தமிழன்_என்ன_கண்டுபிடிச்சான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் தமிழனின் சாதனை பட்டியல்கள்….
பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு,வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு……! கல்லணை :- உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்குஇரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான் ? மாமல்லபுரம் :- கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும்பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றனா ? அங்கோர்வாட்_கோயில் :- உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய ப...