Thursday, 9 February 2012



தமிழக சட்டமன்றில், கைத்தொலைபேசி பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு  முன், கர்நாடக சட்டசபையில் பாஜக உறுப்பினர்கள் மூவர்,

ஆபாச படம் பார்த்தது தெரியவந்ததை அடுத்து அவர்கள் பதவி விலக நேர்ந்தது.
இதனைக் கருத்திற்கொண்டு, தமிழக சட்டபேரவை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டமன்றத்துள் கைத்தொலைபேசிக்கு தடைகொண்டு வரும் தீர்மானத்துக்கு, நேற்றைய அவைக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது.
சட்டபேரவை உறுப்பினர்கள் அவசரமாக எவருடனும் தொடர்பு கொள்ள வேண்டுமாயின் அதற்கு வசதியாக லாபியில் 10 க்கு மேற்பட்ட பொது கைத்தொலைபேசிகள் வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இது தொடர்பிலான முறைப்படியான அறிவிப்பை பேரவை தலைவர் டி.ஜெயக்குமார் வெளியிடவுள்ளார்.
சட்டசபையில் புதுமுக உறுப்பினர்கள் பலர் தொடர்ந்து கைத்தொலைபேசி கொண்டு வருவதுடன், கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போது அவை இடையூறாக ஒலிப்பதால், ஏற்கனவே சபாநாயகர் பல முறை எச்சரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மணிப்பூர்: 4,000 ஆயுதங்கள், 100+ பதுங்கு குழிகள், பற்றியெரியும் பகை; வடகிழக்கில் என்ன நடக்கிறது?

  பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4ம் தேதி இரண்டு பெண்களை முழுவதும் ஆடை களைந்து தெருவில் அழைத்துச் சென்றனர், மானபங்கம் ச...