Sunday, 14 September 2014

வேட்டி அணியாத பக்தர்கள் வெளியேற்றம்: திருப்பதியில் அதிரடி

 

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இதுவரை ஆர்ஜித சேவைகளான சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, கல்யாண உற்சவம், வசந்த உற்சவம் என  அனைத்து ஆர்ஜித சேவைகளுக்கும் இந்துக்களின் சம்பிரதாய உடைகளான வேட்டி, சட்டையை ஆண்களும், பெண்கள் சேலை அணிந்து வரவேண்டும் என  கட்டாயமாக இருந்து வருகிறது. கடந்த மாதம் 27ம் தேதி முதல் ரூ.300க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் இ-தரிசன கவுன்டர்கள்  மூலமாகவும், இணைய தளம் மூலமாகவும் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த டிக்கெட் பெற்று தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கட்டாயமாக சம்பிரதாய உடை  அணிந்து வர வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்தது.இதேபோல் 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யக்கூடிய ரூ.50 சுதர்சன டிக்கெட் பெற்றுவரும்  பக்தர்களும் சம்பிரதாய உடை அணிந்து வர வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆன்லைனில் டிக்கெட் பெற்று வந்த பக்தர்கள் தரிசனத்துக்கு காத்திருந்த வரிசையில், இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு நேற்று திடீர் ஆய்வு  செய்தார். இதில் 40 சதவீதம் பக்தர்கள் சம்பிரதாய உடை அணியாமல் பேன்ட், சட்டை அணிந்து வந்திருந்தது தெரிந்தது. அவர்கள் அனைவரையும் வேட்டி அணிந்து  வரும்படி கூறி வரிசையில் இருந்து வெளியேற்றினர். இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். வேட்டி கொண்டு வராத பக்தர்கள் என்ன செய்வது என்று தெரியாமல்  தவித்தனர். இந்நிலையில் தேவஸ்தானத்தின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக அப்பகுதியில் கடை வைத்திருந்த வியாபாரிகள் சிலர் வேட்டிகளை எடுத்து வந்து  வரிசையில் நின்றிருந்தவர்களிடம் விற்பனைசெய்து, அவர்கள் தொடர்ந்து சுவாமி தரிசனத்துக்கு செல்ல ஏற்பாடு செய்தனர். இதுகுறித்து இணை செயல் அலுவலர்  கூறுகையில், திருப்பதியில் தரிசனத்துக்கு முன்பதிவு செய்த பக்தர்கள் அனை வரும் கட்டாயமாக சம்பிரதாய உடைகள் அணிந்து வரவேண்டும். இது கட்டாயம்  நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.
 


Saturday, 13 September 2014

இந்தியாவில் அல்-கொய்தா கிளை அமைக்கப்பட்டதாக வெளியான வீடியோ உண்மையானது: ஆய்வில் தகவல்





இந்தியாவில் அல்-கொய்தாவின் புதிய கிளை தொடங்கப்பட்டிருப்பதாக அந்த அமைப்பின் தலைவன் ஐமா-அல்-ஜவாகிரின் மிரட்டல் விடுத்த வீடியோ காட்சி உண்மையானது தான் என இந்திய உளவுத்துறை அமைச்சகத்தின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
புனித போர் என்ற பெயரில் தாக்குதல்கள் நடத்த கொய்த-அல்-ஜிகாத் என்ற புதிய அமைப்பு இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளதாக அல்-கொய்தா தலைவர் ஜமா-அல்-ஜவாகிரின் கடந்த வாரம் மிரட்டல் விடுத்திருந்தார். 55 நிமிடம் ஓடக்கூடிய வகையில் வீடியோ உருவாக்கப்பட்டிருந்தது.
இந்தியாவில் அசாம், குஜராத், காஷ்மீர் மாநிலங்களிலும் வங்கதேசம், பர்மாவிலும் உள்ள பாதிக்கப்பட்ட மக்கள் காப்பாற்றப்படுவார்கள் என்று ஐமா-அல்-ஜவாகிரின் கூறியிருந்தார்.
இந்த வீடியோ போலியானதாக இருக்கலாம் என்று ஒரு தரப்பு கருத்து தெரிவித்து வந்தது. இதனையடுத்து வீடியோ காட்சியின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி உள்துறை அமைச்சகம் மத்திய உளவுத்துறையிடம் கேட்டுக்கொண்டது. ஆய்வில் வீடியோ உண்மையானது தான் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து நாடுமுழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் படி காவல்துறை மற்றும் உளவு அமைப்பினரை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 12 மாநிலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் இந்திய மக்கள் அல்-கொய்தாவின் தாக்குதல்களை நினைத்து அச்சப்பட வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று கேட்டுக்கொண்டார்.

Sunday, 17 August 2014

DONT WORRY BE HAPPY



Make this a “must-share” with your friends! 
"Live your life & risk it all, 
Take some chances, take the fall,
Take your time, no need to hurry, 
Have some fun & never worry!"

மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

  பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...