மண்டைக்காடு கலவரம் என்பது 1982 ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்துக்களுக்கும் கிறித்தவர்களுக்கும் இடையே மண்டைக்காடு என்னும் இடத்தை மையமாகக் கொண்டு நடந்த கலவரங்களைக் குறிக்கும். இந்தக் கலவரத்தைப் பற்றி விசாரிக்க நீதியரசர் வேணுகோபால் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. மண்டைக்காடு மண்டைக்காடு கன்னியாகுமரி மாவட்டத்தில் அரபிக்கடல் பகுதியில் அமைந்துள்ள சிற்றூர். இங்கு கிறித்தவர்களும் இந்துக்களும் அருகருகே வாழ்ந்து வருகிறார்கள். மண்டைக்காட்டில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் மாசி கொடை விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். இக்கோயிலின் அருகில் புனித கண்ணாம்பாள் ஆலயம் மற்றும் அதன் குருசடி அமைந்துள்ளது. கலவரத்திற்கான சூழல் 1980 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மாடதட்டுவிளை என்னும் இடத்தில் இரண்டு இளைஞர்களுக்கு இடையே சிறு சண்டை மூண்டது. இதன் காரணமாக அங்கு வைக்கப்பட்டிருந்த சிலுவை காணாமல் போணதால் ஒரு கொந்தளிப்பான சூழ்நிலை உருவானது. 1982 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், உலக செப வாரம் ஒரு வார காலத்திற்கு அனைத்து கிறித்தவர்களாலும் ஒற்றுமையு...