Saturday, 15 February 2014

இரத்தத்தை சுத்தம் செய்யும் கோவைக்காய்


கோவையைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. வேலிகள், தோட்டங்கள், காடுகளில் இந்த கொடி படர்ந்து காணப்படும். இதன் பழங்கள் இனிப்பு, புளிப்பு, கசப்பு தன்மை கொண்டது. கோவையின் நிறத்தையும், வடிவத்தையும் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை, நாமக்கோவை, கருங்கோவை என பலவகையாகப் பிரிக்கின்றனர். இதன் இலை, காய், வற்றல், தண்டு, கிழங்கு அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. 

இரத்தம் சுத்தமடைய:


காற்று, நீர், இவற்றின் மாசடைந்த தன்மையாலும் இன்றைய அவசர உணவு (பாஸ்ட்புட்)களாலும் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. இதனால் இரத்தத்தில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்படுகிறது. மேலும் பித்த அதிகரிப்பு காரணமாக இரத்தம் அசுத்தமடைகிறது. இதனால் சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. இரத்த சோகை மற்றும் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் உருவாகிறது. இவர்கள் கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் 1 ஸ்பூன் அளவு தேனில் கலந்தோ அல்லது கஷாயமாகக் காய்ச்சியோ அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமடைவதுடன் உடலும் புத்துணர்வு பெறும்.

கண் நோய் குணமாக:


கண்கள் ஐம்புலன்களில் முதன்மையானது. கண்களால்தான் புறத்தோற்றங்களை காணவும் ரசிக்கவும் முடியும். உடலில் எந்தவகையான பாதிப்பு ஏற்பட்டாலும் கண்கள் முதலில் பாதிக்கப்படும். இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத்தான் அதிக வேலை பளு. இதனால் கண் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. இதற்கு கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, கஷாயம் செய்து தினமும் காலையில் அருந்தி வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும். மேலும் கண் நரம்புகள் பலப்படும்.

தோல் கிருமிகள் நீங்க: 


தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு இவற்றைக் குணப்படுத்தவும், தோலில் ஏற்படும் அலர்ஜியைத் தடுக்கவும் கோவை இலை பயன்படுகிறது. கோவை இலை, மஞ்சள் தூள், சிறியா நங்கை, வேப்பிலை இவைகளை சம அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து சிறிது நீர் கலந்து மண்சட்டியில் விட்டு நன்றாக காய்ச்சி ஆறியபின் உடலெங்கும் பூசி ஊறவைத்து பின் குளித்து வந்தால் சொறி சிரங்கு குணமாகும்.

உடல் சூடு :
 தற்போது கோடைக் காலம் முடிந்து தென்மேற்கு பருவமழை பெய்துள்ளது. இதனால் சுற்றுப்புறத்தில் ஏற்படும் மாற்றங்களால் உடலின் தட்ப வெப்ப நிலையும் மாறுபடுகிறது. இதனால் உடலுக்கு பல பாதிப்புகள் உருவாகிறது. இதற்கு கோவையிலை கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும். கண்கள் குளிர்ச்சிபெறும் .

வியர்க்குரு
வை தடுக்க

சிலருக்கு வியர்வை வெளியேறாமல் வியர்க்குருகளாக நீர்கோர்த்துக்கொள்ளும். இவை சில சமயங்களில் வேனல் கட்டிகளாக மாறவும் வாய்ப்புள்ளது. இவர்கள் கோவை இலையை அரைத்து உடலெங்கும் பூசி குளித்து வந்தால் வியர்குரு வராமல் தடுக்கலாம்.கோவை இலையின் சாறுடன் வெண்ணெய் சேர்த்து பூசி வந்தால் சொறி, சிரங்கு, நாள்பட்ட புண் போன்றவை குணமாகும்

தாது புஷ்டியாக


இன்றைய மன அழுத்த பிரச்சனையால் சிலர் தாதுவை இழந்துவிடுகின்றனர். இதனால் இவர்கள் மண வாழ்க்கைக்கு செல்ல பயங்கொள்கின்றனர். மேலும் சிலரோ இதை மறைத்து திருமணம் செய்து பின்னாளில் மணவாழ்க்கை கசந்து விவாகரத்து கோரி நிற்கின்றனர். இப்பிரச்சனை தீர கோவையிலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து ஒரு மண்டலம் உண்டுவந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம். இவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியமாகும்.

கோவையின் பயனை உணர்ந்து அதனைப் பயன்படுத்தி வந்தால் ஆரோக்கியமான உடலைப் பெறலாம்

Wednesday, 12 February 2014

சிதம்பர ரகசியம்

சிவபெருமான் அருவம், உருவம், அருவுருவம் ஆகிய மூன்று வடிவங்களில் வீற்றிருக்கிறார். இம்மூன்று விதங்களிலும் ஒருசேர அருள்பாலிக்கும் தலம் சிதம்பரம். இங்கு லிங்கரூபமாக இருக்கும் திருமூலநாதர் அருவுருவ வடிவமாவார். நடராஜரின் திருமேனி உருவ வடிவமாகும்.

சிதம்பர ரகசியமாக இருக்கும் வெட்டவெளி சிவனின் அருவவடிவமாகும். நடராஜரின் வலப்பக்கத்தில் ஒரு சிறுவாசல் உள்ளது. அதை திரையால் மூடி இருப்பர். பூஜையின் போது அத்திரையை அகற்றி கற்பூர ஆரத்தி காட்டுவர். 

அப்போது இறைவனின் திருவுருவம் எதையும் காண முடியாது. ஆகாய ரூபமாக இறைவன் இருப்பதை இவ்வழிபாடு காட்டுகிறது. இறைவன் ஆகாயம் போல் பரந்து விரிந்தவன். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. 

இறைவனும் முதலும் முடிவும் இல்லாதவன் என்பதை இது காட்டுகிறது. தங்கத்தால் செய்யப்பட்ட வில்வமாலை ஒன்றை மட்டும் அவ்விடத்தில் காணலாம். இதையே சிதம்பர ரகசியம் என்பர்.

இன்றும் கூட தெருவில் பணம் கிடந்தால் குனிந்து எடுக்க தயங்க மாட்டேன்: உலக கோடீஸ்வரர் பில் கேட்ஸ் விளக்கம்


நியூயார்க்:உலகின் பெரும் செல்வந்தராக கருதப்படும் மைக்ரோ சாப்ட் அதிபர் பில் கேட்சின் ஒட்டு மொத்த வர்த்தக முதலீடு 72 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த முதலீட்டின் மூலம் அவருக்கு வட்டியாக மட்டும் ஒவ்வொரு வினாடியும் 114.16 டாலர்கள் கிடைத்து வருவதால் அவரது முதலீடு ஒவ்வொரு வினாடியும் உயர்ந்து கொண்டே வருகிறது.

இதன் வாயிலாக வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் லாபமும் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து பெருகிக் கொண்டே போகிறது. வருமானத்தின் பெரும்பகுதியை உலக நாடுகளின் போலியோ ஒழிப்பு, எய்ட்ஸ் நோய்க்கு எதிரான பிரசாரம் போன்றவற்றுக்காக செலவிட்டு வரும் அவர் இன்றும் கூட அன்றாடம் தான் சாப்பிட்ட தட்டுகளை இரவு வேளைகளில் தானே சுத்தம் செய்து வைப்பதில் மனநிறைவு கொள்கிறார்.

இந்நிலையில், அமெரிக்க அரசின் உளவு பார்க்கும் நடவடிக்கை, கேட்ஸ் அறக்கட்டளையின் தொண்டுகள், மற்றும் தனது தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் தொடர்பாக சமூக வலைத்தளத்தின் வாயிலாக நேற்று ‘ஆன் லைன்’ மூலம் அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் சரமாரியாக பதில்களை அள்ளி வீசினார்.

இவற்றில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த பில் கேட்ஸ், ‘இன்றும் கூட தெருவில் 100 டாலர் நோட்டு கிடந்தால் அதை குனிந்து எடுக்க நான் தயங்க மாட்டேன். இதற்காக எனது நேரம் செலவாவதை பற்றி கவலைப்பட மாட்டேன்’ என்று அதிரடியாக பதில் அளித்துள்ளார்.

செம்பருத்தி பூவின் மருத்துவ பயன்கள்



செம்பருத்தி மூலிகை தைலத்தின் மகத்துவத்தையும், அதை எப்படி பயன்படுத்தினால் அதன் பலன் முழுமையாக நமக்கு கிடைக்கும் என்பதை இங்கு காண்போம். செம்பருத்தி மலர்கள் 25 எடுத்து மர உலக்கையால் இடித்து சாறெடுக்கவும், 

அதற்கு சம அளவு நல்லெண்ணை சேர்த்து காய்ச்சவும், சிவப்பு நிறம் இறங்கி தைலப்பதம் வந்ததும் வடிகட்டி ஆறவிட்டு எடுத்து வைக்கவும். இந்த தைலத்தை கூந்தலுக்கு பூசி வர, கூந்தல் கருமையாக செழித்து வளரும். இளநரை கூட மாறிவிடும். உடல் 

சூடு தணிய : 

தண்ணீரை காய்ச்சி குடிப்பது தான் சுகாதாரம். செம்பருத்தி பூவை நீரிலிட்டு காய்ச்சி அருந்தி வர உடல் சூடு தணியும். கண் எரிச்சல் இருக்காது. குளுமை வேண்டினால் செம்பருத்தி தான் நல்ல சாய்ஸ். 

இதய நோயை விரட்ட : 

செம்பருத்தி பூக்களை சேகரித்து நிழலில் வைத்து காயவிடவும். மொறு மொறுவென காய்ந்ததும் மிக்சியில் இட்டு அரைத்து தூளாக்கி சலித்து கொள்ளவும். இந்த தூளை ஒரு டம்ளர் பசும் பாலில் விட்டு காய்ச்சி தினமும் ஒருவேளை அருந்தி வர, தாது புஷ்டி ஏற்படும். உடலில் மினுமினுப்பு ஏற்படும். ஒரு டம்ளர் செம்பருத்தி தூளை ஒரு டம்ளர் நீரில் சேர்த்து அரை டம்ளராக சுண்டக்காய்ச்சி தினமும் அருந்தினால் இதய நோய் உங்களை நெருங்கவே நெருங்காது. 

மாதவிடாய் கோளாறு : 

ஒரு டம்ளர் பசும்பாலில் ஒரு தேக்கரண்டி செம்பருத்தி தூள் ஒரு தேக்கரண்டி தேன், தேக்கரண்டி ரோஜா இதழின் பொடி சேர்த்து 48 நாட்கள் அருந்தி வர மாத விடாய் கோளாறுகள் குணமாகும். குறிப்பாக வெள்ளைப்பாடும், அதிக உதிரப்போக்கு போன்ற பெண்களின் பிரச்சினைகள் உடனடியாகத் தீரும். 

கருப்பை பலம் பெற : 

கிராமப்புறங்களில் சிறுமிகள் பூப்படைந்ததும், செம்பருத்தி பூவை நெய்யில் வதக்கி சாப்பிட தருவார்கள். இதனால் அவர்களுடைய கருப்பை சம்பந்தப்பட்ட உறுப்புகள் பலம் பெறுவதோடு நல்ல வனப்பும் பெற்று அழகோடு மிளிர்வார்கள். 

இரும்பு டானிக் : 

செம்பருத்தி வேரை உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். ஒரு தேக்கரண்டி செம்பருத்தி வேர் பொடியும் 2 ஆடு தொடா இலைகளை சேர்த்து குடிநீரில் காய்ச்சி வடிகட்டி அருந்த இருமல் உங்களிடம் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் பறந்துவிடும். 

எதுவும் வேண்டாங்க! தோட்டத்து பக்கம் போக நேரும் போதெல்லாம், ஒரு செம்பருத்தி பூவையோ, மொட்டையோ பறித்து மென்று சாப்பிட்டு விடுங்கள் இரும்பு டானிக் சாப்பிட்ட அளவுக்கு புஷ்டி கிடைக்கும்.

மாங்குரோவ் காடு, கல்நண்டு வளர்ப்பில் புதிய சாதனை


மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இருக்கிறது நாகை மாவட்டம் சீர்காழி வட்டம் புளியந்துறை கிராமத்தைச் சேர்ந்த இளஞ்செழியனின் புதிய முயற்சி.
இயற்கையாக வளரும் மாங்குரோவ் செடிகளைச் செயற்கை முறையில் நட்டு வளர்த்து அதில் அடுத்த சாதனையாக கல்நண்டுகளை வளர்த்து இரட்டைச் சாதனை படைத் திருக்கிறார் இந்த இளஞ்செழியன்.
புதிய மாற்றங்களுக்கு வழி
இந்தியாவில் கடல் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் சார்பில் கடற்கரையோரத்தில் செயற்கை முறையில் மாங்குரோவ் காடுகள் வளர்ப்பும், அதில் கல்நண்டு வளர்ப்பும் இதுதான் முதன்முதலான மற்றும் புதிய முயற்சி. இது வெற்றி பெற்றிருப்பது இனிவரும் காலங்களில் பல்வேறு மாற்றங்களுக்கு வழிவகுப்பதாக அமையும்.
இளஞ்செழியன் தன்னுடைய 1 ஏக்கர் நிலத்தில் சதுப்பு நிலக்காடு (மாங்குரோவ் செடிகள்) நட்டு கடந்த 7 ஆண்டுகளாக வளர்த்து வந்தார். செடிகள் வளர்ந்து பெரிதானவுடன் 10 மாதங்களுக்கு முன் அதில் 3 கிராம் எடை கொண்ட 6 ஆயிரம் கல்நண்டு குஞ்சுகளை விட்டு வளர்த்து வந்தார். தற்போது அவை ஒவ்வொன்றும் 800 கிராம் எடையுடன் பெரிதாக வளர்ந்து அவருக்கு மிகப்பெரிய லாபத்தை ஈட்டித் தந்துள்ளன.
அவிசின்யா, ரைசோபோரா
இறால், கல்நண்டு, கொடுவா மீன் வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட இளஞ்செழியன். புளியந்துறை கடற்கரையோரத்தில் கடந்த 2006-ம் ஆண்டு இவருக்குச் சொந்தமான சுமார் 1 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையின் உதவியுடன் சதுப்பு நிலத்தில் அவிசின்யா, ரைசோபோரா ஆகிய மாங்குரோவ் செடிகளை நட்டு வளர்த்து வந்தார். அதில்தான் கல்நண்டு வளர்ப்பையும் மேற்கொண்டு தற்போது சாதனை படைத்திருக்கிறார்.
இந்தச் சாதனையை உலகறியச் செய்ய திங்கள்கிழமை கடல் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், ராஜீவ் காந்தி நீர்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றுடன் இணைந்து கல்நண்டு அறுவடைத் திருவிழாவைத் தொடங்கினார்.
விழாவில் கடல் பொருள் ஏற்றுமதி ஆணையத்தின் துணை இயக்குநர் வில்சன், உதவி இயக்குநர்கள், பேராசிரியர்கள் மற்றும் பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின உயராய்வு மைய இயக்குநர் கதிரேசன், கல்நண்டு வளர்ப்பு ஆராய்ச்சியாளர் அஜ்மல்கான் உள்பட ஏராளமான தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துகொண்டனர்.
ஒரு கிலோ கல்நண்டு ரூ.1,200
1 கிலோ எடைகொண்ட ஒரு கல்நண்டு 1,200 ரூபாய் வரையிலும் விலை போவதால் இந்த முயற்சி மிகப்பெரிய வரவேற்பை கடல்வாழ் உயிரின வளர்ப்பு ஆர்வலர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. 3 சதவிகிதம்தான் கல்நண்டு குஞ்சுகள் பிழைக்கும் என்ற நிலையையும் மாற்றி 15 சதவிகிதம் குஞ்சுகள் பிழைத்து வளர்ந்து கை கொடுத்திருப்பதும் ஒரு புதிய சாதனையாகக் கருதப்படுகிறது.
நாகை மாவட்டம், சீர்காழி வட்டம் புளியந்துறை கிராமம், கல்நண்டு

வர்த்தகப் பற்றாக்குறை குறைந்தது



நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை ஜனவரி மாதத்தில் 50 சதவீதம் குறைந்தது. கடந்த ஜனவரி மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 992 கோடி டாலராகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 1,897 கோடி டாலராக இருந்தது.
டிசம்பர் மாதத்தைவிட ஜனவரியில் வர்த்தகப் பற்றாக்குறை குறைந்துள்ளது. டிசம்பரில் அது 1,014 கோடி டாலராக இருந்தது.
செவ்வாய்க்கிழமை மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அட்டவணையில் இந்தியாவின் ஏற்றுமதி 3.79 சதவீதம் அதிகரித்து 2,675 கோடி டாலராக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஏற்றுமதி 2,578 கோடி டாலராக இருந்தது.
ஜனவரி மாதத்தில் இறக்குமதி 18 சதவீதம் குறைந்ததும் பற்றாக்குறை குறைவுக்கு முக்கியக் காரணமாகும். ஜனவரியில் இறக்குமதி செய்யப்பட்ட பொருளின் மதிப்பு 3,657 கோடி டாலராகும். தங்கம் இறக்குமதியில் 77 சதவீதம் குறைந்தது இதற்கு முக்கியக் காரணமாகும்.
தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி 77 சதவீதம் சரிந்து 172 கோடி டாலர் அளவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இவை இரண்டின் இறக்குமதி 749 கோடி டாலராக இருந்ததாக வர்த்தகத்துறைச் செயலர் ராஜீவ் கெர் தெரிவித்தார்.
நடப்பு நிதி ஆண்டில் கடந்த 10 மாதங்களில் தங்கம், வெள்ளி இறக்குமதி மதிப்பு 2,900 கோடி டாலராகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் 4,670 கோடி டாலருக்கு தங்கம், வெள்ளி இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இப்போது 37 சதவீத அளவுக்கு தங்கம், வெள்ளி இறக்குமதி குறைந்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் (2013-14) ஏற்றுமதி 25,708 கோடி டாலராகும். முந்தைய ஆண்டு இது 24,319 கோடி டாலராக இருந்தது.
கடந்த 10 மாதங்களில் இறக்குமதி 37,704 கோடி டாலராக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இறக்குமதி 40,899 கோடி டாலராக இருந்தது. ஆண்டுக்காண்டு 7 சதவீத அளவுக்கு இறக்குமதி குறைந்து வந்துள்ளது.
ஏப்ரல் முதல் ஜனவரி வரை யிலான காலத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 11,995 கோடியாகும். முந்தைய ஆண்டில் இதே காலத்தில் 16,580 கோடி டாலராக இருந்தது.
ஜனவரி மாதத்தில் எண்ணெய் இறக்குமதி 1,318 கோடி டாலராகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் 1,455 கோடி டாலர் அளவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.
ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதி 13,814 கோடி டாலராகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் இறக்குமதி அளவு 13,649 கோடி டாலராக இருந்தது.
எண்ணெய் அல்லாத பிற பொருள்கள் இறக்குமதி கடந்த ஜனவரி மாதத்தில் 2,348 கோடி டாலராகும். இது முந்தைய ஆண்டு இதே காலத்தைவிட 22 சதவீதம் குறைந்தது. முந்தைய ஆண்டில் இது 3,008 கோடி டாலராக இருந்தது.
ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் கச்சா எண்ணெய் அல்லாத பிற பொருள்களின் இறக்குமதி மதிப்பு 23,890 கோடி டாலராகும். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 12.3 சதவீதம் குறைவு. முந்தைய ஆண்டில் இது 27,249 கோடி டாலராக இருந்தது.

குளித்தலை விவசாயி அபாரம் சூரிய சக்தி மூலம் 20 ஏக்கரில் விவசாயம்


குளித்தலை:கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த நச்சலூரை சேர்ந்தவர் பாலசுந்தரம் (60), விவசாயி. இவருக்கு நச்சலூர் பகுதியில் 100 ஏக்கர் வயல் உள்ளது. அதில் கரும்பு, நெல், தென்னை சாகுபடி செய்துள்ளார். ஆற்று நீரை வாய்க்கால் வழியாக நிலம் முழுவதற்கும் பாய்ச்ச முடியாமல், மின் மோட்டாரை கொண்டு சாகுபடி செய்து வருகிறார். தற்போது மின்சாரம் தடைப்பட்டு வருவதால் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து சூரிய சக்தி மூலம் மின்சாரம் பெற சூரிய மின்சக்தி பேனல்களை அமைத்தார். 

அதன் மூலம் பகல் நேரங்களில் தடையற்ற மின்சாரம் கிடைத்தது. அதை கொண்டு தேவையான அளவுக்கு நிலங்களுக்கு நீர் பாய்ச்சி வருகிறார். குளித்தலை பகுதியில் சோலார் மூலம் மின்சக்தியை பெற்று வேளாண் சாகுபடி நடைபெறுவது இதுவே முதல் முறை. இதுகுறித்து பாலசுந்தரம் கூறுகையில், Ôமொத்த நிலத்தில் 20 ஏக்கரில் மட்டும் தென்னை மற்றும் கரும்பு சாகுபடி செய்துள்ளேன். தற்போது கூடுதல் மின்சாரம் தேவைப்படுவதால் 20 ஏக்கரில் உள்ள தென்னை, கரும்பு சாகுபடிக்கு ஆழ்குழாய் கிணற்றில் 10 ஹெச்.பி மோட்டார் பொருத்தி உள்ளேன். மோட்டாரை இயக்க தனியார் நிறுவனம் மூலம் ரூ.7 லட்சம் மதிப்புள்ள, 250 வாட்ஸ் திறன் கொண்ட சூரிய சக்தி பேனல்களை அமைத்தேன். இதன்மூலம் தற்போது பகலில் தடையின்றி தொடர்ந்து 8 மணி நேரம் மோட்டாரை இயக்கி  நிலத்துக்கு நீர் பாய்ச்சி வருகிறேன் என்றார்.

மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

  பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...