Skip to main content

Posts

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை

பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகார் அளித்ததையடுத்து, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது காவலில் உள்ளனர். தவிர, புகார் கொடுத்த பெண்ணின் அண்ணனைத் தாக்கியதாக வேறு நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.  இந்த கும்பலால் பொள்ளாச்சி பகுதியில் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வரும் நிலையில், ‘ஒரு பெண்ணைத் தவிர வேறு யாரும் புகார் தரவில்லை’ என்கிறது போலீஸ். ஆனால், ‘புகார் தந்த பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீஸ் பகிரங்கப்படுத்தி விட்டது. அதனால்தான், மற்ற பெண்கள் புகார் தர முன்வரவில்லை. புகார் கொடுக்க நினைக்கும் பெண்களை மறைமுகமாக மிரட்டவே போலீஸ் இப்படிச் செய்துள்ளது’ என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி அல்லது சைபர் க்ரைம் போலீஸார் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற எதிர்க் கட்சியினரின் கோரிக்கையும் கண்டுகொள்ளப்படவில்லை. ‘இந்த வழக்கின் விசாரணையை பெண் போலீஸ் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்ற ஜனநாயக மாதர் சங்கத்தினரின் கோரிக்கையும் கண்டுகொள்ளப்படவில்லை. கைதான நால்வரையும் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கவும் இல்லை....

2019 புல்வாமா தாக்குதல்

2019 புல்வாமா தாக்குதல் என்பது இந்தியாவின், சம்மு காசுமீர், புல்வாமா மாவட்ட அவந்திபோரா பகுதியில் ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், மத்திய சேமக் காவல் படையினர் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது 2019 பிப்ரவரி 14 ஆம் நாள் நடந்த தற்கொலைத் தாக்குதல் ஆகும். இத்தாக்குதலில் 40 பாதுகாப்புப் படையினரும், தற்கொலை தீவிரவாதி ஒருவரும் உயிரிழந்தனர். இத்தாக்குதலுக்கு ஜெய்சு-இ-முகமது என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்றது. 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியப் பாதுகாப்புப் படையின் மீது பாக்கிஸ்தான் ஆதரவு ஆயுதக்குழுக்களின் தற்கொலைத் தாக்குதல்கள் அதிகரித்தன. 2015 சூலை மாதத்தில் துப்பாக்கி ஏந்திய மூவர் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் பேருந்து மற்றும் காவல் நிலையத்தைத் தாக்கினர். 2016 சனவரியில் துப்பாக்கியுடன் பதான்கோட் வான் படை நிலையத்தில் தாக்குதல் நடந்தது. 2016 பிப்ரவரி மற்றும் ஜீன் காலகட்டத்தில் எட்டு இராணுவத்தினர் பொம்பொரி தாக்குதலில் உயிரிழந்தனர். 2016 செப்டம்பரில் இந்திய இராணுவப் பட்டாளத் தலைமையகத்தில் நிகழ்ந்த யூரி தாக்குதலில் 19 படையினர் உயிரிழந்தனர். 2017 டிசம்பர் 31 இல் லெத்திபோரா கமொண்டோ பயிற்ச...

மகிழம் அல்லது வகுளம் அல்லது இலஞ்சி அல்லது மகிழம் மரத்தை பற்றி

Spanish cherry என்று அழைக்கப்படும் இந்த மரம் ஒரு சிற்றின மரம் . இதில் நிறைய மருத்துவ பழங்கள் உள்ளவை. இது சங்க காலங்களில் பயன்படுத்தப்பட்டவை . இம்மரம் தெற்கு ஆசியா, வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள வெப்பமண்டல காடுகளில் காணப்படும் ஒரு நடுத்தர அளவிலான பசுமையான மரமாகும். இந்த மரத்தை பொதுவாக ஆங்கிலத்தில் கட்டை விலைமதிப்பு மிக்கது, இதன் பழம் உண்ணத்தக்கது, மேலும் இதன் பட்டை, பூ போன்றவை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரமானது நல்ல நிழல் தருவதாகவும், வாசம் மிகுந்த மலர்களைக் கொண்டதாலும், இது தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இதன் மலர் தாய்லாந்தின் யலா மாகாணத்தின் மாகாண மலர் ஆகும். ஸ்பானிஷ் செர்ரி, மெட்லர், புல்லட் உட் என்று அழைக்கின்றனர். இதன் மரக் மகிழம் பூ: இதன் பழம் சாப்பிட உகந்தவை . இதன் பழத்தை பழங்காலத்தில் மருத்துவத்தில் பயன்படுத்தினர். இம்மரம் 16 மீட்டர் வரை வளரக்கூடியது. மார்ச் மாதத்தில் பூத்து ஜூன் மாதத்தில் பழுக்கும். இதன் இலைகள் பளபளப்பாக இருக்கும். இதன் மலர்கள் நறுமணம் கொண்டவை. மணம் மிக்க பூவை மகளிர் தலையில் அணிந்துகொள்வர். இதன் சாற்றினை ஊதுபத்தி...

கீழவெண்மணி படுகொலைகள். தமிழகத்தை உலுக்கிய 'கொடுரசம்பவம்'

த மிழத்தில் கூலி உயர்வு கேட்டு போராடிய தொழிலாளர்கள், உயிருடன் தீயில் கொளுத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள் தற்போதைய நாகை மாவட்டத்தில் அமைந்துள்ளது கீழவெண்மணி. ( தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான பழைய தஞ்சை மாவட்டத்தில் முன்னர் இருந்தது.)  தமிழகத்தின் 30% விளைநிலங்களை தன்னகத்தே கொண்டு அமோக விளைச்சல் தரும் பூமி. இப்பூமியில் எங்கு சுற்றினும் பச்சை பசேலேன பசுமை போர்த்திய நெற்பயிர்கள். சில்லென்று வீசும் காற்று, தென்னந்தோப்பு, கரும்புத் தோட்டம் என மனம் வருடிச் செல்லும் இயற்கை சூழல். இங்கு பலதரப்பட்ட நிலமில்லா மக்களும், கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். இவர்கள் நல்ல வாழ்க்கை முறையை அடைய முயற்சி செய்தும் அதை நிலக்கிழார்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. 1960களில் தஞ்சையில் பண்ணையார்கள், நிலச்சுவான்தார்கள் ஆதிக்கம் வேருன்றி மரமாக வளரத் தொடங்கியிருந்த காலம். பண்ணையார்களிடம்தான் அதிக நிலமும் பணமும் இருந்தது. பண்ணையார்களிடம் வேலை செய்து தங்கள் வாழ்கையை நகர்த்திச் சென்ற கூலித் தொழிலாளர்களை பண்ணையார்கள் தங்கள் அடிமைகளாகவே கருதினர். குறைந்த கூலிக்கு அதிக வேலை வாங்கினார்கள். ஐயா, ஆண்டை என்றுதான...

நிலத்தடி நீருக்கு கட்டணம் ?

தற்போது நிலத்தடி நீருக்கு கட்டணம் வசூலிக்க நடுவண் அரசு முடிவெடுத்துள்ளது. இது பெரும் மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை நடுவண் நீர்வளத்துறை அமைச்சகம் நீர்வளத்தை பாதுக்காக்க செய்துள்ளதாக கூறுகிறது. இதை முந்தைய congress அரசு முடிவெடுத்தது அதை அப்போதைய எதிர் கட்சி மற்றும் மக்கள் யாரும் யேற்று கொள்ளவில்லை. இதை PJP நடைமுறை படுத்த உள்ளது. இதனால் ஏற்படும் விளைவுகள் : இவரு அரசு முடிவெடுப்பதில் மக்களிடையே மதிப்பை இளக்கும். ஏழை எளிய மக்களை பெரியத்தக்க பாதிக்கும். அரசு இதனால் வரும் நிதியை நீர் வளத்தை மேம்படுத்த உள்ளத்தக்க கூறுகிறது. ஆனால் இதை தனியாரிடம் கொடுத்துள்ளது . அனால் தனியார் அவர்கள் சரியாய்  செய்ய மாட்டார்கள் ஏன் என்றல் அவர் விருப்பதிக்கேற்ப விலை நிர்ணயம் செய்வார்கள் 2 லிருந்து 200 கூட ஏற்றுவார்கள் . தீர்வுகள்: அரசு இவ்வாறு செய்யாமல் இதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யலாம்.நிலத்தடி நீரை மேம்படுத்த ஆறு, குளம், குளத்தை போன்றவற்றை தூர் வார்த்தல், வெள்ளக்காலங்களில் தண்ணிரை சேமிக்க மக்களுக்கு அறிவுரை கூறுதல் வேண்டும், இல்லதென்றால் சட்டமாக பிறப்பிக்கலாம். இவரு செய்வதால் மக்களை ப...

பாரம்பரிய விவசாயத்தை மீட்ட நெல் ஜெயராமன் மரணம்

நெல் ஜெயராமன், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். தீவிர சிகிச்சை அளித்தும் மருத்துவர்களால் அவரை காப்பாற்ற முடியவில்லை. நெல் ஜெயராமன், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர். அழிவின் விழிம்புக்கு சென்ற பாரம்பரிய நெல் விதைகளை பாதுகாத்து மீட்ட பெருமைக்குரியவர்! இதற்காகவே ஆண்டு தோறும் நெல் திருவிழா நடத்தி, 169 ரகங்களை சேர்ந்த பாரம்பரிய நெல் விதைகளை இவர் மீட்டார். சாதாரண கூலித் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி, பாரம்பரிய விவசாயத்தை பாதுகாப்பதில் சாதனை படைத்தவர் இவர். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் சிஷ்யர்களில் ஒருவர்! தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவரான நெல் ஜெயராமன் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.10 மணிக்கு காலமானார். நெல் ஜெயராமன் சிகிச்சைக்கு பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள், திரைப்பட கலைஞர்கள் நிதியுதவி செய்தனர். மு...

தமிழன்_என்ன_கண்டுபிடிச்சான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் தமிழனின் சாதனை பட்டியல்கள்….

பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு,வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு……! கல்லணை :- உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்குஇரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான் ? மாமல்லபுரம் :- கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும்பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றனா ? அங்கோர்வாட்_கோயில் :- உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய ப...