45 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பு இழப்புகள் ஏற்பட்டுள்ளன. 22 - 24 சதவிகிதம் இருந்த ஏற்றுமதி, 11 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. உற்பத்திக்குத் தேவையான தளவாடப் பொருள்களின் இறக்குமதி கணிசமாகக் குறைந்து விட்டது நிலையான ஆட்சியைத் தருவோம்' என்ற வாக்குறுதியுடன் தேர்தலில் களமிறங்கிய பி.ஜே.பி, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. சரி... ஆட்சி நிலைபெற்றுள்ளதுதான். ஆனால், நாட்டின் பொருளாதாரம்? அது சரிந்துகொண்டிருப்பதாக, குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. கிட்டத்தட்ட இரண்டு மாதகாலம் நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் முத்தலாக், காஷ்மீர் போன்ற விவகாரங்கள் முதன்மைப்படுத்தப்பட்டதால், சரிந்துள்ள இந்தியப் பொருளாதாரம் குறித்த விவாதங்கள் ஓரங்கட்டப்பட்டுவிட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூன் 17-ம் தேதி தொடங்கியது. அதற்கு முன்பாகவே, பொருளாதாரம் சரிந்துகொண்டிருப்பதாக எச்சரிக்கை மணி ஒலிக்க ஆரம்பித்தது. ஆனால், வெவ்வேறு விஷயங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த ஆட்சியாளர்கள், அதைக் கண்டும்காணாமலும் இருந்தனர். 'மிஷன் காஷ்மீர்...