இந்தியாவில்
அல்-கொய்தாவின் புதிய கிளை தொடங்கப்பட்டிருப்பதாக அந்த அமைப்பின் தலைவன்
ஐமா-அல்-ஜவாகிரின் மிரட்டல் விடுத்த வீடியோ காட்சி உண்மையானது தான் என
இந்திய உளவுத்துறை அமைச்சகத்தின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
புனித போர் என்ற பெயரில் தாக்குதல்கள் நடத்த கொய்த-அல்-ஜிகாத் என்ற புதிய அமைப்பு இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளதாக அல்-கொய்தா தலைவர் ஜமா-அல்-ஜவாகிரின் கடந்த வாரம் மிரட்டல் விடுத்திருந்தார். 55 நிமிடம் ஓடக்கூடிய வகையில் வீடியோ உருவாக்கப்பட்டிருந்தது.
இந்தியாவில் அசாம், குஜராத், காஷ்மீர் மாநிலங்களிலும் வங்கதேசம், பர்மாவிலும் உள்ள பாதிக்கப்பட்ட மக்கள் காப்பாற்றப்படுவார்கள் என்று ஐமா-அல்-ஜவாகிரின் கூறியிருந்தார்.
இந்த வீடியோ போலியானதாக இருக்கலாம் என்று ஒரு தரப்பு கருத்து தெரிவித்து வந்தது. இதனையடுத்து வீடியோ காட்சியின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி உள்துறை அமைச்சகம் மத்திய உளவுத்துறையிடம் கேட்டுக்கொண்டது. ஆய்வில் வீடியோ உண்மையானது தான் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து நாடுமுழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் படி காவல்துறை மற்றும் உளவு அமைப்பினரை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 12 மாநிலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் இந்திய மக்கள் அல்-கொய்தாவின் தாக்குதல்களை நினைத்து அச்சப்பட வேண்டாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று கேட்டுக்கொண்டார்.