாலை நூலாசிரியா் உருத்திரங்கண்ணனார் “உறை கிணற்று புறச்சேரி” எனக் குறிப்பிட்டுள்ளார்.அந்த சங்க காலத்தைச் சோ்ந்த உறைகிணறுதான் கீழடி அகழாய்விலும் கண்டறியப்பட்டுள்ளது.வீடுகள் தோறும் குளியலறைகள் இருந்திருக்கின்றன.

இப்பகுதியில் மட்டும் ஒரு டன் அளவிற்கு கருப்பு சிவப்பு மட்கல ஓடுகள் கிடைத்துள்ளன.பல ஓடுகளில் “தமிழ் பிராமி” எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருமலை மலைக்கொளுந்தீஸ்வரர் கோயிலில் தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தை சோ்ந்த சூது பவள மணிகளும், ரோமானிய நாட்டு அரிட்டைன் வகை மட்கல ஓடுகளும் இங்கு கிடைத்திருக்கின்றன. இது அக்கால மக்களின் வாணிக தொடா்பையும், வணிகச் சிறப்பையும் நமக்கு உணா்த்துகிறது. குறிப்பாக தென்தமிழகத்தில் அகழாய்வில் கிடைக்கும் வெள்ளை வண்ணம் தீட்டப்பட்ட மண்பாண்டங்களும், கொங்குப் பகுதியில் மட்டும் கிடைத்த ரசட் கலவை பூசப்பட்ட மண்பாண்டங்களும் இங்கு கிடைத்துள்ளன. ரசட் கலவையின் தாக்கம் இருப்பதைப் பார்க்கும்போது கொங்குப் பகுதியோடு வாணிபத் தொடா்பில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

வரலாற்றின் தொடக்க காலத்திய செங்கல் கட்டிடச் சான்றுகள் கிடைப்பது மிகவும் அரிது. ஆனால் இங்கு அதிகளவில் செங்கல் கட்டிடங்கள் இருந்துள்ளது ஆச்சரியமளிக்கிறது. சங்ககாலத்தில் வைகை நதியின் வலது கரையில் பண்டைய வணிக பெருவழிப்பாதை இருந்துள்ளது. மதுரையிலிருந்து இராமேஸ்வரம் அழகன்குளம் துறைமுகப் பட்டிணத்துக்கு “கீழடி திருப்புவனம்” வழியாக பாதை இருந்துள்ளது. மதுரைக்கு அருகாமையிலேயே இந்த ஊா் வணிக நகரமாக இருந்துள்ளது.

அழகன் குளத்தில் நடந்த அகழாய்வில் பண்டைய ரோமானிய நாட்டின் உயா்ரக ரவுலட், ஹரிடைன் மண்பாண்டங்கள் கிடைத்தது போன்று கீழடி பள்ளிச்சந்தை புதூரிலும் கிடைத்துள்ளது. அந்த வகையில் அழகன் குளம் துறைமுகப் பட்டிணத்தையும் மதுரையையும் இணைக்கும் இடமாக கீழடி பள்ளிச்சந்தை புதூா் இருந்திருக்கலாம். மேலைநாடுகளுக்கு கடலில் பிரயாணம் செய்யும் வணிகா்கள் இந்த ஊரின் வழியாக சென்றிருக்கலாம். இங்கு கிடைத்துள்ள தடயங்கள், சான்றுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. அந்தவகையில் இந்த இடம் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.

முதல்கட்ட ஆய்வில் கிடைத்ததைவிட, இரண்டாம் கட்ட அகழாய்வில் 10-க்கும் மேற்பட்ட சங்ககால கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அக்கால மக்கள் பயன்படுத்திய சுடுமண் முத்திரை கட்டைகள் (இரப்பா் ஸ்டாம்ப்), எழுத்தாணிகள், அம்புகள் , இரும்பு, செம்பு ஆயுதங்கள், அரிய வகை அணிகலன்கள், 18 தமிழ் எழுத்துக்களுடைய மட்பாண்ட ஓடுகள் உட்பட 5300-க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. “அரிக்கன்மேடு, காவிரி பூம்பட்டிணம், உறையூா் போன்ற அகழாய்வில் கிடைத்ததைவிட அதிக எண்ணிக்கையில் தொடா்ச்சியாக பல கட்டிடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
சங்ககாலத்தில் கட்டிடங்களே இல்லை என்ற கூற்றை இந்த அகழாய்வு மாற்றியமைத்துள்ளது. கீழடியில் கண்டறியப்பட்டுள்ள கட்டிடங்கள் மூலம் ஒரு நகர நாகரீகம் இருந்ததற்கான அத்தனை அடிப்படை ஆதாரங்களும் கிடைத்துள்ளன.தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் சுடுமண் முத்திரை கிடைத்தது இதுவே முதல்முறை.













Tuesday, 27 August 2019

சுருங்கிய இந்தியப் பொருளாதாரம்

45 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பு இழப்புகள் ஏற்பட்டுள்ளன. 22 - 24 சதவிகிதம் இருந்த ஏற்றுமதி, 11 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. உற்பத்திக்குத் தேவையான தளவாடப் பொருள்களின் இறக்குமதி கணிசமாகக் குறைந்து விட்டது
நிலையான ஆட்சியைத் தருவோம்' என்ற வாக்குறுதியுடன் தேர்தலில் களமிறங்கிய பி.ஜே.பி, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. சரி... ஆட்சி நிலைபெற்றுள்ளதுதான். ஆனால், நாட்டின் பொருளாதாரம்? அது சரிந்துகொண்டிருப்பதாக, குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. கிட்டத்தட்ட இரண்டு மாதகாலம் நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் முத்தலாக், காஷ்மீர் போன்ற விவகாரங்கள் முதன்மைப்படுத்தப்பட்டதால், சரிந்துள்ள இந்தியப் பொருளாதாரம் குறித்த விவாதங்கள் ஓரங்கட்டப்பட்டுவிட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூன் 17-ம் தேதி தொடங்கியது. அதற்கு முன்பாகவே, பொருளாதாரம் சரிந்துகொண்டிருப்பதாக எச்சரிக்கை மணி ஒலிக்க ஆரம்பித்தது. ஆனால், வெவ்வேறு விஷயங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த ஆட்சியாளர்கள், அதைக் கண்டும்காணாமலும் இருந்தனர். 'மிஷன் காஷ்மீர்' ஆபரேஷன் முடிந்த பிறகு இயல்புநிலைக்குத் திரும்பிய ஆட்சியாளர்கள், இப்போது தொழிலதிபர்களை அழைத்துப் பேசியிருக்கிறார்கள். 'பொருளாதார மந்தநிலையைச் சரிசெய்ய, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்று வாக்குறுதி அளித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அதிக மதிப்புகொண்ட பொருளாதார நாடுகளின் பட்டியலில் 5-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 7-வது இடத்துக்குப் போய்விட்டது. இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழகப் பொருளாதாரத் துறை தலைவரான பேராசிரியர் ஜோதி சிவஞானத்திடம் பேசும்போது, "2014-ல் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த பிறகு, ஜி.டி.பி-யைக் கணக்கிடும் முறை மாற்றப்பட்டது. பழைய கணக்கீட்டு முறையில் இந்தியாவின் இப்போதுள்ள பொருளாதார வளர்ச்சியைப் பார்த்தால், 3.3 சதவிகிதம் என்கிற அளவுக்கு மட்டுமே இருக்கிறது. இதன் விளைவுகள் கடுமையாக உள்ளன.
45 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பு இழப்புகள் ஏற்பட்டுள்ளன. 22 - 24 சதவிகிதம் இருந்த ஏற்றுமதி, 11 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
உற்பத்திக்குத் தேவையான தளவாடப் பொருள்களின் இறக்குமதி கணிசமாகக் குறைந்து விட்டது. ஜி.டி.பி-யில் 40 - 45 சதவிகிதம் என்ற அளவில் இருந்த ஏற்றுமதியும் இறக்குமதியும் தற்போது 23 - 24 சதவிகிதமாகக் குறைந்துவிட்டன. ஸ்டீல், சிமென்ட் உள்ளிட்ட முக்கியத் துறைகளின் வளர்ச்சி 0.2 சதவிகிதமாகச் சரிந்துள்ளது. இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் நம்முடைய பொருளாதாரம் சுருங்கிவிட்டது என்பதையே காட்டுகிறது" என்றார்.
"நாட்டின் மொத்த வருமானத்தில் ஏழு சதவிகிதம், பெரிய கார்ப்பரேட்களின் லாபமாக இருந்தது. இன்றைக்கு அது இரண்டு சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. அதனால் தொழிலதிபர்கள் இன்று கொதிக்கிறார்கள். எங்கேயோ கொஞ்சம் பிரச்னை இருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், பூகம்பமாக வெடித்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அது இல்லை என்பதை மட்டும் நிச்சயமாகச் சொல்ல முடியும்" என்றார்.- 30 ஆண்டுகள் பின்னோக்கி, வெளியே போன ரூ.65,383 கோடி, அச்சுறுத்தும் 'வரி பயங்கரவாதம்!'

Wednesday, 10 July 2019

மறைநீர் என்றால் என்ன?

நாம் பயன்படுத்துகின்ற பொருட்கள் அனைத்திலும் மறைந்திருக்கும் நீர், மறை நீர் என வழங்கப்படுகிறது.
நாம் பயன்படுத்துகின்ற பொருட்கள் அனைத்திலும் மறைந்திருக்கும் நீர், மறை நீர் என வழங்கப்படுகிறது. ஒரு நாட்டின் மொத்த உற்பத்தியையும் பணத்தைக்கொண்டு மதிப்பிடுவதைப் போல நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் பொருளாதாரம் தான் மறைநீர்!
ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் – இதுவே மறை நீர்
மறைநீர் என்பது ஒரு வகை பொருளாதாரம். மறைநீர் என்பது ஒரு தத்துவம். காற்றைப் போன்றது அது. கடவுளைப் போன்றது அது. தூணிலும் இருக்கிறது. துரும்பிலும் இருக்கிறது மறைநீர். மறைநீரை பார்க்க முடியாது. உணர மட்டுமே முடியும். நீரின்றி அமையாது உலகு என்பது சங்க காலம். மறைநீரின்றி அமையாது என்பதுதான் நவீன காலம். நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கும் உள்ளேயும் மறைந்திருக்கிறது மறைநீர். இதோ நீங்கள் படிக்கும் இந்த காகிதத்துக்குள் மறைந்திருக்கிறது மறைநீர். கணினித் திரைக்குள் புதைந்திருக்கிறது மறைநீர்.
ஒரு நாட்டின் மொத்த உற்பத்தியையும் பணத்தைக்கொண்டு மதிப்பிடுவதைப் போல நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் பொருளாதாரம் தான் மறைநீர். இதைக் கண்டுபிடித்தவர் இங்கி லாந்தைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்தக் கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர். ஒரு மெட்ரிக் டன் கோதுமை 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீருக்கு சமம் என்கிறது மறைநீர் தத்துவம். எப்படி? கோதுமையை விளைவிக்க நீர் தேவை. ஆனால், கோதுமை விளைந்தவுடன் அந்த நீர் இருக்காது. எங்கே போனது அது? கோதுமைக் காக செலவிடப்பட்ட நீர் கோதுமைக்குள்தானே மறைந்திருக்க வேண்டும். இதுவே மறைநீர்.
ஒரு கிலோ அரிசி உற்பத்தி செய்ய 2500 முதல் 3000 லிட்டர்கள் தண்ணீர் மறைமுகமாக தேவைப்படுகிறது. 1.1 டன் எடைகொண்ட இலகு ரக வாகனத்தை உற்பத்தி செய்ய 4 லட்சம் லிட்டர் தண்ணீரும், ஒரு ஜீன்ஸ் பேன்ட் தயாரிக்க 10,000 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது
காலையில் ஒருவர், ஒரு கோப்பை காப்பி அருந்துகிறார் என்று வைத்துக் கொள்வோம். அக்காப்பியில் உள்ள மறை நீரின் அளவு 140 லீட்டர் ஆகும்.
அதாவது ஒரு காப்பி செடியைப் பயிரிட்டு, வளர்த்து, கொட்டையை அறுவடை செய்து, தூளாக்கி, அதை கப்பலில் ஏற்றுமதி செய்யும் நாட்டின் நீர் அதில் மறைந்துள்ளது. இது ஒவ்வொரு ஏற்றுமதி பொருளுக்கும் பொருந்தும். இப்படி கணக்கிடும் போதுதான் ஒரு கோப்பை காப்பியின் மறை நீர் அளவு 140 லீட்டர் ஆகிறது. இந்த அளவானது ஒருவர் நேரடியாக புழங்கும் ஒருநாள் நீரின் அளவாகும்!
பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ.20. தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட அம்மா மலிவு விலை குடிநீரின் விலை ரூ.10. இது நமக்கு தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்?
புத்திசாலி நாடுகள்!
நீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வுசெய்து அதற்கு ஏற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டும். சீனா, இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அப்படித்தான் செய்கின்றன. சீனாவின் பிரதான உணவு பன்றி இறைச்சி. ஒரு கிலோ பன்றி இறைச்சி உற்பத்திக்கான மறை நீர் தேவை 5,988 லிட்டர். அதனால், சீனாவில் பன்றி உற்பத்திக்கு கெடுபிடி அதிகம். ஆனால், தாராளமாக இறக்குமதி செய்துகொள்ளலாம். ஒரு கிலோ ஆரஞ்சுக்கான மறை நீர் தேவை 560 லிட்டர். சொட்டு நீர் பாசனத்தில் கோலோச்சும் இஸ்ரேலில் ஆரஞ்சு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு கெடுபிடிகள் அதிகம். இவ்விரு நாடுகளும் ஒவ்வொரு பொருளுக்குமான மறை நீர் தேவையைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதன்படி ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுத்துள்ளன.
இது இந்திய நிலவரம்!
முட்டை உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது மகாராஷ்டிரம். நாமக்கல்லுக்கு இரண்டாவது இடம். நாமக்கல்லில் ஒரு நாளைக்கு மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் 70 லட்சம் முட்டைகள் தினசரி வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 4.80 கோடி டாலர்கள் அன்னிய செலவாணி கிடைக்கிறது.
மூன்று ரூபாய் முட்டைக்கு 196 லிட்டர் மறை நீர்
வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தண்ணீர் பற்றாக்குறை கொண்டவை. ஐரோப்பிய நாடுகள் மறைநீர் தத்துவத்தைப் பின்பற்றுபவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். சரி, சராசரியாக 60 கிராம் கொண்ட ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 196 லிட்டர் மறை நீர் தேவை. மூன்று ரூபாய் முட்டை 196 லிட்டர் தண்ணீரின் குறைந்தபட்ச விலைக்குச் சமம் என்பது எந்த ஊர் நியாயம்?முட்டையினுள் இருக்கும் ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர் மறை நீர் தேவை. ஒரு கிலோ பிராய்லர் கோழிக் கறி உற்பத்திக்கான மறை நீர் தேவை 4325 லிட்டர்.
சென்னை கதைக்கு வருவோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஏன்? அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா? இடம்தான் இல்லையா? உண்டு. இங்கு மனித சக்திக்கு குறைந்த செலவு என்றால், நீர்வளத்துக்கு செலவே இல்லை. 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறை நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள்.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களில் 72 % வேலூர் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் 2013-14-ம் ஆண்டில் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு 850 கோடி டாலருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 5,500 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.
அன்னிய செலவாணி வருவாய் ஆண்டுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய். ஒரு எருமை அல்லது மாட்டின் ஆயுள்கால மறை நீர் தேவை 18,90,000 லிட்டர். 250 கிலோ கொண்ட அக்கால்நடையில் இருந்து ஆறு கிலோ தோல் கிடைக்கும்.
ஒரு கிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறை நீர் தேவை.
பனியன், ஜட்டி உற்பத்தியில் முதலிடம் திருப்பூருக்கு. ராக்கெட் தயாரிக்கும் வல்லரசுகளுக்கு ஜட்டி தயாரிக்க தெரியாதா? 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறை நீர் தேவை 2495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10,000 லிட்டர் மறை நீர் தேவை.
தண்ணீருக்கு எங்கு கணக்கு?
ஐரோப்பிய நாடுகள் மறைநீர் தத்துவத்தைப் பின்பற்றுபவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். ஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியதுதானே? அப்படி எனில், பெரும் நிறுவனங்கள் எல்லாம் தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையை செலவுக் கணக்கில் சேர்ப்பது இல்லை? ஏனெனில், நம்மிடம் இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன அந்நிறுவனங்கள்!
மறை நீருக்கு மதிப்பு கொடுத்திருந்தால் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் என்றோ இடம் பிடித்திருப்பான் இந்தியன் . இனியாவது இந்திய அரசு மறை நீர் தத்துவத்தை உணர வேண்டும்! மூன்றாம் உலகப்போர் என்று ஒன்று நடைபெற்றால் அது நீருக்காகவே நடைபெறும் என புவியியலாளர்கள் கூறுகிறார்கள். இயற்கை ஆர்வலர்களும் அமைப்புகளும் அவ்வழிவைக் கட்டுப்படுத்த சமூகத்தில் மக்களிடம் இயற்கை குறித்த புரிதல்களை ஏற்படுத்த வேண்டும்.

மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

  பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...