டாடாவிடம் இருந்த ஏர் இந்தியா 1953-ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் ஏர் இந்தியா அதே நிறுவனத்திடமே சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விலைக்கு வாங்கும் ஏலத்தில் டாடா சன்ஸ் வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏர் இந்தியாவை விலைக்கு வாங்கும் டாடாவின் ஏல திட்டத்தை மத்திய அமைச்சர்கள் குழு ஏற்றதாகவும், உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான குழு டாடாவின் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததாகவும் தகவல் வெளியானது. டாடாவிடம் இருந்த ஏர் இந்தியா 1953-ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் ஏர் இந்தியா அதே நிறுவனத்திடமே செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏர் இந்தியாவிற்காக டாடா சான்ஸ் அதிக தொகை கொடுத்து ஏலம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த சில நாட்களில் முதலீட்டு முதலீடு குறித்து அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. டிசம்பர் மாதத்திற்குள் விமான நிறுவனங்களை அதன் புதிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜேஆர்டி டாடாதான் விமான நிறுவனங்களை நிறுவி 1932இல் இ...