Skip to main content

Posts

ஆழ்துளை கிணறு அமைக்க கடைபிடிக்க வேண்டிய விதிகள்; அனுமதியின்றி அமைத்தால் தண்டனை என்ன?

மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை சுஜித் தவறி விழுந்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணறுகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை சுஜித் தவறி விழுந்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணறுகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு ஆழ்துளை கிணறுகளை தோண்டுவதிலும் விதிமுறைகளை வகுத்துள்ளது. அதனை மீண்டும் கட்டாயமாக அமல்படுத்த வேண்டும். அதனால், ஆழ்துளை அமைப்பது அதை மூடுவது பற்றி விதிமுறைகளை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். 1. ஆழ்துளைக் கிணறு தோண்டுவதற்கு முன்னதாக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று ரசீது பெறுவது அவசியம். அனுமதி பெற்ற பிறகு, 2. முறையான பாதுகாப்பு விதிகளை பின்பற்றியே கிணறு தோண்ட வேண்டும். 3.தோண்டும்போது உணவு, ஓய்வு ஆகியவற்றுக்கு இடைவெளி விடும்பட்சத்தில், ஆழ்துளை குழியை தற்காலிகமாக மூடி வைப்பதை உறுதி செய்ய வேண்டும். 4.பணி நடக்கும் பகுதியைச் சுற்றில் முள்வேலி கம்பி அல்லது தடுப்பு அமைத்தல் கட்டாயம் 5.தண்ணீர் கிடை...

கீழடி அகழ்வாராய்ச்சி

சிந்து,கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு பின்,இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள்,தமிழகத்தில்  தோன்றவில்லை என்ற கருத்துக்கு மாறாய்,சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன.வைகை நதியின் தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வரலாற்ற சிறப்புமிக்க கீழடி கிராமம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது.தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும்.இங்கு  40க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன.சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்கள் அனைத்துமே இங்கே கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளா்களும்,சங்கத்தமிழ் ஆா்வலா்களும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனா். சிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக்காஞ்சி போன்ற இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும்  கல்மணிகள் மட்டுமே 600 கிடைத்துள்ளன.முத்துமணிகள்,பெண்களின் கொண்டை ஊசிகள், பெண்கள் விளையாடிய சில்லு,தாயக்கட்டை,சதுரங்க காய்கள்,சிறுகுழந்தைகள் வி...

சுருங்கிய இந்தியப் பொருளாதாரம்

45 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பு இழப்புகள் ஏற்பட்டுள்ளன. 22 - 24 சதவிகிதம் இருந்த ஏற்றுமதி, 11 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. உற்பத்திக்குத் தேவையான தளவாடப் பொருள்களின் இறக்குமதி கணிசமாகக் குறைந்து விட்டது நிலையான ஆட்சியைத் தருவோம்' என்ற வாக்குறுதியுடன் தேர்தலில் களமிறங்கிய பி.ஜே.பி, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. சரி... ஆட்சி நிலைபெற்றுள்ளதுதான். ஆனால், நாட்டின் பொருளாதாரம்? அது சரிந்துகொண்டிருப்பதாக, குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. கிட்டத்தட்ட இரண்டு மாதகாலம் நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் முத்தலாக், காஷ்மீர் போன்ற விவகாரங்கள் முதன்மைப்படுத்தப்பட்டதால், சரிந்துள்ள இந்தியப் பொருளாதாரம் குறித்த விவாதங்கள் ஓரங்கட்டப்பட்டுவிட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூன் 17-ம் தேதி தொடங்கியது. அதற்கு முன்பாகவே, பொருளாதாரம் சரிந்துகொண்டிருப்பதாக எச்சரிக்கை மணி ஒலிக்க ஆரம்பித்தது. ஆனால், வெவ்வேறு விஷயங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த ஆட்சியாளர்கள், அதைக் கண்டும்காணாமலும் இருந்தனர். 'மிஷன் காஷ்மீர்...

மறைநீர் என்றால் என்ன?

நாம் பயன்படுத்துகின்ற பொருட்கள் அனைத்திலும் மறைந்திருக்கும் நீர், மறை நீர் என வழங்கப்படுகிறது. நாம் பயன்படுத்துகின்ற பொருட்கள் அனைத்திலும் மறைந்திருக்கும் நீர், மறை நீர் என வழங்கப்படுகிறது. ஒரு நாட்டின் மொத்த உற்பத்தியையும் பணத்தைக்கொண்டு மதிப்பிடுவதைப் போல நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் பொருளாதாரம் தான் மறைநீர்! ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் – இதுவே மறை நீர் மறைநீர் என்பது ஒரு வகை பொருளாதாரம். மறைநீர் என்பது ஒரு தத்துவம். காற்றைப் போன்றது அது. கடவுளைப் போன்றது அது. தூணிலும் இருக்கிறது. துரும்பிலும் இருக்கிறது மறைநீர். மறைநீரை பார்க்க முடியாது. உணர மட்டுமே முடியும். நீரின்றி அமையாது உலகு என்பது சங்க காலம். மறைநீரின்றி அமையாது என்பதுதான் நவீன காலம். நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கும் உள்ளேயும் மறைந்திருக்கிறது மறைநீர். இதோ நீங்கள் படிக்கும் இந்த காகிதத்துக்குள் மறைந்திருக்கிறது மறைநீர். கணினித் திரைக்குள் புதைந்திருக்கிறது மறைநீர். ஒரு நாட்டின் மொத்த உற்பத்தியையும் பணத்தைக்கொண்டு மதிப்பிடுவதைப் போல நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் பொருளாதா...

தண்ணீர் இல்லை வீட்டில் இருந்தே வேலை செய்யுங்கள்" ஐடி நிறுவனம் ஊழியருக்கு அறிவுறுத்தல்

சென்னையிலுள்ள ஐடி நிறுவனங்கள் தண்ணீர் இல்லாததால் அதன் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும் படி அறிவுறுத்தியுள்ளனர்.  சென்னையில் கடந்த இரு மாதங்கள் தண்ணீர் பஞ்சம் அதிகமாக காணப்படுகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இல்லாததும் பருவமழை பொய்த்து போனதாலும் சென்னையில் தண்ணீர் தட்டுபாடு அதிகரித்துள்ளது. மேலும் நிலத்தடி நீரும் குறைந்து போனதால் பொது மக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையின் ஒ.எம்.ஆர் ஐடி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளது. சென்னையின் பழைய மகாபலிபுரம் சாலையில் சுமார் 600 ஐடி நிறுவனங்கள் அமைந்திருக்கின்றன. இந்த நிறுவனங்களில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால் இந்த நிறுவனங்கள் தண்ணீர் தேவையை சமாளிக்க பல முயற்சிகளை எடுத்துவருகிறது. இதனால் ஒஎம்ஆர் பகுதிக்கு தினசரி 3 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இவை பெரும்பாலும் மெட்ரோ லாரிகள் மூலம் தான் நிரப்படுகிறது. இவற்றில் 60 சதவீதம் தண்ணீரை ஐடி நிறுவனங்கள் தான் பயன்படுத்துகின்றன. சிப்காட் பகுதியில் உள்ள 46 ஐடி நிறுவனங்களுக்கு ம...

பொன்பரப்பி வன்கொடுமை

ச மீபத்தில் நடந்துமுடிந்த மக்களவை தேர்தல் வாக்குப் பதிவின்போது, சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் பாமக சாதி வெறி கும்பல்,  ஒடுக்க பட்ட மக்கள்  குடியிருப்புகளுக்குள் புகுந்து வீடுகளை அடித்து நொறுக்கியது. இந்து முன்னணியும் பாமகவும் சேர்ந்து சாதிவெறியை தீர்த்துக்கொள்ளும் களமாக தேர்தல் பிரச்சினையை திட்டமிட்டு மாற்றினர். வீடுகளை அடித்து நொறுக்கியதோடு, குழந்தைகள், முதியவர்களை அடித்துள்ளது இந்த கும்பல் பொன்ப‌ர‌ப்பி கிராம‌த்தில் சாதிவெறி வ‌ன்முறை : த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் க‌ள்ள‌ மௌன‌ம். ஒரு கால‌த்தில் ந‌க்ச‌லைட்டுகளுட‌ன் இருந்து பிரிந்து சென்ற, தமிழரசன் போன்றோர் த‌னித் த‌மிழ் நாடு காண்ப‌த‌ற்காக‌ ஆயுத‌ப்போராட்ட‌ம் ந‌ட‌த்திய‌ பொன்ப‌ர‌ப்பி கிராம‌த்தில், இந்த‌ சாதிவெறிக் கல‌வ‌ர‌ம் ந‌ட‌ந்துள்ள‌மை குறிப்பிட‌த்த‌க்க‌து. இந்த‌ ச‌ம்ப‌வ‌மான‌து, ஆளும் வ‌ர்க்க‌ம் ம‌க்க‌ளை பிரிப்ப‌த‌ற்கு, ஓட்ட‌ர‌சிய‌ல் எந்த‌ள‌வு ப‌ய‌னுள்ள‌தாக‌ இருக்கிற‌து என்ப‌தை எடுத்துக் காட்டியுள்ள‌து. தேர்த‌ல் முடிந்த‌ பின்ன‌ர், பாம‌க‌ க‌ட்சியை சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட‌ ஒரு க‌ட்சிக்கு வாக்க‌ள...

இலங்கை குண்டுவெடிப்பு

இலங்கையில் ந‌ட‌ந்த‌ குண்டுவெடிப்பு , ஒரு ச‌க்தி வாய்ந்த‌ குழுவின‌ரின் ந‌ன்கு திட்ட‌மிட‌ப்ப‌ட்ட‌ தாக்குத‌லாக‌த் தெரிகிற‌து. யார் இதைச் செய்திருப்பார்கள் என்பதை இதன் விளைவுகளில் இருந்தே அறியலாம். இ ல‌ங்கையில் இன்று (21.04.2019) ப‌ல‌ க‌த்தோலிக்க‌ தேவால‌ய‌ங்க‌ளிலும், ஐந்து ந‌ட்சத்திர‌ ஹொட்டேல்க‌ளிலும் ந‌ட‌ந்த‌ தொட‌ர் குண்டுவெடிப்புக‌ளில் 290 பேர் கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். ஆயிர‌க்க‌ண‌க்கில் காய‌ம‌டைந்தோர் ம‌ருத்துவ‌ம‌னைக‌ளில் அனும‌திக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். ஏராள‌மானோர் இன‌, ம‌த‌ பேத‌ம் க‌ட‌ந்து குருதிக் கொடை வ‌ழ‌ங்க‌ முன்வ‌ந்துள்ள‌ன‌ர். இல‌ங்கை ம‌க்க‌ள் அனைவ‌ரையும் ஒன்று திர‌ட்டியுள்ள‌ இந்த‌ த‌ருண‌த்தில், வ‌த‌ந்திக‌ளை கிள‌ப்பி பிரிவினையை தூண்டும் தீய‌ ச‌க்திக‌ள் குறித்தும் எச்ச‌ரிக்கையாக‌ இருக்க‌ வேண்டும். அர‌ச‌ கைக்கூலிக‌ளான‌ இந்த‌ தீய‌ச‌க்திக‌ள் இல‌ங்கையில் ஒரு பாஸிச‌ ச‌ர்வாதிகார‌ ஆட்சியைக் கொண்டு வ‌ருவ‌தை நோக்க‌மாக‌க் கொண்டுள்ள‌ன‌. இந்த‌ நிமிட‌ம் வ‌ரையில் எந்த‌ இய‌க்க‌மும் தாக்குத‌லுக்கு உரிமை கோர‌வில்லை. அதே நேர‌ம் அர‌சும் யாரையும் குற்ற‌ம் சாட்ட‌வில்லை. ஆனால், அங்கு ந‌ட‌ந...